தொடர் மழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டச் புயல் காரணமாக வட தமிழகத்தில் அதிக மழை பெய்தது. மேலும் வேலூரில் இரண்டு நாட்கள் இடைவிடாது மழை பெய்தது. இதன் காரணமாக நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்தது. மேலும் பாலாற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் பாலாற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக நீர்வரத்தானது பாலாற்றில் அதிகரித்திருக்கின்றது. இதன் காரணமாக பாலாற்றின் முக்கிய இடங்கள், பாலங்கள் மற்றும் தரைப்பாலங்கள் […]
Tag: பாலாறு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வேலூரில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் விரிஞ்சிபுரம் தரைப்பாலம் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று விரிஞ்சிபுரம் தரை பாலத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரால் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. […]
பாலாற்றில் இருந்து செங்கல்பட்டு நகராட்சிக்கு குடிநீர் குழாய் அமைப்பதற்கான பணி துவங்கப்பட்டு பூமிபூஜை நடைபெற்றது. செங்கல்பட்டு நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கு 4 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் கொடுக்கப்பட்டு வருவதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்களின் புகாரை ஏற்றுக்கொண்டு பழவேலி பாலாற்றில் இருந்து செங்கல்பட்டு நகராட்சிக்கு குடிநீர் குழாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு அதற்கான பூமி பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதற்காக அரசு நிதியிலிருந்து 1 கோடியே 6 லட்சம் ரூபாய் நிதி […]
எட்டு குட்டிகளை பெற்றெடுத்த நாய் ஒன்று வெள்ளத்தில் இருந்து தனது குட்டிகளை காப்பாற்ற ஒவ்வொன்றாக வாயில் கவ்விக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு தூக்கி சென்றது. வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே இரு பாலாறு ஆறுகளுக்கு இடையே ஏராளமான நாய்கள் வசித்து வருகின்றனர். புயலால் பெய்த கன மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் வந்தபோது பாலாற்றில் வசித்துவந்த நாய்கள் வேறு இடங்களுக்கு ஓடின. இந்நிலையில் 8 குட்டிகளை பெற்ற நாய் ஒன்று வெள்ளத்தில் இருந்து குட்டிகளை […]