இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 38 சதவீதம் வரை அகவிலைப்படி வழங்கப் பட்டு வருகிறது. அதன் பிறகு கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி நிலுவைத் தொகை மற்றும் பழைய ஓய்வூதிய திட்டம் போன்றவற்றை அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்தியாவில் உள்ள 6 மாநிலங்களில் தற்போது பழைய ஓய்வூதிய திட்டமானது அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் எம்பி அசாதுதீன் மத்திய அரசு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துமா […]
Tag: பழைய ஓய்வூதிய திட்டம்
தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என பாமக நிறுவன ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற நிலையில், முதல்வராக சுக்விந்தர்சிங் சுகு பொறுப்பேற்றுள்ளார். இவர் முதல்வராக பொறுப்பேற்றதும் பொருளாதார நெருக்கடிகளை பெரிது படுத்தாமல் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். இந்தியாவில் பழைய ஓய்வூதிய அமல்படுத்துவது என்பது சாத்திய மற்றது என்று பொருளாதார வல்லுனர்கள் கூறி வந்தார்கள். […]
தற்போது மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைபடுத்த வேண்டும் என்ற மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கையானது அதிகரித்துள்ளது. மாநிலங்களை பொறுத்தவரை, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பை முதல் முதலில் வெளியிட்டார். 2022 மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது, சட்ட சபையில் 7 லட்சம் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை நடைமுறைபடுத்துவதாக அவர் கூறினார். இதையடுத்து பஞ்சாப், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநில அரசுகளும் […]
பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மறுபடியும் நடைமுறைபடுத்த வேண்டுமென்று மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாகவே கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனிடையில் பல்வேறு மாநில அரசுகளானது பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைபடுத்தி வருகிறது. அதன்படி ராஜஸ்தான் அரசை அடுத்து, பஞ்சாப், சத்தீஸ்கர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மீண்டும் கொண்டு வருவதாக அறிவித்து உள்ளது. அத்துடன் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மாநிலத்தில் ஆட்சியமைத்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைபடுத்துவதாக வாக்குறுதி அளித்திருக்கிறது. […]
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசுப் பணியாளா்களுக்குரிய முழு ஓய்வூதிய தொகையையும் அரசே செலுத்திவந்தது. அந்த திட்டத்தை ரத்துசெய்து, புதிய ஓய்வூதியத் திட்டத்தை பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அறிமுகப்படுத்தியது. அந்த வகையில் அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதத்தை பணியாளா்கள் ஓய்வூதியத்துக்கான பங்களிப்பாக செலுத்தவேண்டும். அரசு சாா்பாக 14 % செலுத்தப்படும். கடந்த 2004ம் வருடம் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அரசு பணியில் இணைந்த பணியாளா்களுக்குப் புது ஓய்வூதியத் திட்டம் பொருந்தும் என்று […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி வந்திருக்கிறது. அதாவது வருகிற தினங்களில் அவர்கள் மீண்டுமாக பழைய ஓய்வூதியத்திட்டத்தின் பயனை பெறக்கூடும். மோடி அரசு 2024ம் வருடத்திற்கு முன்பு இதனை பரிசீலிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற, அமைச்சகத்திடம் ஆலோசனை கேட்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மத்திய அரசினுடைய சட்ட அமைச்சகத்திடம் கருத்து கேட்கப்பட்டது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை எத்துறையில் செயல்படுத்தலாம் எனவும் ஆலோசனை செய்யப்பட்டது. இருப்பினும் அமைச்சகத்திடமிருந்து இதுவரையிலும் உறுதியான பதில் எதுவும் வரவில்லை. […]
குஜராத், ஹிமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சியினரும் பிரசாரம் செய்து வருகின்றன. ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான பாஜக ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. அங்கு மொத்தம் உள்ள 68 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நாளை மறுநாள் அதாவது நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் எட்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும். இந்நிலையில் காங்கிரஸ், ஆம் […]
ஜார்கண்ட் மாநில அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது.இதற்கு அம்மா மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இருந்தாலும் தேதி அறிவிக்கப்படாததால் எப்போது பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று அரசு ஊழியர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி முதல் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது.தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு பென்ஷன் திட்டம் அகற்றப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்.இந்தத் திட்டத்தை […]
பழைய ஓய்வூதியத்திட்டம் என்பது சில காலம் வரை நாடெங்கிலும் நடைமுறையில் இருந்த ஒன்று தான். இதற்கிடையில் மத்திய அரசு புது ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்தபின், ஏறக்குறைய அனைத்து மாநிலங்களுமே பழைய ஓய்வூதியத்திட்டத்தை கைவிட்டுவிட்டது. அதேநேரம் தமிழகம் உட்பட பல மாநிலங்களிலும் பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அண்மையில் குஜராத்தில் பழைய ஓய்வூதியம் திட்டத்தினை நடைமுறைபடுத்த வேண்டுமென அரசுஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையில் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் […]
குஜராத் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்துவோம் என தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார். இந்த வருடம் இறுதியில் குஜராத் சட்டப் பேரவைக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் ஆளும் பாஜக-வை எதிர்த்து ஆம் ஆத்மி, காங்கிரஸ் நேரடியாக போட்டியிட உள்ளது. தில்லியை அடுத்து பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்றிய ஆம் ஆத்மி, பிற மாநிலங்களிலும் கால் பதிக்கும் முனைப்பில் குஜராத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. குஜராத் […]
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 2004-ம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டம் நிறுத்தப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு புதிய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என அக்கட்சியின் தலைவரும், நிதி அமைச்சருமான ஹர்பால் சிங் சீமா வாக்குறுதி கொடுத்திருந்தார். இந்நிலையில் […]
திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்து இருந்தது. ஆனால் ஆட்சிப் பொறுப்பை ஏற்று ஒரு வருடம் நிறைவடைந்தும் இதுவரை பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக வெளிப்படையாக கூறினார். அதன் பிறகு திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர […]
பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படுவதாக மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இந்தியாவில் பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மத்திய அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்ததிலிருந்து அரசு ஊழியர்கள் அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருப்பது போன்ற சலுகைகள் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இல்லாததால் அதை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் பல்வேறு கட்டங்களாக அரசுக்கு கோரிக்கை […]
ஜார்கண்ட் மாநில அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது.இதற்கு அம்மா மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இருந்தாலும் தேதி அறிவிக்கப்படாததால் எப்போது பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று அரசு ஊழியர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி முதல் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது.தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு பென்ஷன் திட்டம் அகற்றப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்.இந்தத் திட்டத்தை […]
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் அனைவரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த உள்ளதாக ஜார்கண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் அரசு ஊழியர்களுக்கு கடந்த 2003 ஆம் ஆண்டு வரை பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. இந்த திட்டத்தின் மூலமாக அரசு ஊழியர்களுக்கு நிலையான ஓய்வூதியம் மற்றும் பல சலுகைகள் கிடைத்தன. ஆனால் 2004 ஆம் ஆண்டு முதல் […]
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமாக பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் எப்போது பழைய பென்ஷன் திட்டம் அமலாகும் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக மிக முக்கியமான ஒன்று பழைய பென்ஷன் திட்டம் அமல் படுத்துவது. தற்போது நடைமுறையில் உள்ள cps எனப்படும் பங்களிப்பு பென்ஷன் திட்டம் ஊழியர்களுக்கு ஏற்றதாக இல்லை என்றும் இதில் இழப்புகள் அதிகம் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. தேர்தலின் போது திமுக பழைய பென்ஷன் […]
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். நாட்டில் சில மாநிலங்களில் பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. தற்போது அரசு ஊழியர்களுக்கு தேசிய பென்ஷன் திட்டமே நடைமுறையில் உள்ளது. தமிழக அரசு ஊழியர்களுக்கு சிபிஎஸ் எனப்படும் பங்களிப்பு பென்ஷன் திட்டம் நடமுறையில் உள்ளது. இருப்பினும் தேசிய பென்ஷன் திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது நடைமுறையில் உள்ள ஓய்வூதிய திட்டத்துக்கும் பழைய […]
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அரசு ஊழியர்கள் கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர். இந்தியா முழுவதும் கடந்த 2003-ம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு அதற்கு பதில் புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் 6 லட்சம் அரசு ஊழியர்கள் சேர்ந்துள்ளனர். இந்தத் திட்டத்தில் மாதாந்திர ஓய்வூதிய பலன்கள் இல்லாத காரணத்தினால் பல ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு புதிய ஓய்வூதிய திட்டத்தை […]
நாடு முழுதுமுள்ள அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியம் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நீண்டநாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் ஒருசில மாநில அரசுகள் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்தி வருகிறது. இந்த அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டுமாக நடைமுறைபடுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆகவே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்துவது தான் தமிழ்நாடு அரசின் தற்போதைய இன்றியமையாத […]
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தி போராட்டம் நடந்துள்ளது. இந்தியா முழுவதும் கடந்த 2003-ஆம் ஆண்டு பழைய பென்ஷன் திட்டத்திற்குப் பதிலாக புதிய பென்ஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என பல ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஏனெனில் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் பல சலுகைகள் வழங்கப்பட்ட நிலையில், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பெரும்பாலான சலுகைகள் நீக்கப்பட்டுவிட்டது. இதன் காரணமாகத் தான் மீண்டும் […]
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு அரசு சார்பில் பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் திட்டம் இருக்கிறது. அதன்படி ஓய்வுபெற்ற பின் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியத்தொகையும் வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் பணியின்போது பிடித்தம் செய்யப்பட்ட தொகையும் வழங்கப்படும். இந்நிலையில் சென்ற அதிமுக ஆட்சியின் போது 2004ஆம் வருடத்திற்கு பின் அரசு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு புது ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்தியது. இவற்றில் பல புதிய நிபந்தனைகள் கொண்டுவரப்பட்டு ஓய்வூதியத்தொகை நிறுத்தப்பட்டது. இதை அரசு ஊழியர்களும், […]
தமிழ்க்தில் அரசு ஊழியர்களுக்கு திமுக அரசு அளித்த வாக்குறுதியின்படி ஜனவரி மாதம் அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் உடைய சம்பளம் உயர்ந்துள்ளது. இதனால் ஏராளமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெறும் பயன் பெற்று வருகின்றனர். இதனை அடுத்து உறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக […]
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு, திமுக அரசு தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி கடந்த ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படியை 17% இருந்து 31% ஆக உயர்த்தினார். இதனால் அரசு ஊழியர்களின் ஊதியமானது உயர்ந்து, தற்போது ஏராளமான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இதன் மூலம் பயன் பெற்றுள்ளனர். இந்நிலையில், திமுக அரசின் அடுத்த வாக்குறுதி,பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதாகும். இதனால் இந்த கோரிக்கையை முன்வைத்து, அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி […]
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான புதிய விதிமுறைகள் குறித்து அறிவிப்பு வெளியாகயுள்ளது. இந்தியா முழுவதும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது அரசு ஊழியர்களை நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பட்ஜெட் கூட்டத் தொடரின் போது அறிவித்தார். அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் பழைய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக […]
தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அமலில் இருக்கும் ஓய்வூதிய திட்டத்திற்கும் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கும் என்னென்ன வேறுபாடு? அதில் என்னென்ன பலன்கள் உள்ளன என்பது பற்றி விரிவாக பார்க்கலாம். 2004ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு நிறுத்தியது. அதற்கு பதிலாக புதிய ஓய்வூதிய திட்டம் […]
தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் செயலாற்றி வருகின்ற ஊழியர்களுக்கு அரசு தரப்பில் பல வித சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அதில் முக்கியமான ஒன்றாக இருப்பது, ஓய்வூதிய திட்டம் ஆகும் . இந்நிலையில் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன், செயல்பட்டு வந்த திட்டத்தின் அடிப்படையில் அரசு பணியாளர்கள் தாங்கள் பணியில் இருக்கும் போது அவர்களது சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையானது பிடித்தம் செய்யப்பட்டு, அவை ஓய்வு பெற்றதும் ஓய்வூதிய தொகையாக அளிக்கப்படும். ஆனால், இந்த திட்டத்திற்கு மாற்றாக […]
பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் உள்ளது என்று தமிழக அரசு பணியாளர் சங்கம் கோரிக்கைக்கு தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் 1.4.2003 அன்றோ அதன் பின்னரோ முறையான அரசு பணியில் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகள் செய்ய அமைக்கப்பட்ட வல்லுநர் குழு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. […]
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு மாதம்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. கடந்த 2004-ஆம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு ரத்து செய்துவிட்டு அதற்கு பதிலாக புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது. இத்திட்டத்தின்படி அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை பிடிக்கப்படும். அதன்பிறகு பிடிக்கப்பட்ட தொகையுடன் அரசு கூடுதல் தொகை செலுத்தி அரசு ஊழியர்களின் […]
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் சென்னையில் நேற்று பேரணி நடத்தியுள்ளனர். தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர்களும், தங்கள் பணிக்கு பின், ஓய்வு பெற்ற பிறகு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஓய்வூதியமாக பெற்று வந்தனர். மேலும் ஒரு அரசு ஊழியர் இறப்பிற்குப் பின்னும், அவரது மனைவிக்கு அந்த குறிப்பிட்ட தொகையானது வழங்கப்பட்டு வந்தது. இதனால் ஏரளாமானோர் பயன் பெற்றனர். இந்நிலையில் ஓய்வு ஊதியம் வழங்குவதில் ஏற்பட்ட நிதி சிக்கலின் […]
இந்தியாவில் அரசு ஊழியர்களின் பணிக் காலம் நிறைவடையும்போது அவர்களுக்கு ஓய்வூதிய தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையானது ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. இத்தொகையானது அவர்களின் முதிர்வு காலத்தில் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. சென்ற 2004ஆம் ஆண்டு மத்திய அரசு இந்த நடைமுறையை மாற்றி இருக்கிறது. இப்போது ஓய்வூதியம் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படாமல் மொத்தமாக ஒரே தவணையில் வழங்கப்படுகிறது. இதற்கிடையில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை பிடித்தம் […]
கடந்த சில ஆண்டுகளாகவே அரசு ஊழியர்கள் சார்பாக ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதாவது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஓய்வுக்கு பின், அவர்களுக்கு ஓய்வூதியம் வரும்படியான திட்டம் செயல்முறையில் இருந்து வந்தது. தமிழக அரசுக்கு இருந்த நிதி பற்றாகுறையின் காரணமாக பழைய ஓய்வூதிய முறை ரத்து செய்யப்பட்டு, புதிய ஓய்வூதியத் திட்டம் சென்ற 2003ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் புதிய ஓய்வூதிய திட்டமானது ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு […]
கடந்த 2004 ஜன..1 ஆம் தேதிக்கு பின் அரசுப்பணியில் சேர்ந்துள்ள ஊழியர்களுக்கு மீண்டுமாக பழைய ஓய்வூதியம் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் திட்டமில்லை என மத்தியஅமைச்சர் கூறியுள்ளார். அதாவது மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள் மற்றும் பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் விளக்கம் அளித்துள்ளார். சென்ற 2004 ஜனவரி 1க்கு பின் பாதுகாப்பு படைகளை தவிர்த்து இதர மத்திய அரசுப் பணிகளில் சேர்ந்த புதிய பணியாளர்கள் அனைவருக்கும் தேசிய […]
ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மாநில அரசு ஊழியர்களுக்கு பென்சன் தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி அரசு ஊழியர்களுக்கு தேசிய பென்ஷன் திட்டத்திற்கு பணமெடுப்பது ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நிறுத்தப்படும் என்று கூறியுள்ளார். இதுவரை ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர்களுக்கு தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் […]
தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பல வாக்குறுதிகளை அளித்திருந்தார். அதில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, சம்பள உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது. அதன்படி 2022ஆம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31% ஆக அதிகரிக்கப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஊழியர்கள் பயனடைந்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து தற்போதைய அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து […]
நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் தங்களது பழைய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை கோரிக்கை வைத்துள்ளனர். புதிய பென்ஷன் திட்டத்தை நிறுத்தி விட்டு அதிக லாபம் தரும் பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை வைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் மத்திய அரசு இதில் பிடிவாதமாக இருந்து வருகிறது. இந்நிலையில் மாநில அரசுகள் ஒவ்வொன்றாக தங்களது ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. ராஜஸ்தான், சத்தீஸ்கர், […]
தமிழகத்தில் கடந்த 2003 ம் வருடத்திற்கு பின் அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதில் குடும்ப ஓய்வூதியம் கிடையாது என்று பல்வேறு பாதகமான அம்சங்களானது இடம்பெற்றது. இதன் காரணமாக அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம்தான் வேண்டுமெனவும், புதிய ஓய்வூதிய திட்டத்தை மாற்றும்படியும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது திமுக கட்சியின் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வர […]
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மையில் அந்த மாநில அரசானது பழைய ஓய்வூதிய திட்டத்தை 2023 ஆம் ஆண்டு முதல் நடைமுறைபடுத்தப் போவதாக அறிவிப்புகளை வெளியிட்டு நிலையில், தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சிறப்பு தலைவர் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் சிதம்பரத்தில் செய்தியாளர்களுக்கு […]
கடந்த 1968 ஆம் வருடத்தில் இருந்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு மூலம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ஓய்வூதியம் தொகை ரூபாய் 20 என்று தொடங்கப்பட்டது. எனினும் அரசு ஊழியர்களின் பல போராட்டங்களுக்கு பின் ஓய்வூதிய தொகை உயர்த்தப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் பல போராட்டங்கள் அடிப்படையில் தமிழகத்தில் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் பெற்றுவந்த ஓய்வூதியம் 2004 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டு, பங்களிப்பு ஓய்வூதியம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் […]
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு அகவிலைப்படி 2 கட்டங்களாக உயர்த்தப்பட்டு 31 சதவீதமாக வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கியது. அதன்பின் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதிய குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மேலும் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு, அடிப்படை சம்பளம் உயர்வு, வீட்டு வாடகை படி உயர்வு ஆகிய அறிவிப்புகள் வெளியாகும் என்று தகவல்கள் வந்துள்ளது. இந்நிலையில் ஊழியர்கள் மீண்டும் […]
திமுக ஆட்சிக்கு வந்ததும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் ஆகியும் இதுகுறித்து முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் அதிமுக கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது., “அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் அல்லலுக்கு உள்ளாகியுள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தை கடந்த 2003 ஆம் ஆண்டு அதிமுக […]
தமிழகத்தில் அடுத்தடுத்து ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ள அதிமுகவும், திமுகவும் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்த போதிலும் அது செயல்வடிவம் பெறவில்லை. கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து அமைக்கப்பட்ட சாந்தாஷீலா நாயர் குழு எந்த ஒரு அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை. அதன்பிறகு ஐஏஎஸ் அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதி அமைக்கப்பட்ட வல்லுநர் குழு 2018-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் […]
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரி தமிழக அரசு ஊழியர்கள் சங்க மாநில செயலாளர் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கடந்த ஆட்சியில் பழைய ஓய்வூதியத் திட்டம், ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதியத் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி, 2003 ஆம் ஆண்டிற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை எதிர்த்து அரசு ஊழியர்கள் போராட்டங்கள் நடத்தினாலும், அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவில்லை. இந்நிலையில் […]