பாரதிய ஜனதா கூட்டணி கட்சி தலைவர் ஒருவர் கடவுள் ராமர் தசரத மன்னனின் மகன் அல்ல எனக் கூறியுள்ளார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்துக் கடவுளான ராமருக்கு வட இந்தியாவின் அயோத்தியில் பிரம்மாண்ட கோயில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கடவுள் ராமரின் பிறப்பிடம் குறித்து பல சர்ச்சையான கருத்துகள் எழுந்து வருகின்றன. இதேபோல் நேபாள முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா கூறுகையில், ராமரின் பிறப்பிடம் இந்தியாவில் உள்ள அயோத்தி அல்ல என்றும். நேபாளத்தின் […]
Tag: பாரதிய ஜனதா
தமிழக காவல்துறைக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல். முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். மருது சகோதரர்கள் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை காளையார்கோவில் செல்வதற்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த எல். முருகன் அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழகத்தின் தெய்வங்களாக மதிக்கப்படும் பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுபவர்களை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்த வந்த நிர்வாகிகளை தமிழக அரசு கைது செய்தது கண்டிக்கத்தக்கது என்றார். 50 சதவீத இட ஒதுக்கீட்டை அடுத்த ஆண்டு […]
பாரதிய ஜனதா ஆட்சியை பிடிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டுவதால், அதற்காக வன்முறையைத் தூண்ட முயற்சி செய்வதாக முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார். கொல்கத்தாவில் பாரதிய ஜனதா நடத்திய பேரணியில் கடந்த சில நாட்களுக்கு முன் வன்முறை வெடித்தது. இந்த நிலையில் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பத்திரிக்கை நிகழ்ச்சியில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேசுகையில், “நாட்டை ஒருபுறம் கொரோனா மற்றும் டெங்கு தாக்கி வருகிறது. மறுபுறம் மிகப்பெரிய பெருந்தொற்று பாரதிய ஜனதா தாக்கிக் கொண்டிருக்கிறது. […]
விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை நிறைவேற்றிய மத்திய பாரதிய ஜனதா அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரதிய ஜனதா அரசால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்காமல் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்தும், அதற்குத் துணைபோன தமிழக அரசை கண்டித்தும், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், விவசாயிகளும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை சின்னப்பா […]
கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து கழிவுநீரை சுத்திகரித்து விவசாயத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர மாவட்ட பாரதிய ஜனதா செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவை மாநகர மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் செயற்குழு கூடிய கூட்டம் அக்கட்சியின் மாநில தலைவர் எல். முருகன் தலைமையில் நடைபெற்றது. கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் […]
பேஸ்புக் விவகாரம் தொடர்பாக காங்கிரஸின் குற்றச்சாட்டுகளுக்கு பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் பதிலடி கொடுத்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியினர் இன் வெறுப்பு பேச்சுகள் பேஸ்புக்கில் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருப்பதை அந்த வலைத்தள நிறுவனம் தடுத்து நிறுத்த தவறி விட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் பேஸ்புக் தலைமை செயல் அதிகாரிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இதுகுறித்து மத்திய மந்திரியும் பாரதிய ஜனதா மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத் அளித்துள்ள பேட்டியில், […]