Categories
உலக செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவு…. இரங்கல் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி…!!!

இந்திய பிரதமரான நரேந்திர மோடியின் தாயார் மரணத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தாயான ஹீராபென்னிற்கு 99 வயதான நிலையில், இன்று அதிகாலையில் மருத்துவமனையில் உயிரிழந்தார். தாயாரின் இறப்பு செய்தியை அறிந்தவுடன் பிரதமர் மோடி உடனடியாக குஜராத் மாநிலத்திற்கு சென்றார். அங்கு தன் தாயின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அதன் பிறகு, இறுதி சடங்குகள் நடந்தது. அதனைத்தொடர்ந்து காந்திநகரில் இருக்கும் மயானத்தில் அவரின் உடலை […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் கோர விபத்து…. 9 பேர் பலி….. 28 பேர் படுகாயம்…. பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு….‌!!!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள நவ்சாரி மாவட்டத்தில் நேற்று இரவு கார் மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அகமதாபாத்தில் உள்ள ப்ரமுக் சுவாமி மகாராஜா சதாப்தி விழாவில் கலந்து கொண்டு சிலர் பேருந்தில் திரும்பி கொண்டு இருந்தனர். இந்த பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென எதிரே வந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 9 பேரும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்தில் இருந்த […]

Categories
தேசிய செய்திகள்

“இன்று என்னால் நேரடியாக அங்கே வர முடியல”…. வருத்தம் தெரிவித்த பிரதமர் மோடி…..!!!!

மேற்கு வங்கத்தில் நடந்த அரசு விழாவில் கலந்துகொள்ள தான் நேரடியாக வரமுடியாமல் போனதற்காக வருந்துகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்து உள்ளார். காணொலி காட்சியின் மூலம் பிரதமர் பேசியதாவது, இன்று மேற்கு வங்கத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நான் நேரில் வர திட்டமிடப்பட்டு இருந்தேன். எனினும் சில சொந்த வேலைகள் காரணமாக என்னால் நேரடியாக வர முடியாமல் போனதற்கு மேற்கு வங்கத்திடமும் மாநில மக்களிடமும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

“ரயில்வே துறையை நவீனப்படுத்த மாபெரும் முதலீடு”…. பிரதமர் மோடி தகவல்….!!!!

மேற்கு வங்கத்தில் ஹௌராவில் இருந்து நியூ ஜல்பாய்குரிக்கு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும் நியூ ஜல்பாய்குரி ரயில்வே மறு சீரமைப்பு திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டினார். நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளிலுள்ள ரயில்வே நிலைய வழித்தடங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் பயனளிக்கக்கூடியவை என தெரிவித்தார். இதற்கிடையில் பிரதமர் மோடி பேசியதாவது “வந்தே மாதரம் முழக்கம் உருவான இடத்தில் இருந்து வந்தே பாரத் ரயில் ரயில் சேவை துவங்கப்பட்டு உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டுக்காக நான் பிரார்த்திக்கிறேன்…. பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்….!!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் இருப்பவர் ரிஷப் பண்ட். இவர் உத்தரகாண்டில் இருந்து டெல்லிக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த கார்‌ சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ரிஷப் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு நெற்றி மற்றும் முதுகு பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இவர் குணமடைய வேண்டும் என்று கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“தாய்க்கும், மகனுக்கும் இடையிலான அன்பு விலைமதிப்பற்றது”…. பிரதமர் மோடியின் தாயார் குணமடைய ராகுல் வாழ்த்து…!!!!!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார்‌ ஹீராபென் மோடி உடல்நல குறைவின் காரணமாக கடந்த புதன்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அகமதாபாத்தில் உள்ள யு.என். மேத்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு தற்போது 100 வயது ஆகிறது. அதன் பிறகு பிரதமர் மோடியின் தாயார் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடியின் தாயார் விரைவில் குணமடைய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் ராகுல் […]

Categories
மாநில செய்திகள்

பணி நியமனம்.! தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கான வாய்ப்புகளை உறுதி செய்திட வேண்டும்…. தமிழில் தேர்வு நடத்திட கோரி முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்..!!

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணி நியமனங்களில் தமிழர்களின் வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு மற்றும் ஒன்றிய பொதுத்துறை நிறுவனங்களின் பணி நியமனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கான வாய்ப்புகளை உறுதி செய்திட வேண்டும் என்று வலியுறுத்தி மாண்புமிகு இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் இன்று கடிதம் […]

Categories
தேசிய செய்திகள்

விபத்தில் சிக்கிய பிரதமர் மோடியின் சகோதரர் கார்….. குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சை..!!

பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடியின் கார் கர்நாடக மாநிலம் மைசூரு அருகே இன்று மதியம் விபத்துக்குள்ளானதில் அவர் மற்றும் குடும்பத்தினர் காயமடைந்தார். பிரஹலாத் மோடி தனது மனைவி, மகன் மற்றும் மருமகளுடன் மெர்சிடிஸ் பென்ஸ் காரில் பந்திபுராவுக்குச் சென்று கொண்டிருந்தபோது மதியம் 2 மணியளவில் விபத்து ஏற்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடியின் கார் கர்நாடக மாநிலம் மைசூரு அருகே இன்று மதியம் விபத்துக்குள்ளானதில் அவர் காயமடைந்தார். பிரஹலாத் மோடி, தனது மனைவி, […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : பிரதமர் மோடியின் சகோதரர் கார் விபத்து…. 6 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!

மைசூருக்கு சென்று கொண்டிருந்தபோது பிரதமர் சகோதரிகளின் கார் விபத்தில் சிக்கியதில் அவர் காயம் அடைந்தார். பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி அவரது மனைவி, மகன், மருமகள், பேரக்குழந்தைகள் உட்பட 6 பேர் மைசூர் வந்தனர். மைசூரில் இருந்து பந்திப்பூர் வனவியல் பூங்காவுக்கு சென்ற போது கார் விபத்தில் சிக்கியது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச் சுவர் மீது மோதியதில் பிரகலாத் மோடி அவரது குடும்பத்தினர் காயம் அடைந்தனர். காயமடைந்த பிரகலாத் மோடி உள்ளிட்டோர் சிகிச்சைக்காக […]

Categories
தேசிய செய்திகள்

“நாடு முழுக்க பிரதமர் மோடி புகழ்”…. குஜராத் பாஜகவின் கோட்டை…. உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிரடி ஸ்பீச்….!!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் பகுதியில் பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா காணொளி காட்சி வாயிலாக உரையாற்றினார். அவர் பேசியதாவது, சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி குஜராத் பாஜகவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. இதே முடிவு வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் மற்ற மாநிலங்களிலும் கிடைக்கும். பிரதமர் மோடிக்கு இந்தியா மற்றும் குஜராத்தில் கிடைத்த புகழ்தான் குஜராத்தில் கிடைத்த இந்த வெற்றிக்கு காரணம் […]

Categories
தேசிய செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா!…. நாட்டு மக்களுக்கு பிரதமர் சொன்ன முக்கிய அட்வைஸ்……!!!!!

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம் ஆகும். அதன் அடிப்படையில் இந்த வருடத்தின் கடைசி மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது “பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதே சமயம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மக்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மக்கள் அனைவரும் கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும் முக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுதல் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவுது!… மக்கள் கவனமாக இருங்கள்…. பிரதமர் மோடி அறிவுறுத்தல்…..!!!!

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம் ஆகும். அந்த அடிப்படையில் இந்த வருடத்தின் கடைசி மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார். அவர் கூறியதாவது “உலக நாடுகளில் கொரோனா அதிகரித்து உள்ளது. கொரோனா பரவலை தடுப்பதற்கு நாம் கவனமுடன் இருக்க வேண்டும். மேலும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். கைகளை சுத்தமாக கழுவவேண்டும். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகளில் உள்ள மக்கள் கொரோனா விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்” என்று […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: கொரோனா பரவல்….. பிரதமர் மோடி அதிரடி உத்தரவு…!!!!

பெரியம்மை, போலியோ நோய்களை அழித்தது போல கொரோனாவையும் அழிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். இந்த ஆண்டின் கடைசி ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் இன்று உரையாற்றினார். அப்போது அவர், சுற்றுலாத் துறை கடும் நெருக்கடிகளை சந்தித்து வருவதாக தெரிவித்தார். “மாஸ்க் அணிவது, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது என்று கவனமாக இருந்து கொரோனாவை விரட்டுவோம்” என மோடி பேசினார்.

Categories
தேசிய செய்திகள்

உலக பொருளாதாரத்தில் இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது தெரியுமா…..? மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சொன்ன தகவல்….!!!!

இந்தியாவின் பிரதமராக கடந்த 2014-ம் ஆண்டு நரேந்திர மோடி பொறுப்பேற்றதிலிருந்து மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் அகில இந்திய வானொலி வாயிலாக மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டு மக்களுடன் உரையாற்றுவார். அந்த வகையில் நடப்பாண்டின் கடைசி மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுடன் உரையாற்றினார். அவர் கூறியதாவது, 2022-ம் ஆண்டு இந்தியாவுக்கும் மிகவும் அற்புதமான வருடம். நாம் உலக […]

Categories
தேசிய செய்திகள்

புதிய வகை ஒமிக்ரான் BF.7…. நடவடிக்கைகள் தீவிரம்….. மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை..!!

இந்தியாவிலும் புதிய வகை ஒமிக்ரான் BF.7 தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இந்தியாவிலும் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. உலகளவில் தற்போது சீனாவில் அதிக அளவில் புதியவகை பிஎப்.7 கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. ஆனால் எத்தனை பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவில்லை, அவர்கள் அதை குறிப்பிடவில்லை. சீனா, தென்கொரியா, ஜப்பான் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. ஜப்பானில் ஒரு நாளைக்கு 2 […]

Categories
தேசிய செய்திகள்

“PM மோடியுடன் சிரித்துப் பேசி உணவருந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே”…. அட என்னப்பா திடீர்னு இப்படி மாறிட்டாங்க…..!!!!!

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது அனைத்து எம்பிகளுக்கும் மத்திய அரசு சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் சிறுதானியங்களால் செய்யப்பட்ட பல்வேறு வகையான உணவுகள் இடம் பெற்ற நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர், பாதுகாப்பு மந்திரி ராஜநாத் சிங், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டனர். இது தொடர்பான […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பிரதமர் வெளியே சிங்கம்; உள்ளே எலி”…. மன்னிப்பு கேட்க மல்லிகார்ஜூன மறுப்பு….!!!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பாரத் ஜடோ யாத்திரை ராஜஸ்தானில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் வெளியில் சிங்கம் போல பேசுகிறார் ஆனால் உண்மையில் அவர் உள்ளே எலிபோல செயல்படுகிறார் என்று ஒப்பிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார். இந்நிலையில் பிரதமரை இவ்வாறு விமர்சித்து பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ராஜ்யசபாவில் பாஜகவினர் குழல் எழுப்பினர். ஆனால் பார்லிமென்ட்க்கு வெளியே பேசியதற்கு இங்கு மன்னிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

“வெளியே சிங்கம் மாதிரி, ஆனா நாட்டுக்குள்ள எலிதான்”…. PM மோடியை சீண்டிய காங்கிரஸ் தலைவர் கார்கே….!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் பகுதியில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை நடைபெற்ற நிலையில் அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, மோடி அரசு மிகவும் வலிமையானது எனவும் அவர்களுடைய கண்களை கூட யாரும் நேரடியாக பார்க்க முடியாது எனவும் கூறி வருகிறார்கள். ஆனால் எல்லையில் சர்ச்சைகளும் மோதலும் நீடிக்கிறது. கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடன் நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சீன […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவில் பெண்களால் நடத்தப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் கூகுள் முதலீடு…. சுந்தர் பிச்சை தகவல்….!!!!

இந்தியாவுக்கு கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை வந்துள்ளார். இவர் மத்திய தொழில்நுட்பத் துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரை டெல்லியில் வைத்து சந்தித்து பேசியுள்ளார். அதன் பிறகு இந்தியா 2022-க்கான google என்ற நிகழ்விலும் சுந்தர் பிச்சை கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்திய டிஜிட்டல் மயமாக்கல் நிதியத்தின் ஒரு பகுதி இந்தியாவில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் அதிக கவனம் செலுத்துகிறது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு…. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராஜா பட்டேரியா அதிரடி கைது…..!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராஜா பட்டேரியா பன்னா மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமரை பற்றி பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அவர் பேசியதாவது, மோடி தேர்தல்களுக்கு முடிவு கட்டிவிட்டு, மொழி, ஜாதி மற்றும் மதத்தின் பெயரால் பிளவுபடுத்துவார். அதன் பிறகு மோடி அரசில் சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பழங்குடியினரின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே மோடியை கொலை செய்வதற்கு அனைவரும் தயாராகுங்கள். மோடியை வீழ்த்துவதாக நினைத்து கொல்ல தயாராகுங்கள் என்று […]

Categories
தேசிய செய்திகள்

“பிரதமர் மோடியை கொல்ல தயாராகுங்கள்”…. மூத்த காங்கிரஸ் தலைவரின் சர்ச்சை பேச்சால் திடீரென வெடித்த பரபரப்பு….!!!!

மத்திய பிரதேசம் மாநிலம் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராஜா பட்டேரியா பன்னா மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமரை பற்றி பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அவர் பேசியதாவது, மோடி தேர்தல்களுக்கு முடிவு கட்டிவிட்டு, மொழி, ஜாதி மற்றும் மதத்தின் பெயரால் பிளவுபடுத்துவார். அதன் பிறகு மோடி அரசில் சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பழங்குடியினரின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே மோடியை கொலை செய்வதற்கு அனைவரும் தயாராகுங்கள். மோடியை வீழ்த்துவதாக நினைத்து கொல்ல தயாராகுங்கள் என்று கூறியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

“நாட்டுக்கு குறுக்கு வழி அரசியல் வேண்டாம்”…. பிரதமர் மோடி அதிரடி ஸ்பீச்….!!!!!

PM மோடி அவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள நாக்பூரில் ரூ75 ஆயிரம் கோடி மதிப்பில் ஆன திட்டப் பணிகளை  நேற்று துவங்கி வைத்தார். இதையடுத்து மராட்டிய கவர்னர் பகத்சிங், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, மத்திய மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் முன்னிலையில், இவ்விழாவில் பிரதமர் பேசியதாவது, சென்ற 8 வருடங்களில் நாங்கள் அனைவரின் ஆதரவுடனும், நம்பிக்கையுடனும், முயற்சிகளுடனும், மன நிலையையும், அணுகுமுறையையும் மாற்றிக்காட்டி இருக்கிறோம். நாக்பூரில் துவங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் முழுமையான பார்வையை கொண்டுள்ளது. இங்கே துவங்கி […]

Categories
தேசிய செய்திகள்

நாக்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்த கையோடு…. பிரதமர் மோடி செய்த செயல்….!!!!

மராட்டியம் மற்றும் கோவாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடி, நாக்பூர்-பிலாஸ்பூர் வழித் தடத்தில் 6வது வந்தே பாரத் ரயிலை இன்று கொடியசைத்து துவங்கி வைத்தார். இதையடுத்து நாக்பூர் மெட்ரோவின் முதல் கட்டத்தை துவங்கி வைத்த பிரதமர் மோடி, 2ஆம் கட்டத்திற்க்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின் மெட்ரோ ரயில் டிக்கெட்டை வாங்கி அதில் பயணம் மேற்கொண்ட மோடி, மாணவர்கள் மற்றும் உள்ளூர் மக்களுடன் கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து பிரதமர் மோடி இன்று நாக்பூரில் 75,000 கோடி ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

சிறுபான்மை மாணவர்களுக்கு மீண்டும் கல்வி உதவித்தொகை…. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!!!!

இந்தியாவில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு ஒன்றிய அரசு கல்வி உதவி தொகையை ரத்து செய்துள்ளது. கடந்த 2008-09 கல்வியாண்டில் ஒன்றிய அரசு சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த கல்வி உதவித்தொகையின் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெற்று வந்த நிலையில், திடீரென ஒன்றிய அரசு உதவி தொகையை நிறுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

“நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் முக்கிய முடிவுகள்”…. பிரதமர் மோடி அதிரடி ஸ்பீச்….!!!!!

டெல்லியில் நாடாளுமன்ற குளிர்காலத் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் டிசம்பர் 29-ம் தேதி வரை 17 அமர்வுகள் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின் போது துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் நாடாளுமன்றத்தின் சபாநாயகராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பிறகு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது மத்திய அரசானது 16 மசோதாகளை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது, இந்தியா சுதந்திரமடைந்த 75 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டதால் […]

Categories
தேசிய செய்திகள்

“நமது துணை ஜனாதிபதி விவசாயி மகன்”….. ராணுவத்துக்கு, விவசாயிக்கும் கூட தொடர்பு…. பிரதமர் மோடி நெகிழ்ச்சி….!!!!

டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தின் போது துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் நாடாளுமன்ற சபாநாயகராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பிறகு பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது, நம்முடைய துணை ஜனாதிபதி ஒரு விவசாயியின் மகன். அவர் ராணுவ பள்ளியில் பயின்றுள்ளதால் ராணுவ வீரர்களுடனும், விவசாயிகளுடனும் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார். நம்முடைய நாடு 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடி, ஜி-20 மாநாட்டுக்கு தலைமை பொறுப்பை ஏற்ற பிறகு  இந்த […]

Categories
தேசிய செய்திகள்

“பிரதமரின் வேஷ்டி ஏலம்”… எவ்வளவு ரூபாய்க்கு தெரியுமா…? வியாபாரி நெகழ்ச்சி பேச்சு…!!!!!

வருடத்திற்கு ஒருமுறை பிரதமர் மோடி தனக்கு கிடைக்கும் பரிசு பொருட்களை ஏலம் விடுவது வழக்கம். அப்படி ஏல விற்பனை செய்து அதன் மூலமாக கிடைக்கும் தொகையினை பெண் குழந்தைகளின் கல்விக்காக செலவு செய்து வருகிறார். பிரதமர் மோடி  கலந்து கொள்ளும் பல்வேறு விழாக்களில் கிடைக்கும் பரிசு பொருட்களை ஆன்லைன் முறையில் ஏலம் விடப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் நடத்தப்பட்ட ஏலத்தில் பிரதமருக்கு பரிசாக கிடைத்த திருவள்ளுவர் சிலையையும், பட்டு வேஷ்டியையும் சேலம் அன்னதானபட்டியை சேர்ந்த பழைய […]

Categories
மாநில செய்திகள்

“ஜி20 மாநாடு”…. அதற்கெல்லாம் தமிழகம் முழு ஆதரவை வழங்கும்…. பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் உறுதி….!!!!!

இந்தியாவிடம் ஜி20 மாநாட்டின் தலைமை பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரதான அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டார்கள். அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, ஜி 20 மாநாட்டின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இது நம் நாட்டுக்கு மிகவும் பெருமையான விஷயம் என்பதால் உலக அளவில் நம் […]

Categories
தேசிய செய்திகள்

“தேச விரோதிகளுக்கு பஸ்மாசுரன்”… மக்களுக்கு கடவுள் நாராயணன்….. பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளிய பாஜக சி.டி ரவி….!!!!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பிரதமர் நரேந்திர மோடியை ராவணனுடன் ஒப்பிட்டு பேசியிருந்தார். இதற்கு பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி. ரவி தற்போது பதிலடி கொடுத்திருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது, இந்தியாவில் உள்ள தேச விரோதிகள் மற்றும் ஊழல் வாதிகளுக்கு எதிராக பிரதமர் மோடி இருப்பதால் அவர்களுக்கு பஸ்மாசுரனாக இருக்கிறார். ஆனால் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடவுள் நாராயணன் போன்று இருக்கிறார். மேலும் பிரதமர் மோடி ஊழலை பஸ்பம் செய்வதற்காக ஆட்சியில் இருக்கிறார் […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தை படம் பிடித்த செயற்கைக்கோள்…. குழந்தையாகிப்போன பிரதமர் மோடி….!!!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இஓஎஸ் 06 செயற்கைக்கோள் உட்பட சில செயற்கைக்கோள்களை இஸ்ரோ ஏவி இருந்தது. இதில் இஓஎஸ் 06 என்பது ஓசன் சாட் வகை செயற்கைக்கோளில் 6-வது தலைமுறையை சார்ந்ததாகும். இந்த செயற்கைக்கோள் 1117 கிலோ எடை கொண்டதாகும். இது கடல் நிறம், மேற்பரப்பு வெப்பநிலை, காற்றின் திசை மாறுபாடுகள், வளிமண்டலத்தில் நிகழும் ஒளியியல் மாற்றங்கள் போன்ற செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து தரவுகளை வழங்கு வதற்காக அனுப்பப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

தேர்தல் பிரசாரம்: சிறுமியை பயன்படுத்திய பிரதமர் மோடி?…. காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு….!!!!

குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இவற்றில் வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்க பிரதமர் மோடி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் பிரதமர் அருகில் ஒரு சிறுமி நின்றுக்கொண்டு அம்மாநிலத்தில் பிரதமர் மோடியின் ஆட்சி பற்றி விவரிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இவ்வீடியோ பதிவை மத்திய மந்திரிகளும், பா.ஜனதா தலைவர்களும் பகிர்ந்து வருகின்றனர். எனினும் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் டுவிட்டர் […]

Categories
தேசிய செய்திகள்

“இன்று மாபெரும் வேலை வாய்ப்பு கண்காட்சி”….. 71,000 பேருக்கு புதிதாக பணி நியமன‌ ஆணை….. வழங்குகிறார் பிரதமர் மோடி….!!!!!!

இந்தியாவில் அடுத்த ஒன்றரை வருடங்களில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்குமாறு பிரதமர் மோடி மத்திய அரசு துறைகளை கேட்டுக்கொண்டார். இதன் காரணமாக மத்திய அரசு  புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 75 ஆயிரம் பேருக்கு பிரதமர் நரேந்திர மோடி புதிய  வேலை வாய்ப்பு ஆணைகளை வழங்கினார். இந்நிலையில் மத்திய அரசின் ரோஜ்கார் மேளா திட்டம் இன்று தொடங்குகிறது. இதில் சுமார் 71 ஆயிரம் பேருக்கு காகிதம் மூலமாக […]

Categories
இந்திய சினிமா சினிமா

“சிறந்த இந்திய திரைப்பட ஆளுமைக்கான விருது”….. நடிகர் சிரஞ்சீவிக்கு பிரதமர் மோடி வாழ்த்து….!!!!!

கோவாவில் 53-வது சர்வதேச இந்திய திரைப்பட திருவிழா தொடங்கியுள்ளது. இந்த விழாவின் போது உலகின் சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படும். அதன் பிறகு விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவகன், வருன் தவாண், கார்த்திக் ஆர்யன், மனோஜ் வாஜ்பாய் மற்றும் சாரா அலிகான், நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். நடப்பு வருடத்தில் சிறந்த இந்திய திரைப்பட ஆளுமைக்கான விருது நடிகர் சிரஞ்சீவிக்கு வழங்கப்பட இருக்கிறது. இந்த தகவலை மத்திய மந்திரி அனுராக் […]

Categories
தேசிய செய்திகள்

“வேலைவாய்ப்பு திருவிழா”…. 71,000 பேருக்கு பணி நியமனக் கடிதம்…. வெளியான சூப்பர் தகவல்…!!!

மாபெரும் வேலைவாய்ப்பு திருவிழா எனும் திட்டத்தின் கீழ் புதியதாகப் பணியமர்த்தப்பட்ட சுமார் 71,000 நபர்களுக்கு பணி நியமனக் கடிதங்களை பிரதமர் நரேந்திர மோடி நாளை வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக உரையாற்றுவார் என பிரதமர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இருந்து தேர்வாகும் நபர்கள், அமைச்சகங்கள், மத்திய அரசுத் துறைகளில் பணிகளில் சேருவார்கள். மாபெரும் வேலைவாய்ப்பு திஒருவிழா என்பது வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு அதிக முன்னுரிமை அளிக்கும் பிரதமரின் உறுதிமொழியை […]

Categories
உலக செய்திகள்

இது போருக்கான சகாப்தம் கிடையாது…. புடினிடம் தெரிவித்த மோடி…. புகழ்ந்து தள்ளும் அமெரிக்கா…!!!

இது போருக்கான சகாப்தம் கிடையாது என்ற தகவலை ஜி-20 கூட்டறிக்கையில் இணைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி பங்காற்றிய உரை மிக முக்கியமானதாக அமைந்தது என்று அமெரிக்கா பாராட்டி இருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் பல மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷ்ய அதிபரை சந்தித்தபோது பிரதமர் நரேந்திர மோடி இது போருக்கான சகாப்தம் கிடையாது என்று தெரிவித்திருந்தார். மேலும் இந்தோனேசிய நாட்டில் சமீபத்தில் நடந்த […]

Categories
தேசிய செய்திகள்

“ஒரே நாள், ஒரே இடம்”…. நேருக்கு நேர் மோதும் பிரதமர் மோடி, ராகுல்…. பரபரப்பில் குஜராத் தேர்தல் களம்….!!!!!

குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் 5-ஆம் தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ், பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் பிரச்சாரத்தை தற்போது இருந்தே தீவிர படுத்தியுள்ளனர். இந்நிலையில் குஜராத் பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் நேரடியாக களத்தில் இறங்கி முற்றுமை பிரச்சாரம் செய்ய இருக்கிறார். அதன்படி நவம்பர் 19-ம் தேதி வால்சாத் நகரிலும், 20-ம் தேதி சௌராஷ்டிராவிலும், 21-ம் சுரேந்திரா நகர், பாரூச், நவ்சாரி போன்ற பகுதிகளிலும் […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் மோடிக்கு சல்யூட் அடித்த அமெரிக்க அதிபர்…. ஜி20 மாநாட்டில் நிகழ்ந்த சுவாரஸ்யம்…. !!!

ஜி-20 மாநாட்டின்  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடந்து வந்து சல்யூட் வைத்த நிலையில் இருக்கையில் அமர்ந்தபடியே பிரதமர் மோடி ஹாய் சொன்ன சுவாரசிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தோனேசியா நாட்டில் பாலி என்ற நகரம் அமைத்துள்ளது. இந்த நகரத்தில்  ஜி-20 உச்சி மாநாடு நேற்று தொடங்கியுள்ளது. இந்த உச்சி மாநாடு 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருந்து நேற்று முன்தினம் புறப்பட்டு பாலி நகருக்கு சென்றுள்ளார். இதேபோன்று, மாநாட்டில் பங்கேற்க […]

Categories
உலக செய்திகள்

ஜி-20 மாநாட்டில் இத்தாலி பிரதமரை சந்தித்த மோடி…. ட்விட்டரில் வெளியிட்ட தகவல்…!!!

நரேந்திர மோடி இத்தாலி நாட்டின் பிரதமரை ஜி 20 மாநாட்டில் சந்தித்து பேசியதாக ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். ஜி-20 உச்சி மாநாடானது இந்தோனேசிய நாட்டின் பாலி நகரத்தில் நடக்கிறது. இரு தினங்களாக  நடக்கும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள ஜி-20 யில் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளை சேர்ந்த தலைவர்கள் சென்றிருக்கிறார்கள். இந்நிலையில், ஜி-20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, இத்தாலி நாட்டின் பிரதமரான மெலோனியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். இது பற்றி நரேந்திர மோடி, தன் டுவிட்டர் பக்கத்தில் […]

Categories
உலக செய்திகள்

சல்யூட் செய்த ஜோ பைடன்…. ஹாய் சொன்ன மோடி… வைரலாகும் புகைப்படம்…!!!

இந்தோனேசிய நாட்டில் நடக்கும் ஜி20 மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு சல்யூட் அடித்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்தோனேசிய நாட்டின் பாலி நகரத்தில் ஜி 20 உச்சி மாநாடு நடக்கிறது. நேற்று தொடங்கிய இந்த மாநாட்டில் கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜெர்மனி உட்பட ஜி 20 அமைப்பை சேர்ந்த நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டிற்கு வருகை தந்திருந்த தலைவர்களை இந்தோனேசிய நாட்டின் ஜனாதிபதி வரவேற்றார். இந்நிலையில், இரண்டாம் […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் மோடியை சந்தித்த ஜோ பைடன்….. முக்கிய பேச்சுவார்த்தை…!!!

இந்தோனேசியாவில் நடக்கும் ஜி-20 மாநாட்டிற்கு சென்ற அமெரிக்கா ஜனாதிபதி இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார். இந்தோனேசியா நாட்டின் பாலி நகரத்தில் ஜி-20 உச்சி மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்க அந்நாட்டிற்கு சென்ற அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்திருக்கிறார். இது பற்றி வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளராக இருக்கும் அரிந்தம் பாக்சி தெரிவித்ததாவது, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரதமர் மோடி இருவரும் இரண்டு […]

Categories
உலக செய்திகள்

ஜி-20 மாநாடு நடைபெறும் ஓட்டலுக்கு…. பிரதமர் மோடி வருகை….. பிரபல நாட்டு அதிபர் வரவேற்பு….!!!!

ஜி-20 மாநாடு நடைபெறும் பாலி நகரிலுள்ள அபூர்வா கெம்பிஸ்னிகி ஓட்டலுக்கு வருகை தந்த பிரதமர் மோடியை இந்தோனேசிய அதிபர்  வரவேற்றார். இந்தோனேசியா நாட்டில் பாலி என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில்  ஜி-20 உச்சி மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருந்து நேற்று புறப்பட்டு பாலி நகருக்கு சென்றுள்ளார். இந்த மாநாட்டில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம், சுகாதாரம் போன்ற மூன்று முக்கிய அமர்வுகளில் […]

Categories
உலக செய்திகள்

உலகின் பொருளாதார வளர்ச்சிக்கு…. இந்தியாவின் பங்கு உண்டு…. அதிர வைத்த பிரதமர் மோடியின் பேச்சு….!!!!

கொரோனா பேரிடருக்கு பின் புதிய உலக ஒழுங்கை உருவாக்கும் பொறுப்பு நம் தோள்களிலுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தோனேசியா நாட்டில் பாலி என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில்  ஜி-20 உச்சி மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருந்து நேற்று புறப்பட்டு பாலி நகருக்கு சென்றுள்ளார். இந்த மாநாட்டில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம், சுகாதாரம் போன்ற மூன்று முக்கிய அமர்வுகளில் பிரதமர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரசித்தி பெற்ற மஞ்சுநாதர் திருக்கோவில்…. நண்பர்களுடன் சென்று சாமி தரிசனம் செய்த பிரபல நடிகர்….!!!!!

கர்நாடக மாநிலத்திலுள்ள மஞ்சுநாதர் கோவில் சாமி தரிசனம் செய்துள்ளார் நடிகர் விஷால். தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் நடிகர் விஷால். இவர் கர்நாடக மாநிலத்திலுள்ள மங்களூர் அருகே மஞ்சுநாதர் திருக்கோவிலுக்கு தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். பின்னர் சுவாமி தரிசனம் செய்ததுடன் யானையிடம் ஆசிர்வாதம் வாங்குவது, கோவில் குளத்திலுள்ள மீன்களுக்கு உணவளித்தது போன்ற விஷயங்களை செய்துள்ளார். இதனை தொடர்ந்து 11 ஏழைகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் விரைவில் காதல் திருமணம் செய்து கொள்வேன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நேற்று பிரதமர், இன்று அமித்ஷா”…. பாஜக போட்ட பக்கா பிளான்…. தமிழகத்தில் விரைவில் மலரும் தாமரை….!!!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். நேற்று பிரதமர் மோடி தமிழக வந்த நிலையில் நாளைய தினம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வருகிறார். இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என்று கேட்டால் பாஜகவின் உச்சபட்ச அதிகாரத்தில் இருக்கும் 2 முக்கிய புள்ளிகள் அடுத்தடுத்து 2 நாட்களில் தமிழகம் வருவது தான் தற்போது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதாவது பாஜக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே சிக்னலில் தீர்ப்பளித்த பிரதமர் மோடி…. தீர்ந்தது அதிமுக பஞ்சாயத்து?…. இனி எல்லாமே இபிஎஸ் கையில் தான்….!!!!!

அதிமுக கட்சியில் உட்க்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு வெளிப்படவையாகவே கடுமையாக மோதிக் கொள்கிறார்கள். பெரும்பாலான நிர்வாகிகள் இபிஎஸ் வசம் இருப்பதால் அவரை கட்சியின் நிர்வாகிகள் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தான்தான் என்று கூறும் ஓபிஎஸ், இபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளார். தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் இறுதி முடிவை பொறுத்துதான் அதிமுக யாருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

திண்டுக்கல்லில் அளிக்கப்பட்ட வரவேற்பால் அகமகிழ்ந்தேன்…. பிரதமர் மோடி தமிழில் ட்விட்..!!

பிரதமர் மோடி திண்டுக்கல் மக்களுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி காந்திகிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல்லுக்கு வருகை தந்தார். அங்கு பிரதமர் மோடியை, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இணையமைச்சர் டாக்டர். எல்.முருகன் ஆகியோர் வரவேற்றனர். அதனைத்தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம பல்கலைக்கழகம் செல்லும் வழியில் காரில் சென்றபோது மக்களை பார்த்து உற்சாகத்துடன் கையசைத்தார் பிரதமர் மோடி. பிரதமர் மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். […]

Categories
அரசியல்

“வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் பாஜக”…. இமாச்சல பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உரை…..!!!!

இமாச்சல பிரதேசத்தில் அடுத்த 25 ஆண்டுகளில் மாநிலத்துடைய வளர்ச்சியின் தலைவிதியை தீர்மானிக்கும் இந்த சட்டமன்ற தேர்தல் சிறப்பு வாய்ந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இமாச்சலப் பிரதேசத்தில் பாஜகவை ஆட்சியில் தக்கவைக்க மக்கள் முடிவு செய்துள்ளதாகவும் மலைப்பகுதியில் விரைவான முன்னேற்றமும் நிலையான ஆட்சியும் அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார். மண்டி மாவட்டத்திலுள்ள சுந்தர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ” நவம்பர் 12-ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

இமாச்சலபிரதேசம் தேர்தல் பிரச்சார கூட்டம்: திடீரென வந்த ஆம்புலன்ஸ்…. டக்குன்னு பிரதமர் மோடி செய்த செயல்…. பாராட்டும் மக்கள்…..!!!!!

இமாச்சலபிரதேசத்தில் வருகிற 12-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலானது நடைபெற இருக்கிறது. அங்கு ஆளும் பாஜக மற்றும் காங்கிரசுக்கு இடையில் கடும் போட்டி ஏற்படுகிறது. இந்த இரு கட்சிகளுக்கும் இடையில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்திருக்கிறது. இந்நிலையில் தேர்தல் பரப்புரை நேற்றுடன் முடிவடைந்தது இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் நேற்று இறுதிகட்ட பரப்புரைகளில் ஈடுபட்டனர். இதனை முன்னிட்டு இமாச்சலபிரதேசத்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க ஹெலிகாப்டர் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி அங்கு வந்தடைந்தார். இதையடுத்து பொதுக் கூட்டம் நடைபெறக்கூடிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கிரீன் சிக்னல் கொடுத்த பிரதமர்… ஓபிஎஸ் தரப்புக்கு அடுத்தடுத்த ஜாக்பாட்…. தொடர் ஏமாற்றத்தால் கலக்கத்தில் இபிஎஸ்….!!!!!

பிரதமர் நரேந்திர மோடி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக வருகிற 11-ம் தேதி தமிழகம் வருகிறார். தமிழகத்திற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியை ஓ. பன்னீர்செல்வம் சந்திக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. பிரதமரை சந்திப்பதற்கு ஓபிஎஸ் நேரம் கேட்கப்பட்டதாகவும் அதற்கு பிரதமரும் நேரம் ஒதுக்கியுள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனை ஆரம்பித்ததில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

G20 தலைவர் பதவியை ஏற்கபோகும் இந்தியா…. லோகோ, கருப்பொருள், இணையத்தை வெளியிட்ட பிரதமர் மோடி…..!!!!

G20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்க இருக்கிறது. வருகிற டிசம்பர் 1ஆம் தேதி முதல் அடுத்த வருடம் நவம்பர் 30ஆம் தேதி வரை இந்தியா தலைமை பொறுப்பில் இருக்கும். இந்த நிலையில் இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்துக்கான லோகோ, கருப் பொருள் மற்றும் இணையத்தை பிரதமர் நரேந்திரமோடி நேற்று வெளியிட்டார். அப்போது மோடி பேசியதாவது, “இந்தியாவின் G20 அமைப்பிற்கு இந்தியா தலைமை பதவியேற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் நாட்டுமக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். […]

Categories

Tech |