Categories
உலகசெய்திகள்

இது விசாரணைக்கு உகந்தது அல்ல…. முன்னாள் பிரதமர் மகளின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்….!!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப்பின் மகள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் ஆவார். இவர் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார். இவ்வாறு இருக்க மரியம் ஐகோர்ட்டு விதித்த நிபந்தனையின் பேரில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஊழல் வழக்கு ஒன்றிற்காக தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளார். இந்நிலையில் இவர் அடுத்த வாரம் உம்ரா கடமையை […]

Categories
உலகசெய்திகள்

பாகிஸ்தான் கடனில் மூழ்கி கொண்டிருக்கிறது…. எச்சரித்த பிரதமர்…!!

பாகிஸ்தானின் பிரதமரான நவாஸ் ஷெரீப் தலைமையில் நேற்று நடந்த முதல் மந்திரி சபை கூட்டத்தில் பேசிய அவர் நம் நாடு கடனில் மூழ்கி கொண்டிருப்பதாக எச்சரித்துள்ளார். பாகிஸ்தானில் இம்ரான்கானின் ஆட்சி எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் கவிழ்க்கப்பட்டதையடுத்து நவாஸ் ஷெரீப் அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ளார். இவரது தலைமையிலான புதிய மந்திரி சபையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக 34 பேர் மந்திரிகளாக பதவியேற்றுள்ளார்கள். இந்நிலையில் நேற்று நடந்த முதல் மந்திரி சபை கூட்டத்தில் பேசிய பிரதமர் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் ஊடுருவ செய்யணும்…. தீவிரவாதிகளுக்கு முழு பயிற்சி…. எச்சரித்த காவல்துறை….!!

80 தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளித்து வருகிறது என ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் எல்லைக்கோட்டிற்கு அப்பால் தீவிரவாத பயிற்சி முகாம்கள் இயங்கி வருவதாகவும் இதில் 60 முதல் 80 தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வருவதாகவும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் பாலாகோட் பகுதியில் இருந்த தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் கடந்த 2019-ம் ஆண்டு நடத்திய துல்லிய தாக்குதலின் மூலம் அழித்ததுள்ளது. அதன்பின் எல்லையோரம் இருந்த தீவிரவாத முகாம்களை பாகிஸ்தான் மூடி […]

Categories
உலக செய்திகள்

அதிகாரிகளின் கொடூர செயல்…. வலுவாக எழுந்த போராட்டம்…. தாக்குதல் நடத்திய போலீஸ்….!!

பாகிஸ்தானில் கார் டிரைவர் சட்ட அமலாக்க அதிகாரிகளால் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நடந்த போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய அடக்குமுறையில் சுமார் 11 பேர் காயமடைந்துள்ளார்கள். பாகிஸ்தானிலிருக்கும் பலுசிஸ்தான் மாநிலத்திலுள்ள சோதனைச் சாவடியில் கடந்த 15ஆம் தேதி அனுமதியின்றி கார் ஒன்று மிக வேகமாக சென்றுள்ளது. இதிலிருந்த டிரைவரை சட்ட அமலாக்க அதிகாரிகள் கொலை செய்துள்ளார்கள். இதற்கு கண்டனம் தெரிவித்து பெரும்பாலான லாரி காரர்கள் பலுசிஸ்தான் மாநிலத்தின் செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனை கட்டுப்படுத்த காவல்துறை […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானின் புது சுகாதார அமைச்சர் நியமனம்…. எழுந்தது கடும் விமர்சனம்….!!!!!

பாகிஸ்தான் நாட்டில் கடந்த 2018ஆம் வருடம் முதல் பிரதமராக இருந்து வந்த இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் இம்ரான் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பியும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவருமான ஷபாஸ் ஷெரீப் புது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையில் 34 பேரை கொண்ட புது மந்திரி சபை நேற்று பதவியேற்றது. இதில் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் இலங்கையைச் சேர்ந்தவர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு….!! குற்றவாளிகளுக்கு மரண தண்டனை…!!

இலங்கையைச் சேர்ந்த பிரந்திய குமார் என்பவர் பாகிஸ்தானின் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று அவர் தொழிற்சாலையில் இயந்திரங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது இஸ்லாமிய வாசகங்கள் அடங்கிய டிஎல்பி கட்சியின் போஸ்டர் ஒன்றைச் கிழித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இஸ்லாமிய மதத்தை அவமானப்படுத்தியதாக கூறி டி எல் பி கட்சியினர் உட்பட தொழிற்சாலையில் இருந்தவர்கள் அவரை கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்துள்ளனர். அதோடு அவருடைய உடலை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர் . இந்த […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் போர் தொடங்கும் அபாயம்….!! கடும் எச்சரிக்கை விடுத்த தலிபான்கள்….!!

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் மத்தியில் தெக்ரி-இ-தலீபான் உட்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகள் அவ்வப்போது இரு நாடுகள் மீதும் தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றன. அந்த வரிசையில் தெக்ரி-இ-தலீபான் பயங்கரவாத அமைப்பு பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஆறுக்கும் மேற்பட்ட வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதற்கு பழிவாங்கும் விதமாக ஆப்கானிஸ்தானை குறிவைத்து பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள் […]

Categories
உலக செய்திகள்

இதுதான் காரணமா?…. பாகிஸ்தானில் மின் உற்பத்தி பாதிப்பு…. நிதியமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!

உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி குறைபாட்டால் பாகிஸ்தானில் எரிசக்தி கொள்முதல் அளவு கடந்த 9 மாதங்களில் மட்டும் 15 பில்லியன் டாலர் அளவு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இயற்கை எரிவாயு, நிலக்கரி என மின் உற்பத்திக்கு அவசியமான பொருட்களை வாங்குவதற்கு போதிய அளவு நிதியும் இல்லை. இதனால் சுமார் 3500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த குளறுபடிகள் ஆஃப்லைன் உற்பத்தி முறையிலும் நீடிப்பதாக பாகிஸ்தான் புதிய அமைச்சரவையின் நிதியமைச்சர் மிப்தா இஸ்மாயில் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் பயங்கரம்…. போதை பொருள் ஒழிப்பு துறை அதிகாரிகள் கொலை… மர்மநபர்கள் துப்பாக்கிசூடு…!!!

பாகிஸ்தான் நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு துறை அதிகாரிகள் இருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் இருக்கும் கான் மாவட்டத்தின் தராபன் காலன் பைபாஸ் சாலையில் ஒரு வாகனத்தில் போதைப்பொருள் ஒழிப்பு துறை அதிகாரிகள் சென்ற போது திடீரென்று வாகனத்தை நோக்கி மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். அதன்பிறகு அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதில் போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகள் இருவர் பலியானதாக […]

Categories
உலக செய்திகள்

அட கொடுமையே…. கோர முகத்தைக் காட்டும் பாகிஸ்தான்…. அப்பாவி ஆப்கான் மக்கள்….!!

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் என சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.  ஆப்கானிஸ்தான் நாட்டில் தென்கிழக்கு கோஸ்ட் மற்றும் கிழக்கு குணால் என்ற மாகாணங்கள் அமைந்துள்ளது. இந்த மாகாணங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ படைகள் நேற்று இரவு  வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் என சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஆப்கானிஸ்தானின் எல்லைப்பகுதியான பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுதாகவும் பாகிஸ்தான் செய்தி […]

Categories
உலக செய்திகள்

மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!…. பாகிஸ்தான் பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தோல்வியை சந்தித்தார். மேலும் அவர் பிரதமர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். இதையடுத்து ஷெபாஸ் ஷெரீப் என்பவர் பாகிஸ்தானின் புதிதாக பிரதமராக பதவியேற்று கொண்டார். இந்த நிலையில் ஷெபாஸ் ஷெரீப் மக்களின் நலன் கருதி எரிபொருள் விலையை உயர்த்த போவதில்லை என்று அறிவித்துள்ளார். மேலும் அவர், மானியம் அளிப்பது நிறுத்தப்பட்டால் பெட்ரோல், டீசல், எரிபொருள் விலை […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த முடியாது…. பிரதமரின் சூப்பர் அறிவிப்பு….!!!!

மக்களின் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த முடியாது என பிரதமர் கூறியுள்ளார். பாகிஸ்தான் நாட்டில் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் மாற்றம் செய்யப்படும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினால் பொதுமக்கள் ஆவேசப்படுவார்கள் என கருதி இம்ரான் கான் அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கி வந்தது. இந்த அரசு கொள்முதல் விலைக்கும், விற்பனை விலைக்கும் உள்ள வித்தியாசத்தை அடிப்படையாகக் கொண்டு […]

Categories
உலக செய்திகள்

மக்களே!…. “புதிய தேர்தலை நடத்த உதவி பண்ணுங்க”…. இம்ரான்கான் வேண்டுகோள்….!!!!

இம்ரான்கான் ஆட்சியே பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு, எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடந்தது. அதில், இம்ரான்கான் தோல்வியை சந்தித்தார். மேலும் அவர் பிரதமர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரிப் (வயது 70) பாகிஸ்தானின் புதிய பிரதமராக போட்டியின்றி தேர்வாகியுள்ளார். இதனால் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் புதிய தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். அவருக்கு ஆதரவாக பலரும் […]

Categories
உலக செய்திகள்

பதவி விலகிய பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகர்… காரணம் என்ன?…

பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்றத்தினுடைய துணை சபாநாயகர் பதவி விலகியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்த இம்ரான்கான் மீது எதிர்க்கட்சியினர் நம்பிக்கையற்ற தீர்மானத்தை நிறைவேற்றினர். எனவே, அவர் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். இதனையடுத்து, அந்நாட்டின் ஷபாஸ் ஷெரீப், புதிய பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனிடையே நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராக இருந்த குவாசிம் கான் சுரி, இம்ரான் கானின் ஆதரவாளர் என்று கூறப்பட்டது. இந்நிலையில், புதிய பிரதமர் பதவியேற்றவுடன் குவாசிம் கான் சுரி மீது இன்று நம்பிக்கையற்ற தீர்மானத்தை கொண்டுவர […]

Categories
உலகசெய்திகள்

“துணை சபாநாயகர்” மீது தாக்குதல்…. பாத்திரத்தை வீசிய கட்சி உறுப்பினர்கள்…. அவையில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்…!!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் முதல் மந்திரியை தேர்ந்தெடுப்பதற்காக கூடப்பட்ட சட்ட சபைக்கு வருகை புரிந்த துணை சபாநாயகர் மீது பிடிஐ கட்சி உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் இம்ரான்கானுக்கு எதிராக கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து இம்ரான்கானின கட்சியிலிருந்த சில உறுப்பினர்கள் தங்களது ஆதரவை பி.எம்.எல். கியூ கட்சிக்கு வழங்கியுள்ளார்கள். ஆகையினால் பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாநிலத்தின் முதல் மந்திரியான உஸ்மான் புஸ்தார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான்: இவர்களின் குரல் ஒடுக்கப்படாமல் பார்த்துக்கொள்வது என் கடமை…. -பர்வேஷ் அஷ்ரப்…..!!!!!

பாகிஸ்தான் நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடிக்கு இம்ரான்கான் ஆட்சியே காரணம் என குற்றம்சாட்டி எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது நடைபெற்ற வாக்கெடுப்பில் இம்ரான்கான் தோல்வியடைந்து, பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அந்நாட்டின் புது பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரிப் (70) போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் புது அமைச்சரவையை அமைக்கும் பணிகளில் அவர் தீவிரமுடன் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பி.எம்.எல்.என்) […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் நடந்த தாக்குதல்கள்…. இராணுவ வீரர்கள் 8 பேர் பலி…!!!

பாகிஸ்தானில் இரண்டு வெவ்வேறு தீவிரவாத தாக்குதல்களில் ராணுவ வீரர்கள் 8 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானில் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் இருக்கும் வடக்கு வசீரிஸ்தான் என்னும் பகுதியில் இரண்டு வெவ்வேறு தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப்பிரிவு தெரிவித்திருப்பதாவது, முதல் தீவிரவாத தாக்குதலில் தத்தாகேல் என்னும் நகரில் ராணுவ வாகனத்தின் மீது தீவிரவாதிகள் மறைந்திருந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதில் துப்பாக்கிகளும், ராக்கெட் குண்டுகளும் வீசப்பட்டிருக்கிறது. இதில் பலியான ராணுவ வீரர்களின் உடல்களை ராணுவ தலைமையகத்திற்கு ஹெலிகாப்டரில் […]

Categories
உலக செய்திகள்

“நான் ஆபத்தானவனாக மாறிட்டேன்”…. பதவியை பறிகொடுத்த இம்ரான்கான் எச்சரிக்கை….!!!!

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் பெரும்பான்மை காட்ட முடியாததால் பதவியை பறிகொடுத்த இம்ரான்கான், பெஷாவரில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரை ஆற்றினார். அப்போது இம்ரான்கான் கூறியதாவது “நான் பிரதமராக இருந்தபோது ஆபத்தானாவனாக இல்லை. ஆனால் இப்போது மிகவும் ஆபத்தானவனாக மாறியுள்ளேன். என்னை பிரதமர் பதவியிலிருந்து நீக்க சட்டவிரோத செயல்கள் அரங்கேறியுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும் முன்பு நள்ளிரவில் நீதிமன்றம் திறக்கப்பட்டது ஏன்..?  நான் எதாவது சட்டத்துக்கு புறம்பானதை செய்து விட்டேனா..?  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கவுண்டியில் கைகோர்த்த புஜாரா(இந்தியா) – ரிஸ்வான்(பாகிஸ்தான்)….. வைரல்…!!!!!!!

இங்கிலாந்தில் உலகப் புகழ்பெற்ற கவுண்டி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. அதில் சசக்ஸ் அணிக்காக இந்திய கிரிக்கெட் வீரர் புஜாராவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முஹம்மது ரிஸ்வானும் இணைந்து ஆட உள்ளனர். டெர்பிஷைர் அணிக்கு எதிரான போட்டியில் இருவரும் சசக்ஸ் அணிக்காக அறிமுக வீரர்களாக களம் இறங்கியுள்ளனர். இந்தியா -பாகிஸ்தான் வீரர்கள் ஒரே அணியில் விளையாடுவது பெருமைக்குரிய விஷயமாகும். இதனால் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

பரிசாக கிடைத்த ரூ.18 கோடி மதிப்புள்ள ஆபரணம்…. என்ன செய்தார் இம்ரான்கான்?…. பாக். அரசு தீவிர விசாரணை….!!!!

பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதையடுத்து ஆட்சி கவிழ்ந்ததோடு, பிரதமர் இம்ரான்கான் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து ஷபாஸ் ஷெரீப் என்பவர் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் ரூ.18 கோடி மதிப்புள்ள நெக்லஸ் ஆபரணம் ஒன்று பாகிஸ்தானில் இம்ரான்கான் பிரதமர் பதவியில் இருந்தபோது பரிசாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இம்ரான்கான் அரசு பரிசு சேமிப்பு மையத்திற்கு அந்த ஆபரணத்தை அனுப்பி வைக்காமல் தன்னுடைய சிறப்பு உதவியாளர் ஷபீகர் புஹாரியிடம் […]

Categories
உலக செய்திகள்

SHOCK NEWS: பாகிஸ்தான் அரசு ஊழியர்களுக்கு…. புது பிரதமர் அடுத்தடுத்து வைத்த செக்…..!!!!!

பாகிஸ்தானின் புது பிரதமராக பொறுப்பேற்று இருக்கும் ஷெபாஸ் ஷெரீப் அரசு ஊழியர்களுக்கான வார விடுமுறையை குறைத்ததுடன், பணி நேரத்தையும் நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். பாகிஸ்தானில் இம்ரான்கான் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்ததை அடுத்து ஷெபாஸ் ஷெரீப் அந்நாட்டின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கான வார விடுமுறையை 2 நாட்களிலிருந்து ஒரு நாளாக குறைத்து ஷெரீப் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் காலை 10 மணிக்கு தொடங்கி வந்த பணிநேரம் இனிமேல் […]

Categories
உலக செய்திகள்

“நவாஸ் ஷெரீப்” நாடு திரும்ப திட்டம்…. பாஸ்போர்ட்டை புதுப்பிக்க உதவும் புதிய பிரதமர்…. வெளியான முக்கிய தகவல்….!!

மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் சென்ற பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தற்போது நாடு திரும்புவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப் மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளார். இதனையடுத்து அவர் நாடு திரும்பாமல் அந்நாட்டிலேயே தங்கியுள்ளார். இவ்வாறு இருக்க பாகிஸ்தானில் இம்ரான்கானின் ஆட்சி கலைக்கப்பட்டு புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றுள்ள நிலையில் நவாஸ் ஷெரீப் லண்டனில் இருந்து நாடு திரும்புவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்கு தேவையான […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுடன் கூட்டுறவு உறவுகளை பாகிஸ்தான் விரும்புது…. புதிய பிரதமர் டுவிட் பதிவு…..!!!!!

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றியடைந்தது. இதன் காரணமாக இம்ரான் கானின் அரசு கவிழ்ந்தது. அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து இம்ரான் கான் நீக்கப்பட்டார். இதையடுத்து எதிர்க் கட்சி தலைவரான ஷபாஷ் செரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். அவ்வாறு புதிய பிரதமராக தேர்தெடுக்கப்பட்ட ஷபாஸ் செரீப் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டின் புது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

இவர்தான் அடுத்த “வெளியுறவுத்துறை மந்திரி”…. பறிக்கப்பட்ட பிரதமர் பதவி…. வெளியான தகவல்….!!

பாகிஸ்தானில் இம்ரான்கானின் ஆட்சி கலைக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டில் அமையவிருக்கும் புதிய அரசாங்கத்தில் அடுத்த வெளியுறவுத் துறை மந்திரியாக பிலாவல் பூட்டோ நியமிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கானுக்கு எதிராக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துள்ளார்கள். இதன் மீதான வாக்கெடுப்பு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது. இதில் 174 உறுப்பினர்கள் பாகிஸ்தானின் பிரதமருக்கு எதிராக வாக்களித்ததால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. இதனால் பிரதமர் இம்ரான்கானின் ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி […]

Categories
உலகசெய்திகள்

பாகிஸ்தானின் புதிய பிரதமராக…. ஷாபாஸ் ஷெரீப் போட்டியின்றி தேர்வு….!!!!

பாகிஸ்தானின் புதிய பிரதமராக நவாஸ் ஹெரீப்பின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான்கான் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவி இழந்ததை அடுத்து புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் பிரதமர் தேர்தலை இம்ரான்கான் கட்சியினர் கூண்டோடு புறக்கணித்ததால் ஷாபாஸ் ஷெரீப் ஒருமனதாக தேர்வு தேர்வானார்.

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானின் புதிய பிரதமர்…. யார் தெரியுமா…? வெளியான அறிவிப்பு…!!!

பாகிஸ்தான் நாட்டில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டில் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதற்கு பிரதமர் இம்ரான் கான் தான் காரணம் என்று எதிர்க்கட்சியினர் அவர் மீது நம்பிக்கையற்ற தீர்மானத்தை நிறைவேற்றினர். எனவே அவரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் சகோதரரும் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவருமான ஷபாஸ் ஷெரிப்பை புதிய பிரதமராக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இவர் நேற்று நாடாளுமன்ற […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் பிடிஐ கட்சியினர் பதவி விலகுவார்கள்…. முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தகவல்…!!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் PTI கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் பதவி விலகுவார்கள் என்று கூறியிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டில் நிதி நெருக்கடி ஏற்பட்டது. எனவே, இதற்கு பிரதமர் தான் காரணம் என்று கூறிய எதிர்க்கட்சியினர் ஒன்று சேர்ந்து இம்ரான்கான் மீது குற்றம் சாட்டி நம்பிக்கையற்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். எனவே, பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான்கான் பதவியிலிருந்து நீக்கப்பட்டு விட்டார். தற்போது புதிய பிரதமரை நியமிக்கும் பணி நடக்கிறது. இந்நிலையில், தன் அமைச்சரவையில் இருக்கும் அனைவரும் […]

Categories
உலக செய்திகள்

லண்டனிலிருந்து பாகிஸ்தான் திரும்பும் நவாஸ் ஷெரிப்… வெளியான தகவல்….!!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப் லண்டனிலிருந்து பாகிஸ்தான் நாட்டிற்கு திரும்பவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் நம்பிக்கையற்ற தீர்மானத்தை நிறைவேற்றி ஆட்சியை கவிழ்த்து விட்டனர். அதையடுத்து எதிர்க் கட்சிகள் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்கவிருக்கிறது. எனவே, நாட்டின் அடுத்த பிரதமராக முஸ்லீம் லீக் கட்சி தலைவர் ஷெபாஸ் செரீப் பதவியேற்கவிருக்கிறார். இவர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர். நவாஸ் ஷெரீப், மருத்துவ சிகிச்சைக்காக லண்டனுக்கு சென்றிருந்தார். அதன் பிறகு, அவர் லண்டனிலேயே தங்கிவிட்டார். […]

Categories
Uncategorized உலக செய்திகள்

பாகிஸ்தானில் பதவியிழந்த இம்ரான் கானுக்கு ஆதரவாக …!!! பாகிஸ்தான் மற்றும் துபாயில் வெடிக்கும் போராட்டங்கள்….!!!

பாகிஸ்தானில் நிலவிவரும் மோசமான அரசியல் சூழ்நிலையில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் 174 பேர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனை அடுத்து பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஷபாஷ் ஷெரிஃப்தான் பிரதமராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாத இம்ரான்கான் ஆதரவாளர்கள் அகமதாபாத், கராச்சி […]

Categories
உலக செய்திகள்

“மீண்டும் சுதந்திர போராட்டம் தொடங்கிவிட்டது….!!” பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ட்விட்…!!

பாகிஸ்தானில் நிலவிவரும் மோசமான அரசியல் சூழ்நிலையில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் 174 பேர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனை அடுத்து பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் இம்ரான்கான் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். “பாகிஸ்தானுக்கு 1947ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது. ஆனால் தற்போது வெளிநாடுகளின் சதியால் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனை….!! 5 தீவிரவாதிகள் கைது….!! பெரும் பரபரப்பு….!!

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் தீவிரவாத தாக்குதல் நடைபெற உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் பயங்கரவாத ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர் . இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து இந்த பக்கமா டெட்டனேட்டர்கள், வெடிபொருட்கள், கையெறி குண்டுகள், பணம், சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தடை செய்யப்பட்ட தீவிரவாத […]

Categories
உலகசெய்திகள்

கவிழ்ந்த இம்ரான்கானின் ஆட்சி…. புதிய பிரதமர் யார்…? கட்சியின் “உயர்மட்ட கூட்டத்திற்கு” அழைப்பு….!!

பாகிஸ்தானின் பிரதமர் மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன் க்றத்தில் வெற்றி பெற்றதையடுத்து அவர் தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக கட்சியின் உயர்மட்ட கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கானுக்கு எதிராக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துள்ளார்கள். இதன் மீதான வாக்கெடுப்பு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது. இதில் 174 உறுப்பினர்கள் பாகிஸ்தானின் பிரதமருக்கு எதிராக வாக்களித்ததால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. இதனால் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான்: புதிய பிரதமர் யார்?…. இன்று (ஏப்ரல் 11) வெளியாகப்போகும் அறிவிப்பு…..!!!!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கைஇல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அதன்படி நேற்று நள்ளிரவு 1:30 மணி அளவில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கானுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடந்தது. 342 உறுப்பினர்களை உடைய நாடாளுமன்றம் அவையில் 174 உறுப்பினர்கள் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் வாயிலாக நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றது. அவ்வாறு எதிர்க் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம்… புதிய பிரதமராக முன்மொழியப்பட்ட ஷபாஸ் ஷெரிப்….!!!

பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான்கான் பதவியிலிருந்து நீக்கப்பட்டதால் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரிப் முன்மொழியப்பட்டிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டின் அரசியலில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, பிரதமர் இம்ரான்கானை எதிர்த்து எதிர்க்கட்சியினர் நம்பிக்கையற்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். எனவே, பிரதமர் இம்ரான் கானின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க நாளை நாடாளுமன்றம் கூட்டப்படுகிறது. அந்நாட்டின் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி தலைவராக இருக்கும் ஷபாஸ் ஷெரிப், புதிய பிரதமராக நியமிக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது. இதற்காக ஷபாஸ் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் பரபரப்பு…. பதவியை ராஜினாமா செய்த சபாநாயகர், துணை சபாநாயகர்….!!!

பாகிஸ்தானில் நாடாளுமன்ற பதவியில் இருந்து விலகி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர்கள். பாகிஸ்தானின் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்திற்கான வாக்கெடுப்பை பிரதமர் இம்ரான் கான் தடுக்க நாடாளுமன்றத்தை கலைக்க அதிபரை கேட்டுக்கொண்டார். இதனால் அதிபர் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தைக் கலைத்தார். இதற்கிடையில் நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு பதிவானது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை  அறிவிக்காததால் நாடாளுமன்றத்தில் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் அரசு சரிந்தது…. பிரதமர் அலுவலகத்தில் இருந்து… வெளியேறினார் இம்ரான்கான்…..!!!!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது. அத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடக்கயிருந்த சூழ்நிலையில், இம்ரான் கான் பரிந்துரையை ஏற்று அந்நாட்டு அதிபர் பாராளுமன்றத்தினைக் கலைத்தார். அவ்வாறு  பாராளுமன்றத்தினைக்கலைத்த அதிபரின் உத்தரவை எதிர்த்து பாகிஸ்தான் சுப்ரீம்கோர்ட்டு தாமாகவே முன்வந்து வழக்குப்பதிந்தது. இவ்வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு பாராளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது எனவும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு 9ஆம் தேதி நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டது. அவ்வாறு சுப்ரீம்கோர்ட் உத்தரவின் […]

Categories
உலக செய்திகள்

போச்சு….!! பாகிஸ்தானின் அடுத்த பிரதமர்…. யார் தெரியுமா….? வெளியான பரபரப்பு தகவல்….!!!

பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரான ஷபாஸ் ஷெரிப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு இன்று நள்ளிரவு 1.30 மணி அளவில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்ற நிலையில் பிரதமர் இம்ரான்கான் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் பாகிஸ்தானின் புதிய பிரதமர் யார் என்பது […]

Categories
தேசிய செய்திகள்

அடகடவுளே….! ரொம்ப பிரமாதம்…. தீவிரவதியின் மகனும் தீவிரவாதி…. மத்திய அரசு அதிரடி முடிவு….!!!

பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீதின் மகன் ஹபீஸ் டல்ஹாவை தீவிரவாதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் கடல் மார்க்கமாக புகுந்து மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி 10-க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுகளை வெடித்தும், துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல்கள் நடத்தி 150-க்கும் மேற்பட்டோரை கொடூரமாக கொன்று குவித்தனர். அந்த 9 தீவிரவாதிகளும் நமது பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற இளம் தீவிரவாதியை மட்டும் உயிருடன் பிடித்து தண்டனையாக தூக்கில் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான்: புதிய பிரதமர் யார்?…. நாளை வெளியாகப்போகும் அறிவிப்பு…..!!!!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கைஇல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அதன்படி இன்று நள்ளிரவு 1:30 மணி அளவில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கானுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடந்தது. 342 உறுப்பினர்களை உடைய நாடாளுமன்றம் அவையில் 174 உறுப்பினர்கள் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் வாயிலாக நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றது. அவ்வாறு எதிர்க் […]

Categories
உலக செய்திகள்

போருக்கு தயாராகிறதா பாகிஸ்தான்….!! திடீரென நடத்திய ஏவுகணை சோதனை…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

அரசியல் நிலைபாடு அற்ற நிலையில் இன்று பாகிஸ்தான் ஏவுகணை பரிசோதனையை நடத்தி உள்ளது. பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற உள்ள நிலையில் அந்நாடு தனது ஏவுகணை சோதனையை இன்று நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து பாகிஸ்தான் ஆயுத படையின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில், “நாட்டில் உள்ள ஆயுத அமைப்பின் பல்வேறு வடிவம் மற்றும் தொழில்நுட்ப அளவீடுகளை மறுமதிப்பீடு செய்வதற்காக தான் ஷாகீன்-3 ஏவுகணை […]

Categories
உலக செய்திகள்

இவருடைய மசூதியை அரசு கைப்பற்றியாச்சு…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

ஜமாத் உத் தவா என்ற பயங்கரவாத இயக்கத்தை நடத்தி வரும் சயீத் என்பவருக்கு பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய வழக்கில் நீதிமன்றம் 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானிலிருந்து கொண்டு இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் நிறுவனராக இருந்த ஹபீஸ் சயீத் மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த அதி பயங்கர வெடிகுண்டு தாக்குதலுக்கு மூளையாக இருந்துள்ளார். இந்த அதிபயங்கர தாக்குதலில் 166 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இதனையடுத்து இ தொய்பா பயங்கரவாத இயக்கம் […]

Categories
உலக செய்திகள்

நம்பிக்கையற்ற தீர்மானம்… உச்சநீதிமன்றத்தில் முறையிட்ட பாகிஸ்தான் அரசு…!!!

நம்பிக்கையற்ற தீர்மானத்தை துணை சபாநாயகர் நிராகரித்த நிலையில் அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்திருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான் கானை எதிர்த்து எதிர்க்கட்சியினர் நம்பிக்கையற்ற தீர்மானத்தை கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதியன்று கொண்டுவந்தனர். அதனையடுத்து இம்ரான்கான் பரிந்துரைத்ததால் அதிபர் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு உத்தரவு பிறப்பித்தார். இது, அந்நாட்டு அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எனவே இது தொடர்பில் அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தாமாகவே வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

Categories
உலக செய்திகள்

அவருக்கு பைத்தியம் பிடித்திவிட்டது…. இந்தியாவிற்கு செல்லட்டும்… இம்ரான்கானை விமர்சித்த நவாஸ் செரீப்…!!!

பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கான் இந்திய நாட்டை பெருமையாக பேசியிருப்பதற்கு எதிர்க்கட்சி தலைவரான மரியம் நவாஸ் ஷெரீப் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தானில் நம்பிக்கையற்ற தீர்மானத்திற்கு முன் பிரதமர் இம்ரான்கான் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், தான் இந்திய நாட்டிற்கு எதிர்ப்பாளர் இல்லை என்று தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது, எந்த வல்லரசு நாடுகளும் இந்தியாவின் நலன்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள கட்டாயப்படுத்த முடியாது. யாரும் இந்தியாவிற்கு ஆணை பிறப்பிக்க முடியாது. மக்களின் நலன்களுக்காக ரஷ்யா-உக்ரைன் போரில், இந்தியா […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான்: இம்ரான்கானுக்கு பதவி கிடைக்குமா?…. வெளியாகப்போகும் அறிவிப்பு…..!!!!!

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கானுக்கு ஆதரவு வழங்கி வந்த கூட்டணிகட்சி ஆதரவை திரும்ப பெற்றதால், அவரது அரசு பெரும்பான்மையை இழந்தது. இதன் காரணமாக அவரது அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. எனினும் துணை சபாநாயகர் காசிம் சூரி, அந்த தீர்மானத்தை நிராகரித்து, கூட்டத்தொடரை ஒத்திவைத்தார். இதையடுத்து இம்ரான்கான் சிபாரிசின் பேரில் அதிபர்நாடாளுமன்றத்தை கலைத்தார். அதனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என நேற்று […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் செல்லும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை….!! மறுபரிசீலனை செய்ய அமெரிக்கா உத்தரவு…!!

பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டிருக்கும் அமெரிக்க குடிமக்களுக்கு அமெரிக்க அரசு மூன்றாம் நிலை எச்சரிக்கை விடுத்துள்ளது. மூன்றாம் நிலை எச்சரிக்கை எனப்படுவது இலங்கை செல்ல யாரேனும் திட்டமிட்டு இருந்தால் அது குறித்து அவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதாகும். ஏனெனில் பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல் நடைபெறலாம் அல்லது எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதிகள் தொடர்பாக பிரச்சனைகள் எழலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. அதோடு கட்டாயம் பாகிஸ்தான் செல்ல வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படும் அமெரிக்கர்கள் எல்லை கோட்டு கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

“அக்டோபருக்கு முன் இது சாத்தியமில்லை”…. பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு….!!!!

பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி, பிரதமர் இம்ரான்கானின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறது என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் தேர்தல் 90 நாட்களுக்குள் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார். இருப்பினும் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம், பொது தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவது சாத்தியம் இல்லை என்று அறிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியான செய்தி குறிப்பில், “நடப்பு ஆண்டில் அக்டோபர் மாதத்திற்கு முன் பாகிஸ்தானில் பொதுத் தேர்தலை நடத்துவது சாத்தியம் இல்லை” என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வெளிப்படைத்தன்மை […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் நம்பிக்கையில்லா தீர்மானம்…. நாளை(ஏப்ரல்.9) வாக்கெடுப்பு…. வெளியான அதிரடி தீர்ப்பு…..!!!!!!

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்த அந்நாட்டு சுப்ரீம்கோர்ட்டு, பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது நாளை(ஏப்ரல் 9)ஆம் தேதி  வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென தீர்ப்பளித்தது.  பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது சென்ற 3ஆம் தேதி ஓட்டெடுப்பு நடத்தாமல், துணை சபாநாயகர் காசிம் சூரி நிராகரித்தார். இதையடுத்து இம்ரான் கான் பரிந்துரையால் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ஆரிப் ஆல்வி கலைத்து உத்தரவு […]

Categories
தேசிய செய்திகள்

பாக்., நாடாளுமன்றம் கலைப்பு செல்லாது…. உச்சநீதிமன்றம் தீர்ப்பு….!!!

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்து செல்லாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு ரத்து செய்த துணை சபாநாயகரின் உத்தரவு செல்லாது என்று கூறிய பாகிஸ்தான் நாடாளுமன்றம் மீண்டும் செயல்படுவதற்கு தடை இல்லை என்றும், நாளை மறுநாள் ஏப்ரல் 9ஆம் தேதி காலை 10 மணிக்கு மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிய…. இம்ரான்கான் மனைவியின் தோழி தப்பியோட்டம்…!!!

பிரதமர் இம்ரான் கானிற்கு நெருக்கமானவர்கள் நாட்டிலிருந்து வெளியேற தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. பாகிஸ்தான் நாட்டில் நிதி நெருக்கடியால் பிரதமர் இம்ரான்கான் அரசாங்கத்திற்கான தங்களின் ஆதரவை கூட்டணி கட்சிகள் விலக்கி விட்டன. இதனைத் தொடர்ந்து, அவரின் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையற்ற தீர்மானத்தை பாராளுமன்றம் ரத்து செய்திருக்கிறது. அதிபர் ஆரிப் ஆல்வி, பிரதமர் இம்ரான் பரிந்துரை படி பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று அறிவிப்பு  வெளியிட்டிருக்கிறார். மேலும், இம்ரான்கான் இடைக்கால பிரதமராக பதவியில் நீடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டிருக்கிறார். […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் எப்போது?…. தேதிகளை பரிந்துரைக்க அதிரடி உத்தரவு……!!!!!!

பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தினை துணை சபாநாயகர் நிராகரித்தது, பிரதமரின் பரிந்துரை அடிப்படையில் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தது பற்றிய பிரச்சினையை அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு தானே முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்துகிறது. இவ்வழக்கு விசாரணையை தலைமை நீதிபதி உமர் அட்டா பாண்டியல் அமர்வு நடத்தியது. அப்போது பாகிஸ்தானில் ஆட்சிமாற்றம் குறித்த வெளிநாட்டு சதி தொடர்பாக மேலும் அறிவதற்கு தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் நடவடிக்கை குறிப்புகளை தாக்கல் செய்யுமாறு உத்தரவு […]

Categories

Tech |