பாகிஸ்தான் நாட்டில் 13 வருடங்களில் இல்லாத வகையில் பணவீக்கம் ஏற்பட்டிருப்பதால் பக்ரீத் பண்டிகைக்கு கால்நடை வாங்க முடியாத நிலையில் மக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாடு பணவீக்கம் அதிகரிப்பு, நடப்பு கணக்கு தட்டுப்பாடு, அன்னிய செலவாணி கையிருப்பு குறைவு போன்ற பல சிக்கல்களை சந்தித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தொடர்ந்து பண வீக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, நாட்டில் எரிபொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. இதனால், மக்கள் கடும் சிக்கலில் உள்ளனர். இந்நிலையில், பக்ரீத் […]
Tag: #பாகிஸ்தான்
பாகிஸ்தான் நாட்டில் தொடர் எரிபொருள் விலை உயர்வால் மக்கள் வாகன பயன்பாட்டை குறைத்து கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு பதவியேற்ற பின் பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களின் விலையானது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகின்றது. இந்நிலையில் மின் கட்டணமும் உயர்ந்துள்ளது. இதனால், அந்நாட்டு மக்கள் அதிக அளவில் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசு பெட்ரோல் விலையை நேற்று மீண்டும் உயர்த்தியது. இதன்படி, பெட்ரோல் ஒரு லிட்டருக்கு […]
பாகிஸ்தானில் உள்ள பல்வேறு இடங்களில் 14 மணி நேரத்திற்கும் மேலாக கடுமையான மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை நாட்டை போல பாகிஸ்தானிலும் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது. கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதம் எரிபொருள் இறக்குமதியின் விலையானது பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் 14 மணி நேரத்திற்கும் மேலாக கடுமையான மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் […]
பாகிஸ்தானில் மின்தடை குறித்து மத வழிபாட்டு தலத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான பொருளாதார நெருக்கடியால் மின் தடை ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டில் பெஷாவர் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் லாகி மார்வட் மாவட்டத்தில் இசக் ஹெல் பகுதியில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலம் ஒன்று உள்ளது . இந்த வழிபாட்டு தலத்தில் நேற்று வழிபாடு நடைபெற்றுள்ளது. […]
பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் கவிழ்ந்தது. இதனையடுத்து பாகிஸ்தானில் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் ஷபாஷ் ஷெரீப் பதவி ஏற்றார். அதனைதொடர்ந்து தனது அரசை வெளிநாட்டு சக்தி சரி செய்து கவிழ்த்து விட்டதாகவும் உடனே பொது தேர்தலை நடத்த வேண்டும் என்று இம்ரான் வலியுறுத்தி வருகிறார். அதுமட்டுமில்லாமல் பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று ஆதரவு திரட்டி வருகிறனர். அதன்படி இன்று இஸ்லாம்பாத்தில் அணிவகுப்பு மைதானத்தில் பிரம்மாண்ட பேரணி பொதுக்கூட்டம் […]
பாகிஸ்தான் நாட்டில் ராணுவத்தை விமர்சித்ததற்காக 73 வயதான மூத்த அந்நாட்டு பத்திரிக்கையாளர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார். பத்திரிக்கையாளர் அயாஸ் அமீர் அண்மையில் ஒரு கருத்தரங்கில் பாகிஸ்தானின் அரசியலில் ராணுவத்தின் பங்கை குறி வைத்தார். முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பங்கேற்ற கருத்தரங்கில் அவர் பாகிஸ்தானின் ராணுவ ஜெனரல்களை சொத்து வியாபாரிகள் என்று குறிப்பிட்டார். அதுமட்டுமல்லாமல் முஹம்மது அலி ஜின்னா மற்றும் அல்லாமா இக்பால் போன்றோரின் உருவப் படங்களை அகற்றிவிட்டு சொத்து வியாபாரிகளை மாற்றவும் பரிந்துரைத்தார். மேலும் நாட்டின் […]
பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டதால் மக்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். பாகிஸ்தான் அரசு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அரசு பினையெடுப்பு திட்டத்தை மீண்டும் தொடங்குவதற்காக IMF உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் 4-வது முறையாக எரிபொருள்களின் மீதான வரியை மீண்டும் பாகிஸ்தான் அரசு உயர்த்தி உள்ளது. இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 248 ரூபாய் 74 பைசாவிற்கும், ஒரு லிட்டர் டீசல் 276 […]
அடுத்த வருடத்திற்கான ஜி 20 மாநாட்டை ஜம்மு-காஷ்மீரில் நடந்த சீனா எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. உலகில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த நாடுகளான பிரிட்டன், இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா உட்பட சுமார் 20 நாடுகள், ஜி-20 அமைப்பில் இருக்கின்றன. இந்நிலையில் இந்த ஜி 20 அமைப்பின் மாநாட்டை ஜம்மு காஷ்மீரில் அடுத்த வருடம் நடத்துவதற்கு மத்திய அரசு தீர்மானித்தது. இதற்காக ஐந்து நபர்கள் கொண்ட நிர்வாக குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தான் அரசு, ஜம்மு-காஷ்மீர் பிரச்சனையில் இந்தியா மற்றும் […]
பாகிஸ்தானில் கொரோனா பரவல் அதிகரித்ததால் மீண்டும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று விகிதம் மூன்று சதவீதமாக இருக்கிறது. மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்திருக்கிறது. எனவே, பிரதமர் ஷபாஸ் ஷெரிப் வருத்தம் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் கொரோனாவிற்கு எதிராகன கட்டுப்பாடுகளை மீண்டும் நடைமுறைப்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகள், கடந்த […]
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பா.ஜனதா முன்னாள் செய்தி தொடர்பாளர் நுகர் சர்மாவை ஆதரித்து, சமூக வலைதளத்தில் கருத்துப்பதிவிட்ட ராஜஸ்தானி சேர்ந்த தையல் கடைக்காரரான கன்னையா லாலை அவரது கடையில் வைத்து கோஸ் முகமது மற்றும் ரியாஸ் அத்தாரி ஆகிய இருவரால் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த படுகொலை நடத்திய கொலையாளிகள் ராஜ்சமந்த் மாவட்டத்தின் பீம் பகுதியில் வைத்து நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் […]
நிதிநெருக்கடியில் தவித்து வரும் பாகிஸ்தான் நாட்டில் கடும் மின்பாற்றக்குறை நிலவி வருகிறது. இதனால் நாட்டின் பல பகுதிகளில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக சிந்து மாகாணத்தின் தலைநகரான கராச்சியில் தினசரி 12 -14 மணிநேரம் மின்வெட்டு ஏற்படுவதாக தெரிகிறது. இதன் காரணமாக அந்த நகர மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் தொடர் மின்வெட்டு காரணமாக கோபமடைந்த கராச்சி நகர மக்கள் நேற்று முன்தினம் இரவு திடீரென்று போராட்டத்தில் குதித்தனர். மேலும் நகரிலுள்ள முக்கிய […]
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் வீட்டில் உளவு பார்க்க உதவிய காவலாளி பிடிபட்டார். பாகிஸ்தான் நாட்டில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் வீட்டில் உளவு பார்க்க உதவிய காவலாளி பிடிபட்டார். இந்த விவகாரம் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இஸ்லாமாபாத்தில் இம்ரான்கான் வீடு அமைந்துள்ள பாணிகளா பகுதிக்கு உச்சகட்ட பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இம்ரான்கான் வீட்டில் ஐந்து ஆண்டுகளாக பணியாற்றி வந்த காவலாளி ஒருவர் கண்காணிப்பு கேமராவை இம்ரான்கான் அறையில் வைக்கும் போது பிடிபட்டார். அந்தக் காவலாளியை இம்ரான்கானின் உதவியாளர்கள் தனியிடத்தில் […]
இந்தியாவில் முடக்கப்பட்ட எங்களது தூதரகங்களின் டுவிட்டர் பக்கங்களை மீட்டெடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் முடக்கப்பட்ட எங்களது தூதரகங்களின் டுவிட்டர் பக்கங்களை மீட்கவேண்டும் என்று டுவிட்டர் நிறுவனத்திற்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது. ஈரான், துருக்கி, எகிப்து ஆகிய நாடுகளின் பாகிஸ்தான் தூதரக டுவிட்டர் பக்கங்கள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. அந்த டுவிட்டர் பக்கங்களை மீட்டெடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்து இருக்கிறது.
சீன அரசாங்கத்தால் நடத்தப்பட்ட பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் நாங்கள் கலந்து கொள்வதை ஒரு நாடு தடுத்ததாக பாகிஸ்தான் இந்தியாவை மறைமுகமாக குற்றம் சாட்டியிருக்கிறது. 14-ஆம் பிரிக்ஸ் மாநாடானது கடந்த 23ஆம் தேதியன்று சீனாவின் தலைமையில் பீஜிங் மாகாணத்தில் நடந்தது. இதில் கலந்து கொள்ளவிடாமல் தங்களை ஒரு நாடு தடுத்ததாக பாகிஸ்தான் கூறியிருக்கிறது. இதுகுறித்து பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலகம் கூறியதாவது, இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா போன்ற பிரிக்ஸ் நாடுகளின் 14ஆம் உச்சிமாநாட்டில் உலக வளர்ச்சி […]
பாகிஸ்தான் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையானது தொடர்ந்து 2-வது நாளாக 400-ஐ தாண்டியது. சென்ற 24 மணிநேரத்தில் புதியதாக 435 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனிடையில் 2 பேர் உயிரிழந்துள்ள சூழ்நிலையில், 94 பேருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் உள்நாட்டு விமானங்களில் பயணிப்போருக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்து உள்ளது. கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் மீண்டுமாக நடைமுறைபடுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா வைரஸ் […]
பாகிஸ்தான் நாட்டின் உயர்கல்வி ஆணையமானது நிதி நெருக்கடியால் தேயிலை செலவை குறைக்க மக்கள் லஸ்சி குடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அங்கு அந்நிய செலவாணி கையிருப்பு குறைந்து கொண்டிருப்பதால் அரசாங்கம் திணறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நாட்டினுடைய உயர்கல்வி ஆணையமானது பணி வாய்ப்பை அதிகரிக்க மற்றும் தேயிலை இறக்குமதிக்கு ஆகும் செலவை குறைக்க புதிய ஆலோசனையை கூறியிருக்கிறது. அதாவது, நாட்டு மக்கள் டீ குடிப்பதற்கு பதிலாக சட்டு சர்பத்து, லஸ்ஸி போன்ற உள்ளூர் […]
பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இது தவிர பெண்கள் கடத்தல், பாலியல் பலாத்காரம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை போன்ற வழக்குகளும் அதிகரித்திருக்கின்றது. பாகிஸ்தானில் மனித உரிமைகள் ஆணையத்தின் சமீபத்திய அறிக்கை ஒன்றின் படி அந்த நாட்டில் தினசரி 11 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி வருகின்றது. கடந்த ஆறு வருடங்களில் இது போன்ற 22 ஆயிரம் சம்பவங்கள் போலீசாரிடம் புகாராக அளிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் […]
பாகிஸ்தான் நாட்டில் வஜிரிஸ்தான் மாவட்டத்தில் பிறந்து 8 மாதங்கள் ஆன குழந்தைக்கு போலியோ தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளிலேயே சில நாடுகளில் தான் போலியோ பாதிப்பு இருக்கிறது. அந்த பட்டியலில் பாகிஸ்தானும் இருக்கிறது. போலியோ தொற்றை தடுக்கக்கூடிய மருந்தை எதிர்த்து பொய் பிரச்சாரங்கள் பரப்பப்படுகிறது. எனவே, பாகிஸ்தான் அரசு முற்றிலுமாக போலியோ தொற்றை கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. அதன்படி, அந்நாட்டின் வஜிரிஸ்தான் மாவட்டத்தில் பிறந்து 8 மாதங்கள் ஆன ஒரு குழந்தைக்கு போலியோ தொற்று […]
பாகிஸ்தானில் காகிதப் பற்றாக்குறை காரணமாக பள்ளிகளுக்கு பாடப் புத்தகம் அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, அந்நாட்டில் திரும்ப செலுத்த கூடிய கடன் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இன்னிலையில் நிதி நெருக்கடி மற்றும் பணவீக்கத்தினால் அங்கு காகிதப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக புத்தகங்களுக்கான விலையையும் நிர்ணயிக்க முடியாத நிலை நீடிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளாட்பாரத்தில் பிரபல அம்பையர் துணி விற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இவருக்கு ஏன் இந்த நிலைமை என்று அனைவரும் கேட்டு வருகின்றனர். பாகிஸ்தானை சேர்ந்த ஆசாத் ரவூத் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் ஆடி, பின்னர் அம்பையராக பரிணமித்தார். 2013ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அம்பயராக செயல்பட்ட இவர் மீது சட்ட விரோத பந்தயம், ஏமாற்றுதல், மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டது. இதன் காரணமாக மும்பை காவல்துறை இவர் மேல் வழக்கு பதிவு செய்தது. ஆனால் […]
பாகிஸ்தானில் உறவு வைத்துக்கொள்ள மறுத்த திருநங்கை மீது ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் பஞ்சாப் மாகாணத்தின் லாகூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் பாலியல் உறவு வைத்துக்கொள்ள மறுத்த திருநங்கை மீது ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருநங்கையின் பெயர் கின்சா. இவருக்கு 23 வயதாகிறது. இவர் நேற்று முன்தினம் ரேஸ் கோர்ஸ் பகுதியில் ஆட்டோவிற்காக காத்திருந்தார். அப்பொழுது அங்கு […]
பாகிஸ்தான் அரசின் யோகா பற்றிய பதிவிற்கு அந்நாட்டின் மதவாதிகளிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சர்வதேச யோகா தினத்திற்காக பல உலக நாடுகள் யோகா பயிற்சிகளை மேற்கொண்டன. அதேபோல் பாகிஸ்தானும் தங்களது ட்விட்டர் பக்கத்தில், “யோகா மூலம் மன நிறைவு, நிலையான மாற்றம் உண்டாகிறது. இரு விஷயங்கள் உடற்பயிற்சி உலகத்தில் மிகவும் முக்கியமானது. அதன்படி யோகா மூலமாக மனது, உடல் புத்துணர்வு பெறுகிறது” என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், பாகிஸ்தான் அரசாங்கத்தின் இந்த கருத்திற்கு அந்நாட்டின் மதவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். […]
பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் அனுபவமில்லாத மருத்துவர் பிரசவம் பார்த்ததால் குழந்தையின் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தை சேர்ந்த 32 வயது கர்ப்பிணி பெண் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பிரசவத்திற்காக சென்றிருக்கிறார். அங்கு பெண் மருத்துவர்கள் இல்லாததால் அனுபவம் இல்லாத பணியாளர் ஒருவர் அந்த பெண்ணிற்கு மகப்பேறு சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அப்போது, குழந்தையை வெளியே எடுத்தபோது அதன் தலை துண்டிக்கப்பட்டு தனியாக வந்துள்ளது. அந்தப் பணியாளர் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக […]
அலியாபட் திரைப்படத்தின் வசனத்தை வைத்து கேலி செய்த பாகிஸ்தான் ரெஸ்டாரென்ட் மன்னிப்பு கேட்டுக் கொண்டது. சஞ்சய்லீலா பன்சாலி இயக்கத்தில் அலியாபட் நடித்த திரைப்படம் கங்குபாய் கத்தியவாடி ஆகும். இந்த படத்தில் பாலியல் தொழிலாளி வேடத்தில் அலியா பட் நடித்து இருந்தார். இதில் ஒரு காட்சியில் ஆண்களுக்கு தள்ளுபடி சலுகையுண்டு என அவர் விளம்பரம் செய்வது போன்று காட்சி இடம்பெறும். இந்நிலையில் இந்த வசனத்தை வைத்து பாகிஸ்தான் நாட்டின் கராச்சியிலுள்ள ஒரு ரெஸ்டாரென்ட், ஆண்களுக்கு தள்ளுபடி சலுகையுண்டு என்று […]
பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. பாகிஸ்தானில் நிலவிவரும் பணவீக்கத்திற்கு எதிராக முக்கிய நகரங்களில் இம்ரான்கான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் அவர்களுடன் காணொளி மூலம் அவர் உரையாடினார். அப்போது பேசிய அவர், நான் உங்களுக்கு போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுக்கிறேன். சுதந்திரமான மற்றும் வெளிப்படையான தேர்தல் நடத்தாவிட்டால், மேலும் குழப்பம் பரவும். அதுமட்டுமில்லாமல் முன்கூட்டியே தேர்தல் நடத்தவிட்டால் நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை மேலும் மோசமடையும் என்று கூறினார். அதனைத் தொடர்ந்து பெட்ரோல் […]
இந்திய எல்லையை தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 20 பேரை கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்து காராச்சி சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடித்ததாக கூறி 5 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்களை நன்னடத்தை அடிப்படையில் பாகிஸ்தான் விடுவித்துள்ளது. இதனையடுத்து இந்த மீனவர்கள் வாகா எல்லைக்கு செல்வதற்காக லாகூர் அனுப்பப்பட்டனர். இந்நிலையில் லாகூர் நகரில் இருந்து ரயிலில் […]
பாகிஸ்தானில் பிறந்து இரண்டு வாரங்களே ஆன ஆட்டுக்குட்டிக்கு 50 சென்டிமீட்டர் நீளம் வரை காது இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் கராச்சி மாகாணத்தில் முகமது ஹசன் நரிஜோ என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகின்றார். இந்த நிலையில் அவரது ஆட்டுப்பண்ணையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் ஆடு ஓன்று குட்டியை ஈன்று உள்ளது. அந்த ஆட்டுக்குட்டியின் காது மற்ற ஆட்டுக்குட்டிகளின் காதை விட மிகவும் நீளமாக இருந்தது. இதனை […]
ஏ பி ஏ டி எஃப் தலைவரான மார்க்கஸ் பிளேயர் பாகிஸ்தான் கிரே பட்டியலில் தொடர்ந்து நீடிக்கும் என்று கூறியிருக்கிறார். சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு குழுவான எப்.ஏ.டி.எப்-ன் தலைமையிடம் பாரிசில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு தீவிரவாதத்திற்கு நிதி வழங்குவது, சட்டவிரோதமான முறையில் பண பரிமாற்றம் செய்வது போன்ற செயல்கள் அதிகமாக நடக்கும் நாடுகளை கண்காணித்து அதனை தடுக்க உத்தரவிடுகிறது. அந்த உத்தரவு நிறைவேற்றப்படும் வரை உரிய நாடுகளை கிரே என்ற பட்டியலில் இணைத்துவிடும். அந்தவகையில், […]
பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதால் மக்கள் டீ குடிப்பதை நிறுத்திக் கொள்ளுமாறு அந்நாட்டின் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையை போல பாகிஸ்தான் நாட்டிலும் மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகின்றனர். இந்நிலையில் மானிய திட்டங்களை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளதால் அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவில் உள்ளது. இங்கு பண வீக்கம் அதிகரிப்பால் இறக்குமதி செய்யவும் போதிய நிதியின்றி தவிக்கும் நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தேயிலை இறக்குமதி அரசாங்கத்திற்கு அதிக […]
நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மக்கள் டீ குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு அமைச்சர் கூறியிருப்பது இணையதளத்தில் பேசுபொருளாகி உள்ளது. இலங்கை போன்று பாகிஸ்தானும் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் சிக்கன நடவடிக்கைகளை அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தான் வளர்ச்சித்துறை அமைச்சர், பொதுமக்கள் குடிப்பதை குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். டீ குடிப்பதற்கும் பொருளாதாரத்திற்கு என்ன சம்பந்தம் என இணையதளத்தில் பலரும் அவர் பேசிய […]
பாகிஸ்தான் நாட்டில் வசித்து பணியாற்றும் சீனர்களை இலக்காக கொண்டு தாக்குதல் அதன்படி கடந்த ஏப்ரல் இறுதியில் கராச்சி நகரில் உள்ள பல்கலைக்கழகத்தின் வளாகத்திற்குள் வேன் ஒன்றின் மீது பெண் ஒருவர் நடத்திய தற்கொலை தாக்குதலில் சீன மொழி பயிற்றுவிக்கும் மையத்தின் இயக்குனர் உள்ளிட்ட 3 பேர் கொல்லப்பட்டுள்ளர். அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு கைபர் பக்துங்குவா மாகாணத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்த்தில் சீனாவை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். இது போன்ற தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. […]
பாகிஸ்தானில் வேலையில்லா திண்டாட்டம் காரணமாக பிறநாடுகளில் பணிக்காக செல்லும் நபர்கள் எண்ணிக்கை 27.6 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. பாகிஸ்தானில் கொரோனா காரணமாக பெரும்பாலான மக்கள் வேலையின்றி வருமானம் இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாவால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு பல மக்கள் வேலையின்றி திண்டாட செய்தது. அதில் பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் 76,213 நபர்களும், பஞ்சாப்பில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 877 நபர்களும் பிறநாடுகளில் வேலை தேடி வருகிறார்கள் என்று அந்நாட்டின் வெளிநாட்டு […]
மத கடவுளின் இறை தூதரை அவமானப்படுத்தியதற்காக சகோதரர்களுக்கு கோர்ட் மரண தண்டனை விதித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் மத கடவுள்கள் குறித்து அவதூறு மற்றும் சர்ச்சை கருத்து தெரிவிப்பவர்களுக்கு சிறை தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் உள்ளது. இந்த சட்டம் மூலம் இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதராக கருதப்படும் நபிகள் நாயகம் குறித்து அவதூறு மற்றும் சர்ச்சைக்கருத்து தெரிவித்தபலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்கு சர்வதேச அளவில் எதிர்ப்புகளும் உள்ளன. இதனை […]
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபரான முஷாரப்பின் உடல்நிலை மோசமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபராக இருந்த ஜெனரல் பர்வேஸ் முஷாரப் கடந்த 1999 ஆம் வருடத்தில் இராணுவ ஆக்கிரமிப்பின் மூலமாக பொறுப்பேற்றார். தற்போது அவருக்கு 78 வயதாகிறது. இன்னிலையில் அவர், உடல் நல பாதிப்பால் துபாயில் வசித்து வந்தார். வயது முதிர்வால் கடந்த சில நாட்களுக்கு முன் அவரின் உடல் நிலை மேலும் பாதிப்படைந்தது. எனவே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் […]
பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றது. குறைந்து வரும் அந்நிய செலவாணி கையிருப்பு அதிகரித்துவரும் திருப்பி செலுத்த வேண்டிய கடன் டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற பல பிரச்சினைகளை அந்த நாடு எதிர் கொண்டு இருக்கின்றது. இந்த சூழ்நிலையில் நிதிப்பற்றாக்குறையை கட்டுப்படுத்த உதவும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து அழுத்தம் கொடுக்கப் பட்டுள்ள நிலையில் அரசாங்கம் பணக்காரர்கள் மீதான வரிகளை அதிகரிப்பதற்காக அரசு அதிகாரிகள் புதிய கார்கள் வாங்குவதை […]
பாகிஸ்தான் நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் அரசு கடன் கேட்டுள்ளது. பாகிஸ்தானிடம் அந்நிய செலாவணி கையிருப்பு குறைவாக உள்ளதால் வரும் நாட்களில் நெருக்கடி அதிகரிக்கும் நிலை உள்ளது. இந்நிலையில் அரசு அதிகாரிகள் புதிய கார் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 2022-23-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை வெளியிடும் அமைச்சர் இஸ்மாயில் கூறும்போது, பணக்காரர்கள் மீதான வரி உயத்தப்படுகிறது. கார்கள் இறக்குமதி, அரசு அதிகாரிகள் புதிய வாகனங்கள் வாங்குவது […]
பாகிஸ்தான் நாட்டினுடைய முன்னாள் அதிபரான பர்வேஸ் முஷாரப் உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தற்போது துபாயில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை அவர் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முஷாரப்பின் உறுப்புகள் இயங்கவில்லை எனவும் மிகவும் மோசமான நிலையில் அவர் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அவரின் குடும்பத்தார் தெரிவித்ததாவது, முஷாரப் […]
மின்சாரத்தை கட்டுபடுத்த திருமண நிகழ்ச்சிகள் இரவு 10 மணிக்கு மேல், சந்தைகள் இரவு 8.30 மணிக்கு மேல் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையை சமாளிக்க உலக வங்கியிடம் கடனுதவி அளிக்கும்படி பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையில், நிதி நெருக்கடி, இதர காரணங்களால் நாட்டின் பல்வேறு இடங்களில் கடுமையான மின் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. மேலும் பல மணி நேர மின்வெட்டால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், மின்சாரத்தை […]
பாகிஸ்தான் நாட்டில் கராச்சியில் உள்ள இந்து மத கோயில்கள் மர்ம நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் இருக்கும் கராச்சி பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ மாரி மாதா கோவிலில் இருக்கும் தெய்வ சிலைகளை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் பாகிஸ்தானில் சிறுபான்மை சமூக வழிபாட்டு தளங்களில் நடக்கும் நாச வேலை இது என்று கூறியிருக்கிறார்கள். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஒரு நபர் தெரிவித்ததாவது, எட்டு பேர் இருசக்கர […]
பாகிஸ்தான் அரசு சீக்கிய மதத்தைச் சேர்ந்த யாத்ரீகர்களுக்கு 163 விசாக்கள் வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 8ஆம் தேதி இருந்து 17ஆம் தேதி வரை குரு அர்ஜன் தேவ் தியாக தினம் சீக்கியர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் இந்த பண்டிகைக்கு செல்ல சீக்கிய மதத்தை சேர்ந்த யாத்ரீகர்களுக்கு பாகிஸ்தான் அரசாங்கத்தால் 163 விசாக்கள் வழங்கப்பட்டிருக்கிறது. குரு அர்ஜன் தேவ் தியாக தினத்திற்காக தங்கள் நாட்டின் உயர் கமிஷன் சீக்கிய யாத்ரீகர்களுக்கு விசா அளிக்கக்கூடிய பணியில் […]
பாகிஸ்தான் நாட்டில் முன்னாள் பிரதமரான இம்ரான்கானை கொலை செய்ய சதிதிட்டம் தீட்டப்பட்டதாக வதந்தி பரவியது. இதனால் அங்கு பாதுகாப்பானது பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் இம்ரான்கானை காயப்படுத்தினால் தற்கொலை தாக்குதல் நடத்துவேன் என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் அத்தாவுல்லா தற்போதைய பிரதமர் ஷெபாஸ் அரசுக்கு மிரட்டல் விடுத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு விசுவாசமான தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்தாவுல்லா டுவிட்டரில் கூறியிருப்பதாவது “இம்ரான்கானின் தலையில் ஒரு முடி பாதிக்கப்பட்டால் கூட நீங்களும் […]
பாகிஸ்தான் நாட்டில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் முடிந்தவுடன் அவர் கைதாவார் என்று உள்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமரான ஷபாஸ் ஷெரீப்பின் அரசை எதிர்த்து முன்னாள் பிரதமரான இம்ரான் கான் ஆர்ப்பாட்டங்கலில் ஈடுபட்டு வருகிறார். அந்த ஆர்ப்பாட்டங்களின் போது கலவரத்தை தூண்டியதாக இம்ரான் கான் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக இம்ரான் கான் பெஷாவர் நகரின் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரியிருந்தார். எனவே அவருக்கு மூன்று வாரங்கள் […]
பாகிஸ்தான் நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதற்கு மத்தியில் அதன் ராணுவபட்ஜெட் ரூபாய் 1 லட்சத்து 40 ஆயிரம் கோடியாக அதிகரிக்கிறது. இது முந்தைய வருடத்தை காட்டிலும் ரூபாய் 8,300 கோடி அதிகமாகும். அதன்படி சென்ற வருடத்தை விடவும் நடப்பு வருடம் ராணுவபட்ஜெட் ஒதுக்கீடானது 6% அதிகமாகும். அவ்வாறு அதிகரிக்கப்படுகிற ராணுவம் பட்ஜெட்டில் பெருந்தொகை, ராணுவ வீரர்களின் செலவினங்கள், சம்பளம், படிகள் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் ஒரு ராணுவ […]
பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தினால் இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது. அவரின் பிரதமர் பதவியும் பறிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவருமான ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பதவியேற்றார். முன்னதாக ஷபாஸ் ஷெரீப், பஞ்சாப் மாகாணத்தின் முதல்-மந்திரியாக கடந்த 2008-2018 வரை பதவி வகித்தார். இந்த 11 ஆண்டுகால ஆட்சியில் ஷபாஸ் ஷெரீப் மற்றும் அவரின் குடும்பத்தினர் பல்வேறு […]
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானை கொலை செய்ய சதி நடப்பதாக பரவிய வதந்தியால் அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானை கொலை செய்வதற்கு திட்டம் நடப்பதாக கூறப்பட்டது. எனவே, அவருக்கு பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டது. இதுபற்றி இஸ்லாமாபாத் நகரின் காவல்துறையினர் தெரிவித்ததாவது, இஸ்லாமாபாத் நகரில் 144 தடை உத்தரவு நடைமுறையில் இருக்கிறது. இம்ரான்கான் செல்லும் பானி காலா பகுதியில் கூட்டங்களுக்கு கூட தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கானுக்கு முழுமையான பாதுகாப்பு […]
பாகிஸ்தானில் அரசாங்க பணியாளர்கள் தங்களின் ஊதியத்தை அதிகரிக்க வலியுறுத்தி போராட்டம் அறிவித்திருக்கிறார்கள். பாகிஸ்தானில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து பணவீக்கமும் அதிகரித்திருப்பதால், எரிபொருட்களின் விலையும் வெகுவாக அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் மின்சார கட்டணமும், பெட்ரோல், டீசல் விலையும் அரசாங்கத்தால் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால், அரசாங்க பணியாளர்கள் தங்களுக்கு அளிக்கப்படும் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் அறிவித்திருக்கிறார்கள். அதன்படி நாளையிலிருந்து நிதியமைச்சகத்தின் முன் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
அரசு ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை உயர்த்த வேண்டி உள்ளிருப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது. அந்நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகின்றது. இதனை தொடர்ந்து பாகிஸ்தானின் தற்போதைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 209.86 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ 204.15 ஆகவும், உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் கடும் தவிப்பிற்குள்ளாகினர். இதனை அடுத்து எரிபொருள் […]
பாகிஸ்தான் நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவிவருகிறது. அந்நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையானது கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தானில் இப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 209.86 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 204.15 ஆகவும் இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் […]
ஆப்கானிஸ்தான் நாட்டை எந்த நாடும் பாதிப்படைய செய்வதை நாங்கள் விரும்ப மாட்டோம் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. இந்தியா, ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு அளித்து வரும் உதவிகள் குறித்து மேற்பார்வை செய்வதற்காக வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளரான ஜே.பி சிங் தலைமையில் ஒரு குழு காபூல் நகருக்கு சென்றது. இது பற்றி பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு செய்தித் தொடர்பாளரான அசிம் இப்திகார் தெரிவித்ததாவது, இந்திய நாட்டிலிருந்து ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு 50 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிலான கோதுமையும், உயிர் காக்கக்கூடிய […]
பாகிஸ்தானின் லாகூரிலுள்ள குல்பெர்க்கில் குழந்தைகள் மருத்துவமனை ஒன்றில் திடீரென்று பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பெரும் தீ விபத்து தொடர்பாக தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் 7 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கு பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் தீ எதிர்பார்த்ததை விட அதிகமாக பரவி இருந்ததால், கூடுதல் வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. இதையடுத்து நீண்டநேரம் போராடி தீயணைப்புப்படையினர் தீயை அணைத்தனர். இந்த சூழ்நிலையில் மீண்டும் எதிர்பாராமல் […]