இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவசரமாக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். இலங்கையில் கடும் மோசமான நிலையில் இருக்கிறது. மக்களின் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிரடியாக அதிபரின் மாளிகைக்குள் நுழைந்து தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறார்கள். எனவே, மாளிகையில் இருந்து தப்பிய அதிபர் கோட்டபாய ராஜபக்சே கப்பலில் தப்பி ஓடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உடனடியாக அவசர கூட்டத்தை கூட்ட […]
Tag: பிரதமர் ரணில் விக்ரமசிங்கே
இலங்கையில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதால் ஐ.நா உணவு திட்ட இயக்குனர் அந்நாட்டிற்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் அதிபர் கோட்டபாய ராஜபக்ஷ செயற்கை உரங்களை தடை செய்தார். அதன்பிறகு அங்கு உணவு தானிய உற்பத்தி குறைந்துவிட்டது. டாலர் பற்றாக்குறை காரணமாக உணவு பொருட்களை இறக்குமதி செய்ய முடியவில்லை. எனவே நாட்டில் உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை உண்டாகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. ஐ.நாவிற்கான உலக உணவு திட்ட செயல் இயக்குனராக இருக்கும் டேவிட் […]
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே எரிபொருட்கள் வாங்குவதற்கு இந்திய நாட்டை தவிர வேறு எந்த நாடும் நிதியுதவி தருவதில்லை என்று கூறியிருக்கிறார். இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி பல்வேறு இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. மேலும் மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியதால் அதிபர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். அதைத்தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பொறுப்பேற்று பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் உலக நாடுகளிடம் நிதி உதவி அளிக்குமாறு கோரிக்கை […]
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்னும் ஆறு மாதங்களுக்குள் ஐந்து பில்லியன் டாலர்கள் நாட்டிற்கு தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார். இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால், அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. எனவே, மக்கள் உணவிற்காக திண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால், அந்நாட்டு மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து தீவிரமாக போராட்டம் நடத்தியதால் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். அதைத்தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பொறுப்பேற்றார். தற்போது அவர், பொருளாதாரத்தை மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். […]
இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சேவின் அதிகாரத்தை குறைப்பதற்கான மசோதா இழுபறியில் இருப்பதால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு பின்னடைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினார்கள். எனவே, 21 -ஆம் அரசியல் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான மசோதா மந்திரிசபையின் அனுமதிக்காக நேற்று வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதிபரின் பொதுஜன பெரமுனா கட்சியை சேர்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்த மசோதாவை ஏற்க மாட்டோம் எனவும் முதலில் அட்டார்னி ஜெனரல் அனுமதி […]