போச்சுக்கல் நாட்டில் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்ற கர்ப்பிணி பெண், இடம்பற்றாகுறையால் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் பாதி வழியில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த 34 வயதுடைய ஒரு பெண் போர்ச்சுக்கலுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். கர்ப்பிணி பெண்ணான அவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. எனவே, அவரை பிரபல மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அந்த மருத்துவமனையில் பிரசவ பிரிவில் இடம் இல்லை. எனவே, வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு தெரிவிக்கப்பட்டது. அதன்படி, மருத்துவமனைக்கு செல்லும் […]
Tag: பிரசவ வலி
தேர்வு எழுதி கொண்டிருந்த கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள துறைமங்கலம் நியூ காலனியில் போலீஸ்காரரான காசிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா(25) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான அனிதா நேற்று தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த குரூப்-2 தேர்வு மையத்தில் தேர்வு எழுதிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அனிதாவிற்கு பிரசவவலி ஏற்பட்டுள்ளது. இதனால் தேர்வு மைய கண்காணிப்பாளர் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பிறகு அனிதா ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு […]
நடிகை சமந்தா உலகிலேயே மிகப்பெரிய வலி, பிரசவ வலி என்று தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா, தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு இணையதளத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. நடிகை சமந்தா, பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன், நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017-ஆம் வருடத்தில் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் சமீபத்தில் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தார்கள். அதன் பின்பு, மீண்டும் சமந்தா […]
நியூசிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூலி பிரசவ வலியோடு சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்று குழந்தை பெற்றெடுத்தார். நியூசிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூலிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவரது வீட்டில் இருந்து சிறிது தொலைவில் மருத்துவமனை இருந்ததால், அவர் தனது சைக்கிளில் மருத்துவமனைக்கு புறப்பட்டார். பிரசவ வலியுடன் சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு 10 நிமிடத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக உள்ளனர் பிரசவ வலியோடு சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்று குழந்தை பெற்றெடுத்ததை ஜூலி ஃபேஸ்புக்கில் […]
அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை ஆஸ்பத்திரி வாசலிலேயே பல மணி நேரம் காத்திருக்க வைத்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. தானே மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ரோகினி மாருதி முக்னே. இருபத்தி எட்டு வயதாகும் இந்த பெண் நிறைமாத கர்ப்பிணி ஆவார். இவர் நேற்று முன்தினம் மதியம் 1 மணி அளவில் பிரசவவலி எடுத்ததை தொடர்ந்து இந்திராகாந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கிருந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் பிரசவ வலியால் […]
பிரசவத்திற்காக சென்ற பெண்ணிற்கு ஆட்டோவில் ஆண் குழந்தை பிறந்து பின் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வேலூர் மாவட்டத்திலுள்ள குருமலை மலை கிராமத்தில் ராமு என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மனைவி பவுனுக்கு 2 குழந்தைகள் இருக்கின்ற நிலையில் 3-வது முறையாக பிரசவ வலி ஏற்பட்டது. இந்த மலை கிராமத்திற்கு சரியான போக்குவரத்து வசதிகள் இல்லாததாலும், ஆம்புலன்ஸ் செல்ல முடியாததாலும் கிராம மக்கள் பவுனை டோலி கட்டி தூக்கி வந்தனர். இதனையடுத்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள […]
தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர் பிரசவத்தின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நாகலாபுரம் பகுதியை சேர்ந்த ராமநாதன் முத்துலட்சுமி தம்பதிகளுக்கு ஏற்கனவே 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. ராமநாதன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். முத்துலட்சுமியின் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார் இவர் மிகவும் அமைதியான பெண் என்றும், வேளையில் திறமைசாலி எனவும் கூறப்படுகிறது. முத்துலட்சுமி இரண்டாவது முறை கர்ப்பமானார். இவருக்கு திடீரென பிரசவ […]
டெல்லியில் இருந்து பெங்களூருக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். பெங்களூருவைச் சார்ந்த ஒரு பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.அவர் தனது சொந்த வேலை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லி சென்றுள்ளார்.நேற்று முன்தினம் மாலை இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் டெல்லியில் இருந்து பெங்களூருக்கு அவர் புறப்பட்டுள்ளார். அவர் வந்து கொண்டிருந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண் வலி […]
சாலை வசதி இல்லாததால் பிரசவ வலியால் அவதிப்பட்ட பெண்ணை 5 கிலோமீட்டர் தூரம் கட்டிலில் தூக்கி சுமந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சத்தீஷ்கர் மாநிலம் ஜப்லா கிராமத்தை சேர்ந்த பெண்ணொருவர் பிரசவ வலியால் துடித்த நிலையில் கிராம மக்கள் அவரைச் கட்டிலில் சுமந்து கொண்டு ஐந்து கிலோமீட்டர் தூரம் சென்று அதன் பிறகு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பிரதான சாலையில் இருந்து அந்த கிராமத்திற்கு போகும் வழியில் இரண்டு வடிகால்கள் இருக்கின்றது. அந்த இரண்டிலும் தற்போது தண்ணீர் […]