லிதுவேனியா நாட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் அகதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய ஒன்றிய நாட்டிற்குள் தஞ்சம் புகுவதற்காக அகதிகள், பெலாரஸ் மற்றும் லிதுவேனியா போன்ற நாடுகளின் எல்லையில் முகாமிட்டு தங்கியுள்ளனர். இரவு நேரத்தில் கடுமையான குளிர் இருந்ததால், அவர்கள், ஸ்லீப்பிங் பேகில் தூங்கிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது பாதுகாப்பு படைவீரர்கள், அவர்களை நாயை விட்டு கடிக்க விட்டதோடு, கற்களை தூக்கி எறிந்திருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியானதை […]
Tag: பாதுகாப்பு படை வீரர்கள்
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் பதுங்கி உள்ள பயங்கரவாதிகளை அழித்து ஒழிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் மற்றும் மாநில போலீசார் சேர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு இருக்கின்றனர். அதே நேரம் பாதுகாப்பு படையினரை குறி பார்த்து பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர். இந்த நிலையில், பாரமுல்லா மாவட்டம் கிரீரி பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் காவல்துறையினர் […]
ஹிந்த்வாராவில் வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படையினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஹிந்த்வாராவில் வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படையினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள அவர், உயிரிழந்தவர்களின் வீரம் மற்றும் தியாகம் எப்போதும் மறக்கப்படாது. நாட்டு மக்களை காக்க அவர்கள் முழு ஈடுபாட்டுடன் அயராது உழைத்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். Tributes to our courageous soldiers and security personnel martyred in Handwara. […]
சத்தீஸ்கரில் சுக்மா மாவட்டத்தில் நக்சல்களுடன் ஏற்பட்ட மோதலில் வீரமரணம் அடைந்த 17 பாதுகாப்புப் படையினரின் சடலங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் பூபேஸ் பாகல் அஞ்சலி செலுத்தினார். தண்டேவாடா மாவட்டம் எல்மகுண்டா அருகே கோரச்குடா மலைப் பகுதி அருகே பாதுகாப்பு படையினர் சென்றபோது, அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள் பாதுகாப்பு படையினரின் வாகனங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். இதனால் பாதுகாப்புப் படையினா் எதிா் தாக்குதல் நடத்தினர். சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில் 15 வீரர்கள் காயமடைந்தனர். […]