பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் அரசு எதிர்ப்பு இயக்கத்துக்கு தனது கட்சி தொண்டர்களை தயார்படுத்துவதற்காக நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் பேரணிகளை நடத்தி வருகின்றார். இந்நிலையில் கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி அளிப்பதற்காக அங்கு சென்றுள்ளார். இங்கு பொதுமக்களை நேரில் பார்த்து நிதியுதவி வழங்கிய பின்னர் இம்ரான்கான் ஹெலிகாப்டரில் இஸ்லாமாபாத்துக்கு புறப்பட்டுள்ளார். அந்த ஹெலிகாப்டர் ராவல்பிண்டி நகரில் உள்ள அடியாலா என்கிற கிராமத்துக்கு அருகே […]
Tag: பாகிஸ்தான் நாட்டில்
பாகிஸ்தான் நாட்டில் லாஹிண்டே பஞ்சாப் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள பகவல்பூர் நகரில் சக் என்ற இடத்தில் வசித்து வருபவர் கங்காராம். இவரது மனைவி குசும் பாய் பண்ணை ஒன்றில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் குசும் பாய், பண்ணை உரிமையாளரான முகமது அக்ரமிடம் சென்று வேலைக்கான கூலியை வாங்கி வருவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார். ஆனால், அக்ரம் அவரை கடுமையாக அடித்து விரட்டி விட்டுள்ளார். இதன்பின்னர், அடுத்த நாள் […]
பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூன் மாதம் பருவமழை தொடங்கியுள்ளது. இங்கு பல நாட்களாக நீடித்த கனமழையால் நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த நாட்டில் 3-ல் 1 பங்கு தண்ணீரில் மூழ்கியுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் 3 கோடியே 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு வெள்ளத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 1,693 ஆக அதிகரித்துள்ளது. தற்போது இங்கு மழை குறைந்து வெள்ளம் வடியத்தொடங்கி மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. இந்நிலையில் பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 57 லட்சம் […]
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் லண்டனிலுள்ள நெஸ்கோல் லிமிடெட் மற்றும் நெல்சன் எண்டர்பிரைசஸ் லிமிடெட் போன்ற நிறுவனங்களை நடத்தி வந்துள்ளார். இந்த நிறுவனங்கள் பார்க் லேனிலுள்ள அவென்பீட்ஸ் ஹவுசில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் செயல்பட்டு வந்துள்ளது. இந்த குடியிருப்புகள் சட்ட விரோதமாக வாங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தேசிய பொறுப்புடைமை பணியகம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் கடந்த 2006 ஆம் ஆண்டு மரியம் நவாஸ் போலி பத்திரங்களை தயாரித்ததாகவும் அவரது கணவர் கேப்டன் சப்தார் அதில் கையெழுத்திட்டதாகவும் […]
பாகிஸ்தான் பிரதமர் தனது உறவினருக்கு வசதி ஏற்படுத்தி தரும்படி அரசு அதிகாரியிடம் கூறும் உரையாடல் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியை சேர்ந்த பவத் சவுத்ரி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள 2 நிமிடம் ஓட கூடிய ஆடியோ பதிவில், பிரதமர் நாட்டை விட தனது குடும்பத்தின் நலனில் அதிக அக்கறையுடன் செயல்படுகின்றார் என்பது தெரிகின்றது என்று குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அந்த […]
பாகிஸ்தான் நாட்டில் எதிர்பாராத விதமாக கடுமையான வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளின் இப்போது மீட்பு பணியில் சரிவர ஈடுபடாத பாகிஸ்தான் அரசு மீது அந் நாட்டு மக்கள் மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாட்டன் ஆய்வின் முடிவுகள் இந்த வாரம் வெளியானது. அதன் அடிப்படையில் சுமார் 14 மாவட்டங்களில் கடுமையாக வெள்ளம் பாதித்த 38 இடங்களில் இருக்கும் பொதுமக்கள் தங்களுக்கு அடிப்படை வசதி கூட அரசு செய்து தரவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர். வெள்ளம் காரணமாக இப்பகுதியை […]
பாகிஸ்தான் நாட்டில் பெஷாவர் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்திலிருந்து துபாய் நோக்கி பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் பி.கே.-283 ரக விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. அந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென்று பயணி ஒருவர் எழுந்து விமான ஊழியர்களிடம் மோதலில் ஈடுபட்டுள்ளர். அதன் பின்பு இருக்கைகளை கைகளால் குத்தியும், விமான ஜன்னலை சேதப்படுத்தும் நோக்கில், கால்களால் கடுமையாக உதைத்தும் உள்ளார். இருக்கைகளின் நடுவில் பயணிகள் உள்ளிட்டோர் நடந்து செல்லும் பகுதியில் காலை நீட்டி குப்புற […]
பாகிஸ்தான் நாட்டில் மூன்றில் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அந்நாட்டு மந்திரி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டில் தென்மேற்கு பருவமழையையொட்டி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இந்த மழைப்பொழிவினால் நாடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த வெள்ளத்தினால் அதிகம் பாதித்த 110 மாவட்டங்களில் சுமார் 57 லட்சம் பேர் தங்குமிடம் மற்றும் உணவு இல்லாமல் தவித்து வருகின்றனர். பாகிஸ்தானில் கொட்டி தீர்த்த கனமழை , வெள்ளத்துக்கு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என தேசிய […]
பாகிஸ்தானில் கொட்டி தீர்த்த கனமழையால் பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் பரவலாக நாடு முழுவதும் பலத்த கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் அங்கு பஞ்சாப் மற்றும் கைபர்பக்துங்குவா மாகாணங்களில் நேற்று முன்தினம் பெய்த பலத்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் 6 பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் 6 பேரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். மேலும் பஞ்சாப் மாகாணத்தில் மலைப்பாதையில் ஏற்பட்ட மழை, […]
இம்ரான்கான் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதை தொடர்ந்து பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றுள்ளதை ஏற்க மறுத்து வரும் இம்ரான்கான் தனது ஆட்சி கவிழ்ந்ததில் வெளிநாட்டு சதி இருப்பதாக கூறி […]
பாகிஸ்தான் நாட்டில் புல்புல் என அழைக்கப்பட்ட இந்திய வம்சாவளியான பிரபல பாடகி நய்யரா நூர் காலமானார். பாகிஸ்தான் நாட்டின் புல்புல் என அழைக்கப்பட்ட பழம்பெரும் பாடகி நய்யரா நூர் என்பவர் உடல்நல குறைவால் காலமானார். இவருடைய வயது 71 ஆகும். இது குறித்து அவரது மருமகன் ராணா ஜைடி டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “நய்யரா நூர் மறைவு செய்தியை கனத்த மனதுடன் அறிவிக்கின்றேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவரது […]
பாகிஸ்தானில் வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினரை குறிவைத்து, பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் கைபர் பாக்துன்க்வா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் பதற்றம் நிறைந்து காணப்படுகின்றது. வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினரை குறிவைத்து, பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். பட்டாசி செக்போஸ்ட் அருகே பாதுகாப்பு படையினர் வந்த வாகனம் மீது வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்தை பயங்கரவாதிகள் மோதச்செய்து பின்னர் வெடிக்க வைத்துள்ளனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை […]
பலூசிஸ்தான் மாகாணத்தில் தொடர் கனமழையால் 7 அணைகள் உடைந்ததில் 124 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் பலூசிஸ்தான் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பரவலாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் முற்றிலும் அழிந்து போயுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகளின்றி திறந்த வெளியிலேயே வசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏறக்குறைய அனைத்தும் சேதமடைந்து விட்டன என்று ஏ.ஆர்.ஒய். நியூஸ் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து மாகாண […]
பாகிஸ்தான் நாட்டில் குவெட்டா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள டர்பட் ஸ்டேடியத்திற்கு வெளியே நேற்று நடந்த குண்டுவெடிப்பில் ஒரு காவல்துறை அதிகாரி உட்பட மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நகரின் விமான நிலைய சாலையில் இரண்டு உள்ளூர் அணிகளுக்கிடையே கால்பந்து மைதானத்தில் போட்டி நடந்து கொண்டிருந்த போது இந்த வெடிகுண்டு சம்பவம் நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது. இது […]