தூத்துக்குடி மாவட்டசிபிசிஐடி அலுவலகத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருவரிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது. சாத்தான்குளத்தில் காவல் நிலையத்தில் தந்தை – மகன் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள். இந்த நிலையில் இது குறித்த விசாரணைக்காக பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருவர் ஆஜர் ஆகி இருக்கின்றார். சம்பவத்தன்று காவல் நிலையத்தில் பணியில் இருந்த கணபதி என்பவரிடம் மாவட்ட சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது. சிபிசிஐடி ஐ.ஜி சங்கர் இந்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றார். […]
Tag: பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்
காவல்துறையினருக்கும் உதவிகரமாக இருந்து தற்போது பல மாவட்டங்களில் தடை செய்யப்பட்டிருக்கும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு பற்றிய தொகுப்பு சாத்தான்குளம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற அமைப்பு துவங்கப்பட்டதன் நோக்கம் என்ன அவர்களின் பணி என்ன என்பது குறித்த செய்தி தொகுப்பு. காவல் துறையோடு இணைந்து மக்களுக்காக சேவையாற்ற விரும்பும் இளைஞர்களை தேர்வு செய்து உருவாக்கப்பட்டது தான் பிரண்ட்ஸ் […]
தூத்துக்குடி உட்பட 8 மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பணியில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொலை சம்பவம் பூதாகரமாக வெடித்தது. இதனால் காவல்துறையினர் மீதான அவநம்பிக்கை மக்கள் மத்தியில் அதிகரித்து விட்டது. இதனைதொடர்ந்து மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்துவதற்காக காவல்துறையினர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொலை வழக்கில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்க்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆரம்பத்தில் காவல்நிலைய பணிகளுக்கும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்க்கும் சம்பந்தமில்லை […]