கோவை கார் வெடி விபத்து சம்பவம் குறித்து பாஜக போராட்டம் நடத்தி வருகிறது. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், நாட்டில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தபோது பிரதமர் நரேந்திர மோடி அது பற்றி எத்தனை முறை பேசி உள்ளார். கோவை மாவட்டத்தை தமிழக அரசு புறக்கணிக்கவில்லை. மற்ற மாவட்டங்களை விட கோவை மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். கோவையில் 3 மணி நேரம் தொழில் […]
Tag: பாஜக போராட்டம்
சொத்து வரி உயர்வை கண்டித்து வருகிற எட்டாம் தேதி தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழக அரசு 150 சதவீதம் வரை சொத்து வரியை உயர்த்தி இருப்பது பெரும் கண்டனத்திற்குரியது. இந்த அறிவிப்பால் மக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். சொந்தமாக தொழில் செய்வோர், வாடகை இடங்களில் தொழில் செய்பவர்கள், வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள், வீடு வாடகைக்கு விடுபவர்கள் […]
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டத்தில் காந்தி பூங்கா முன்பு பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக அணியின் மாநில தலைவர் அகோரம் கலந்து கொண்டு பேசிய அவர் தமிழக முதல்வர் ஸ்டாலினை மரியாதை குறைவாக பேசினார். இதனால் ஜெயம் கொண்டான் போலீசார் அகோரத்தை 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அதன்படி இன்று ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் […]