Categories
தேசிய செய்திகள்

சோனியா காந்தியின் தாயார் காலமானார்….. பிரதமர் மோடி இரங்கல்…!!!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ, இத்தாலியில் உள்ள தனது வீட்டில் காலமானார். இத்தகவலை காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. சனிக்கிழமை அவர் காலமானதாகவும், நேற்று இறுதிச்சடங்கு நடைபெற்றதாகவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். முதுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தாயாரை பார்ப்பதற்காக சோனியா காந்தி கடந்த 23ம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். அவருடன் மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோரும் சென்றனர். இது குறித்து பிரதமர் […]

Categories
தேசிய செய்திகள்

கார் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு…. பிரதமர் மோடி நிதி உதவி அறிவிப்பு….!!!!

காஷ்மீர்கிஷ்த்வார் மாவட்டத்தில் சிங்காம் எனும் இடத்திலிருந்து சாட்ரூ என்ற கிராமத்துக்கு நேற்று சில பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். இதையடுத்து போண்டா என்ற கிராமத்துக்கு அருகில் மலைச் சாலையில் அந்த கார் சென்றபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்துக்குள் பாய்ந்தது. இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் ராணுவத்தினர் மற்றும் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இவ்விபத்தில் சிக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“இவர்களால் எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண முடியும்”…. பிரதமர் மோடி அதிரடி பேச்சு….!!!!

கோவை மாவட்டத்தை அடுத்த கிணத்துக் கடவு ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில் மத்திய அரசின் சார்பாக ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் எனும் தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான 36 மணிநேர மென் பொருள் வடிவமைக்கும் போட்டியானது நேற்று துவங்கியது. இவற்றில் மாற்றுத்திறனாளிகள் அன்றாடம் சந்திக்கும் 6 பிரச்சனைகள், மத்திய அரசின் சமூக நீதித்துறையால் பட்டியலிடப்பட்டு அவற்றுக்கான மென் பொருள் தீர்வு வழங்க மாணவர் குழுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இப்போட்டி தொடக்கவிழா, புது டெல்லியிலிருந்து காணொலி வாயிலாக நடத்தப்பட்டது. இதில் மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

2024 இல் பிரதமர் மோடிக்கு தோல்வி…. சுப்பிரமணியன் சுவாமி ட்விஸ்ட்….!!!!

ராமர் பாலத்திற்கு ஆதரவாக பிராமண பத்திரம் தாக்கல் செய்யவில்லை என்றால் 2024 ஆம் ஆண்டு மோடி மீண்டும் பிரதமராக மாட்டார் என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியசுவாமி தெரிவித்துள்ளார். ராமர் பாலத்தை இந்தியாவின் பண்டைய பாரம்பரிய நினைவு சின்னமாக அறிவிக்கும்படி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு விசாரணையில், ராம் சேது நினைவுச் சின்னம்மா ஆம் அல்லது இல்லை என பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

9 வகை தானியங்கள்….. பிரதமர் மோடிக்கு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….!!!!

பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி பொதிகை தமிழ்நாடு இல்லத்திலிருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். மாலை புதுடெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பின்போது, தமிழகத்தின் பாரம்பரிய 9 தானிய வகைகளை நினைவுப் பரிசாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாட்டின் தானியங்கள் என்ற பெயரில் மாப்பிளை சம்பா, கருப்பு கவுனி, குள்ளக்காரி, சீரக சம்பா, கேழ்வரகு, கம்பு, சாமை, தினை, வரகு உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

விரைவில் 18 மாத நிலுவைத்தொகை….? அரசு ஊழியர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்….!!!!

விரைவில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு  18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை தொடர்பான அறிவிப்பு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட காலமாக காத்திருக்கும் இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று பிரதமரை அரசு ஊழியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்கான குறிப்பாணையையும் ஓய்வூதியர் அமைப்பு சமர்ப்பணம் செய்துள்ளது. இதுகுறித்து பிரதமர் விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது நடந்தால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கணக்கிற்கு பெரிய தொகை டெபாசிட் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று சந்திப்பு….. எதற்காக தெரியுமா….????

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார். டெல்லி செல்லும் முதலமைச்சர் நாளை பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். அப்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது தமிழகத்துக்கு வரவேண்டிய நிலுவைத் தொகைகள், ஜிஎஸ்டி இழப்பீட்டை நீட்டிப்பது, மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்தம், நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் இருக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாகவும், தமிழகத்துக்கு தேவையான […]

Categories
தேசிய செய்திகள்

நலத்திட்டங்களை இலவச திட்டங்கள் என்று எப்படி சொல்லலாம்…. ராஜஸ்தான் முதல்வர் திடீர் அதிரடி….!!!!

ஏழை மக்கள் மற்றும் முதியவர்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கப்படுகிறது என முதல்வர் கூறியுள்ளார். இந்திய பிரதமர் மோடி மாநில அரசுகள் செயல்படுத்தும் இலவச திட்டங்களை அண்மையில் விமர்சித்து இருந்தார். இந்த இலவச திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது எனவும் கூறினார். இது தொடர்பாக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஏழைகள் மற்றும் முதியவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் நிதி உதவிகளை இலவச திட்டம் என்று கூற முடியாது. வளர்ந்த நாடுகளில் […]

Categories
தேசிய செய்திகள்

75வது சுதந்திரதினம்: மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை…!!!!

இந்தியாவின் 75வது சுதந்திர தினம், சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சுதந்திர தினத்தையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்ற செல்வதற்கு முன் டெல்லி ராஜ்கட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தேசியக்கொடி வடிவிலான தலைப்பாகை அணிந்து பிரதமர் மோடி மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார்.  இதனை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. முன்னதாக டெல்லி செங்கோட்டைக்கு வந்த […]

Categories
Uncategorized

75வது சுதந்திர தினம்…. பிரதமர் மோடி அறிவிப்பு….. உடனே உங்க போட்டோவை ஷேர் பண்ணுங்க….!!!!

நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 75வது சுதந்திர தின திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதற்கு இணங்க பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள twitter பதிவில், “இல்லம் தோறும் மூவர்ணக் கொடி இயக்கத்திற்கு கிடைத்த அற்புதமான பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இந்த இயக்கத்தில் பல்வேறு தரப்பு மக்களின் சாதனை பங்கேற்பை பார்க்கிறோம். விடுதலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இதை செய்யுங்க” மக்களே கொடி ஏற்றுவாங்க…. கவிஞர் வைரமுத்து கருத்து….!!!!

நாட்டின் 75வது சுதந்திர தினம் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக அசாதி கா அம்ரித் மோட்சாவ் என்ற பெயரில் மத்திய அரசு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. அந்த நிகழ்ச்சிகளில் ஹர் ஹார் ட்ரையாங்கா (ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி) என்ற நிகழ்ச்சிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றுமாறு பிரதமர் மோடி […]

Categories
உலக செய்திகள்

அதிகாரப் போட்டியினால் நிலவும் போர் பதற்றம்…. பிரதமர் மோடி தலைமையில் புதிய குழு…. மெக்சிகோ அதிபர் பரிந்துரை….!!!!

அதிகார போட்டியின் காரணமாக நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவுவதாக அதிபர் லோபஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே தற்போது போர் நடைபெற்று வரும் நிலையில், புதிதாக சீனா மற்றும் இந்திய எல்லையிலும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இப்படி நாடுகளுக் கிடையே போர் பதற்றம் அதிகரித்ததற்கு காரணம் நாடுகளுக்கிடையே எழும் அதிகார போட்டி தான் என்று மெக்சிகோ அதிபர் லோபஸ் கூறியுள்ளார். இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள அதிபர் லோபஸ், ஐநா சபையினால் கூட […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி சொத்து மதிப்பு எவ்வளவு….? அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி மொத்த சொத்து மதிப்பு 2.23 கோடி ரூபாய் பெரும்பாலான சொத்து வங்கி டெபாசிட் தொகையாக உள்ளது. இதுபோக அசையா சொத்துக்கள் ஏதுமில்லை. குஜராத் தலைநகர் காந்தி நகரில் இருந்த தன்னுடைய நிலத்தை பிரதமர் மோடி நன்கொடையாக வழங்கி விட்டதாக கூறப்படுகிறது. பங்குகள், மியூச்சுவல், ஃபண்ட் பத்திரங்கள் போன்ற சொத்துக்களை முதலீடு செய்யவில்லை. 2022 மார்ச் 31 வரை பிரதமர் மோடியின் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஆகஸ்ட் 15 காலை 11 மணிக்கு….. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!!

சுதந்திர தினத்தன்று காலை 11 மணியளவில் கிராமசபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டம் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கிராம சபை கூட்டம் நடைபெற உள்ள இடம், நேரம் ஆகியவை மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். உறுப்பினர்கள் வருகையை உறுதி செய்து கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம சபை கூட்டம் குறித்த அறிக்கையை வரும் 22ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“உள்ளூர் பொருட்களை பயன்படுத்த ஊக்குவிக்கவும்”….. பிரதமர் மோடி வேண்டுகோள்….!!!!

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைந்துள்ள கலாச்சார மையத்தின் நிதி ஆயோக்கின் ஏழாவது நிர்வாக கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பயிர்கள் பயிரிடுதல், பருப்புகள் மற்றும் இதர விவசாய பொருட்கள் உற்பத்தியில் தன்னிறைவு அடைதல் உள்ளிட்ட பல்வேறு விவாதங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்த கூட்டத்தை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் புறக்கணித்தார். இதை குறித்து அவர் கூறியதாவது: “பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை ஏற்றம், டாலருக்கு சமமான இந்திய ரூபாயின் […]

Categories
தேசிய செய்திகள்

“பிரதமரின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்”….. ராகுல்காந்தி அதிரடி….!!!!

பிரதமரின் மிரட்டலுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாராளுமன்றத்தின் வெளியே செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறியதாவது: “நரேந்திர மோடியைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை. பரவாயில்லை.. அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். நாட்டையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கவும், நாட்டில் நல்லிணக்கத்தைப் பேணவும் நான் தொடர்ந்து பாடுபடுவேன். அவர்கள் என்ன செய்தாலும் எனது பணியைத் தொடர்ந்து செய்வேன். எங்கள் மீது சில அழுத்தம் கொடுப்பதன் மூலம் எங்களை அமைதிப்படுத்த முடியும் என்று பாஜக அரசு […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியின் ஆங்கில கவிதை புத்தகம்…. எப்போது வெளியீடு தெரியுமா?….. வெளியான தகவல்….!!!!

இந்திய பிரதமர் மோடி குஜராத் மொழியில் எழுதிய லெட்டர்ஸ் டு செல்ஃப் என்ற புத்தகத்தின் ஆங்கில பதிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்த்தில் உள்ள கவிதைகளை குஜராத் மொழியில் பல ஆண்டுகளாக எழுதி வந்தார். இந்தப் புத்தகம் தொகுக்கப்பட்டு ஆன்க் தன்யாச்சே என்ற பெயரில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியானது. இதனை திரைப்பட பத்திரிகையாளர் பாவனா சோமயா ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். பிரகாஷ் புத்தக நிறுவனம் இந்த ஆங்கில பதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

“இலவசம்” இந்திய அரசியலின் மோசமான கோளாறு….. பிரதமர் கருத்து….!!!!

பல்வேறு மாநிலங்களுக்கு மின்வாரியங்களுக்கான நிலுவைத் தொகை ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது. மின்சாரம் உற்பத்தியில் இருந்து வீடு வீடாக விநியோகம் செய்வது வரையிலான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான நிறுவனங்கள் சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் நிலுவைத் தொகை சிக்கலில் சிக்கியுள்ளன. மின்சாரத் தொகுப்புக்கு பல்வேறு மாநிலங்கள் ஒரு லட்சம் கோடிக்கு மேல் பாக்கி வைத்திருக்கும் செய்தியை அறிந்தால் மக்கள் ஆச்சரியம் அடைவார்கள். சாமானிய மக்கள் மின்சார கட்டணம் செலுத்தும் போதும்கூட மாநிலங்கள் செலுத்தாமல் இருப்பது வியப்பாக […]

Categories
தேசிய செய்திகள்

மின்விநியோகம்: 60,000 கோடி ரூபாய்க்கு மேல் பாக்கி…. பிரதமர் மோடி தகவல்…!!!

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதில் எரிசக்தி மற்றும் மின் துறைகள் பெரும் பங்கு வகிக்க உள்ளது. பல்வேறு மாநிலங்களுக்கு மின்வாரியங்களுக்கான நிலுவைத் தொகை ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது. மின்சாரம் உற்பத்தியில் இருந்து வீடு வீடாக விநியோகம் செய்வது வரையிலான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான நிறுவனங்கள் சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் நிலுவைத் தொகை சிக்கலில் சிக்கியுள்ளன. இந்த பணத்தை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும். பல அரசு துறைகள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

“பிரதமர் மோடிக்கு வரவேற்பு” உங்கள் கைகளை என் கண்களில் ஒற்றிக்கொள்கிறேன்…. அண்ணாமலையின் நெகிழ்ச்சி பதிவு….!!!

பிரதமருக்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்கு அக்கட்சியின் மாநில தலைவர்  நன்றி கூறியுள்ளார். பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் விழாக்காலம் போல் காட்சி அளிக்கிறது. நம்முடைய பாரத பிரதமர் தமிழர்களின் பாரம்பரிய உடையில் வந்து தமிழகத்தின் பெருமை மற்றும் தமிழ் மக்களின் அன்பை குறிப்பிடும் போதெல்லாம் தமிழக மக்கள் பாரத பிரதமரை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றனர். இதனையடுத்து 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை […]

Categories
மாநில செய்திகள்

“ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டி” தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம்….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிபியாட் போட்டி சென்னையில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு தற்போது ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் சென்னையில் நடைபெற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்டதற்கும், இந்த போட்டியை சென்னையில் நடத்துவதற்கு உதவி செய்ததற்கும் பிரதமராகிய உங்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் […]

Categories
மாநில செய்திகள்

மறக்க முடியாது….. சென்னை பயணம் குறித்து…. பிரதமர் மோடி நெகிழ்ச்சி ட்விட்….!!!!

இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தார்.  சென்னை வந்த பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தார். இன்று காலை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 44-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். விழாவுக்குப் பிறகு பயணத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்னை விமான நிலையம் சென்றடைந்தார். அப்போது பிரதமரை வழியனுப்புவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். பின்னர், பயணத்தை முடித்துக் […]

Categories
மாநில செய்திகள்

“சென்னை பயணம் மறக்க முடியாததாக அமைந்தது”……. பிரதமர் மோடி நெகிழ்ச்சி டுவீட்……!!!!!

இந்திய பிரதமர் மோடி 2 நாள் பயணமாக சென்னை வந்திருந்தார். அவர் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அதன்பிறகு நிகழ்ச்சி முடிந்ததும் கிண்டி கவர்னர் மாளிகைக்கு சென்று தங்கினார். அதனை தொடர்ந்து தமிழ்நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவில் இன்று பிரதமர் மோடி பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பல்கலைகழக அளவில் பல்வேறு துறைகளின் ஆராய்ச்சி படிப்புகளில் முதலிடம் பெற்ற 69 மாணவ- […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : செஸ் ஒலிம்பியாட் போட்டி…… நிகழ்ச்சிக்கு வந்தடைந்தார் பிரதமர் மோடி….!!!!!

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் தற்போது தொடங்கியுள்ளது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம், பூந்தேரி, கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போஸ்பாயிண்ட் ரிசர்ட் என்கின்ற ஐந்து நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெற்று வருகிறது. இதற்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று முதல் அடுத்த மாதம் 10ம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளது. 187 நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி….. வரவேற்ற அமைச்சர்கள்….!!!!

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. இந்த போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடியின் தனி விமானம் இன்று  மாலை, 4.45  மணிக்கு சென்னைக்கு வருவதாக இருந்தது. அந்த விமானம் 25 […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி சென்னை வருகை…. பலூன்களை பறக்க விட தடை….. அரசு அதிரடி உத்தரவு…..!!!!

சென்னை மாமல்லபுரத்தில் முதல்முறையாக 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டி ஜூலை 28ஆம் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு பிரதமர் மோடி சென்னை வரும் நிலையில் 144 ஊரடங்கு சட்டப்பிரிவின் கீழ் பலூன்களை பறக்க விட தடை விதிக்கப்படுகிறது. 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நாளை சென்னை வருவதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படையினர் சென்னை விமான நிலையம், நேரு […]

Categories
மாநில செய்திகள்

இந்திய மாணவர்கள் எதிர்காலம்….. பிரதமர் மோடிக்கு….. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்….!!!!

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய இந்திய மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களின் எதிர்காலம் குறித்தும் அவர்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க கோரியும், பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். மக்களவையில் சமீபத்தில் அளிக்கப்பட்ட பதிலால் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கவலையை சுட்டிக் காட்டிய அவர் இந்த கடிதத்தை எழுதியுள்ளார். இது தொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள்

“முருகப்பெருமான் அருள் எப்போதும் நமக்கு கிடைக்க பிரார்த்திப்போம்”…. பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து….!!!!

ஆடி கிருத்திகை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆடி மாதம் கடந்த 17ஆம் தேதி பிறந்தது. ஆடி கிருத்திகை இன்று கொண்டாடப்படுகிறது. ஆடி கிருத்திகை என்பது தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு உகந்த தினங்களில் ஒன்று. இந்த தினத்தில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் துன்பங்கள் நீங்கி செல்வம் பெருகும் என்பது அனைவரின் நம்பிக்கை. இதனை ஒட்டி முருகப்பெருமான் ஆலயங்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றன. திருத்தணி முருகன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 13 – 15ம் தேதி வரை….. நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவிப்பு…..!!!!!

ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை வீடுதோறும் மூவர்ண கொடியை பறக்கவிட வேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் 75வது சுதந்திர தினம் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக அசாதி கா அம்ரித் மோட்சாவ் என்ற பெயரில் மத்திய அரசு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. அந்த நிகழ்ச்சிகளில் ஹர் ஹார் ட்ரையாங்கா (ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி) என்ற […]

Categories
மாநில செய்திகள்

பிரதமரை சந்திக்க ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் திட்டம்…. யாருக்கு முதலில் வாய்ப்பு கிடைக்கும்…!!!

பிரதமரை சந்திப்பதற்கு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையான நிர்வாகிகளின் ஆதரவோடு இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பதவியேற்ற பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை அனைத்து பதவிகளில் இருந்து நீக்கியதோடு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கினார். ஆனால் ஓபிஎஸ் தான்தான் ஒருங்கிணைப்பாளர் என்றும், என்னை கட்சியிலிருந்து நீக்குவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது எனவும் கூறி […]

Categories
தேசிய செய்திகள்

அருணாச்சலப்பிரதேசம்: பாரதியார் பாடலை அருமையாக பாடிய சகோதரிகள்…. பிரதமர் மோடி பாராட்டு…..!!!!

பாருக்குள்ளே நல்ல நாடு என்ற பாரதியார் பாடலை அருணாச்சலப்பிரதேச சகோதரிகள் பாடியதைக் கேட்டு நெகிழ்ச்சியடைந்த பிரதமர் நரேந்திரேமோடி அவர்களுக்கு தமிழிலேயே பாராட்டு தெரிவித்துள்ளார்.  அருணாச்சலப்பிரதேச மாநிலத்திலுள்ள ஒரு தொலைக்காட்சியில் கவிஞர் சுப்ரமணிய பாரதியாரின் “பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு” எனும் சுதந்திரப் போராட்ட பாடலை அம்மாநிலத்தின் சகோதரிகள் தமிழில் பாடி அசத்தி இருக்கின்றனர். இதனையடுத்து இந்த சுதந்திரப் போராட்ட பாடலை பாடிய அந்த சகோதரிகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தமிழில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க….. சென்னை வருகிறார் பிரதமர் மோடி….!!!!

மாமல்லபுரத்தில் நடைபெறும் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியை தொடங்கி வைப்பதற்காக வரும் 28ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார். மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிறது. 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி வரை நடைபெறுகின்றது. இதற்காக பூஞ்சேரியில் உள்ள போர் பாயிண்ட் அரங்கத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. […]

Categories
சினிமா

இந்திய பிரதமருடன் நடிகை ரோஜா எடுத்த செல்பி…. வெளியான புகைப்படம்…. வைரல்…..!!!!

ஆந்திரப்பிரதேசம் மாநிலம் பீமாவரத்தில் விடுதலைப் போராட்டவீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திரமோடி 30 அடி உயர வெண்கல சிலையை திறந்து வைத்தார். இதையடுத்து பல அரசு திட்டங்களையும் துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் முடிவில் பிரதமர் புறப்பட்டு சென்றார். அப்போது நடிகையும், ஆந்திரப்பிரதேசம் மந்திரியும் ஆன ரோஜா, பிரதமருடன் நின்று செல்பி எடுத்துக்கொண்டார். இந்நிலையில் ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி உடன் இருந்தார். அத்துடன் இந்நிகழ்ச்சியில் நடிகர் சிரஞ்சீவியும் பங்கேற்றார். இவருடனும் […]

Categories
உலக செய்திகள்

“இந்தியாவின் உண்மையான நண்பர்” பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவு…. நன்றி தெரிவித்த நப்தாலி பென்னட்….!!!

பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் முன்னாள் அதிபர் நன்றி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் நாட்டில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு நவம்பர் 1-ம் தேதி பொது தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த 4 வருடங்களில் 5-வது முறையாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டின் அதிபர் நப்தாலி பென்னட் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார். இந்த நாட்டில் தற்போது யாயிர் லாபிட் அதிபராக இருக்கிறார். மேலும் இந்திய பிரதமர் மோடி இந்தியாவின் உண்மையான நண்பராக […]

Categories
உலக செய்திகள்

“ஜி 7 மாநாடு” ஜெர்மனிக்கு சென்ற பிரதமர்….. கைக்குலுக்கி வரவேற்ற அதிபர் ஒலாஃப்….!!!

ஜெர்மனியிலுள்ள எல்மாவ் நகரில் ஜி 7 மாநாடு நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த மாநாட்டை 2 நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த ஜி 7 மாநாட்டில் 7 நாடுகளின் அதிபர்கள் கலந்து கொண்டனர். அதாவது ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான், கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 7 நாடுகளின் அதிபர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனிக்கு சென்றுள்ளார். இவரை ஜெர்மனி அதிபர் ஒலாஃப் ஸ்காட்ஸ் வரவேற்றார்.

Categories
தேசிய செய்திகள்

ஜி-7 மாநாடு: இதையெல்லாம் பேச இருக்கும் பிரதமர் மோடி…. வெளியான தகவல்….!!!!

ஜெர்மனியில் இன்று நடைபெறும் ஜி7 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பல விவகாரங்கள் தொடர்பாக பேச இருக்கிறார். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகள் கலந்துகொண்டுள்ள ஜி7 மாநாடு நேற்று தொடங்கியது. இவற்றில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் உட்பட 7 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். அந்த மாநாட்டில் பல அமர்வுகளாக விவாதம் நடைபெற்றது. இதில் உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் முக்கியமான இடம் பிடித்தது. இதனிடையில் 7 நாடுகளின் தலைவர்களும் […]

Categories
அரசியல்

செல்வாக்கை நிரூபித்த ஓபிஎஸ்…. மிரண்டு போய் நிற்கும் இபிஎஸ்….!!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ளது. அதிமுகவில் பெரும் பரபரப்பு நிலவி வரும் சூழலில் நேற்று அதிமுக பொதுக்குழு கூடியது. இந்த பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் 11ஆம் தேதி மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து பொதுக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது. இந்நிலையில் பொதுக்குழுவை புறக்கணித்துவிட்டு டெல்லி சென்ற ஓபிஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது. முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், நேற்று […]

Categories
அரசியல்

சர்வதேச யோகா தினம்: இன்று மைசூரில்….. “15,000 பேருடன் பிரதமர் மோடி யோகா பயிற்சி”…..!!!

8வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கர்நாடக மாநிலத்தில் இன்று 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்குபெறும் யோகா நிகழ்ச்சியில், பிரதமர் மோடியும் பங்கேற்க உள்ளார். மனித நேயத்துக்கு யோகா என்ற கருப்பொருளில் இந்த ஆண்டில் சர்வதேச யோகா தினம் பல புதுமைகளை படைக்க உள்ளது. கார்டியன் ரிங் எனப்படும் சுற்றுவட்ட முறையிலான யோகா நடைபெற உள்ளது. கார்டியன் ரிங் என்பது உலகிலுள்ள 16 வெவ்வேறு கால மண்டலங்களில் சூரிய உதயத்தை கணக்கில்கொண்டு சுற்றுவட்ட முறையில் யோகா செய்முறை […]

Categories
அரசியல்

சர்வதேச யோகா தினம் 2022…. உலக அளவில் இந்தியாவின் புகழை பரப்ப மாபெரும் நிகழ்ச்சி…. பிரதமர் மோடி…..!!!!

சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஐநா சபையால் உலகம் முழுவதும் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. அன்றைய நாளில் ஏராளமான பொதுமக்களுடன் இணைந்து யோகாசன பயிற்சி மேற்கொள்வதை ஒவ்வொரு வருடமும் பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக யோகாசன நிகழ்ச்சிகள் எதுவும் […]

Categories
உலக செய்திகள்

“மெய்நிகா் உச்சிமாநாடு”…. இந்திய பிரதமர் பங்கேற்பு….. வெளியான தகவல்…..!!!!

இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஐக்கியஅரபு எமிரேட்ஸ் போன்ற 4 நாடுகள், ஐ2-யு2 எனும் நாற்கர பொருளாதார பேச்சுவாா்த்தை அமைப்பில் இணைந்து இயங்கி வருகிறது. இந்த அமைப்பினுடைய மெய் நிகா் உச்சிமாநாடானது வரும் ஜூலை மாதம் நடைபெற இருக்கிறது. இந்த மெய் நிகர் உச்சிமாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி, அமொிக்க அதிபா் ஜோபைடன், இஸ்ரேல் பிரதமர் நெப்தாலி பென்னட் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் போன்றோர் கலந்துகொள்ள இருப்பதாக […]

Categories
அரசியல்

“குஜராத் மாடல்” அதானியின் ஏஜெண்டாக பிரதமர் மோடி இருக்கிறார்….. டான் அசோக் பகீர் தகவல்கள்….!!!

தி.மு.க இளைஞரணி சார்பில் கருத்தரங்கம் மற்றும் திராவிட மாடல் பயிற்சி பாசறை நடைபெற்றுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரியில் நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் கலைஞர் 99-வது கருத்தரங்கம் மற்றும் திராவிட மாடல் பயிற்சி பாசறை நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக திரைப்பட எழுத்தாளர் டான் அசோக் கலந்து கொண்டார். அவர் கூட்டத்தில் பேசியதாவது, திராவிட மாடல் என்று தி.மு.க சொல்லுவது  புதிதாக இருந்தாலும் கூட, கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை…. சற்றுமுன் பிரதமர் மோடி அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை மத்திய அரசு பணிகளில் சேர்க்கும்படி பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தொடர்பாக ஆய்வு நடத்திய பிறகு பேசிய பிரதமர், இது நிதானமாக செய்யக்கூடிய வேலை இல்லை. உடனடியாக இதற்கான பணிகளில் ஈடுபடும் படி அனைத்துத் துறை அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக குரோனா காரணமாக பல்வேறு இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வரும் நிலையில் பிரதமர் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!… இந்தியாவில் புதிய நாணயங்களை அறிமுகம் செய்த பிரதமர்…. எதற்காக தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!!

புது வடிவிலான ரூபாய் 1, ரூபாய் 2, ரூபாய் 5, ரூபாய் 10 மற்றும் ரூபாய் 20 போன்ற சிறப்பு வரிசை நாணயங்களை பிரதமர் நரேந்திரமோடி இன்று வெளியிட்டு உள்ளார். இந்தநாணயங்களானது சிறப்பு வாய்ந்தவையாகும். ஏனென்றால் இந்த சிறப்பு வரிசை நாணயங்களை பார்வையற்றவர்களும் எளிதில் அடையாளம் காணமுடியும். இத்தகவலை பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருக்கிறது. மத்திய நிதி அமைச்சகத்தின் “ஐகானிக்” வாரக் கொண்டாட்டங்கள் இன்று டெல்லியிலுள்ள விக்யான் பவனில் காலை 10:30 மணிக்கு பிரதமரால் துவங்கி வைக்கப்பட்டது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

விரைவில் மோடி அரசின் அடுத்த அதிரடி….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இத்தகைய வலுவான பெரிய முடிவுகள் விரைவில் எடுக்கப்படும் என்றார். இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு சலுகைகள் ரத்து, கட்டாய கருத்தடை உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம்பெறலாம் என தெரிகின்றது. குடும்ப கட்டுப்பாடு மசோதா நாடாளுமன்றத்தில் இதுவரை சுமார் 35 முறை  தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ரூ 68 கோடி செலவில் கன்னியாகுமரி ரயில் நிலையம் மேம்பாட்டு பணி”… காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்த பிரதமர் மோடி…!!!

கன்னியாகுமரி ரயில்நிலையம் ரூ 68 கோடி செலவில் அதிநவீன முறையில் உலக தரத்துடன் மேம்படுத்தப்பட உள்ளது. நாட்டின் மிகப் பெரிய போக்குவரத்து ரயில் போக்குவரத்து. மக்கள் நீண்ட தூரம் பயணம் செய்வதற்கு அதிகமாக ரயில் போக்குவரத்தை தான் பயன்படுத்துகின்றனர். இதனால் ரயிலில் பயணம் செய்கின்ற பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் ரயில் நிலையங்களை உலகத் தரத்துடன் நவீனப்படுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி ரயில் நிலையங்களை பழமை மாறாமல் புதுப்பித்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர்…. பிரதமர் மோடி அறிவிப்பு…!!!!

ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், கே என் நேரு, பொன்முடி, ஆளுநர் ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடியை ஐஎன்எஸ் கடற்படை தளத்தில் முதல்வர் முக ஸ்டாலின் வரவேற்றார். இந்நிலையில்நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் இந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆளுநர் ரவி, மத்திய இணை அமைச்சர் வேல்முருகன் தமிழக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

FLASH NEWS: மேடையில் பிரதமர் மோடியை தெறிக்கவிட்ட CM ஸ்டாலின்….!!!!

ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், கே என் நேரு, பொன்முடி, ஆளுநர் ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடியை ஐஎன்எஸ் கடற்படை தளத்தில் முதல்வர் முக ஸ்டாலின் வரவேற்றார். இந்நிலையில்நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் இந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆளுநர் ரவி, மத்திய இணை அமைச்சர் வேல்முருகன் தமிழக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ரூ.760 கோடி செலவில்…. அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி…!!!!

ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், கே என் நேரு, பொன்முடி, ஆளுநர் ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடியை ஐஎன்எஸ் கடற்படை தளத்தில் முதல்வர் முக ஸ்டாலின் வரவேற்றார். இந்நிலையில்நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் இந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆளுநர் ரவி, மத்திய இணை அமைச்சர் வேல்முருகன் தமிழக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சென்னை வந்தார் பிரதமர் மோடி….. சற்றுமுன் வெளியான தகவல்….!!!!

ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், கே என் நேரு, பொன்முடி, ஆளுநர் ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் 35 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.  பின் பாஜக தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை….. திடீர் வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு…..!!!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வரவுள்ள நிலையில், டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு சேலத்தில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. சேலம் தலைமை தபால் நிலையம் நிலையத்தில் இருந்து, பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான கடிதம் சென்றுள்ளது. இது குறித்து மத்திய புலனாய்வுத்துறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சேலம் மாவட்டத்திலிருந்து ஏற்கனவே வெடிகுண்டு மிரட்டல் அனுப்பியவர்களின் விவரங்களை வைத்து சேலம் மாவட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், […]

Categories

Tech |