பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளில் புகார் குழுக்களை உருவாக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.. மதுரையை சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகம் முழுவதும் பெண் குழந்தைகளுக்கு எதிராக போக்ஸோ வழக்குகள் அதிக அளவில் பதிவாகின்றன. இதில் பள்ளி மாணவிகளை ஆசிரியர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்வதாகவும் வழக்குகள் நிறைய பதிவாகி வருகிறது. இதனால் பள்ளியில் பயிலக்கூடிய பெண் குழந்தைகள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் […]
Tag: பாலியல் குற்றங்கள்
பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு இரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்ய தாய் லாந்து அரசு முடிவெடுத்து இருக்கிறது. உலகளவில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக வளர்ந்த நாடுகளிலும் பெண்கள் மீதான அத்துமீறல்கள் அதிகளவில் இருக்கிறது. இதன் காரணமாக தண்டனையை கடுமையாக்க வேண்டும் என்று குரல்கள் ஒலித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யா, அமெரிக்கா, தென் கொரியா நாடுகளிலுள்ள சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ள தண்டனை முறையை தாய்லாந்து கையில் எடுத்திருக்கிறது. அதாவது பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் […]
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ், புதிய சீர்திருத்தங்களை வாடிகன் சட்டத்தில் கொண்டு வந்திருக்கிறார். கத்தோலிக்க திருச்சபையில் பாலியல் குற்றங்கள் நடப்பதற்கு எதிராக போராட முக்கியத்துவம் வழங்கக்கூடிய விதத்தில் வாடிகன் சட்டத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் சீர்திருத்தங்களை கொண்டு வந்திருக்கிறார். அதன்படி, ‘நற்செய்தியை அறிவித்தல்’ என்னும் தலைப்பில் 54 பக்கங்களுடைய சீர்த்திருத்த சட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. சமீப நாட்களில் கத்தோலிக்க திருச்சபையின் பாதிரியார்கள், கார்டினல்கள் போன்றோர் மீது தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. எனவே, போப் […]
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை குறைக்கும் வகையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு போலீசாருக்கு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். தமிழக டிஜிபி சைலேந்திரபாபு போலீசாருக்கு பிறப்பித்துள்ள புதிய வித் உத்தரவுகள் பின்வருமாறு, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2021-ன் கீழ் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டு சுய நினைவில் உள்ளவர்களை புலன் விசாரணை செய்யும் முறையினை எளிதாக்குவதற்கு தமிழக காவல் துறையால் உருவாக்கப்பட்ட நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் கூறியிருப்பதாவது, பாலியல் குற்றங்களில் காவல் […]
பாலியல் குற்றங்களை தடுக்க இதுதான் சிறந்த வழி என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் சென்னை மாநகராட்சி தேர்தலுக்கான விருப்ப மனு பெறப்பட்டு வருகின்றது. இதனை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில துணைத் தலைவர் வி பி துரைசாமி ஆகியோர் விருப்பம் உள்ளவர்களிடமிருந்து மனுக்களை பெற்று வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தெரிவித்ததாவது: “தமிழ்நாட்டிலுள்ள 21 மாநகராட்சிகளில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடமிருந்து […]