ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்றானது மதுரை நோக்கி பாம்பன் பாலத்தின் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தால் ஓட்டுனர் பேருந்தை நிறுத்த முயன்று பிரேக் பிடித்துள்ளார். அப்போது கன மழையின் காரணமாக பாலத்தில் மழைநீர் தேங்கி நின்றதால் பேருந்து நிற்காமல் இழுத்துச் சென்று எதிராக ராமேஸ்வரம் நோக்கி வந்த மற்றொரு அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அரசு பேருந்து […]
Tag: பாம்பன்
புரெவி புயல் பாம்பன் அருகே நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாம்பனில் இருந்து வட கிழக்கு திசையில் 90 கிலோ மீட்டர் தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு திரிகோணமலையில் கரையை கடந்தது. புரெவி புயல் கரையை கடக்கும்போது 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போதைய நிலையில் கிழக்கு தென்கிழக்கு திசையில் 200 […]
புரெவி புயல் தமிழகத்தில் இன்று அல்லது நாளை காலை கரையை கடக்க உள்ளது. பாம்பன் – குமாரி இடையே புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புரெவி புயல் பாம்பன் அருகே உள்ளதால் அந்த பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் பாம்பனுக்கு 90 கிலோ மீட்டர் தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கையின் திரிகோணமலையில் கரையை கடந்த புரெவி புயல் […]
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்லவும், மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சூறைக்காற்று வீசுவதால் பாம்பன் வழியாக ரயில் சேவை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து புறப்படும் சேது விரைவு ரயில் நாளை காலை மண்டபத்துடன் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரவி புயலாக உருவெடுத்தது. இலங்கையில் திரிகோணமலை அருகே […]
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பாம்பன், நாகை, புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளதால் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி உட்பட 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த […]
வங்கக்கடலில் இன்று இரவு புயல் உருவாக உள்ள நிலையில் தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. நாகை, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் நிலவுவதை தெரிவிக்க 1ம் எண் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருப்பதாகவும், இதுமேலும் வலுப்பெற்று இன்று மாலை புயலாக மாறும் […]