பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா, டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக பாபர் அசாம் ஒரு பெரிய பூஜ்ஜியம் என்று கருத்துத் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை பென் ஸ்டோக்ஸ் & கோ அடித்து நொறுக்கி டெஸ்ட் தொடரை 3:0 என ஒயிட் வாஷ் செய்தது. சொந்த மண்ணில் பாகிஸ்தான் தொடரை 0:3 […]
Tag: பாபர் அசாம்
3 வடிவிலான கிரிக்கெட்டிலும் கேப்டனாக இருக்கும் பாபர் அசாம், டி20 வடிவத்தில் மட்டும் கேப்டன் பொறுப்பை கைவிட வேண்டும் என்று ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.. ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த 2022 டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தானை வீழ்த்தி ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் 2 போட்டியில் தொடர்ச்சியாக தோல்வியடைந்த போதிலும், அதன் பின் […]
ஜோஸ் பட்லர், இங்கிலாந்து வீரர்கள் ஷாம்பெயின் கொண்டு கொண்டாடப் போவதால், அடில் ரஷித் மற்றும் மொயீன் அலியை வெளியேறுமாறு நினைவுபடுத்தியது பாராட்டுகளை பெற்றுள்ளது. 2022 டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மற்றும் பாபர் அசாமின் பாகிஸ்தான் அணி மெல்போர்ன் மைதானத்தில் மோதியது. முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் களமிறங்கி ஆடிய இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸின் சிறப்பான […]
20 ரன்கள் குறைவு, ஆனாலும் போராடி வென்று சாம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா நேற்றோடு முடிந்தது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடியது. இதன் முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்குதகுதி […]
ஷதாப் கான் தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவராக இருப்பார் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இன்று பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் மெல்போர்ன் மைதானத்தில் மோதுகிறது. இந்நிலையில் நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களின் பட்டியல் ஒன்றை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் ஐந்து நாடுகளில் இருந்து 9 வீரர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது. இதில் யார் […]
“பாகிஸ்தான் உலகக் கோப்பையை வென்றால், 2048 இல் பாபர் அசாம் பாகிஸ்தானின் பிரதமராக இருப்பார்” என்று கவாஸ்கர் ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு அளித்த பேட்டியில் கூறினார். 2022 ஐசிசி டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் நாளை மெல்போர்ன் ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. பாகிஸ்தான் நாட்டு ரசிகர்கள் 1992 உலகக் கோப்பை போல தற்போது இந்த உலகக்கோப்பை நடைபெறுவதாக அவர்கள் நினைக்கின்றனர். ஏனெனில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அந்த 50 ஓவர் உலகக் கோப்பை […]
பாபர் ஒரு “உலகத் தரம் வாய்ந்த வீரர்”, அவரின் ஆட்டத்தை பற்றி மக்கள் கவலைப்பட வேண்டாம் என்று ஷதாப் கான் அறிவுறுத்தியுள்ளார். டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் தொடர்ச்சியாக 2 தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான் இறுதியாக சூப்பர் 12 சுற்றில் நெதர்லாந்திற்கு எதிராக வெற்றி பெற்றது, நெதர்லாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. பாகிஸ்தான் 2 தோல்விகளை பெற்றுள்ளது மட்டுமில்லாமல் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாமின் ஆட்டம் அணிக்கு மற்றொரு பெரிய கவலையாக உள்ளது. தற்போதைய […]
நாங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்த போட்டியில் வலுவாக திரும்புவோம்” என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.. டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் நேற்று பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பெர்த் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் குவித்தது. இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய பாகிஸ்தானின் தூண்களாக கருதப்படும் கேப்டன் […]
நாங்கள் சந்திக்கும்போது ஒருவருக்கொருவர் குடும்பங்களைப் பற்றி பேசுவோம் என்று கேப்டன் ரோஹித் சர்மா பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி உட்பட 16 அணிகளும் 2022 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகி வருகிறது. ஆஸ்திரேலியாவில் இன்று முதல் முதல் சுற்றுப்போட்டிகள் தொடங்குகிறது. மேலும் இந்தியாவின் முதல் சூப்பர் 12 போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக இருக்கும். மென் இன் ப்ளூ கடந்த ஆண்டு உலகக்கோப்பையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை, […]
பாபர் அசாம் இந்த உலகில் உள்ள மற்ற கிரிக்கெட் வீரரை விட மிகவும் சிறப்பாக ஆடுவதாக பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.. பாகிஸ்தானின் நட்சத்திர பேட்டர் பாபர் அசாம் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இடையேயான ஒப்பீடுகள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. கிரிக்கெட்டில் கோலியின் பெயர் உச்சத்தில் இருக்கிறது.. விராட் கோலி பல பேட்டிங் சாதனைகளை முறியடிப்பது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் பாபர் அசாம் வளர்ந்து வருகிறார். கோலி தனது […]
டி20 தரவரிசையில் முகமது ரிஸ்வான் பாபர் அசாமை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்திருக்கிறார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அடிக்கடி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது.. அதன்படி டி20 கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், பாகிஸ்தான் அணியை சேர்ந்த முகமது ரிஸ்வான், அதே அணியை சேர்ந்த பாபர் அசாமை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்திருக்கிறார். இதனால் 2ஆவது இடத்திற்க்கு பாபர் அசாம் தள்ளப்பட்டார். முகமது ரிஸ்வான் […]
பாகிஸ்தானுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் 5ஆவது விக்கெட்டுக்கு சாதனை படைத்த ஜோடிகளை பற்றி பார்ப்போம். அனைவரும் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை லீக் போட்டி நேற்று முன்தினம் துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதால் பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து 147 […]
தோல்விக்கு பின் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறிய கருத்து என்ன என்பதை பார்ப்போம்.. அனைவரும் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை லீக் போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதால் பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து 147 […]
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாமை விராட் கோலி நேரில் சந்தித்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.. 20 ஓவராக நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை முதல் தொடங்கி செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் 6 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்று பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.. இதில் கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.. […]
செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சிரித்துக்கொண்டே காட்டமாக பதிலத்துள்ளார் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்.. தற்போதைய நவீன கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20, அதுபோக ஐபிஎல் போன்ற பிரிமியர் லீக் டி20 தொடரிலும் வீரர்கள் விளையாடி வருவதால் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் பணி சுமைக்கு ஆளாகி சுமாராகவே செயல்பட்டு வருகின்றனர்.. எடுத்துக்காட்டாக நாம் விராட் கோலியையே கூறலாம்.. விராட் கோலி பணிச்சுமை காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக சதம் அடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.. […]
இந்திய அணிக்கு எதிராக ஆடுவது பற்றி கேட்கப்பட்டதற்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பதிலளித்துள்ளார்.. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த தொடர் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறும் நிலையில், 27 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.. அதற்கு அடுத்த நாளான ஆகஸ்ட் 28ஆம் தேதி பரம எதிரிகளாக கருதப்படும் இந்தியா […]
சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் அசாம் 2 மற்றும் 3-வது போட்டிகளில் சதம் அடித்தார். இதில் 3-வது போட்டியில் பாபர் அசாம் 105 ரன்கள் அடித்து குவித்ததன் வாயிலாக சர்வதேச ஒருநாள் போட்டியில் தன் 16வது சதத்தை பூர்த்தி செய்தார். இந்த நிலையில் ICC வெளியிட்டுள்ள ஆல்டைம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில், பாபர்அசாம் 15வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இதன் வாயிலாக […]
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் பாபர் அசாம் முதலிடத்தை பிடித்துள்ளார். 7 வது டி20 உலக கோப்பை போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில் நேற்றிரவு நடந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் நியூசிலாந்தை வீழ்த்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி கோப்பையை தட்டிச் சென்றது. இதனிடையே நடப்பு […]
டி 20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் 7-வது இடத்தில் உள்ளார். டி 20 உலக கோப்பை தொடரில் நேற்று நடந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் மோதின .இதில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 34 பந்துகளில் 39 ரன்கள் குவித்தார் .அப்போது அவர் 32-வது ரன்னை […]
ஐசிசி சார்பில் மாதம்தோறும் சிறந்த வீரர் ,வீராங்கனைகளை தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அந்த வகையில் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் ,வீராங்கனைகள் பட்டியலை சில தினங்களுக்கு முன் ஐசிசி வெளியிட்டது. இந்த விருதானது ஐசிசி வாக்கு அகாடமி மற்றும் ரசிகர்கள் சார்பில் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவ்வாறு கடந்த ஏப்ரல் மாதம் சிறந்த வீரருக்கான விருது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனும் ,ஒருநாள் போட்டியில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் ‘நம்பர் 1’ இடத்தில் உள்ள பாபர் […]
ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் அரைசதம் அடித்து, சாதனை படைத்துள்ளார் . பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனான பாபர் அசாம், அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் . நேற்று நடைபெற்ற ஜிம்பாப்வே – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ,3வது டி20 போட்டியில், பாபர் அசாம் அரை சதம் எடுத்து அசத்தினார். இந்தப் போட்டியானது அவருக்கு 52 வது டி20 இன்னிங்ஸ் ஆகும். எனவே டி20 போட்டிகளில் அதிவேகமாக ,2000 […]
ஐசிசி வெளியிட்ட பேட்ஸ்மேனுக்கான தரவரிசை பட்டியலில், பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் முதலிடத்தை பெற்றுள்ளார். நேற்று ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் , பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இந்த பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் ,பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் ,முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக முதலிடத்தில் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி முன்னிலை வகித்தார். தற்போது பாபர் அசாம் முதலிடத்தை பிடித்து ,விராட் கோலியை பின்னுக்குத் தள்ளினார். சமீபத்தில் […]