Categories
தேசிய செய்திகள்

தம்பதியினர் கை, கால்களை கட்டி போட்டு நகை பணம் கொள்ளை… மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!!!!!

பாலக்காடு அருகே உள்ள வடக்கஞ்சேரி சுவட்டு பாடம் பகுதியைச் சேர்ந்த ஜோணி(54),ஜோளி (48) தம்பதியினர் வசித்து வருகின்றார்கள். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் இவர்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். அதன்பின் அவர்கள் தம்பதியினரை தாக்கி மயக்கமடைய செய்திருக்கின்றனர் மேலும் கயிறு கொண்டு அவர்களின் கை கால்களையும் துணியைக் கொண்டு வாயையும் கட்டியிருக்கின்றனர். இதனை அடுத்து அந்த ஆறு பேரும் […]

Categories
தேசிய செய்திகள்

“சாலையில் தேங்கிய மழைநீரில் குளியல்”….. பொதுமக்களை வியக்க வைத்த நபர்….. நூதன போராட்டம்….!!!

பாலக்காடு அடுத்த பட்டாம்பியில் சேதமடைந்த சாலைகளை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதை கண்டித்து ஷம்மி என்பவர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்களை வியக்க வைத்தது. சாலையில் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளத்தில் தேங்கிக்கிடந்த சேற்று நீரை உடலில் ஊற்றிக்கொண்டு குளித்து, ஷம்மி தனது எதிர்ப்பை பதிவு செய்தார். வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் மேல பட்டாம்பி கல்பகா தெருவில் போராட்டம் நடைபெற்றது. மேல் பட்டாம்பியில் உள்ள முன்னணி வீட்டு உபயோகப் பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஷம்மி, தினமும் […]

Categories
தேசிய செய்திகள்

பைக் திருடியதாக எண்ணி…. இளைஞரை அடித்துக் கொன்ற கும்பல்…. பரிதாபமாக பறிபோன உயிர்….!!!

கேரள மாநிலம், பாலக்காட்டில் பைக் திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் இளைஞரை அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், பாலக்காடு அடுத்துள்ள ஒலவக்கோடு என்ற இடத்தில் நேற்று இரவில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார் .உயிரிழந்தவர் மலம்புழாவை சேர்ந்த 27 வயதான ரஃபிக் என்பது அடையாளம் காணப்பட்டது. இதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை செய்ய தொடங்கினர். அப்போது ஒலவக்கோடு  அருகே உள்ள மதுக்கடை முன்பு நிறுத்தி […]

Categories
மாநில செய்திகள்

பாலக்காடு…. அந்தரத்தில் தொங்கியபடி 72-வயது பாட்டியின் சாகசம்…. வைரலாகும் வீடியோ….!!!

பாலக்காடு அருகே அந்தரத்தில் சிறிதும் பயம் இல்லாமல் 72 வயது பாட்டி சாகசம் செய்தது பெரும் வைரலாகியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த 72 வயதான பாட்டி வின்ச் என்று அழைக்கப்படும் ஒரு வகை சாகசத்தில் ஈடுபட்டு காண்பவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். பாலக்காடு அருகே உள்ள ஒரு பூங்காவில் சுற்றுலாவுக்கு சென்ற இந்த பாட்டி வின்ச்சில் பயணம் செய்வதற்கு ஆசைப்பட்டார். இதை தொடர்ந்து பாட்டி துளியும் பயம் இல்லாமல் தைரியமாக சவாரி செய்துள்ளார். சேலை அணிந்திருந்த அவர் சீட்பெல்ட் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

திருச்செந்தூர் டூ பாலக்காடு….  மீண்டும் தொடங்கப்பட்ட ரயில்சேவை…. பயணிகள் மகிழ்ச்சி…!!!

திருச்செந்தூர் – பாலக்காடு இடையிலான ரயில் சேவை இன்று முதல் தொடங்கி உள்ளதால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணத்தால் கடந்த ஆண்டு முதல் திருச்செந்தூரில் இருந்து பயணிகள் ரயில் எதுவும் இயக்கப்படவில்லை.  தற்போது தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில் திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் விரைவு ரயில்கள் இன்று முதல் மீண்டும் இயக்கப்பட்டது.  இதனால் திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் இந்த […]

Categories
கேரளா மாநிலம் மாநில செய்திகள்

ஜாதி வெறி… மூன்று மாதத்தில் முடிவுக்கு வந்த… காதல் திருமணம்..!!

காதல் திருமணம் செய்த வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் அனீஷ். இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக அதே பகுதியை சேர்ந்த மாற்று சாதி பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.  மேலும் பெண்ணின் உறவினர்கள் தொடர்ச்சியாக அனிஷ்க்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை அனிஷ்  சரமாரியாக […]

Categories

Tech |