இஸ்ரேல் படையுடன் நாட்டுடன் நடந்த மோதலில் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஒரு இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையேயான மோதல் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. பல வருடங்களாக நீடித்து வரும் இந்த மோதலில் பலர் பலியாகியுள்ளனர். பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் என்ற அமைப்பு இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால், இஸ்ரேல் அரசு, அந்த அமைப்பை தீவிரவாத அமைப்பாக கூறி அழித்துவிட முயன்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, மேற்கு கரையின் காசா […]
Tag: பாலஸ்தீனம்
சோதனை சாவடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒரு வீராங்கனை உயிரிழந்துள்ளார். இஸ்ரேல் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு இடையே கடும் சண்டை நிலவி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதிகளான ஜெனின் நகரில் இராணுவ சோதனை சாவடி ஒன்று அமைந்துள்ளது. இந்த சோதனை சாவடியில் நேற்று முன்தினம் இரவு ராணுவ வீரர்கள் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த இடத்திற்கு காரில் வந்த பாலஸ்தீனிய வாலிபர் சோதனை சாவடியில் இருந்த ராணுவ […]
பாலஸ்தீனத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு பிணமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சி பின்னணி வெளியாகியிருக்கிறது. பாலஸ்தீனத்தை சேர்ந்த 25 வயதுடைய அஹ்மத் அபு மர்ஹியா என்ற இளைஞர் ஓரின சேர்க்கையாளர். சமீபத்தில் கடத்தப்பட்ட இவர் மேற்கு கரை பகுதியில் தலை துண்டிக்கப்பட்டவாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டார். ஓரினச்சேர்க்கையாளர் என்ற காரணத்தால் இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இம்மாதம் ஐந்தாம் தேதி அன்று ஹெப்ரான் பகுதியில் அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதற்கிடையில் கடந்த இரு வருடங்களாக அவர் இஸ்ரேலில் […]
இஸ்ரேல் படையினர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் பாலஸ்தீனத்தை சேர்ந்த இருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே பல வருடங்களாக மோதல் நீடித்துக் கொண்டிருக்கிறது. இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தின் காசா முனையிலிருந்து அடிக்கடி தாக்குதல் நடத்தப்படும். இதற்கு இஸ்ரேல் படையினரும் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். இந்நிலையில், மேற்கு கரையில் உள்ள ஜெனின் நகரத்தின் அகதிகள் முகாமிற்கு சென்ற இஸ்ரேல் படையினர், முக்கிய குற்றவாளியை தேட அங்கு அதிரடியாக சோதனை மேற்கொண்டார்கள். அந்த சமயத்தில் […]
இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டதில் அல்-அக்சா பிரிகேடிஸ் அமைப்பினுடைய தளபதி உட்பட 3 நபர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கிடையே பல வருடங்களாக கடும் மோதல் நீடித்துக் கொண்டிருக்கிறது. இரு தரப்பினரும் அவ்வபோது தாக்குதல் மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், பாலஸ்தீனத்தில் மேற்கு கரையில் அல்-அக்சா பிரிகேடிஸ் என்னும் அமைப்பு இயங்கிக் கொண்டிருக்கிறது. கனடா, அமெரிக்கா, நியூசிலாந்து, ஐரோப்பிய யூனியன், ஜப்பான் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகள் இந்த அமைப்பை தீவிரவாத இயக்கமாக […]
ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் நாட்டின் மீது நள்ளிரவிலிருந்து தொடர்ந்து ராக்கெட் தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே பல வருடங்களாக மோதல் நீடித்துக் கொண்டிருக்கிறது. இஸ்ரேல் நாட்டின் மீது காசா முனையிலிருந்து அடிக்கடி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இஸ்ரேலும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு நேரத்தில் இஸ்ரேல் நாட்டின் விமானப்படை காசா முனை பகுதியிலிருந்து வான்வெளி தாக்குதல் மேற்கொண்டது. இதில், ஹமாஸ் தீவிரவாத அமைப்பில் […]
இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பாதுகாப்பு படை வீரர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பாலஸ்தீனத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரேல் நாட்டில் சமீப நாட்களாக தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையின் ஏரியல் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஒரு நபர் திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டதில் […]
பாலஸ்தீனத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்திருப்பதை தொடர்ந்து பல கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. பாலஸ்தீனத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 64 ஆயிரமாக அதிகரித்திருக்கிறது. மருத்துவமனைகளில், படுக்கைகளுக்கும், மருத்துவ உபகரணங்களுக்கும் அதிக பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. காஸா, வெஸ்ட் பேங்க் போன்ற பகுதிகளில் மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசாங்க அதிகாரிகள் அனைவரும் முழுமையாக தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், பல பகுதிகளில் கொரோனா பரிசோதனை மையங்களும், தடுப்பூசி செலுத்தும் முகாம்களும் அதிகமாக […]
காஷ்மீர் மற்றொரு பாலஸ்தீனம் எனும் தலைப்பில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒரு ஊடகம் ஆவணப்படம் வெளியிட்டதால் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. ரஷ்ய நாட்டின் ஒரு ஊடகம், “காஷ்மீர்:” மற்றொரு பாலஸ்தீனமாக உருவாகிக் கொண்டிருக்கிறது என்னும் தலைப்பில் ஆவணப்படத்தை தயாரித்திருக்கிறது. இந்த ஆவணப்படத்தினுடைய முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. இது தான் தற்போது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இது தொடர்பில் இந்திய நாட்டில் இருக்கும் ரஷ்ய தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் காஷ்மீர் பிரச்சனையானது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஆனது. […]
பாலஸ்தீன மக்கள் ஜெருசலேமில் நடத்திய போராட்டத்தை புகைப்படம் எடுப்பதற்கு சென்ற புகைப்பட கலைஞரை காவல்துறையினர் தாக்கிய புகைப்படம் வெளியாகியிருக்கிறது. பாலஸ்தீன மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராக Sheik Jarrah என்ற நகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காவல்துறையினரும், பொதுமக்களும் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கிக்கொண்டனர். மேலும், அங்கு வெடிகுண்டு வீசப்பட்டது. இதனால், போராட்டம் வன்முறையாக வெடித்தது. இந்நிலையில், அங்கு நடந்த வன்முறையை படம் பிடிக்கச்சென்ற புகைப்படக்கலைஞர் ஒருவரை […]
இஸ்ரேல் நாட்டின் இராணுவத்தினர் காசா நகரில் வான்வழி தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையில் பல வருடங்களாக எல்லை பிரச்சனை நீடிக்கிறது. ஜெருசலேம் நகர் தங்களுக்கு தான் சொந்தம் என்று இரண்டு நாடுகளுக்கிடையிலும் போட்டி நிலவுகிறது. இந்த பிரச்சனையில் பாலஸ்தீனத்தில் இருக்கும் காசா நகரத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் போராளிகள், இஸ்ரேல் நாட்டின் ராணுவத்தினருடன் மோதி வருகிறார்கள். கடந்த மே மாதத்தில், இரு நாடுகளுக்கும் இடையே, சுமார் 11 தினங்களாக தொடர் சண்டை […]
பாலஸ்தீன அரசு விரைவாக காலாவதியாகும் தடுப்பூசிகளை அனுப்பியிருப்பதால் இஸ்ரேல் ஒப்பந்தத்தை முடித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளது. பாலஸ்தீனம் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் பின்தங்கியிருக்கிறது. எனவே இஸ்ரேல் தங்கள் நாட்டில் 50 சதவீத மக்களுக்கு தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திவிட்டதால், தங்களிடம் காலாவதியாக போகும் நிலையில் இருக்கும் பைசர் தடுப்பூசிகள் 1 மில்லியன், பாலஸ்தீனத்திற்கு அனுப்புவதாகவும் உடனடி தேவைக்கு பயன்படுத்தப்படலாம் என்றும் தெரிவித்திருந்தது. அதற்கு பதிலாக இந்த வருடத்தின் கடைசியில், பைசர் தடுப்பூசிகள் திரும்ப வழங்கினால் போதும் என்று தெரிவித்திருந்தது. அந்த […]
இரு நாடுகளுக்கு இடையே நடந்த சண்டை முடிந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் தாக்குதல் நடைபெறுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாகவே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது.இதில் ஒருங்கிணைந்த ஜெருசலேம் நகரம் முழுவதும் எங்கள் நாட்டிற்கு சொந்தம் என்று இஸ்ரேலும் கிழக்கு ஜெருசலேம் எங்களுக்கு சொந்தம் என்று பாலஸ்தீனமும் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது .இந்த மோதலில் இஸ்ரேலில் 13 பேரும், பாலஸ்தீனர்கள் […]
இஸ்ரேல் நாடு, பாலஸ்தீனத்தில் உள்ள காசா மீது வான்வழி தாக்குதல் நடத்தியதாக அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊடகங்கள் பலவும் காசா மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டு வந்த நிலையில் இஸ்ரேல் நாடு அதனை தற்போது உறுதி செய்துள்ளது. அதாவது காசாவிலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை அன்று எரியூட்டும் பலூன்கள் பல அனுப்பப்பட்டதாகவும், அதனால் இஸ்ரேலின் பல பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல், காசாவில் உள்ள […]
ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 15 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்சினை தொடர்ந்து வருகிறது. அத்துடன் ஜெருசலேம் நகரம் எந்த நாட்டிற்கு சொந்தம் என்பதில் இரு நாடுகளுக்கும் அடிக்கடி மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 10 ம் தேதி பாலஸ்தீனத்தின் காசா நகரில் உள்ள ஹமாஸ் போராளிகளுக்கும், இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் இடையே 11 நாட்களாக கடும் மோதல் ஏற்பட்டது. […]
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த இரண்டு பேரை கத்தியால் குத்தி கொன்ற பாலஸ்தீன இளைஞரின் குடும்பத்தாருக்கு அந்நாட்டின் ஜனாதிபதி இழப்பீடு தொகை அளித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் காசாவிற்கு இடையேயான மோதலில் பல சேதங்கள் ஏற்பட்டது. எனவே அதற்கு உதவி தொகையாக, அமெரிக்கா 112 மில்லியன் டொலர் அளித்தது. இதனைத்தொடர்ந்து பாலஸ்தீனத்தின் ஜனாதிபதியான Mahmoud Abbas இழப்பீடு வழங்கியிருக்கிறார். அதாவது கடந்த 2015 ஆம் வருடத்தில் பாலஸ்தீனத்தை சேர்ந்த Al-Halabi என்ற இளைஞர் இஸ்ரேலிய நாட்டைச் சேர்ந்த இரண்டு நபர்களை […]
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்ட சில மணிநேரங்களில் மீண்டும் மோதல் ஏற்பட்டிருக்கிறது. ஜெருசலேத்தில் இருக்கும் AL-AQSA என்ற மசூதியில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் காவல்துறையினர் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் பாலஸ்தீனத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்தனர். அதன் பின்பு தான் இரு தரப்பினருக்குமிடையே மோதல் வெடித்தது. இந்நிலையில் நேற்று இரு நாடுகளும் போரை நிறுத்துவதற்கு ஒப்பந்தம் செய்தது. من اقتحام قوات الاحتلال بأعداد […]
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளும் போரை நிறுத்துவதற்கு ஒப்பந்தம் செய்திருப்பது உறுதியாகியுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே சமீப காலமாக பயங்கரமான மோதல் வெடித்தது. இதன் விளைவாக இரு தரப்பிலிருந்தும் மாறி மாறி ராக்கெட் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரு தரப்பினரும் போர் நிறுத்தத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். பாதுகாப்பு அமைச்சரவை, கடந்த வியாழக்கிழமை அன்று இரு தரப்பினரும் மோதலை நிறுத்த வாக்களித்திருக்கிறது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் […]
பாலஸ்தீனத்தை சேர்ந்த பெண் ஒருவர் பர்தா அணிந்துகொண்டு துப்பாக்கியுடன் இஸ்ரேல் வீரர்களை நெருங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையில் கடும் மோதல் வெடித்து வருகிறது. இதில் அப்பாவி மக்களும் உயிரிழக்கின்றனர். இந்நிலையில் இஸ்ரேல் வீரர்கள் எல்லையில் முகாமிட்டிருந்த போது பாலஸ்தீனத்திலிருந்து பர்தா அணிந்து கொண்டு ஒரு பெண் அவர்களை நெருங்கும் வீடியோ வெளியாகியிருக்கிறது. https://videos.dailymail.co.uk/video/mol/2021/05/19/3281875705552520993/640x360_MP4_3281875705552520993.mp4 அதாவது இஸ்ரேல் வீரர்கள் Hebron ற்கு வெளியில் Elias Junction என்ற பகுதியில் முகாமிட்டிருந்த போது அவர்களை நோக்கி […]
இஸ்ரேல் இராணுவம், காசா மீதான தாக்குதல்களை நிறுத்த தற்போது வாய்ப்புகள் இல்லை என்று தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையேயான மோதல், கடந்த பத்தாம் தேதியில் ஆரம்பித்து தற்போது வரை தொடர்ந்து வருகிறது. காசா நகரிலிருந்து ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது தாக்குதல்கள் நடத்துவதும், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவமும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். அதன்படி காசாவில் சுமார் 219 நபர்கள் பலியாகியுள்ளனர். மேலும் […]
பாலஸ்தீனத்தின் காஸா நகரத்தின் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 41 குழந்தைகள் உட்பட 149 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல் விமானத் தாக்குதலில் தன் வீட்டின் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடும் பாலஸ்தீனியர் ஒருவர் கையில் “வெற்றி பெறுவோம்” என்ற குறியீட்டை காட்டியபடி கிடக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கலின் செய்தி தொடர்பாளரான Steffen Seibert, யூதர்களை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களை பொறுக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார். இஸ்ரேலிற்கும், பாலஸ்தீனத்திற்குமிடையில் சமீப காலமாக தீராத பகை ஏற்பட்டு பயங்கர மோதல் வெடித்து வருகிறது. அதாவது கிழக்கு ஜெருசலேத்திலிருக்கும் Sheikh Jarrah என்ற பகுதியின் அரபு மக்களை வெளியேற்றுவதில் பாலஸ்தீன மக்களுக்கும் இஸ்ரேல் காவல்துறையினருக்கும் இடையில் பிரச்சனை உருவானது. அன்றிலிருந்து இந்த மோதல் அதிகரித்து வருகிறது. எனவே Steffen, ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது […]
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையேயான மோதல் அதிகரித்து வருவதால் போர் ஏற்படும் அபாயம் இருப்பதாக மக்கள் அச்சத்தில் உள்ளனர். இஸ்ரேல் நாட்டிற்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் வெடித்து வருகிறது. இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் காசா முனையில் ஹமாஸ் போராளிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதும், அவர்கள் இஸ்ரேல் மீது ராக்கெட் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்துவதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் செய்தி தொடர்பாளரான ஜோனத்தான் கான்ரிகஸ், தற்போது வரை காசா முனை பகுதியிலிருந்து […]
கடந்த ஒரு வாரமாக பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் சர்வதேச சமூகம் அணி திரண்டு இவற்றுக்கு எதிராகப் போராட வேண்டுமென தொல் திருமாவளவன் கூறியுள்ளார். காசா பகுதியில் இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வந்தனர். இந்த தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 35 பேர் பலியாகினர். அதுமட்டுமில்லாமல் 50க்கும் அதிகமான ஏவுகணைகளை இஸ்ரேல் அமைப்பினர் அனுப்பியதாக ஹமாஸ் இயக்கத்தினர் […]
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தங்கள் மீதான ராக்கெட் தாக்குதலுக்கு மிகப்பெரிய தொகையை ஹமாஸ் கொடுக்கும் என்று கூறியுள்ளார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையில் பல வருடங்களாகவே பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. காசா முனை, பாலஸ்தீனத்தினுடைய தன்னாட்சி பெற்ற பகுதியாக இருக்கிறது. ஹமாஸ் அமைப்பு, இப்பகுதியை ஆண்டு வருகிறது. இந்த அமைப்பினர் ராக்கெட், ஏவுகணை தாக்குதல்களை இஸ்ரேல் நாட்டின் மீது நடத்துவார்கள். இதற்கு தகுந்த பதிலடியை இஸ்ரேல் ராணுவமும் கொடுத்து வருகிறது. இதனிடையே கடந்த திங்கட்கிழமை அன்று, […]
பாலஸ்தீனத்தில் ஹமாஸ் பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் வான் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையில் எல்லைப் பிரச்சனை காரணமாக நீண்ட காலமாக மோதல் நடந்து கொண்டிருக்கிறது. பாலஸ்தீனத்தில் சர்ச்சைக்குரிய காசா பகுதியில் ஹமாஸ் பயங்கரவாத இயக்கம் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. அந்த இயக்கம் இஸ்ரேல் ராணுவத்தினர் மீது தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றது. அந்த இயக்கத்தின் பயங்கரவாதிகளை அழிக்க இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு […]