இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு யோகி ஆதித்யநாத் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது உனா மாவட்டத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய போது, பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியா பல்வேறு உச்சங்களை தொட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் நாட்டின் மதிப்பு சர்வதேச அளவில் உயர்ந்துள்ளது. மேலும் நாட்டின் பாதுகாப்பில் கண்ணும் கருத்துமாக இருக்கும் மத்திய பாஜக அரசு நாட்டின் எதிரிகளை துல்லிய தாக்குதல்கள் மூலமாக அளித்தது. இதனை அடுத்து நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்து […]
Tag: பாஜக அரசு
மத்திய அரசு ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை தீபாவளி போனஸ் ஆக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது. மத்திய ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர் அனுராக் தாகூர். இதன் மூலமாக 11.27 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு பலன் கிடைப்பதாக தெரிவித்தார். அத்துடன் மத்திய அரசு கேஸ் சிலிண்டரை மானிய விலையில் விற்பதற்காக 22,000 கோடி ரூபாயை மானியத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளித்துள்ளது. எண்ணெய் நிறுவனங்களுக்கு இந்த மானியத் […]
பல ஆண்டுகளாக நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா ? மாட்டாரா ? என்பது பேசும் பொருளாகவே இருந்து வந்தது. இதையடுத்து நடிகர் ரஜினி 2017-ஆம் ஆண்டில் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்தார். இருப்பினும் அவர் எப்போது அரசியலுக்கு வருவார் ? என்பது பற்றி தெளிவாக குறிப்பிடாமல் இருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடிகர் ரஜினி தான் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்று அறிவித்தார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் […]
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, “பிரதமர் மோடி இந்தியாவை ரூ.375 லட்சம் கோடி மதிப்புள்ள பொருளாதார நாடாக உயர்த்தி காட்டுவேன் என்று பலமுறை உறுதியோடு கூறிவருகிறார். ஆனால் இந்தியாவோ தற்போது 7 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மேலும் மத்திய பாஜக அரசு நாட்டில் நிலவுகின்ற பட்டினியையும், வறுமையையும் உச்சநீதிமன்றத்தில் மூடிமறைக்கின்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. அதோடு மட்டுமில்லாமல் 20 கோடி இந்தியர்கள் நாள்தோறும் வெறும் வயிற்றுடன் பசியோடு உறங்குகிறார்கள். அதேபோல் இந்தியர்கள் 7 ஆயிரத்திற்கும் […]
அண்மையில் பிரதமர் மோடி கலந்து கொண்ட ஆன்மீக நிகழ்வுகளை தமிழ்நாட்டில் உள்ள சில கோயில்களில் பாஜகவினர் திரையில் ஒளிபரப்பு செய்தனர். கட்சி சார்ந்த நிகழ்வுகளை அனைவருக்கும் பொதுவான ஆன்மீக தளங்களில் திரை இட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். உத்தரகாண்டில் கேதார்நாத்தில் நடைபெற்ற மத நிகழ்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்றதையும் ஆதிசங்கரர் சிலையை திறந்து வைத்து உரையாற்றியதையும், தமிழகத்தில் உள்ள திருவரங்கம் கோயில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ராமேஸ்வரம் […]
100 கோடி தடுப்பூசி போட்ட முதல் நாடு இந்தியா என்பதை மத்திய அரசு தம்பட்டம் அடித்துக் கொண்டு இருப்பதாக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். பாஜகவின் தவறான தடுப்பூசி கொள்கை காரணமாக, தொடக்கத்தில் தடுப்பூசி பொறுப்பு முழுவதும் மாநில அரசுகள் மீது சுமத்தப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “கடந்த 20 மாதங்களுக்கு மேலாக கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் அவதி அடைந்து வருகின்றன. தொற்று பரவல் தற்போது படிப்படியாக […]
அனைத்து மாநில முதல்வர்களும் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் மீதான வரியை உயர்த்திய முட்டாள் தான் அதை குறைக்க வேண்டும் என்று தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் பாஜக அரசை கடுமையாக சாடினார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது:”தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ் ஆட்சி அமைந்ததிலிருந்தே வாட் வரி உயர்த்தப்படவில்லை. ஒரு பைசா கூட நாங்கள் உயர்த்தவில்லை. எந்த முட்டாள் நம்மிடம் […]
உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்திரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “விவசாயிகளின் மீது யாருடைய கார் மோதியது என்பதை அனைவரும் தெள்ளத் தெளிவாகப் பார்த்தோம். அதில் யார் குற்றவாளி? என்பது தெரிய வருகிறது. மேலும் இதுவரை குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்யவில்லை. மாறாக பாஜக அரசு குற்றவாளிகளை கைது செய்வதற்கு பதிலாக பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறது. […]
செய்தித்தாள்கள் மூலம் பரவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்று உலகையே புரட்டிப் போட்டுள்ளது. இதற்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு இதன் தாக்கம், பரவளில் இருந்து ஒவ்வொரு நாடும் மீண்டு வருகின்றன. இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார். செய்தித்தாள்கள் மூலம் கொரோனா பரவும் என்ற தகவல் வெளியாகிய […]