கடுமையான வெள்ள பாதிப்பின் காரணமாக அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக பலுச்சிஸ்தான், கைபர், சிந்த் ஆகிய மாகாணங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ள நீர் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை சூழ்ந்ததால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக 937 பேர் உயிரிழந்துள்ளதனர். இதன் காரணமாக தேசிய அவசர நிலை […]
Tag: #பாகிஸ்தான்
முன்னாள் அதிபருக்கு முன் ஜாமினுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் இம்ரான் கான். இவர் ஒரு பொதுக்குழு கூட்டத்தின் போது தீவிரவாத தாக்குதலுக்கு ஆதரவாக பேசியதோடு, உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் நீதிபதிகளையும் மிரட்டும் விதமாக பேசியுள்ளார். இதன் காரணமாக இம்ரான் கான் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்த்த சூழ்நிலையில் நீதிமன்றம் இம்ரான் கானுக்கு முன் ஜாமின் வழங்கியது. இந்த முன் ஜாமின் […]
பாகிஸ்தானில் பருவ மழை மற்றும் வெள்ள பெருக்கின் காரணமாக ஜூன் மாதத்தில் இருந்து குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 903 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் பருவநிலை மாற்றத்துறை மந்திரி ஷெர்ரி ரஹ்மான் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பாகிஸ்தான் முழுவதும் மழை பெய்து வருவதால் பல்வேறு சம்பவங்களில் 1,293 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். பருவமழை மற்றும் வெள்ளத்திற்கு அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் சிந்து மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில் பதிவாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒரு கோடி மக்கள் […]
பாகிஸ்தான் நாட்டின் தொலைபேசி எண்களிலிருந்து மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக இந்தியாவில் வெளியான செய்தியை பாகிஸ்தான் மறுத்திருக்கிறது. மும்பையில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் மேற்கொள்ளப் போவதாக காவல்துறையினருக்கு இரண்டு நாட்களுக்கு முன் குறுஞ்செய்தியில் மிரட்டல்கள் வந்திருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, “மீண்டும் மும்பையில் 26/11 போன்ற தாக்குதல் மேற்கொள்ளப்படும், நகரமே சூறையாடப்படும்” என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. மும்பையில் பாதுகாப்பை பலப்படுத்தியிருக்கிறார்கள். இந்நிலையில், இதில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருக்கும் என்ற சந்தேகங்கள் எழுந்தது. ஆனால், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இதனை மறுத்திருக்கிறது. அவர்கள் […]
கைபர் பக்துன்குவா மாகாணத்தில் சீக்கிய சிறுமியை துப்பாக்கி முனையில் கடத்தி, பலாத்காரத்திற்கு உட்படுத்தி திருமணம் செய்ததை தொடர்ந்து நீதி கேட்டு சீக்கியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துன்குவா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் பியூனர் மாவட்டத்தில், சிறுபான்மையினராக உள்ள சீக்கிய சமூக நபரான குருசரண் சிங் என்பவரின் மகள் தினா கவுர் என்பவரை, துப்பாக்கி முனையில் கடத்திய நபர், பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் உள்ளூர் நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் […]
காயம் காரணமாக ஷாஹீன் அஃப்ரிடி ஆசிய கோப்பையில் இருந்து விலகியதால் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்து விட்டது என பாகிஸ்தான் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். வரலாற்று சிறப்புமிக்க ஆசிய கோப்பை தொடர் வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. எப்போதும் 50 ஓவராக நடத்தப்படும் இந்த 15 வது ஆசிய கோப்பை தொடர், இந்த முறை அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை கிரிக்கெட்டுக்கு தயாராகும் விதமாக 20 ஓவராக […]
பாகிஸ்தான் நாட்டில் பஞ்சாப் மாகாணாத்தில் கதீஜா மஹ்மூத் என்ற இளம்பெண் இறுதி ஆண்டு பல் மருத்துவம் பயின்று வருகிறார். இந்த நிலையில் அம்மாணவியை கடத்தல், சித்திரவதை, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்ததாக 15 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கதீஜா மஹ்மூத்தின் 2 சகோதரர்கள் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் வசிப்பதால் பாதிக்கப்பட்ட அப்பெண் தனது வயதான தாயுடன் பைசலாபாத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவளது வகுப்புத்தோழியான அன்னாவின் தந்தை ஷேக் […]
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் தாயகம் திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான நவாஸ் செரிப் மீது பனாமா ஊழல் உட்பட பல்வேறு ஊழல் வழக்குகள் சுமத்தப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நவாஸ் செரிப்புக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனையும், 130 கோடி ரூபாய் அபராதமும் விதித்து கடந்த 2018-ல் தீர்ப்பு வழங்கியது. இதனால் தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக நவாஸ் வெளிநாடு தப்பிச்செல்ல முயற்சி செய்தார். […]
பாகிஸ்தான்நாட்டில் பெட்ரோல் விலையானது லிட்டருக்கு ரூ.6 உயர்ந்து, 233.91 ரூபாய் ஆக மாறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த புது விலை ஆக்ஸ்ட் 16 நள்ளிரவு முதல் அடுத்த 14 தினங்கள் வரைக்கும் நடைமுறையில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.233.91, டீசல் 244.44 ரூ, மண்னெண்ணெய் 199.40 ரூபாய் என புதியதாக விலை ஏற்றப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் பெட்ரோல் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கம், அந்நிய செலாவணி மாற்றுவிகிதத்தில் ஏற்பட்ட சரிவு […]
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாகூர் நகரில் இருந்து 18 பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து ரகிம் யார் கான் மாவட்டத்தில் வந்து கொண்டிருந்த போது எதிர்திசையில் கரும்பு லோடு ஏற்றி வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 13 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய 5 பேரை மீட்டு மருத்துவமனையில் அங்கிருந்தவர்கள் சேர்த்தனர். இவர்களின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் […]
உத்திரபிரதேச மாநிலத்தில் பாகிஸ்தான் தேசிய கொடியை தனது வீட்டில் இயற்றிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் நகரில் பாகிஸ்தானின் தேசிய கொடியை இளைஞர் ஒருவர் தனது வீட்டில் ஏற்றியுள்ளார். தாரியா சுகான் என்ற காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட வேடுவர் முஸ்தகில் என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று காலை 11 மணியளவில் பாகிஸ்தான் தேசிய கொடி ஏற்றப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]
உலகில்வாழ மோசமான நகரங்கள் பட்டியல் பற்றி பொருளாதார புலனாய்வு பிரிவு எனும் அமைப்பு நடப்பு ஆண்டில் நடத்திய ஆய்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. அப்பட்டியிலில் பாகிஸ்தான் நாட்டின் கராச்சிநகரம் இடம்பிடித்திருக்கிறது. உள் கட்டமைப்பு, சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி, கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய 5 காரணிகளின் அடிப்படையில் 172 நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இவற்றில் மோசமான வாழ்க்கை நிலை, திருட்டு, கடத்தல், போதைப்பொருள், வன்முறை, மோசமான சமூகம் மற்றும் பொருளாதாரநிலை போன்றவற்றின் அடிப்படையில் உலகளவில் […]
செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சிரித்துக்கொண்டே காட்டமாக பதிலத்துள்ளார் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்.. தற்போதைய நவீன கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20, அதுபோக ஐபிஎல் போன்ற பிரிமியர் லீக் டி20 தொடரிலும் வீரர்கள் விளையாடி வருவதால் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் பணி சுமைக்கு ஆளாகி சுமாராகவே செயல்பட்டு வருகின்றனர்.. எடுத்துக்காட்டாக நாம் விராட் கோலியையே கூறலாம்.. விராட் கோலி பணிச்சுமை காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக சதம் அடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.. […]
இந்திய அணிக்கு எதிராக ஆடுவது பற்றி கேட்கப்பட்டதற்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பதிலளித்துள்ளார்.. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த தொடர் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறும் நிலையில், 27 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.. அதற்கு அடுத்த நாளான ஆகஸ்ட் 28ஆம் தேதி பரம எதிரிகளாக கருதப்படும் இந்தியா […]
ஒரு பெண்மணி தான் நிதி நெருக்கடியால் படும் துயரங்கள் குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டில் பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரித்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நில்லையில் நிதி நெருக்கடியால் அவதிப்படும் ரபியா என்ற பெண்மணி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இவருக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் ஒரு குழந்தைக்கு கடந்த நான்கு மாதங்களாக உடல் நலம் சரியில்லாமல் போனதாகவும் அதற்கு மருந்து கூட வாங்க முடியாமல் […]
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் பொருளாதார பிரச்சனைகளால் அரசாங்கத்திடம் கேள்வி கேட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் பணவீக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, மின்சார கட்டணம் மற்றும் உணவு பொருட்களுக்கான விலை கடுமையாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், விலைவாசி அதிகரிப்பதால் தான் படும் கஷ்டங்களை பேசி ஒரு பெண் வெளியிட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. கராச்சியில் வசிக்கும் அந்த பெண் பணவீக்கம் அதிகரித்ததால் தான் சந்திக்கும் பொருளாதார பிரச்சினைகள் […]
அமெரிக்க நாட்டின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் வசிக்கும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை சேர்ந்த மக்களை குறிவைத்து கொலை செய்யும் பயங்கர கொலையாளியால் பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்க நாட்டின் நியூ மெக்சிகோ மாகாணத்தில், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த மக்கள் சிலர் வசிக்கிறார்கள். இந்நிலையில் அவர்களை குறி வைத்து கொலை சம்பவங்கள் நடக்கின்றது. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. மர்மமான முறையில் இந்த கொலைகள் நடக்கிறது. தற்போது வரை, அந்த மர்ம கொலையாளியால் நான்கு நபர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் […]
பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர் ஆப்கானிஸ்தான் நாட்டை பற்றி செய்தி சேகரிக்க சென்ற நிலையில் அவரை தலீபான்கள் கடத்தி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய நாட்டின் ஒரு செய்தி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அனல் மல்லிக் என்னும் பத்திரிகையாளர், ஆப்கானிஸ்தான் நாட்டில் தகவல்களை சேகரிக்கக்கூடிய பணியை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, அல்கொய்தா தீவிரவாத அமைப்பினுடைய முக்கிய தலைவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் தகவல்களை சேகரிப்பதற்காக சென்றிருக்கிறார். அப்போது தான் கடந்த புதன் […]
ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் செய்தி சேகரிக்க சென்று காணாமல் போன பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் பத்திரமாக உள்ளார். அனஸ் மாலிக் என்ற பாகிஸ்தான் இளம் பத்திரிக்கையாளர் ஆப்கானிஸ்தானில் காணாமல் போனாதாக செய்திகள் வெளியாகின. மாலிக் தலிபான்களால் தாக்கப்பட்டதாகவும், அவர் உயிருடன் இருப்பதாக ஆப்கானிஸ்தானுக்கான பாகிஸ்தான் தூதர் மன்சூர் அகமது கான் தெரிவித்துள்ளார். மாலிக் இந்தியாவின் WION சேனலில் பணிபுரிகிறார். புதன்கிழமை ஆப்கானிஸ்தானை அடைந்த அவர் வியாழக்கிழமை இரவு காணாமல் போனார். மாலிக் காணாமல் […]
பாகிஸ்தானில் வருகிற 14-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவெட்டாவில் தேசிய கொடிகள் மற்றும் பிற அலங்கார பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் போட்டு உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தின இரவு குவெட்டா நகரில் தேசிய கொடிகள் விற்கும் கடை ஒன்றில் மக்கள் தேசிய கொடியை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அந்த கடையின் மீது கையெறிக் குண்டை வீசிவிட்டு தப்பிச் […]
ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா இப்படி செய்தால் பாகிஸ்தான் நிச்சயம் வெல்லும் என்று அந்நாட்டைச் சேர்ந்த முன்னாள் வீரர் ரசித் லத்தீப் உறுதியுடன் தெரிவித்துள்ளார். உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வருகின்ற அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த 2022 தொடரில் சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்க வேண்டும் என்று ஒவ்வொரு அணியும் மற்ற நாட்டு அணியுடன் டி20 தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகின்றது. கடந்தாண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் விராட் கோலி […]
குஜராத்தின் கட்ச் மாவட்டம் கடற் பகுதியில் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பாகிஸ்தான் மீனவர்கள் அவ்வப்போது அங்கே தடையை மீறி மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் இரு நாட்டு எல்லை அருகேயுள்ள ஹரமி நலா பகுதியில் இந்திய எல்லை பாதுகாப்புபடையினர் நேற்று காலையில் ரோந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு பாகிஸ்தானை சேர்ந்த சில மீனவர்கள் படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இந்திய வீரர்களை பார்த்ததும் அவர்கள் 2 படகுகளை விட்டு விட்டு […]
பாகிஸ்தான் நாட்டின் லாகூர்நகரிலுள்ள புகழ் பெற்ற அனார்கலி பஜார் அருகில் வால்மீகி கோயில் இருக்கிறது. 1,200 வருடங்கள் பழமைவாய்ந்த இந்த கோயில் சென்ற 20 ஆண்டுகளுக்கு மேலாக கிறிஸ்தவ குடும்பம் ஒன்றின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதில் கோயில் கட்டப்பட்டிருக்கும் நிலம் தங்களுக்கு சொந்தமானது எனக்கூறி ஆக்கிரமித்து வைத்திருந்த சூழ்நிலையில், இதனை எதிர்த்து போராடிவந்த அந்நாட்டின் சிறுபான்மை வழிபாட்டு இடங்களை மேற்பார்வையிட்டு வரும் அமைப்பு ஒன்று சென்ற மாதம் இக்கோயிலை மீட்டது. அதனை தொடர்ந்து இக்கோயில் நேற்று மீண்டுமாக […]
பாகிஸ்தான் பெண் ஒருவர் தனது வீட்டில் வேலைக்கு நியமிக்கப்பட்ட வேலைக்காரர் மீது காதல் கொண்டு அவரையே கரம்பிடித்து இருக்கிறார். பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத் பகுதியில் வசித்து வருபவர் நாசியா. நிலப் பிரபுவான இந்த நடுத்தர வயது பெண்மணி, தன் தோட்டம் மற்றும் வீட்டை பராமரிக்க சூபியான் என்ற நபரை பணிக்கு சேர்த்தார். இதையடுத்து அவர் அந்த வீட்டை பராமரிப்பது, சமைப்பது, வீட்டை சுத்தப்படுத்துவது என பல்வேறு வேலைகளை பொறுப்புடன் செய்து வந்தார். இதனிடையில் வீட்டின் உரிமையாளரான நாசியாவுக்கு […]
ஹெலிகாப்டர் திடீரென வெடித்து சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கனமழை பெய்து வருவதால் பலுச்சிஸ்தான் மாகாணம் வெள்ளப் பெருக்கினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் மற்றும் நிவாரணம் வழங்கும் பணிகள் ராணுவம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் குவெட்டா பகுதியில் இருந்து கராச்சிக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது. இதில் 1 உயர் அதிகாரி உள்பட 6 ராணுவ வீரர்கள் இருந்தனர். இந்த ஹெலிகாப்டர் […]
பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கடந்த 2008 முதல் 2018 வரை பஞ்சாப் மாகாணத்தின் முதல் மந்திரி ஆக பதவி வகித்திருக்கிறார். இந்த 11 வருட கால ஆட்சியில் ஷபாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு பண மோசடிகளில் ஈடுபட்டிருப்பதாக புகார்கள் எழுந்தது. அந்த வகையில் ஷபாஷ் ஷெரிப் மற்றும் அவரது மகன் ஹம்சா ஷபாஷ் போன்ற இருவரும் 2008 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு அரசு திட்டங்களில் இருந்து 1600 கோடி […]
பாகிஸ்தான் நாட்டிலும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் அமெரிக்காவிடம் உதவி கோரியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து கொண்டிருக்கிறது. அந்நாட்டு மக்கள் ஒவ்வொரு நாளும் பல இன்னல்களை சந்தித்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், அந்நாட்டை தொடர்ந்து பாகிஸ்தானிலும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. எனவே, பாகிஸ்தான் அரசு அமெரிக்க நாட்டிடம் 170 கோடி அமெரிக்க டாலர் நிதியுதவி அளிக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறது. இது குறித்து பாகிஸ்தான் நாட்டின் ராணுவ ஜெனரலான காமர் ஜாவித் பாஜ்வா அமெரிக்காவின் […]
பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி முதல் பலூசிதான், பஞ்சாப், சிந்து உள்ளிட்ட மாகாணங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாகாணத்தின் தேரா காஜி கான் சாகிவால் மற்றும் ஜாம்பு உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று முன் தினம் கன மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக அங்குள்ள சுலைமான் மலைத்தொடரில் கொட்டிதீர்த்த கனமழையின் காரணமாக நூற்றுக்கணக்கான கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததில் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. […]
இந்தியாவுடனான ஆக்கபூர்வமான உரையாடல் கடந்த 2019 ஆம் வருடத்திற்கு பின் கடினமாகிவிட்டது என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார். தாஷ்கண்ட் நாட்டில் நடைபெறும் எஸ்சிஓ அமைப்பின் வெளியுறவு மந்திரிகளின் கூட்டத்தில் பங்கேற்க பிலாவல் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது “இந்தியா எங்கள் அண்டைநாடு. பல்வேறு விஷயங்களை ஒருவர் முடிவு செய்யமுடியும் என்றாலும், அண்டை வீட்டாரை தேர்வு செய்ய முடியாது. ஆகவே அவர்களுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும். அத்துடன் கடந்த 2019ம் […]
பிரபல நாட்டில் இந்து மத பெண் ஒருவர் துணை டிஎஸ்பியாக பதவி ஏற்கிறார். பாகிஸ்தான் நாட்டிலுள்ள சிந்து மாகாணத்தில் ஜாகோபாத் என்ற இடத்தில் மனிஷா ரூபேட்டா என்பவர் பிறந்தார். இவர் இந்து மத குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் தன்னுடைய சிறுவயதிலேயே தந்தையை இழந்து விட்டதால், மனிஷா மற்றும் அவருடைய 3 சகோதரிகள் 1 தம்பியை அவருடைய தாயார் படிக்க வைத்தார். இந்நிலையில் மனிஷாவின் 3 சகோதரிகளும் மருத்துவம் படித்து டாக்டராக இருக்கும் நிலையில், அவருடைய தம்பியும் […]
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தார் ஆவார். இவருக்கு கொரோனா நோய் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு வயது 67 ஆகிறது. இது குறித்து அவரது மகனும், அந்த நாட்டின் வெளியுறவு மந்திரியுமான பிலாவல் பூட்டோ கூறியதாவது, “ஆசிப் அலி சர்தாரி கொரோனாவுக்கு எதிராக 2 “டோஸ்” தடுப்பூசிகள் மட்டுமின்றி “பூஸ்டர்” டோசும் செலுத்திக்கொண்டுள்ள நிலையில் இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ள அவருக்கு லேசான அறிகுறிகள் […]
பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி சந்தித்து வருகிறது. இதனால் அந்நிய கடன்களை திரும்ப செலுத்த முடியாமல் அந்நாடு தவித்து வருகிறது. சர்வதேச நிதியம் பாகிஸ்தானுக்கு ரூ.7500 கோடி கடன் வழங்குவதாக தெரிவித்திருந்தது. ஆனால் பாகிஸ்தான் அரசு சில நிபந்தனைகளை நிறைவேற்றததால் சர்வதேச நிதியம் பணம் வழங்கவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் இம்ரான்கான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு பாகிஸ்தானின் பிரதமராக பதவி ஏற்ற ஷபாஷ் ஷெரீப் தலைமையிலான அரசுக்கு தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மிகவும் […]
பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் சென்ற ஏப்ரல் மாதம் எதிர்க் கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றிபெற்றதை அடுத்து பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதையடுத்து எதிர்க் கட்சி தலைவராகயிருந்த ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புது பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவ்வாறு ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்று இருப்பதை ஏற்க மறுத்துவரும் இம்ரான்கான் தன் ஆட்சி கவிழ்ப்பில் வெளிநாட்டு சதி உள்ளதாக கூறுகிறார். அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தானின் புது அரசுக்கு எதிராக தன் கட்சியான பாகிஸ்தான் தெக்ரிக்-ஐ-இன்சப் […]
பாகிஸ்தான் நாட்டில் ஏழு மணி நேரங்களாக தொடர்ந்து கொட்டித்தீர்த்த கனமழையால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகரத்தில் தொடர்ந்து ஏழு மணி நேரங்களாக கனமழை கொட்டித்தீர்த்தது. பலத்த மழையானது 238 மிமீ-ஆக பதிவானது. அந்நாட்டில் 20 வருடங்களில் இல்லாத வகையில் தொடர்ந்து மழை கொட்டி தீர்த்ததாக கூறப்பட்டிருக்கிறது. இதனால் அந்த நகரத்தில் உள்ள தாழ்வான பகுதிகளின் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது. மேலும், சாலைகளிலும் அதிகமான மழை நீர் ஓடியதால் போக்குவரத்து கடும் பாதிப்படைந்தது. பலத்த […]
விதிமுறைகளை மீறியதற்காக பாகிஸ்தானை சேர்ந்த 1.24 கோடி வீடியோக்களை நீக்கியுள்ளதாக டிக் டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான வீடியோக்களை டிக் டாக் நிறுவனம் நீக்கியது. இதில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் 1,24,90,309 வீடியோக்களை டிக் டாக் நிறுவனம் நீக்கியது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மைக்காக டிக் டாக் நிறுவனம் நிர்ணயத்துள்ள விதிமுறைகளை மீறி வீடியோக்கள் பதிவு […]
அமெரிக்க பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டைச் சேர்ந்த 21 வயது இளம் பெண்ணுக்கு இணையதளம் மூலமாக பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முஸ்மல் சிப்ரா என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இவருடைய அழைப்பின் பேரில் 21 வயது இளம் பெண் பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சிக்கு வந்துள்ளார். இவர் தற்போது போர்ட் மன்ட்ரோ என்ற மலை வாசஸ்தளத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி இருக்கிறார். கடந்த 7 மாதங்களாக சுற்றுலா […]
பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து பிரதமரின் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இந்தநிலையில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரிப் பாகிஸ்தானின் பிரத புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதை ஏற்க மறுத்து வரும் இம்ரான் கான் அரசு தனது ஆட்சி கவிழ்ப்பில் வெளிநாட்டு சதி இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தானின் புதிய அரசுக்கு எதிராக தனது கட்சியான […]
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானில் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் காலராவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூன் மாதம் பருவ மழை காரணமாக வெள்ளப்பெருக்கு உண்டானது. இதில் பலுசிஸ்தான் மாகாணம் கடும் சேதமடைந்தது. இந்த மாகாணத்தில் இருக்கும் 13 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டனர். மேலும் சோப் மற்றும் லாத் போன்ற மாகாணங்களில் காலராவும் பரவிக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது வரை காலரா பாதிப்பால் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்படைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தீவிரமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு […]
படகு கவிழ்ந்ததில் ஆற்றில் மூழ்கி 19 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில், ரஹீம் யார் கான் மாவட்டத்தில் மோட்ச்கா பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த 100 பேர் ராஜன்பூர் பகுதியில் நடந்த திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றனர். இவர்கள் திருமண நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு படகில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தனர். இவர்கள் இந்தோஸ் ஆற்றில் உள்ள பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணத்தின் இடையே […]
மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், சிந்த் மற்றும் பலுச்சிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மழையின் காரணமாக பல வீடுகள் மற்றும் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அந்நாட்டு மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து வடகிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மணிக்கு […]
இந்தியாவில் வாழ்ந்து வரும் பாகிஸ்தானை சேர்ந்த 92 வயதுடைய மூதாட்டி சொந்த நாட்டில் இருக்கும் பூர்வீக வீட்டிற்கு 75 வருடங்களுக்குப் பின் சென்றிருக்கிறார். இந்தியாவில் வாழும் 92 வயதுடைய ரீனா சிபார் என்ற மூதாட்டியின் பூர்வீக குடியிருப்பு பாகிஸ்தானில் இருக்கிறது. பாகிஸ்தான் தூதரகம் அந்த மூதாட்டிக்கு நல்லெண்ண அடிப்படையில் மூன்று மாதங்களுக்கான விசாவை அளித்திருக்கிறது. அதனைத்தொடர்ந்து, பாகிஸ்தான் நாட்டின் ராவல்பிந்தி என்னும் நகரத்தில் இருக்கும் தன் பூர்வீக குடியிருப்பிற்கு அந்த மூதாட்டி நேற்று சென்றுள்ளார். இவரின் குடும்பத்தினர் […]
இலங்கையில் எரிபொருள் விலை மற்றும் விலைவாசி உயர்வினை எதிர்த்து கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் எரிபொருள் விலையில் குறைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து அந்நாட்டு பிரதமர் ஷாபாஷ் ஷெரிப் கூறியது, பாகிஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.18.50, டீசல் விலை லிட்டருக்கு ரூ.40 அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை சரிந்ததால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பதவியேற்ற போது சந்தை விலைக்கேற்ப கனத்த இதயத்துடன் விலையே ஏற்றியதாக […]
உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப் போரால் உலக நாடுகளில் விலைவாசி அதிகரித்து போராட்டங்கள் வெடித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருப்பதால், உலக நாடுகளில் உணவு பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு விலைவாசி அதிகரித்துள்ளது. எனவே, இலங்கை மற்றும் பாகிஸ்தான் போன்ற நாட்டு மக்கள் கொந்தளித்துள்ளார்கள். ஆட்சி மாற்றமும் நடந்துள்ளது. பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக வரி உயர்வு ஆகிய பிரச்சனைகளால் பனாமா, ஹெய்தி, மற்றும் ஹங்கேரி உட்பட பல்வேறு நாடுகளில் மக்களின் ஆர்ப்பாட்டம் […]
பாகிஸ்தான் நாட்டில் ஒரு நபர் தன் பிள்ளைகளின் கண் முன்னே மனைவியை கொடூரமாக கொலை செய்து கொப்பரையில் போட்டு வேக வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் கராச்சி மாகாணத்தில் இருக்கும் குல்ஷன் இ இக்பால் என்னும் பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் காவலாளியாக இருக்கும் ஆஷிக்கிற்கு 6 பிள்ளைகள் இருக்கிறார்கள். இதில், அவரின் 15 வயது மகள் கடந்த புதன்கிழமை அன்று காவல்துறையினரிடம் கடும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய புகார் ஒன்றை கொடுத்தார். அதன்படி, […]
பாகிஸ்தானில் இந்து மதத்தை சேர்ந்த ஒரு சிறுமி கடத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் அதிகமாக இந்து மதத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் அந்த மாகாணத்தை சேர்ந்த ஸ்ரீமதி கரினா என்னும் சிறுமி மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். ஆனால், காவல்துறையினர் சிறுமியை யாரும் கடத்தவில்லை எனவும் கலீல் ரகுமான் ஜோனோ என்ற இஸ்லாமிய இளைஞரை காதலித்து கராச்சி நீதிமன்றத்தில் சிறுமி திருமண ஒப்பந்தம் செய்ததாகவும் கூறினர். இதனால் இந்து மதத்தை சேர்ந்த மக்கள் […]
தெற்கு பாகிஸ்தானில் பாலூசிதான் மாகாணத்தில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் குடியிருப்பு கூரைகள் இடிந்து விழுந்து பலர் படுகாயமடைந்துள்னர். அதுமட்டுமில்லாமல் கனமழை பெருவெள்ளத்தினால் 8 அணைகள் உடைந்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஊருக்குள் புகுந்துள்ளது. வெள்ள நீரில் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டோர் அடித்து செல்லப்பட்டனர். இதனையடுத்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 57 பேர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கம்ரான் அக்மல் வீட்டில் ரூபாய் 90,000 மதிப்பு உள்ள ஒரு ஆடு திருடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இவர் அந்த நாட்டின் லாகூர் நகரில் வசித்துவருகிறார். பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ள சூழ்நிலையில், 6 ஆடுகளை கம்ரான்அக்மல் வீட்டினர் வாங்கி உள்ளனர். இந்த ஆடுகளை வீட்டின் வெளியில் உள்ள தொழுவத்தில் வைத்து அதனை பாதுகாத்து பராமரிக்க ஒரு உதவியாளரையும் வைத்துள்ளனர். இந்த நிலையில் அவரது வீட்டில் பக்ரீத் பண்டிகைக்காக வாங்கி வைத்த […]
போலியோ சொட்டு மருந்து செலுத்தும் குழுவினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. உலகிலேயே பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் மட்டுமே இளம்பிள்ளை வாதம் என்ற போலியோ நோய் உள்ளது. இந்த போலியோ நோய்க்கு சொட்டு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பல்வேறு நாடுகள் ஆண்டு தோறும் சொட்டுமருந்து முகாம் நடத்தி வருகின்றன. இருப்பினும் இந்த இரு நாடுகளுக்கு போலியோ சொட்டு மருத்துக்கு எதிராக பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் அங்கு போலியோ சொட்டு மருந்து செலுத்துபவர்கள் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு […]
பாகிஸ்தானில் பஞ்சாப் சட்டசபையில் காலியாக உள்ள 20 இடங்களுக்கு வருகின்ற ஜூலை 17ஆம் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானும் இடை தேர்தலுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் அடிக்கடி தற்போதைய அரசாங்கத்தை வெளிநாட்டினரால் இறக்குமதி செய்யப்பட்டது என்று குற்றம் சாட்டி வருகிறார். மேலும் அமெரிக்கா இந்த அரசாங்கத்தை சதி வேலைகளால் திணித்ததாகவும் குற்றம் சாட்டுகிறார். இதற்கு பதிலளிக்க கூடிய பேசிய மரிய நவாஸ், இம்ரான் கான் பஞ்சாப் மாகாணத்தை […]
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தாக்கில் விழுந்ததில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துன்கவா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்நிலையில் 30 பயணிகளுடன் ராவல்பிண்டியிலிருந்து குவெட்டாவுக்கு புறப்பட்ட பஸ் மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதுவரை உயிரிழந்த 19 பேரின் உடல்கள் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்த 11 பேரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]