பாகிஸ்தான் தரப்பில் காஷ்மீர் பிரச்சனை பேசப்பட்டதற்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் நடந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தான் தரப்பில் ஜம்மு காஷ்மீர் பிரச்சனை கொண்டுவரப்பட்டது. அதாவது ஐ.நாவுக்கான பாகிஸ்தான் நாட்டின் பிரதிநிதியாக இருக்கும் ஆமீர்கான், இஸ்லாமியர்கள் காஷ்மீரில் அதிகமாக வாழ்கிறார்கள். ஆனால், அதனை இந்துக்கள் அதிகமாக வாழும் இடமாக மாற்றுவதற்கு முயற்சிகள் நடக்கிறது. இதற்காகத்தான் காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது என்றார். ஐ.நா விற்கான இந்திய தூதரக குழுவின் […]
Tag: #பாகிஸ்தான்
பாகிஸ்தானில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி பாகிஸ்தானில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.209.86, டீசல் விலை லிட்டருக்கு ரூ.204.15 ஆகவும் உள்ளது. இதனால் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள விமான நிலையத்தில் 25 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ஊழியர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குனர் ராஜா ஆஷிப் இக்பாலுக்கு எழுதிய கடிதம் எழுதினார். அதில், “பணவீக்கம் […]
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான்கான் நாடு மூன்றாக பிரிய கூடிய ஆபத்து இருக்கிறது என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் ஒரு நேர்காணலில், நாட்டின் நிர்வாக கட்டமைப்பில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கிறது என்றார். அதற்கு தகுந்த தீர்மானங்களை மேற்கொள்ளவில்லை எனில் மிகவும் கடுமையான அழிவு ஏற்படும் என்று தெரிவித்தார். மேலும் பாகிஸ்தானின் ராணுவம் தான் முதலில் பாதிப்படையும் என்றும் நாடு மூன்றாக பிரியக்கூடிய நிலை உண்டாகும் என்றும் கூறியிருந்தார். […]
பாகிஸ்தானில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் நெய் மற்றும் சமையல் எண்ணைய்க்கான விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. பாகிஸ்தான் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. எனவே, அங்கு சில தினங்களுக்கு முன்பாக எரிபொருளின் விலையானது, வெகுவாக அதிகரித்தது. இந்நிலையில் சமையல் எண்ணெய் விலையும் ஒரு லிட்டருக்கு சுமார் 213 ரூபாயாக அதிகரித்தது. எனவே, அங்கு ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் 605 ரூபாயாக அதிகரித்திருக்கிறது. மேலும், ஒரு கிலோ நெய் 208 ரூபாய் அதிகரித்து, 555 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தான் நாட்டில் காதல் பிரச்சனையில் சண்டை ஏற்பட்டு 4 வயதுடைய பெண் குழந்தையை கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் ஹைதராபாத் நகரத்தில் இளைஞர் ஒருவரும், ஒரு பெண்ணும் காதலித்திருக்கிறார்கள். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். எனவே, அந்த பெண்ணின் பெற்றோர் அதனை எதிர்த்திருக்கிறார்கள். இதனால் அந்த பெண் தன் வீட்டிலிருந்து வெளியேறி காதலரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். அந்த சமயத்தில் தன் சகோதரியையும் அந்த பெண் அழைத்து சென்றிருக்கிறார். ஆனால் […]
பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், என் உடைகளை விற்று, தன் மக்களுக்கு குறைந்த விலையில் கோதுமை மாவு அளிப்பேன் என்று கூறியிருக்கிறார். பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. அங்கு இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் பணவீக்கம் அதிகரித்து கொண்டிருக்கிறது. எனவே, உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. அதன்படி பாகிஸ்தான் நாட்டில் கோதுமை மாவு அதிக விலைக்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர், ஒரே நாளில் கோதுமை மாவின் விலை […]
பாகிஸ்தான் நாட்டின் என்ற இயக்கம் நாட்டின் பாதுகாப்பிற்கு தொடர்ந்து அச்சுறுத்தல் கொடுத்து வருவதாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தெரிவித்திருக்கிறது. தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் என்ற இயக்கம், ஆப்கானிஸ்தான் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. அந்த இயக்கம் பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கொடுத்து வருகிறது. இது குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் இந்த தீவிரவாத அமைப்புடன் நடக்கும் சமாதான முயற்சிகள் பயன் தராது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. டிடிபி இயக்கமானது பாகிஸ்தான் நாட்டின் […]
பாகிஸ்தான் நாட்டில் இன்னும் 6 தினங்களுக்குள் பொதுத் தேர்தல் தேதி அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமரான இம்ரான் கான் தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் நாட்டில் கடந்த மாதம் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையற்ற தீர்மானத்தை கொண்டு வந்தனர். எனவே, அவரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஷபாஸ் செரீப் புதிய பிரதமராக பதவியேற்றார். ஆனால், இம்ரான்கான் வெளிநாட்டு சதியால் தான் தன் ஆட்சி கவிழ்க்கப்பட்டதாக குற்றச்சாட்டி வருகிறார். இந்நிலையில், இம்ரான்கான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு, தன் […]
பாகிஸ்தானில் பெட்ரோல் விலை ஒரே நாளில் 30 ரூபாய் உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மட்டுமல்லாமல் அனைத்து விதமான எரிபொருட்களின் விலையை பாகிஸ்தான் அரசு நேற்று திடீரென உயர்த்தியது. அனைத்துப் பொருட்கள் மீதும் லிட்டருக்கு 30 ரூபாய் உயர்த்தப்படுவதாக அந்நாட்டு நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். அதன் காரணமாக பெட்ரோல் விலை ரூ.179.86- க்கும், டீசல் ரூ.174.15- க்கும், மண்ணெண்ணெய் விலை ரூ.155.56- க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அரசின் இந்த முடிவுக்கு […]
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலம் சென்றுள்ளார். பாகிஸ்தான் நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதை தொடர்ந்து பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதனால் எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். இந்த சமயத்தில் தனது ஆட்சி கவிழ்ந்ததில் வெளிநாட்டு சதி இருப்பதாகவும் இம்ரான் கான் கூறியுள்ளார் . இதனை அடுத்து ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பொறுப்பேற்றதையும் இம்ரான்கான் […]
உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் குற்றம் செய்தால் ஒரு மனிதரைத் தான் கைது செய்து சிறையில் அடைப்பார்கள். ஆனால் பாகிஸ்தான் நாட்டில் ஒரு மரத்தை 124 வருடங்களாக கைது செய்து வைத்துள்ளனர் என்று சொன்னால் நம்ப முடியுமா? ஆம். கடந்த 1898-ம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டில் பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்றது. அப்போது ஆங்கிலேய அரசின் உயர் காவல்துறை அதிகாரியாக ஜேம்ஸ் ஸ்குவிட் என்பவர் பணியாற்றினார். இவர் மது அருந்திவிட்டு தன்னுடைய வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது வழியில் […]
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் இந்த வருடம் காலநிலை மாற்றத்தால் வெப்பநிலை அளவு 30 மடங்கு உயர்ந்திருக்கிறது. உலக நாடுகள் முழுக்க காலநிலையில் அதிகமான மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஒவ்வொரு வருடமும் வெப்ப அளவு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் வெப்பநிலை அளவானது 30 மடங்கு உயர்ந்திருப்பதாக லண்டனின் காலநிலை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் தெரிவித்திருக்கிறார். காலநிலை மாற்றம் மனிதர்களால் உண்டாகவில்லை எனில் இவ்வாறான வெப்பம் ஆயிரம் வருடங்களுக்கு […]
பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கவிழ்ந்தது. இதனையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் ஷபாஸ் ஷெரீப் பதவியேற்றார். தனது அரசை வெளிநாட்டு சதி செய்துவிட்டதாகவும், உடனே பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று இம்ரான்கான் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தானில் தேர்தலை நடத்த வேண்டும் என்று இம்ரான்கான் கட்சியினர் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பிரம்மாண்டமான பேரணி, பொதுக் கூட்டத்தை நாளை நடத்த திட்டமிட்டனர். அதன்படி இஸ்லாமாபாத் […]
மும்பை தொடர் குண்டு வெடிப்பு குறித்து தேடப்பட்டு வரும் தாவூத்இப்ராஹிம் பாகிஸ்தானில் இருப்பதாக உறவினர் தகவல் தெரிவித்து உள்ளார். மும்பையில் கடந்த 1993 ஆம் வருடம் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 250-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அத்துடன் 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது பற்றிய வழக்கை சி.பி.ஐ விசாரித்து வந்தது. இவ்வழக்கு சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, 100 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். எனினும் இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் தாவூத் இப்ராஹிம், சோட்டாசகீல் உட்பட சிலர் […]
இந்திய ராணுவத்தின் தகவல்களை பாகிஸ்தானை சேர்ந்த பெண் உளவாளிக்கு பகிர்ந்ததால் ராணுவ காவல்துறையினர் கைது செய்தனர். உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்தார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ராணுவப் பிரிவில் தற்போது பணியாற்றி வருகிறார். பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணுக்கு சமூக வலைதளங்கள் மூலம் ராணுவ ரகசிய தகவல்களை பரிமாற்றம் செய்ததாக தகவல் வெளியானது. இது குறித்து கடந்த சில நாட்களாக பிரதீப்குமார் காவல்துறை கண்காணித்து வந்துள்ளனர். […]
பாகிஸ்தான் நாட்டில் புலனாய்வுத்துறை அதிகாரி மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் இருக்கும் பெஷாவர் நகரத்தின் யகதூத் பகுதியில் காவல்துறையினர் இரவு உணவிற்குப்பின் வாகனத்தில் ஏற சென்றிருக்கிறார்கள். அப்போது திடீரென்று மர்ம நபர்கள் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் நஜ்பீர் ரகுமான் என்ற புலனாய்வுத்துறை உதவி காவல் ஆய்வாளர் படுகாயமடைந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் அமனுல்லா என்ற அதிகாரியும் அவரின் சகோதரரும் […]
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆயுதப்படை குறித்த செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அமெரிக்க உளவுத்துறை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஸ்காட் பேரியர் இந்தியா பாகிஸ்தான் உறவு குறித்து பேசினார். அதில், 2019 ஆண்டு புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் உறவு மிகமோசமாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். அதனை தொடர்ந்து இந்தியாவின் அணு ஆயுதங்கள் ராணுவ பலத்தை பார்க்கும் பாகிஸ்தான், தங்கள் நாட்டு அணு ஆயுதங்களை முக்கியமாக கருதுகிறேன் என்றும் அவர் கூறியிருந்தார். மேலும் தனது ஆயுதங்களைக் கொண்டு […]
பாகிஸ்தான் நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டு ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இதில்மிகவும் மோசமாக டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பானது நேற்று 200ஆக சரிந்துவிட்டது. இது பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதன் முறையாகும். இவ்வாறு ரூபாய் மதிப்பானது தொடர்ச்சியாக வீழ்ந்து வருவது அந்நாட்டு பொருளாதார நிபுணர்கள் இடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பல பில்லியன்டாலர் கடன் திட்டத்தினை புத்துஉயிர் பெறுவதற்காக தோஹாவிலுள்ள சர்வதேச நாணய நிதியத்துடன் பாகிஸ்தான் மீண்டுமாக பேச்சு […]
பாகிஸ்தான் நாட்டின் வம்சாவளியினரான ஒரு தொழிலதிபர் உக்ரைன் நாட்டிற்கு போர் விமானங்கள் வாங்கி கொடுத்துள்ளார். பிரிட்டன் நாட்டில் வசிக்கும் பாகிஸ்தான் வம்சாவளியினரான முகமது சஹூர் என்ற தொழிலதிபர் உக்ரைன் நாட்டில் வசித்திருக்கிறார். எனவே, உக்ரைனில் நடந்த போரில் மாட்டிக்கொண்ட பல மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு பல்வேறு உதவிகளை செய்திருக்கிறார். இந்நிலையில் உக்ரைன் நாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள முகமது சஹூர் தன் நண்பர்கள் உதவியோடு அந்நாட்டிற்கு இரண்டு போர் விமானங்களை வாங்கி கொடுத்திருப்பதாக உக்ரைன் நாட்டின் பாடகியான […]
பாகிஸ்தான் நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. நிதி பற்றாக்குறை, அதிகரித்து வரும் பணவீக்கம், குறைந்து வரும் அன்னிய செலவாணி கையிருப்பு மற்றும் அரசியல் நிச்சயம் அற்ற தன்மை என்று பல பிரச்சினைகளை அந்தநாடு எதிர்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் நாட்டின் பொருளாதார நிலை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையில் நேற்று சிறப்பு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தின் முடிவில் அத்தியாவசியம் அற்ற மற்றும் ஆடம்பரம் பொருட்கள் இறக்குமதிக்கு தடைவிதிக்க முடிவு […]
மர்ம நபர் ஒருவர் தனது உடலில் கட்டி கொண்ட வெடிகுண்டை வெடிக்க செய்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் வஜிரிஸ்தான் மாவட்டத்தில் மிரான்ஷா எனும் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் அமைந்துள்ள சந்தை வழியாக ராணுவ பாதுகாப்பு படையினரின் வாகனம் சென்றுள்ளது. அப்பொழுது ஒரு நபர் தனது உடலில் மனித வெடிகுண்டை கட்டிக்கொண்டு ராணுவ பாதுகாப்பு படையினரின் வாகனத்திற்கு முன் நடந்து வந்துள்ளார். இந்நிலையில் மனித வெடிகுண்டாக மாறிய அந்த மர்ம நபர் திடீரென அதனை […]
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானுக்கு பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பில் மாகாண அரசுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக பிரதமர் அலுவலகம் கூறியிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான்கான், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தன்னை கொல்ல சதி நடப்பதாக கூறியிருந்தார். இது பாகிஸ்தான் நாட்டின் அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதனைத் தொடர்ந்து இம்ரான் கானுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அவருக்கு பாதுகாப்பை அதிகரிக்க மாகாண அரசுக்கு அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமாபாத் நகரின் புறநகர் பகுதியில் இருக்கும் இம்ரான் கானின் குடியிருப்பில் […]
பாகிஸ்தானில் பைசலாபாத் நகரில் நடந்த பேரணி ஒன்றில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கலந்து கொண்டார். அவர் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசும்போது “பாகிஸ்தானின் வரலாறு எனக்கு தெரியும். நான் அதனால்தான் ஒரு வீடியோ எடுத்து வைத்துள்ளேன். அதிகார பலம் மிக்க குற்றவாளிகளை நம்முடைய நீதித்துறை ஒன்றும் செய்து விட முடியாது. அதனால்தான் அதனை மக்களுக்கு விட்டு விடுகிறேன். எனக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால் எனக்கான நீதியை இந்த நாடு பெற்று தர வேண்டும். நீங்கள் எனக்கு இரண்டு […]
வறட்சியை சந்திக்க போகும் 23 நாடுகளில் பாகிஸ்தானும் இருப்பதாக ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஐ.நா சபை நேற்று உலக அளவில் வறட்சியை சந்திக்க போகும் 23 நாடுகளுடைய பட்டியலை வெளியிட்டிருந்தது. அதில் பாகிஸ்தானும் இடம்பெற்றிருக்கிறது. வரும் ஜூன் மாதம் 17ஆம் தேதியன்று ஐநாவின் பாலைவனமாதல் வறட்சி தினம் பின்பற்றப்படவிருக்கிறது. இதனை முன்னிட்டு இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், அங்கோலா, பிரேசில், சிலி, எத்தியோபியா, ஈராக், ஈரான், கஜகஸ்தான், மாலி, லெசோதோ, ஆப்கானிஸ்தான், சோமாலியா, மொசாம்பிக், நைஜர், சோமாலியா, […]
பாகிஸ்தான் நாட்டில் சீக்கியர்கள் இருவர் கொலை செய்யப்பட்டதற்கு பிரதமர் ஷெபாஸ் செரீப் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் நேற்று காலை நேரத்தில் சுல்ஜீத் சிங் மற்றும் ரஞ்சீத் சிங் ஆகிய சீக்கியர்கள் இருவர் மர்மநபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இவர்கள் படலால் பகுதியில் மசாலா கடைகள் நடத்தி வந்திருக்கிறார்கள். நேற்று காலை நேரத்தில் இருவரும் கடையில் இருந்திருக்கிறார்கள். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், அவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொலை […]
தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான்கான் சியால்கோட்டில் பொதுக்கூட்டத்தில் உரையாடல் நிகழ்த்தியுள்ளார். இந்த உரையாடலின் போது அவர் கூறியதாவது, ” என்னை கொல்லும் சதித்திட்டம் பாகிஸ்தான் நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் திட்டமிடப்பட்டும் வருகிறது. அவர்களின் பெயர்களை ஒரே வீடியோவில் பதிவு செய்து வைத்திருக்கிறேன். ஒருவேளை நான் கொல்லப்பட்டால் அப்பொழுது அந்த வீடியோ மக்களின் முன்பு வெளியிடப்படும்” என இம்ரான் கான் கூறியுள்ளார்.
பெஷாவர் தாக்குதலின் முக்கியமான குற்றவாளியை இராணுவத்தினர் சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துங்வாவின் தலைநகரான பெஷாவரில் இருக்கும் ஒரு மசூதியில் கடந்த மார்ச் மாதம் நான்காம் தேதியன்று ஒரு தீவிரவாதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினார். இதில் 57 நபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் பாகிஸ்தான் நாட்டில் சமீப வருடங்களில் நடந்த மிகவும் மோசமான தீவிரவாத தாக்குதல் என்று கூறப்பட்டிருக்கிறது. ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இத்தாக்குதலை […]
பாகிஸ்தானில் பயங்கர வேகத்தில் சென்ற ஒரு குப்பை லாரி, இரண்டு வேன்கள் மீது மோதியதில் 12 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் பஞ்சாப் மாகாணத்தின் குஜ்ரன்வாலா என்னும் நகரத்தில் இருக்கும் சாலையில் ஒரு குப்பை லாரி பயங்கர வேகத்தில் சென்றிருக்கிறது. அப்போது திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, எதிரில் வந்து கொண்டிருந்த இரண்டு வேன்கள் மீது தொடர்ந்து மோதியது. இந்த பயங்கர விபத்தில் அந்த வேன்களிலிருந்த சிறுமி உட்பட 12 நபர்கள் பரிதாபமாக […]
பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருப்பதால், ஆசிய வங்கி கடனளிக்க முன்வந்திருக்கிறது. பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. செலுத்த வேண்டிய கடன் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. டாலருக்கு நிகருடைய பாகிஸ்தான் நாட்டின் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டிற்கு ஆசிய வளர்ச்சி வங்கியானது இந்தியாவின் மதிப்பில் சுமார் 19 ஆயிரத்து 372 கோடி ரூபாய் கடனளிக்க முன்வந்திருக்கிறது. இதில், சுமார் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது, 11,618 கோடி ரூபாயை இந்த வருடத்திலேயே […]
பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரத்தில் வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் பலியானதாகவும் 13 பேருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் இருக்கும் சதார் பகுதியில் நேற்று இரவு நேரத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 13 நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இதில் நான்கு பேர் உயிருக்குப் போராடிய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குண்டு வெடிப்பின் போது, அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் பலத்த […]
பாகிஸ்தான் நாட்டில் முன்னதாகவே பொதுத்தேர்தல் நடைபெற வாய்ப்பிருக்கிறது என்று ராணுவ மந்திரி மறைமுகமாக கூறியிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்த இம்ரான் கானின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதனையடுத்து முன்னாள் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் சகோதரரான ஷபாஸ் ஷெரீப்பை புதிய பிரதமராக தேர்ந்தெடுத்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டின் ராணுவ மந்திரி கவாஜா ஆசிப் தெரிவித்ததாவது, புதிதாக இராணுவ தளபதி தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பே பொதுத் தேர்தல் நடத்த வாய்ப்பிருக்கிறது. நவம்பர் மாதத்திற்கு முன் காபந்து அரசாங்கத்திற்கு பதில், புதிய […]
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இந்துக்கள் 800 பேர் இந்தியாவில் குடியுரிமை கிடைக்க தாமதம் ஏற்பட்டதால் கடந்த வருடம் பாகிஸ்தான் நாட்டிற்கே திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் மதம் தொடர்பான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதால், ராஜஸ்தானில் தஞ்சமடைந்த இந்து மதத்தை சேர்ந்த மக்கள், இந்தியாவில் குடியுரிமை கோரிக்கை நிறைவேற்றப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால் நாட்டிலிருந்து வெளியேறி மீண்டும் பாகிஸ்தான் நாட்டிற்கு சென்றிருக்கிறார்கள். அவ்வாறு அங்கு சென்ற மக்கள், இந்திய அரசு, தங்களை மோசமாக நடத்தியது என்று குற்றம்சாட்டியிருக்கிறார்கள். இது தொடர்பில் Seemant […]
பாகிஸ்தான் நாட்டில் பனிப்பாறை உருகியதில் வெள்ளை பெருக்கு உண்டாகி ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் ஹன்சா பள்ளத்தாக்கில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் 20 நாட்களாக அதிக வெப்பநிலை நிலவுகிறது. இதில் பனிமலைகள் உருகிவிட்டது. அதனைத்தொடர்ந்து, ஷிஸ்பர் ஏரியின் நீர் அளவானது 40 சதவீதத்திற்கு உயர்ந்துள்ளது. ஏரியில் தண்ணீர் நிரம்பி வழிந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீரோடையில் நீர் அதிவேகத்தில் வெளியேறியது. இதனால், ஹசனாபாத் நகரில் இருக்கும் ஆற்றுப்பாலம் இடிந்தது. இதேபோன்று மேலும், 33 […]
பாகிஸ்தான் நாட்டில் மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரத்தை கடைபிடிக்கும் பெண்களை அவர்களின் குடும்பத்தினரே கொலை செய்யும் கொடூரங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த 2016-ம் வருடத்தில் நடிகை மற்றும் மாடல் அழகியாக இருந்த கந்தீல் பலூச் என்ற பெண்ணை அவரின் சகோதரர் ஆணவக்கொலை செய்த சம்பவம் உலக நாடுகள் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அதே போன்று ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் ஒகாரா மாவட்டத்தில் வசிக்கும் 21 வயதுள்ள இளம் பெண்ணான சித்ரா, […]
ஐ.நாவிற்கான ஆப்கானிஸ்தான் நாட்டின் இடைக்கால தூதரான நசீர் அகமது ஃபய்க், பாகிஸ்தான் தங்கள் நாட்டின் மீது வான்வழித் தாக்குதல் மேற்கொண்டதாக புகாரளித்திருக்கிறார். ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தலைவரான பர்பரா வுட்வர்ட் என்பவரிடம் ஐ.நாவிற்கான ஆப்கானிஸ்தானினின் இடைக்கால தூதர் தாக்கல் செய்திருக்கும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஆப்கானிஸ்தானின் கோஸ்டில், குனாா் ஆகிய கிழக்கு மாகாணங்களில் இம்மாதத்தில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் மேற்கொண்டிருக்கிறது. இது மட்டுமன்றி ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லைப்பகுதிக்குள் பாகிஸ்தானை சேர்ந்த படை, பீரங்கி தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தானின் […]
பாகிஸ்தானில் 2 குழந்தைகளுக்கு போலியோ தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிகாரிகளை பீதியடைய செய்துள்ளது. பச்சிளம் குழந்தைகளை அதிகம் தாக்கும் மிகவும் கொடூரமான தொற்று நோயான போலியோ (இளம் பிள்ளைவாதம்) நோய், உலகின் பெரும்பாலான நாடுகளில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டபோதிலும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற ஒரு சில நாடுகளில் இன்னும் அதன் பாதிப்பு இருக்கிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் 8 நாட்களில் 2 பேருக்கு போலியோ தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கைபர் பக்துங்வா மாகாணத்தின் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தை சேர்ந்த 15 […]
பாகிஸ்தான் நாட்டில் கடும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் ஒவ்வொரு நாளும் பல மணிநேரங்கள் மின்தடை ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடும் எரிசக்தி நெருக்கடி காரணமாக மின்தடை ஏற்பட்டு வருகிறது. எனவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல மணி நேரங்கள் மின்வெட்டு ஏற்படுகிறது. நகர்புறங்களில் 6-லிருந்து 10 மணி நேரங்கள் மின்வெட்டு ஏற்படுவதாகவும், கிராமங்களில் ஒரு சில பகுதிகளில் 18 மணி நேரங்கள் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதாக கூறப்பட்டிருக்கிறது. எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு, விநியோகத்தில் மாறுபாடு […]
பாகிஸ்தான் நாட்டின் பல்கலைகழகத்தின் வாசலுக்கு அருகில் பெண் ஒருவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் சீனாவை சேர்ந்த மூன்று பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் பலுசிஸ்தான் மாகாணத்தில் பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் என்னும் கிளர்ச்சிகுழு இயங்கி வருகிறது. பாகிஸ்தான் அரசு, இந்த குழுவை பயங்கரவாத குழுவாக அறிவித்திருக்கிறது. பாகிஸ்தான் பாதுகாப்பு படை மற்றும் இந்த கிளர்ச்சியாளர்கள் குழுவிற்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டுவருகிறது. இதனிடையே கராச்சி நகரத்தில் இருக்கும் கராச்சி பல்கலைகழகத்தில் சீன மொழியை கற்றுக்கொடுக்கக் கூடிய […]
பாகிஸ்தானில் உள்ள கராச்சி பல்கலைகழக வளாகத்திற்குள் வெடிகுண்டு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகத்தில் உள்ள சீனமொழி பயிற்றுவிக்கும் கன்பூசியஸ் என்ற மையத்திற்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனில் திடீரென வெடிகுண்டு வெடித்தது. இதில் 3 சீனர்கள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் அந்த மையத்தின் இயக்குனர் ஹுவாங் கிபிங், டிங் முபெங், சென் சாய் ஆகிய 3 பேர் சீனர்கள் ஆவர். மற்றொருவர் பாகிஸ்தானை சேர்ந்த காலித் ஆவார். காலித் அவர்களுக்கு டிரைவராக […]
பாகிஸ்தான் சுமார் 2600 கிலோ மீட்டர் எல்லை பகுதியை ஆப்கானிஸ்தானுடன் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதிக்குள் செயல்பட்டு வரும் தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்கள் அடிக்கடி பாகிஸ்தான் படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் அமெரிக்க படைகளுக்கு எதிரான சண்டையின்போது இந்த குழுவினர் தங்களுடன் இணைந்து செயல்பட்டவர்கள் என்பதால் தலிபான் தலைமையிலான அரசு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வந்தது. ஆனால் பயங்கரவாத குழுக்களின் தாக்குதல் கடந்த […]
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக ஜம்மு-காஷ்மீர் சென்றிருந்தார். அங்கு செனாப் நதியில் ரூ.4,500 கோடிக்கும் அதிகமான செலவில் 540 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட நீர்மின் திட்டம், ரூ.5,300 கோடி செலவில் 850 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட நீர்மின் திட்டம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில் இரு நீர்மின் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியதற்கும், அவர் ஜம்மு-காஷ்மீர் சென்றதற்கும் பாகிஸ்தான் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் […]
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு திரும்புவதற்கு அரசு சார்பில் பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் மூன்று முறை பிரதமராக இருந்தவர் நவாஸ் ஷெரீப்(72). இவர் மீது இம்ரான் கான் ஆட்சி நடைபெறும் போது ஊழல் வழக்கு போடப்பட்டது. இதனை தொடர்ந்து 2019 ஆம் வருடம் உடல்நிலை குறைவால் சிகிச்சைக்காக லண்டன் செல்வதற்கு லாகூர் உயர் நீதிமன்றம் 4வார காலம் அனுமதி வழங்கப்பட்டது. அதன்பிறகு அவர் பாகிஸ்தான் திரும்பவில்லை. இந்த நிலையில் நவாஸ் ஷெரிப் ரமலான் […]
மத்திய அரசின் அதிரடி அறிவிப்பால் 16 யூடியூப் சேனல்கள் அதிரடி முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா குறித்து தவறான தகவல்களை பரப்பி வரும் யூடியூப் சேனல்களுக்கு எதிராக, இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் 22 யூடியூப் சேனல்களுக்கு அதிரடியாக தடை ஒன்றை விதித்துள்ளது. இதையடுத்து மேலும் 16 யூடியூப் சேனல்களை முடக்கி, இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை தொடர்ந்து, இந்திய சேனல்கள் […]
இந்திய மாணவர்கள் பாகிஸ்தானில் மேற்படிப்பு படிக்க கூடாது எனவும் அந்த பட்டங்கள் இந்தியாவில் செல்லாது என்றும் பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்திருக்கிறது. இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் பாகிஸ்தானின் கல்வி நிறுவனங்களில் பயின்ற பட்டங்கள் செல்லுபடியாகாது என்றும் அதற்கு வேலைவாய்ப்பும் பெற முடியாது எனவும் பல்கலைக்கழக மானியக்குழு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இதேபோன்று தொழில்நுட்ப கல்வி கவுன்சிலும் அறிவித்தது. இந்திய அரசாங்கம் இவ்வாறு அறிவித்ததற்கு பாகிஸ்தான் தரப்பில் கடும் அதிருப்தி மற்றும் வருத்தம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதுபற்றி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் […]
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி போர் தொடுத்தது. இதனை தொடர்ந்து ரஷ்யா மீது அதிருப்தி அடைந்த பல நாடுகள் அதன் மீது பொருளாதார தடையை விதித்தன. இதனால் ரஷ்யாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரஷ்யா தனக்கு ஆதரவாக இருக்கும் ஒரு சில நாடுகளை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதன் ஒரு முக்கிய பகுதியாக ரஷ்ய அதிபர் புதின் பாகிஸ்தானின் புதிய அதிபராக பதவி ஏற்றிருக்கும் […]
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆட்சி மீது எதிர்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இதையடுத்து அந்த தீர்மானம் வெற்றி பெற்றதால் இம்ரான்கான் அரசு கலைக்கப்பட்டது. அதன்பின் முஸ்லிம் லீக் நவாஸ் (பிஎம்எல்என்) கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரருமான ஷெபாஸ் ஷெரீப் நாட்டின் 23வது பிரதமராக பதவியேற்று கொண்டார். இதில் ஷெபாஸ் அந்நாட்டின் முக்கியமான எதிர்க்கட்சியான மக்கள் கட்சி (பிபிபி) உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளார். இவற்றில் […]
பாகிஸ்தானின் பிரதமரான ஷெபாஸ் ஷெரீப் முன்னாள் மந்திரிகளை விமானத்தில் பறக்க தடை விதிக்கப்படுவோர் பட்டியலில் சேர்க்குமாறு உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான்கானின் மீது எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் அவரது ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்நாட்டின் பிரதமராக ஷெபாஷ் ஷெரீப் பதவி ஏற்றுள்ளார். இந்நிலையில் ஷெபாஷ் ஷெரீப் அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதாவது இம்ரான்கான் ஆட்சியிலிருந்த மந்திரிகளின் மீது ஊழல் புகார்கள் உள்ளதால் அவர்களை விமானத்தில் பறக்க தடை விதிக்கப்படுவோர் பட்டியலில் சேர்க்குமாறு […]
இம்ரான்கான் நேற்று முன்தினம் தனது இணையதள பக்கத்தில் தனது ஆட்சி கவிழ ராணுவ தளபதிகள் தான் காரணம் என்று மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான் நாட்டில் இதுவரை ஐந்து ஆண்டுகள் முழுமையாக எந்த பிரதமரும் தனது ஆட்சியை நடத்த வில்லை. அந்த வகையில் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தின் இம்ரான்கானின் ஆட்சி கவிழ்ந்தது. இதனால் தனது 5 ஆண்டுகால ஆட்சியை தொடர முடியாமல் போன நிலையில் அவருக்கு […]
பாகிஸ்தானின் மொத்த மக்கள்தொகையில் 34 சதவிகிதம் பேர் ரூபாய் 588க்கும் கீழான வருமானத்தில் தங்கள் வாழ்க்கையைக் கழிக்கின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானில் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வால் மக்கள் உணவு பொருட்கள் மற்றும் எரி பொருட்களுக்கு மட்டுமே தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை செலவிட வேண்டி உள்ளது. அதிகரித்து வரும் விலைவாசி உயர்வால் தெற்காசியாவில் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது பாகிஸ்தான் தான் எனவும் பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு அந்நாட்டு மக்களை கடுமையாக […]
பாகிஸ்தானிலுள்ள கிராம பகுதியிலிருக்கும் குடிசைகளில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 சிறுவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். பாகிஸ்தானிலுள்ள சிந்து மாநிலத்தில் பைஸ் முஹம்மது என்ற கிராமம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கிராம பகுதியிலுள்ள ஒரு குடிசை வீட்டின் சமையலறையில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த வீடுகளுக்கு மளமளவென பரவியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி 9 சிறுவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். அதுமட்டுமின்றி 20 க்கும் மேலானோர் பலத்த தீக்காயமடைந்துள்ளார்கள். மேலும் ஆடுகள், […]