பாகிஸ்தானில் காகிதப் பற்றாக்குறை காரணமாக பள்ளிகளுக்கு பாடப் புத்தகம் அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, அந்நாட்டில் திரும்ப செலுத்த கூடிய கடன் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இன்னிலையில் நிதி நெருக்கடி மற்றும் பணவீக்கத்தினால் அங்கு காகிதப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக புத்தகங்களுக்கான விலையையும் நிர்ணயிக்க முடியாத நிலை நீடிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tag: பாடப்புத்தகங்கள்
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டது மாணவர்களுக்கு வழங்குவதற்கு பாடப் புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 1 முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப் படுகிறது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும், பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் […]
தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் விரைவில் பொதுத்தேர்வு முடிய உள்ள நிலையில் அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1 முதல் 10 ஆம் வகுப்பு […]
முத்துப்பேட்டை ஒன்றியத்தில் மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்களை மாவட்ட உதவி திட்ட அலுவலர் வழங்கியுள்ளார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கள்ளிக்குடி ஊராட்சியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் கல்வி டி. வியில் ஒளிபரப்பாகும் வகுப்புகளுக்கான கால அட்டவணை போன்றவற்றை கொடுத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் வாசுகி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் முத்தண்ணா, பட்டதாரி ஆசிரியர் வீரபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து […]