பாகிஸ்தான் நாட்டின் இடைக்கால பிரதமராக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான குல்சார் அகமதுவை பிரதமர் இம்ரான்கான் பரிந்துரைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தன் ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டினார். இந்நிலையில் அவர், உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான குல்சார் அகமதுவை பிரதமராக பரிந்துரைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பரிந்துரை கடிதத்தை அதிபர் ஆரிப் அல்விக்கு அவர் அனுப்பியதாகவும் கூறப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்ற தேர்தல் பணி அகமது தலைமையில் தான் மேற்கொள்ளப்படும் என்று […]
Tag: #பாகிஸ்தான்
பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக அந்தநாட்டின் முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி குல்சார்அகமதை நியமிக்க தற்போதைய பிரதமர் இம்ரான்கான் பரிந்துரை செய்துள்ளார். பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தினை நாடாளுமன்ற துணை சபாநாயகர் காசிம் சூரி நிராகரித்து விட்டார். இதையடுத்து இம்ரான்கானின் பரிந்துரையின் அடிப்படையில் நாடாளுமன்றத்தை கலைப்பதாக அந்தநாட்டு ஜனாதிபதி ஆரிப் ஆல்வி தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் அடுத்த 90 தினங்களில் தேர்தலை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்பின் அடுத்த தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று […]
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பொருளாதார வீழ்ச்சி மற்றும் பணவீக்கம் அதிகரிப்பு போன்ற நெருக்கடிக்கு இம்ரான்கான் ஆட்சி தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் அவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இந்நிலையில் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் வாக்கெடுப்பை துணை சபாநாயகர் நிராகரித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனை […]
பாகிஸ்தானில் பணவீக்கம், விலைவாசி உயர்வு ஆகியவற்றிற்கு அந்நாட்டின் அதிபர் இம்ரான்கான் தான் காரணம் என கூறி எதிர்க்கட்சிகள் அவரது ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை நிறைவேற்றின. இந்த தீர்மானதிற்ககாண வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவிருந்த நிலையில் அது அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக்கூறி சபாநாயகர் காசின் கான் வாக்கெடுப்பை நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திற்க்குள்ளேயே உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இம்ரான்கான் நாடாளுமன்றத்திற்கு வராமல் வீட்டில் இருந்தபடியே காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். அதோடு […]
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நிராகரிக்கப்பட்ட நிலையில் அந்நாட்டின் புதிய அதிபரை எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் பிரதமரான இம்ரான்கான் ஆட்சியில் அந்நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து விட்டதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார்கள். இதற்கான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றத்தில் நடைபெறவிருந்த நிலையில் பிரதமர் இம்ரான்கான் அதிபரிடம் அதனைக் கலைத்து மீண்டும் பாகிஸ்தானில் தேர்தல் நடத்த கோரிக்கை விடுத்துள்ளார். இதனை ஏற்றுக் கொண்ட […]
பாகிஸ்தானின் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு அதிபர் இம்ரான் கான் தான் காரணம் என எதிர்க்கட்சிகள் கூறி வந்ததை தொடர்ந்து அவருடைய ஆட்சிக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளனர். இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ளது. ஏற்கனவே இம்ரான் கானுக்கு ஆதரவாக இருந்த பலர் தங்களுடைய ஆதரவை வாபஸ் பெற்று விட்டதால் கிட்டத்தட்ட ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுவிட்டது. இருப்பினும் இம்ரான்கான் அதிபர் பதவியை ராஜினாமா செய்ய மறுப்பு […]
எல்லா பிரச்சனைகளும் பேச்சுவார்த்தை நடத்தினால் முடிவுக்கு வரும் பாகிஸ்தான் ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட பாகிஸ்தான் ராணுவ தளபதி குவாமர் பாஜ்வா கூறியதாவது. “இந்தியா, காஷ்மீர் உள்பட அனைத்து நாடுகளுடனான பிரச்சனைக்கும் பேச்சுவார்த்தை மூலமே அமைதி காண முடியும். உலகில் ஏதாவது ஒரு மூலையில் பிரச்சினைகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை […]
பாகிஸ்தானின் பிரதமரான இம்ரான்கான் மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டிலுள்ள மொத்த 342 பாராளுமன்ற தொகுதிகளில் ஆட்சியமைப்பதற்கு 172 இடங்களை கைப்பற்றியிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இவ்வாறு இருக்க பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கானின் அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளது. இதற்கான விவாதம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த 31 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இம்ரான்கான் ஆட்சி […]
பாகிஸ்தான் பிரதமரான இம்ரான்கான் தலைமையிலான அரசு மீது நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், அதன் மீது வரும் 3ஆம் தேதி(நாளை) வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. இதில் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லையெனில் இம்ரான் கான் அரசு கவிழும். இம்ரான் கான் இப்போது தன் அரசியல் வாழ்க்கையின் முக்கிய காலக் கட்டத்தில் இருக்கிறார். அவரது கூட்டணிக்கட்சிகள் இரண்டும் தங்களது ஆதரவை திரும்ப பெற்று எதிர்க்கட்சி வரிசையில் சேர்ந்துவிட்டன. இந்நிலையில் இம்ரான்கானின் முன்னாள் மனைவியான ரெஹாம் […]
பாகிஸ்தான் பிரதமரின் இம்ரான் கான் தலைமையிலான அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு வருகிற 3ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பில் இம்ரான்கான் தலைமையிலான அரசு தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறினால் ஆட்சி கவிழும். இந்நிலையில் இம்ரான் கான் இந்தியாவை ஆதரிக்கும் ஒரு சக்தி வாய்ந்த நாடு தற்போது பாகிஸ்தான் மீது கோபமாக உள்ளது என தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஷ்ய அதிபர் […]
பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2ஆம் ஒருநாள் போட்டி லாகூரில் நேற்று பகல்- இரவாக நடைபெற்றது. முதலாவதாக விளையாடிய ஆஸ்திரேலியா 50ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 348 ரன் குவித்தது. இதில் பென்மெக்டர் மட் 104 ரன், டிரெவிஸ் ஹெட் 89 ரன், லபுஷேன் 59 ரன், ஸ்டோனிஸ் 49 ரன் எடுத்தனர். இதையடுத்து ஷகீன்ஷா அப்ரிடி 4 விக்கெட் மற்றும் முகமது வாசிம் 2 விக்கெட் எடுத்தனர். அதன்பின் 349 ரன் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் […]
பாகிஸ்தான் நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட தேசிய ஆணை மற்றும் செயல்பாட்டு மையம் கலைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானில் புதிதாக கொரோனா தொற்று ஏற்படும் நபர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. எனவே, கொரோனாவை கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்ட தேசிய மற்றும் செயல்பாட்டு மையத்தை கலைக்க தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்திருப்பதாவது, நேற்று என்சிஒசி கலைக்கப்பட்டது. இந்த அமைப்பினர் நாடு முழுக்க கொரோனா பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டனர். என்ஓசி நடவடிக்கைகள் சர்வதேச அளவில் […]
பாகிஸ்தானில் அந்நிய சக்திகள் குழப்பம் ஏற்படுத்த முயற்சி செய்வதாக குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்திய பிரதமர் இம்ரான் கான், அந்த அந்நிய சக்தி அமெரிக்காதான் என்று கூறி உடனே தமது கருத்தை மாற்றிக் கொண்டார். தம்மை பதவியிலிருந்து நீக்கவில்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அந்நியநாடு ஒன்று பாகிஸ்தான் அரசியலில் தலையிடுவதாக கூறிய இம்ரான் கான், நான் தவறி அமெரிக்காவின் பெயரை உச்சரித்து பிறகு ஒரு அந்நிய நாடு என்று திருத்திக் கொண்டார். வரும் ஏப்ரல் […]
வரும் 3ஆம் தேதி பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் இம்ரான்கான் அரசு மீது கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் அரசியல் ஸ்திரமற்ற நிலை அந்நாட்டில் காணப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள கொத்ரி என்ற பகுதியின் அருகே மர்ம நபர்கள் சிலர் ரயில்வே தண்டவாளத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அதன் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். […]
பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய திட்டமிட்டிருந்தார். பாகிஸ்தான் நாட்டில் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் தலைமையிலான அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்திற்கான விவாதம் நாளை நடைபெற உள்ளது. மேலும் தீர்மானத்தின் விவாதத்தை தொடர்ந்து வரும் 3ம் தேதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான விவாதம் நாளை நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ள நிலையில் இம்ரான்கான் […]
பாகிஸ்தானில் எனது அரசுக்கு எதிராக வெளிநாட்டு சதி நடப்பதாக இம்ரான்கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டில் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் தலைமையிலான அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்திற்கான விவாதம் நாளை நடைபெற உள்ளது. மேலும் தீர்மானத்தின் விவாதத்தை தொடர்ந்து வரும் 3ம் தேதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த நிலையில் இம்ரான் கான் தனது அரசாங்கத்தை கவிழ்க்க வெளிநாட்டு சதி செய்வதை நிரூபிக்கும் ‘அச்சுறுத்தல் கடிதம்’ தன்னிடம் இருப்பதாக கூறியுள்ளார். […]
பாகிஸ்தான் அமைச்சர் மும்பை தீவிரவாத தாக்குதலில் உயிருடன் கைதான பயங்கரவாதி பாகிஸ்தானை சேர்ந்தவர் என்று 14 வருடங்கள் கழித்து ஒப்புக் கொண்டிருக்கிறார். பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ராஷித் தெரிவித்திருப்பதாவது, தீவிரவாதி கசாப் குறித்த இரகசியமான தகவல்களை அப்போதிருந்த எதிர்க்கட்சித் தலைவர் நவாஸ் ஷெரீப் இந்தியாவிற்கு தெரியப்படுத்தியதாக கூறியிருக்கிறார். மும்பை தாக்குதலில் உயிருடன் பிடிக்கப்பட்ட கசாப் என்ற தீவிரவாதி, பாகிஸ்தான் நாட்டின் ஃபரீத்கோட் என்னும் பகுதியில் வசித்தவர் என்றும் அவர் பற்றிய தகவல்களை நவாஸ் ஷெரீப் இந்தியாவிற்கு […]
பாகிஸ்தானில் எதிர்க்கட்சியினர் தங்களுக்கு உள்ள ஆதரவை காண்பிக்கும் வகையில் நேற்று இஸ்லாமாபாத்தில் பிரம்மாண்டமான பேரணியை நடத்தியிருக்கிறார்கள். பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான் அரசாங்கத்தின் மீது எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையற்ற தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த தீர்மானம் தொடர்பான விவாதம் நாளை நடக்கவிருக்கிறது. அதனையடுத்து வரும் 3ஆம் தேதி அன்று வாக்கெடுப்பு நடக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பாக எதிர்க்கட்சியினருக்கு தனக்குள்ள ஆதரவை காண்பிப்பதற்காக, இம்ரான்கான் கடந்த 27-ஆம் தேதியன்று தலைநகர் இஸ்லாமாபாத்தில் அதிக கூட்டத்தை கூட்டி, பேரணி […]
பாகிஸ்தானின் இம்ரான் கானுக்கு எதிரான தீர்மானத்திற்கு இன்று எதிர்க்கட்சி தலைவர் தாக்கல் செய்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதார வீழ்ச்சி மற்றும் கடன் சுமையில் தவித்து வருகிறது. பொருளாதார நெருக்கடிக்கு இம்ரான் கானின் தவறான கொள்கைகளே காரணம் என்று குற்றம் சாட்டி வரும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்ய திட்டமிட்டன. இதற்கிடையில் இம்ரான் கானின் சொந்த கட்சி உறுப்பினர்களே நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வாக்களிக்கும் நிலையில் இம்ரான் கானின் அரசு கவிழும் என்று […]
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் முதல் மந்திரி உஸ்மான் புஷ்டர் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. பாகிஸ்தானில் கடந்த சில வருடங்களாக நிதி நெருக்கடி அதிகரித்து வருகிறது. இதனால் பிரதமர் இம்ரான்கான் அரசாங்கத்தின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. எனவே பிரதமர் அரசாங்கத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையற்ற தீர்மானம் தாக்கல் செய்வதற்கு திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு, பிரதமர் இம்ரான்கான் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் சிலரே ஆதரவு தெரிவிக்க வாய்ப்பிருக்கிறது என்று நம்பப்படுகிறது. எனவே, இம்ரான் கானின் ஆட்சிக்கு […]
பாகிஸ்தானில் 7வது சீசன் பி.எஸ்.எல் போட்டியை பக்க சென்ற இளம்பெண்ணை தனியார் பாதுகாவலர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தனர். பாகிஸ்தானில் சூப்பர் லீக் 7வது சீசன் பி.எஸ்.எல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் போட்டியை காண்பதற்காக லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்திற்கு இளம் பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அப்போது அவர் போட்டியை பார்த்து விட்டு வீட்டிற்கு திரும்பி உள்ளார். இதற்கிடையில் எதிர்பாராத விதமாக தனது குடும்பத்தினரை விட்டு விலகி வேறு இடத்திற்கு […]
பாகிஸ்தான் பிரதமரான இம்ரான்கான், தன் பதவியை பறிக்க வெளிநாட்டு சதி நடக்கிறது என்று குற்றம் சாட்டியிருக்கிறார். பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதற்கும், பணவீக்கம் அதிகரித்திருப்பதற்கும் பிரதமர் இம்ரான்கானின் அரசு தான் காரணம் என்று கூறி அவரின் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையற்ற தீர்மானம் கொண்டு வருவதற்கு எதிர்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் இம்ரான்கான் கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்களே நம்பிக்கையற்ற தீர்மானத்திற்கு ஆதரவளிக்க வாய்ப்பிருப்பதால் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கவுள்ள பிரதமர் […]
இம்ரான் கான் நாடாளுமன்றத்தில் எடுக்கப்படும் வாக்கெடுப்புக்கு முன்னதாக பொதுமக்கள் ஆதரவை திரட்டி வருகிறார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் எடுத்து வருகின்றனர். இந்த தீர்மானத்துக்கு இம்ரான்கான் கட்சியை சேர்ந்தவர்களே பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 24 தேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் எதிராக வாக்களிக்க தயாராக உள்ளனர். இந்த நிலையில் இம்ரான் “கான் என்ன நடந்தாலும் சரி. நான் பதவியை விட்டு விலக மாட்டேன். நான் சண்டை இன்றி சரணடைய மாட்டேன். […]
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானில் கைபர் பக்துங்வா என்ற மாகாணத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்காக கடந்த 16-ஆம் தேதி அன்று பிரச்சாரம் நடந்தது. அப்போது பிரதமர் இம்ரான் கான், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கூறப்படுகிறது. எனவே, பிரதமர் இம்ரான்கான் 50,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. மேலும், கைபர் பக்துங்வா மாகாணத்தின் முதல்வரான மஹ்மூத் கான், வெளியுறவுத் […]
இந்து மதத்தை சேர்த்த இளம்பெண்ணை இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இளைஞர்கள் நடுரோட்டில் வைத்து துப்பாகியால் சுட்டு கொன்றனர். பாகிஸ்தானில் பெரும்பான்மையினரான இஸ்லாமிய மதத்தினர் சிறுபான்மையினராக வாழ்ந்து வரும் சீக்கியம், இந்து, கிறிஸ்தவ மதத்தின் பெண்களை கடத்தி கட்டாய மதமாற்றம் மற்றும் திருமணம் செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாநிலம் ரோகி நகரில் இந்து மதத்தைச் சேர்ந்த பூஜா குமாரி (வயது 18) என்பவரை அதே பகுதியில் இஸ்லாமிய மதத்தைச் […]
ஸ்கர்டு பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மக்கள் பீதியடைந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் ஸ்கர்டு என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று முன்தினம் திடீரென நிலநடுக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது தரைப்பகுதியில் இருந்து 14.11 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த நிலநடுக்கம் வடமேற்கில் 67 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த […]
பாகிஸ்தான் இந்தியா மீது ஏவுகணையை ஏவ திட்டமிட்டுள்ளது. அரியானா மாநிலம் சிர்சா பகுதியில் உள்ள படைத்தளத்தில் இருந்து இந்திய விமானப்படை போர் விமானம் கடந்த 9ஆம் தேதி வழக்கமான பயிற்சியின் போது அதிநவீன சூப்பர் சோனிக் ஏவுகணை தவறுதலாக ஏவப்பட்டது. இந்த ஏவுகணை பாகிஸ்தான் நாட்டின் எல்லைக்குள் 125 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மியன் ஷனு என்ற பகுதியில் விழுந்தது. இந்த விபத்தினால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும் இந்தியா பாகிஸ்தான் இடையே பெரும் பதற்றத்தை […]
ஏவுகணை பிரச்சனையில் இந்தியா அளித்த பதில் ஏற்கக்கூடியதாக இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் பகுதியில் நடந்த ஏவுகணை பிரச்சனையை பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், கடந்த 9ம் தேதி அன்று இந்தியாவினுடைய சூப்பர்சோனிக் ஏவுகணையானது லாகூர் நகரிலிருந்து 275 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் மியான் சன் பகுதியில் விழுந்தது. இதில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இதற்கு நாங்கள் பதில் தாக்குதல் நடத்தியிருக்கலாம். ஆனால், அமைதியை பின்பற்றினோம். ஏவுகணை தரையிறங்கியது […]
பாகிஸ்தானில் ஒரு நபர் இரண்டாவது பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரமடைந்து துப்பாக்கியால் ஐந்து தடவை கொடூரமாக குழந்தையை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் பஞ்சாப் மாகாணத்தின் மியான்வாலி மாவட்டத்தைச் சேர்ந்த ஷாஜீப். அவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில், தற்போது அவருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ஆண் குழந்தை பிறக்கும் என்று நினைத்த அவருக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது, ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, ஷாஜீப் பிறந்து […]
1999 ஆம் ஆண்டு இந்திய விமானத்தை கடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1999 ஆம் வருடம் டிசம்பர் 24-ம் தேதி நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர். அதாவது 170 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுடன் கடத்தப்பட்ட விமானம் தலீபான்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தானின் காந்தகார் விமான நிலையத்திற்கு சென்றது. அவ்வாறு விமானத்தை கடத்திய பயங்கரவாதிகள் இந்திய […]
பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கான், கடிதம் அனுப்பிய மேற்கத்திய நாடுகளை கடுமையாக சாடியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ரஷ்ய தாக்குதலை எதிர்க்க வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஒரு தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கடந்த 1ஆம் தேதியன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் உட்பட 22 தூதரக […]
ஐ.நாவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்த அம்சத்தை பாகிஸ்தான் நிறைவேற்றாததால் நடப்பாண்டிலும் அந்நாடு கிரே பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக எப்.ஏ.டி.எப் தெரிவித்துள்ளது. உலகெங்கிலுமுள்ள பயங்கரவாத அமைப்புகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பதை தடுப்பதற்கான கண்காணிப்பு பணிகளை பாரிசை தலைமையிடமாகக் கொண்ட நிதி நடவடிக்கை பணிக்குழு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. மேலும் இந்த குழு பல நாடுகளில் இது தொடர்பான ஆய்வுகளை நடத்தி அதற்கேற்ப அவைகளை வகைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு இந்த […]
பாகிஸ்தானில் நாளையிலிருந்து ஆஸ்திரேலிய அணி கிட்டத்தட்ட 24 வருடங்களுக்கு பின்பு டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. பாகிஸ்தானில் நாளை ஆஸ்திரேலிய அணி சுமார் 24 வருடங்களுக்கு பின்பு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒருநாள் தொடர் மற்றும் ஒரு போட்டி கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. இதனால் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இவ்வாறு இருக்க பாகிஸ்தானில் வேகப்பந்து வீச்சை விட, சுழற்பந்து வீச்சுக்கு தான் பிட்ச் […]
பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். 50 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதில் 20க்கும் மேற்பட்டோரின் நிலை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பெஷாவரில் “கிஸ்ஸா” சந்தை பகுதியில், இஸ்லாமியர்கள் தொழுகைக்காக திரளாகக் கூடி இருந்த சமயத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றதால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்ததில் காவல்துறையினர் மூவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் குவெட்டா பகுதியின் பாத்திமா ஜின்னா சாலையில் திடீரென்று சமூகவிரோதிகள் சிலரால் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் ஒரு கடை தீப்பற்றி எரிந்துவிட்டது. அதன்பிறகு, உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், தீயை கட்டுப்படுத்தினர். இந்த பயங்கர விபத்தில் காவல்துறையினர் மூவர் பலியானதாகவும் 25 க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
பாகிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரே நாளில் இரண்டு விபத்துகள் ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் நேற்று முன்தினம் வெவ்வேறு பகுதிகளில் நடந்த விபத்துகளில் 5 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். பலுசிஸ்தான் மாகாணத்தில் இருக்கும் பிஸின் என்னும் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்தின் மீது ஒரு லாரி பயங்கரமாக மோதியதில் விபத்து ஏற்பட்டு மூவர் உயிரிழந்ததோடு, 25 நபர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. அதனைத்தொடர்ந்து, பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் ராஜன்பூர் மாவட்டத்தில் அதிவேகத்தில் வந்த […]
வியட்நாம் போரிலிருந்து அமெரிக்கா பாடம் கற்று கொண்டிருக்கும் மற்றொரு வலையில் விழாது என்று நான் தவறாக நம்பிவிட்டேன் என பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி கருத்து தெரிவித்துள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தற்போது நடந்து வருகிறது. இப்போது இரண்டாவது நாளாக தொடர்ந்து நடக்கிறது. இந்நிலையில் உக்ரைன் ரஷ்யா போர் குறித்து பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி கருத்து தெரிவித்துள்ளார். அதில் “அமெரிக்கா கடந்த காலங்களில் இருந்து எந்த பாடமும் கற்றுக் கொள்ளவில்லை. மேலும் இன்னொரு […]
ரஷ்யாவிற்கு சென்ற பாகிஸ்தான் பிரதமர், உக்ரைன் நாட்டின் மீது நடத்தப்படும் நடவடிக்கைகளை எதிர்க்க வேண்டும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமரான இம்ரான்கான் கடந்த புதன்கிழமை அன்று ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். ரஷ்யாவின் உயரதிகாரிகள், இம்ரான்கானை வரவேற்றார்கள். இந்நிலையில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் இதுபற்றி தெரிவித்ததாவது, உக்ரைன் நாட்டின்மீது ரஷ்யா படையெடுத்திருப்பது குறித்த எங்களின் நிலைப்பாட்டை பாகிஸ்தானிற்கு தெரியப்படுத்திவிட்டோம். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நடவடிக்கை மேற்கொள்வதை எதிர்ப்பது பொறுப்புமிக்க ஒவ்வொரு நாட்டினுடைய […]
இம்ரான் கான் மனைவியின் மகன் காரில் மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தற்போது பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருகிறார். மேலும் பாகிஸ்தான் நாட்டின் முதல் பெண்மணியாக பிரதமர் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீவி உள்ளார். தற்போது இம்ரான்கான் ரஷ்ய அதிபரை சந்திக்க ரஷ்யா சென்றுள்ளார். இந்நிலையில் இம்ரான் கானின் மகன் மூஸா மேனகா தனது காரில் மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டு […]
உக்ரைன் நாட்டில் போர் பதற்றத்திற்கு இடையில் பாகிஸ்தான் பிரதமரான இம்ரான்கான் ரஷ்ய நாட்டிற்கு நாளை பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கான், இரண்டு நாட்கள் பயணமாக ரஷ்ய நாட்டிற்கு செல்கிறார். கடந்த 23 வருடங்களில் ஒரு பாகிஸ்தான் பிரதமர் அரசாங்க ரீதியாக ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் தடவையாகும். கடந்த 1999-ஆம் வருடத்தில் பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப், ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். அதன்பிறகு, தற்போது தான் பாகிஸ்தான் பிரதமர், […]
கடும் பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் பாகிஸ்தான் அந்நிய செலவாணி கையிருப்பை உயர்த்த மக்களிடம் கடனாக தங்கத்தை வாங்குவதற்கு தீர்மானித்திருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் ரிசர்வ் வங்கி கணக்கு அடிப்படையில், அந்நிய செலவாணி கையிருப்பு 17 பில்லியன் டாலராக சரிந்திருக்கிறது. இதைத்தொடர்ந்து, அந்நாட்டின் ரிசர்வ் வங்கி ஆளுநரையும், பொருளாதார முதன்மை குழுவினரையும் அதிபர் இம்ரான் கான் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இது தொடர்பில் பாகிஸ்தானின் நிதியமைச்சரான சவுகத் தாரின் தெரிவித்ததாவது வர்த்தக வங்கிகளின் மூலம் மக்களிடமிருந்து தங்கத்தை கடனாக வாங்க […]
பாகிஸ்தானில் மருத்துவ சிகிச்சை அளிக்காமலேயே போலி பில், ஆவணங்கள் தயாரித்த வழக்கில் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத்தில் உள்ள நிறுவனத்தில் அமெரிக்க மருத்துவ சேவை திட்டத்தின் கீழ் உள்ள சில மாநிலங்களை சேர்ந்தவர்களின் மருத்துவ அறிக்கை மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆகியவற்றை கவனித்து வருகிறது. இந்த வகையில் பாகிஸ்தான் நாட்டின் ராவல்பிண்டி நகரை சேர்ந்தவர் முகமது ஆதிக். இவர் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். முகமது ஆதிக் இந்தியா உட்பட […]
பாகிஸ்தானில் மைனாரிட்டி சமூக மக்கள் மீது தாக்குதல் தொடர்ந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் நாட்டில் ஜங்கல் டேரா என்ற கிராமம் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது. இங்கு வசித்து வந்தவர் முஸ்டாக் அகமது (வயது41). இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள மக்கள் கும்பலாக சேர்ந்து அகமதுவை தரதரவென இழுத்து சென்று மரத்தில் கட்டி வைத்துள்ளதாக தெரிகிறது. ஏனென்றால் இந்த அகமது குர்ஆன் நூல்களின் பக்கங்களை எல்லாம் கிழித்து, தீவைத்து […]
பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் நில மோசடி வழக்கில், கைதாகியுள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான பெனாசீர் பூட்டோவினுடைய பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஆசிப் அக்தர் ஹாஷ்மி. இவர் எவாகியு என்ற சொத்து அறக்கட்டளையினுடைய தலைவராக இருந்த போது, குஜராத்தில் 13.5 கோடி ரூபாய் மதிப்புடைய 13 கனல் பிரதம நகர்ப்புற நிலத்தை ஆக்கிரமித்ததாக தற்போது புகார் எழுந்திருக்கிறது. எனவே, பாகிஸ்தான் மத்திய புலனாய்வு படையான எப்.ஐ.ஏ-யை சேர்ந்தவர்கள் அவரை […]
பாகிஸ்தானில் இருக்கும் ராவி நதி தான் உலகிலேயே அதிக மாசுக்கள் நிறைந்த நதி என்று ஆய்வில் தெரியவந்திருக்கிறது. அமெரிக்காவில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தின் குழு சுற்றுச்சூழல் மாசு தொடர்பில் ஆய்வு மேற்கொண்டுள்ளது. இதற்காக, சுமார் 104 நாடுகளிலிருந்து 258 நதிகளின் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, இவற்றில் மருத்துவ கழிவுகள் எந்த அளவிற்கு கலந்திருக்கின்றன என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், பாகிஸ்தான் நாட்டில் இருக்கக்கூடிய ராவி நதியில் தான் அதிகமாக மருத்துவ கழிவுகள் இருக்கிறது என்று […]
ரஷ்யா-உக்ரைன் இடையே போர் ஏற்படும் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 8 வருடங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக பாகிஸ்தானில் பெட்ரோலிய பொருள்களின் விலையை அந்நாட்டு அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.12.3, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.9.53, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை ரூ.10.08 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வருகின்ற 28-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அந்நாட்டில் பால் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் மிகவும் மந்த நிலையில் இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு கடந்த வாரம் முதல் விவசாய உற்பத்திக்கு 17% பொது வரியை அமல்படுத்தியது. அதன் காரணமாக தற்போது பாகிஸ்தானில் பால் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கராச்சி நகரில் ஒரு லிட்டர் […]
கள்ளச் சந்தையில் விற்பனைக்கு வந்த சிறுத்தை பூனை ஜோடியை வனத்துறையினர் மீட்டு பின் மர்கலா மலைப்பகுதியில் விட்டு விட்டனர். பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் 85 ஆயிரம் ரூபாய்க்கு சிறுத்தை பூனை ஜோடி கள்ளச்சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. சிறுத்தை பூனை என்பது ஒரு சிறிய காட்டுப் பூனை ஆகும். மேலும் இது பார்ப்பதற்கு சிறுத்தை குட்டிகள் போல் இருக்கும். இவை தென் மற்றும் கிழக்கு ஆசியாவின் காட்டுப்பகுதிகளில் காணப்படுகின்றன. இந்த அரியவகை காட்டுப் பூனைகள் அவற்றின் ரோமங்களுக்காகவும் […]
பாகிஸ்தானில் மனநலம் பாதித்த ஒருவர் குரானை கிழித்ததால், மக்கள் அவரை கொடூரமாக தாக்கி கொன்று, மரத்தில் தொங்கவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் முஸ்லிம்களை களங்கப்படுத்தும் விதமாக செயல்படுவது மிகப்பெரிய குற்றமாக கருதப்படுகிறது. அதற்காக கடும் சட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றது. மேலும், மரண தண்டனையும் நிறைவேற்றப்படுகிறது. அதே சமயத்தில் அந்நாட்டை பழமைவாதிகள் மற்றும் மக்கள் இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் செயல்களில் ஈடுபடுவோரை அடித்துக் கொலை செய்யும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் பஞ்சாப் […]
பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு அரசியல் பிரபலம் தன்னைவிட 31 வயது குறைந்த பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்திருக்கிறார். பாகிஸ்தானில் பிரபல கட்சியினுடைய தலைவர் ஆமீர் லியாகத் தன் முதல் மனைவியை பிரிந்து இரண்டாவது திருமணம் செய்தார். இந்நிலையில், தன் இரண்டாம் மனைவியையும் பிரிவதாக கடந்த புதன் கிழமை அறிவித்துவிட்டு, 18 வயதுடைய சியாடா டேனியா ஷா என்ற இளம்பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்திருக்கிறார். இதனை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கிறார். அனைவரும் எங்களுக்காக கடவுளிடம் பிரார்த்தியுங்கள். […]