இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி அதிகரிப்பைகண்டித்து நாடு முழுதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதாவது அதிபர் கோந்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவிவிலக வேண்டுமென்று போராட்டக்காரர்கள், எதிர்கட்சியினர் வலியுறுத்தி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இடைக்கால அரசு அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் அதிபர் பதவியிலிருந்து விலகமாட்டேன் என கோத்தப யராஜபக்சே அறிவித்துவிட்டார். பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவியிலிருந்து விலகலாம் என சில நாட்களாக தகவல் வெளியானபடி இருந்தது. இந்தநிலையில் பிரதமர் பதவியை ராஜினாமா […]
Tag: பிரதமர்
டெல்லியில் வருகின்ற 30-ந்தேதி முதல்- மந்திரிகள் மற்றும் ஜகோர்ட்டு நீதிபதிகள் பங்கேற்கும் மாநாடு நடைபெறுகிறது. 6 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கின்றார்.இந்த மாநாட்டில் மாநில முதல்-மந்திரிகள் மற்றும் நீதிபதிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். மேலும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதல்- மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி வருகிற 29-ந்தேதி டெல்லி செல்கிறார். இந்நிலையில் இந்த பயணத்தின் போது அவர் பிரதமர் மோடியை தனியாக சந்தித்து […]
பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று லதா மங்கேஷ்கர் விருது வழங்கப்பட உள்ளது. பாரத ரத்னா விருது பெற்ற பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் பிப்ரவரி மாதம் தனது 92 வயதில் காலமானார். அவரது நினைவாக இந்தாண்டு முதல் “லதா தீனநாத் மங்கேஷ்கர் விருது” வழங்கப்படும் என தீனநாத் மங்கேஷ்கர் ஸ்மிருதி பிரதிஷ்தான் அறக்கட்டளை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த முதல் விருது தற்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்படுகிறது. நாட்டிற்கும் மக்களுக்கும் அவர் செய்துவரும் தன்னலமற்ற சேவையை பாராட்டி […]
இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடர்வதால், அரசுக்கு எதிரான போராட்டமும் நீடித்து வருகிறது. இந்த நெருக்கடிக்கு அரசின் கொள்கைகளே காரணம் எனக்கூறி அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவிவிலக வேண்டும் என எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் போராடி வருகின்றார்கள். இலங்கையின் ஆளும் கூட்டணியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் விலகிய 40-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள், அங்கு அனைத்துக்கட்சிகளும் இணைந்த இடைக்கால அரசு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றனர். ஆனால் இந்த யோசனையை பிரதமர் […]
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவேல் மேக்ரோன் வெற்றியடைந்தால் தான் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் கூறியிருக்கிறார். பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் இம்மானுவேல் மேக்ரோனிற்கு பதில், புதிய நபர்கள் பதவிக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்களில் நானும் ஒருவன் என்று தெரிவித்திருக்கிறார். எனவே மீண்டும் அவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றால், நான் என் பதவியிலிருந்து விலகி விடுவேன் என்று கூறியிருக்கிறார். அதிபர் தேர்தலில் களமிறங்கியுள்ள இமானுவல் மேக்ரான், மரைன் லீ பென் ஆகிய இருவருக்கும் கிடைத்த வாக்கு […]
உலகின் அதிகம் பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது. கோதுமை மற்றும் அரிசியின் விற்பனை கூட, பால் விற்பனைக்கு சமமாக இல்லை,” என பிரதமர் மோடி கூறியுள்ளார். குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடைபெறுகிறது. இங்கு, மூன்று நாள் பயணமாக நேற்று முன்தினம் சென்ற பிரதமர் மோடி, பனஸ்கந்தா மாவட்டம், தியோதர் பகுதியில், புதிய பால் பண்ணை வளாகம் மற்றும் உருளைக்கிழங்கு பதப்படுத்தும் ஆலையை, நேற்று திறந்து வைத்துள்ளார். அதன் பின் […]
குஜராத்தில் உள்ள அரசு பள்ளிகள் அலங்கோலமான நிலையில் இருப்பதாக பிரதமர் மோடிக்கு டெல்லி துணை முதல்-மந்திரி தகவல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, 3 நாள் பயணமாக குஜராத் செல்வதாக அறிவித்துள்ளார். அப் போது, வித்யா சமிக்ஷா கேந்திரா என்ற நவீன கல்வி மையங்களுக்கு செல்லப்போவதாக தெரிவித்திருந்தார். அவருக்கு பதில் அளிக்கும்வகையில், டெல்லி துணை முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கடந்த வாரம், […]
கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் கடுமையான கொரோனா காலகட்டத்தில் உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அப்போது இங்கிலாந்து நாட்டிலும் கடுமையான ஊரடங்கு அமலில் இருந்தது. இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய மனைவி கேரி அமைச்சரவைக்கு ஒரு கேக் கொண்டு வந்திருந்தார். அதனை வெட்டி போரிஸ் ஜான்சன் அவருடைய பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் இங்கிலாந்து அதிபர் ரிஷி சுனக் கலந்து கொண்டார். இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை […]
மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று குஜராத் வந்தார். நேற்று மாலை காந்தி நகரில் பள்ளிகள் கட்டளை மற்றும் கட்டுப்பாடு மையத்தின் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இந்தநிலையில் காலை பானஸ்காந்தாவில் உள்ள பால்பண்ணையில்பல்வேறு நலத்திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும் சில புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய வைத்தியத்துக்கான சர்வதேச மையத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். நாளை 20 ஆம் தேதி காந்திநகரில் நடைபெறும் சர்வதேச ஆயுஷ் மாநாட்டில் […]
பாகிஸ்தானில் புதிய மந்திரிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க அதிபர் மறுப்பு தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தானில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மூலமாக இம்ரான்கான் ஆட்சி கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரீப் பிரதமராகி இருக்கிறார்.இந்தநிலையில் ஷபாஸ் ஷெரீப்பின் பி.எம்.எல்-என் கட்சி மற்றும் பல்வேறு கூட்டணி கட்சிகளில் இருந்து மந்திரிகள் தேர்வாகி இருக்கிறார்கள். மேலும் இவர்கள் நேற்று பதவியேற்க இருந்தனர். ஆனால் புதிய மந்திரிகளுக்கு பதவி பிரமாணம் […]
கொரோனா விதிமுறையை மீறி விருந்து நிகழ்ச்சி நடத்திய சம்பவத்தில், போரிஸ் ஜான்சன் மீது புதிய குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. இங்கிலாந்தில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக முழு ஊரடங்கு அமலில் இருந்தபோது விதிமுறைகளை மீறி பிரதமர் இல்லம் மற்றும் அலுவலகத்தில் விருந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதிலும் குறிப்பாக 2020-ம் ஆண்டு ஜூன் 19-ந்தேதி பிரதமர் போரிஸ் ஜான்சனின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அலுவலகத்தில் அதிக அளவில் அரசு ஊழியர்கள் திரண்டு […]
பிரித்தானிய நாட்டின் பிரதமர் போரிஸ்ஜான்சனின் கணினிகளை உலகின் மிகப் பயங்கரமான மற்றும் சக்திவாய்ந்த சைபர் ஆயுதங்கள் கொண்டு ஹேக் செய்து வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராணுவ தரஉளவு மென் பொருளான பெகாசஸ் பிரித்தானிய பிரதமர் போரிஸ்ஜான்சனின் கணினிகளை குறிவைத்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். இந்த உளவு மென்பொருளானது சென்ற ஜூலை 2020 ஆம் வருடம் எண் 10 என்ற நெட்ஒர்க்கை பயன்படுத்திய சாதனங்களில் காணப்பட்டதாக சைபர் போஃபின்கள் தெரிவித்து இருந்தனர். அதுமட்டுமல்லாமல் இதே வகையான அத்துமீறல்கள் […]
இரண்டு நாள் பயணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வருகின்ற 21ம் தேதி இந்தியா வருகிறார். மேலும் தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கும் அவர், இந்தோ-பசிபிக் கூட்டாண்மை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது பற்றி பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதுபற்றி டவுனிங் ஸ்ட்ரீட் வெளியிட்ட செய்திகுறிப்பில், ‘வரும் 21ம் தேதி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா செல்கிறார். அவர் அன்றைய தினம் அகமதாபாத்தில் நடக்கும் வர்த்தகர்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். மேலும் இங்கிலாந்து பிரதமர் […]
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக 21மற்றும் 22ம் தேதி இந்தியா வர இருக்கிறார். கடந்த 2020 ஆம் ஆண்டில் இரு முறை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வர திட்டமிட்டுள்ளார். ஆனால் அந்த இரு முறையும் கொரோனா காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டிருந்தது. அதேபோல் இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளார். ஆனால் பிரிட்டன் நாட்டில் பரவிய கொரோனா […]
இங்கிலாந்து பிரதமரான போரிஸ் ஜான்சன் சமீபத்தில் உக்ரைன் நாட்டிற்குச் சென்று அதிபர் ஜெலன்ஸ்கியை நேரடியாக சந்தித்து பேசியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 50 நாட்களை தாண்டி தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. எனவே, உக்ரைன் நாட்டிற்கு ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் உறுதுணையாக இருக்கின்றன. ஆயுத மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகின்றன. இதனால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஐரோப்பிய நாடுகளை எச்சரித்திருக்கிறார். இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் தங்கள் நாட்டிற்குள் […]
பாகிஸ்தான் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற ஷபாஸ் ஷெரீப்பிற்கு அமெரிக்கா வாழ்த்து கூறியுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில் நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதன் காரணமாக இம்ரான் அரசு கவிழ்ந்து உள்ளது. அங்கு உள்ள முன்னாள் முதல்வர் நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷபாஸ் ஷெரீப் (வயது 70) பிரதமராகி உள்ளார். அவருக்கு அமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுபற்றி அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏறத்தாழ 75 ஆண்டுகளாக பரந்த பரஸ்பர நலன்களில் பாகிஸ்தான் […]
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வருவது போர் தாக்குதல் அல்ல, தீவிரவாதம் என்று போலந்து நாட்டின் ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் டுடா தெரிவித்து உள்ளார். உக்ரைனின் மேற்கு மற்றும் மையப் பகுதிகளிலிருந்து ரஷ்ய ராணுவம் பின்வாங்கிய சூழ்நிலையில், சில தினங்களுக்கு முன் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் தலைநகர் கீவ்வில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரஷ்யாவின் போர் அத்துமீறல்களை பார்வையிட்டார். இதையடுத்து நேற்று(புதன்கிழமை) பால்டிக் நாடுகளான போலந்து, லிதுவேனியா, லாட்வியா மற்றும் எஸ்டோனியா போன்ற நாடுகளின் ஜனாதிபதிகள் தலைநகர் […]
நடப்பு நிதியாண்டில் 100 லட்சம் டன் கோதுமையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியபோது, கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரஷ்யா – உக்ரைன் போர், கொரோனா போன்ற சூழ்நிலைகள்தான் விலைவாசி உயர்வுக்கு காரணம். இந்நிலையில் விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்கான வரியை நீக்கி […]
இங்கிலாந்து நாட்டில் சென்ற 2020ஆம் ஆண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்தபோது விதிமுறைகளை மீறி பிரதமர் இல்லம் மற்றும் அலுவலகத்தில் விருந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றாக குற்றச்சாட்டு பெறப்பட்டது. அதிலும் குறிப்பாக 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி பிரதமர் போரிஸ் ஜான்சனின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அலுவலகத்தில் அதிகளவில் அரசு ஊழியர்கள் திரண்டு விருந்து நிகழ்ச்சி நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட லண்டன் காவல்துறையினர் கொரோனா விதிமுறையை […]
புதிய பிரதமராக ஷெரிப் பதவியேற்க உள்ள சூழலில், உடல்நல குறைவால் பாகிஸ்தான் ஜனாதிபதி ஒரு சில நாட்கள் ஓய்வில் இருப்பார் என கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷபாஸ் ஷெரீப் (வயது 70) அறிவிக்கப்பட்டிருந்தார். இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற செயலகத்தில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் பிரதமராக ஷபாஸ் ஷெரிப் தேர்வு ஆகி இருக்கிறார். பாகிஸ்தானின் புதிய பிரதமராக […]
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடனும், பிரதமர் மோடியும் இன்று காணொலி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்தியா, அமெரிக்கா இடையேயான ‘2 பிளஸ் 2’ பேச்சுவார்த்தை இன்று அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெறுகிறது. மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மற்றும் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் போன்ற இருவரும் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளின்கன், ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின் போன்றோருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இந்த நிலையில் இரு நாடுகளுக்கு இடையேயான ‘2 பிளஸ்2’ பேச்சுவார்த்தைக்கு மத்தியில் […]
பாகிஸ்தானில் நிலவிவரும் மோசமான அரசியல் சூழ்நிலையில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் 174 பேர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனை அடுத்து பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் இம்ரான்கான் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். “பாகிஸ்தானுக்கு 1947ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது. ஆனால் தற்போது வெளிநாடுகளின் சதியால் […]
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கைஇல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அதன்படி நேற்று நள்ளிரவு 1:30 மணி அளவில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கானுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடந்தது. 342 உறுப்பினர்களை உடைய நாடாளுமன்றம் அவையில் 174 உறுப்பினர்கள் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் வாயிலாக நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றது. அவ்வாறு எதிர்க் […]
கொரோனா இன்னும் முடியவில்லை தனது வடிவத்தை மாற்றி மீண்டும் பரவுகிறது என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். ராமநவமி கொண்டாட்டத்தை முன்னிட்டு குஜராத் மாநிலத்தில் கதிலாவில் அமைந்திருக்கும் உமியா மாதா கோவில் நிறுவன தின விழாவில் காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றி உள்ளார். அப்போது பேசிய அவர், கொரோனா மிகப் பெரும் நெருக்கடி. இந்த நெருக்கடி ஓய்ந்து விட்டதாக நாங்கள் கூறவில்லை. தற்போது தொற்று பரவல் நின்றிருக்கலாம். ஆனால் அது மீண்டும் எப்போது பரவும் […]
துமகூருவில் அமைக்கப்பட்டிருக்கின்ற 161 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா பிதனகெரே கிராமத்தில் பசவேசுவரா மடம் அமைந்துள்ளது. இந்த மடத்தில் 161 அடி உயரம் கொண்ட பிரமாண்ட ஆஞ்சநேயசாமி சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. உலகிலேயே மிகவும் உயரமான ஆஞ்சநேய சாமி சிலையாக இந்த சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆஞ்சநேயர் சாமி சிலை இன்று ராம நவமியை முன்னிட்டு பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து […]
ஆஸ்திரேலிய நாட்டில் பொதுத்தேர்தல் அடுத்த மாதத்தில் நடக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் வரும் மே மாதம் 21-ஆம் தேதியன்று பொதுத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதனை அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியிருக்கிறது. பிரதமர் ஸ்காட் மோரிசனின் கூட்டணி கட்சி ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொள்ளுமா அல்லது அந்தோணி அல்பானீஸ் தலைமையில் புதிய ஆட்சியைப் பிடிக்குமா என்பதை தீர்மானிக்க அடுத்த மாதம் தேர்தல் நடக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் கடந்த 2018 ஆம் வருடத்திலிருந்து ஸ்காட் மோரிசன் பிரதமராக இருக்கிறார். […]
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கைஇல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அதன்படி இன்று நள்ளிரவு 1:30 மணி அளவில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கானுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடந்தது. 342 உறுப்பினர்களை உடைய நாடாளுமன்றம் அவையில் 174 உறுப்பினர்கள் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் வாயிலாக நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றது. அவ்வாறு எதிர்க் […]
நம்பிக்கையற்ற தீர்மானத்தை துணை சபாநாயகர் நிராகரித்த நிலையில் அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்திருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான் கானை எதிர்த்து எதிர்க்கட்சியினர் நம்பிக்கையற்ற தீர்மானத்தை கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதியன்று கொண்டுவந்தனர். அதனையடுத்து இம்ரான்கான் பரிந்துரைத்ததால் அதிபர் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு உத்தரவு பிறப்பித்தார். இது, அந்நாட்டு அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எனவே இது தொடர்பில் அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தாமாகவே வழக்குப்பதிவு செய்து விசாரணை […]
நாட்டிலுள்ள ஒவ்வொரு ஏழைகளுக்கும் உறுதியான வீடு வழங்க அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மூன்று கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டு இருக்கின்றது. மக்களின் பங்களிப்பால் மட்டுமே இந்த வீடுகளை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளும் நவீன வசதிகளை கொண்டதாகவும், மகளிருக்கு அதிகாரமளிக்கும் அடையாளமாகவும் திகழ்கிறது. மேலும் நாட்டின் ஒரு பகுதியான வலிமையான வீடு வழங்கிய […]
நாளை எல்லாரும் வீதிகளில் இறங்கி போராட வேண்டுமென பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு கடந்த மூன்றாம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் வாக்கெடுப்பிற்கு முன் நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர் இம்ரான்கான் அதிபருக்கு பரிந்துரைத்துள்ளார். அந்த பரிந்துரையை ஏற்று பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இதற்கிடையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து […]
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போது இந்தியர்கள் சுயமரியாதைக் கொண்டவர்கள் என புகழ்ந்துள்ளார். பாகிஸ்தான் பிரதமரான இம்ரான்கான் தலைமையிலான அரசு மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு கடந்த மூன்றாம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் வாக்கெடுப்பிற்கு முன்னதாக பிரதமர் இம்ரான்கானின் பரிந்துரையை ஏற்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை அதிபர் கலைத்துள்ளார். இதனால் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறவில்லை. மேலும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதிலிருந்து […]
நடப்பு கூட்டத்தொடர் அமர்வில் 17 நாட்களில் 15 நாட்கள் பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வரவில்லை என்று வருகைப் பதிவு பதாகையை ஏந்தி காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்தனர். நாடாளுமன்றம் தொடங்கிய 14ஆம் தேதி வருகை தந்த பிரதமர் மோடி அதன் பின் 15 நாட்கள் ஆப்சென்ட் என்று தேதிவாரியாக பதாகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் எம்பி மணி தாகூர் தனது ட்விட்டர் பதிவில் : “17 நாட்கள் நடைபெறும் லோக்சபா […]
காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசின் பல்வேறு துறைகளின் செயலாளர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சமீபத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது பல செயலாளர்கள் பலர் பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள இலவச திட்டங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். அவை பொருளாதார ரீதியாக நீடிக்க முடியாத இந்தத் திட்டங்களால் இலங்கையில் ஏற்பட்டது போல் அந்தந்த மாநிலங்களில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்படக் கூடிய அபாயம் இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். இந்த […]
பிரிட்டனில் பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் திருநங்கைகள் கலந்து கொள்ளக் கூடாது என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியிருக்கிறார். பிரிட்டனில் நேற்று பிரதமர் போரிஸ் ஜான்சன் உலகம் முழுக்க உள்ள LGBT-களது உரிமைகளை முன்னேற்ற திட்டமிடப்பட்டிருந்த முதன்மை மாநாட்டை கைவிடப் போவதாக கூறியிருக்கிறார். இதனைத்தொடர்ந்து உயிரியல் ஆண்கள், பெண்கள் விளையாடும் போட்டிகளில் திருநங்கைகள் கலந்து கொள்வதை நான் சரி என்று நினைக்கவில்லை. இது சர்ச்சையான விஷயமாக இருக்கும். இந்த நடைமுறை எனக்கு வித்தியாசமாக தெரிகிறது என்று கூறியிருக்கிறார். மேலும் […]
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் தாக்குதலில் கொத்துக் கொத்தாக மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பல்வேறு நாட்டு தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. அந்த வரிசையில் இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ரஷ்ய வீரர்கள் புச்சா நகரை விட்டு வெளியேறிய பிறகு அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மிகவும் மோசமானவை. இறந்தவர்களின் உடல்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தது. புச்சா நகர் சுடுகாடு போல் காட்சியளிக்கிறது. […]
பாகிஸ்தான் நாட்டின் இடைக்கால பிரதமராக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான குல்சார் அகமதுவை பிரதமர் இம்ரான்கான் பரிந்துரைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தன் ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டினார். இந்நிலையில் அவர், உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான குல்சார் அகமதுவை பிரதமராக பரிந்துரைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பரிந்துரை கடிதத்தை அதிபர் ஆரிப் அல்விக்கு அவர் அனுப்பியதாகவும் கூறப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்ற தேர்தல் பணி அகமது தலைமையில் தான் மேற்கொள்ளப்படும் என்று […]
இலங்கையின் மத்திய வங்கி ஆளுநரான அஜித் நிவார்ட் கப்ரால் தன் பதவியை ராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகிய நிலையில், மத்திய வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து விலக ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபாய ராஜபக்சேவிடம் கொடுத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். கடும் நிதி நெருக்கடியில் தவித்துக்கொண்டிருக்கும் இலங்கையில், டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் […]
நியூசிலாந்தை சேர்ந்த கேலண்டர் கேர்ள்ஸ் என்ற நிறுவனம் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டனின் புகைப்படம் ஒன்றை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட்ட இந்த புகைப்படம் நாடு முழுவதும் ஏற்படுத்திய கொந்தளிப்பால் சனிக்கிழமை அன்று அந்த நிறுவனத்தால் நீக்கப்பட்டது. பிரதமரை ஆபாசமாக சித்தரித்து புகைப்படங்களை பதிவிட்டு உள்ளதாக அந்நிறுவனத்தின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பிரதமரின் இந்த ஆபாச புகைப்படத்தை பார்த்த […]
பாகிஸ்தான் நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட தேசிய ஆணை மற்றும் செயல்பாட்டு மையம் கலைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானில் புதிதாக கொரோனா தொற்று ஏற்படும் நபர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. எனவே, கொரோனாவை கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்ட தேசிய மற்றும் செயல்பாட்டு மையத்தை கலைக்க தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்திருப்பதாவது, நேற்று என்சிஒசி கலைக்கப்பட்டது. இந்த அமைப்பினர் நாடு முழுக்க கொரோனா பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டனர். என்ஓசி நடவடிக்கைகள் சர்வதேச அளவில் […]
குஜராத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நடப்பு ஆண்டு டிசம்பரில் குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில் கடந்த 1995 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் பாஜக உள்ளது. மேலும் ஆறாவது முறையாக ஆட்சியை பிடித்து விடும் முனைப்பில் அக்கட்சி இருக்கிறது. இந்த நிலையில் தொழில் நகரமான ராஜ்கோட்டில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ரூபாய் 1,405 கோடி மதிப்பில் கட்டப்படும் இந்த […]
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானில் கைபர் பக்துங்வா என்ற மாகாணத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்காக கடந்த 16-ஆம் தேதி அன்று பிரச்சாரம் நடந்தது. அப்போது பிரதமர் இம்ரான் கான், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கூறப்படுகிறது. எனவே, பிரதமர் இம்ரான்கான் 50,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. மேலும், கைபர் பக்துங்வா மாகாணத்தின் முதல்வரான மஹ்மூத் கான், வெளியுறவுத் […]
கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப் போவதில்லை என்று நெதர்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார். சீனாவின், வூகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா பரவியது. இது இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து […]
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் சார்பாக அடையாள அட்டை மற்றும் ரூபாய் 5 லட்சத்திற்கான பிரதமரின் இலவச மருத்துவ காப்பீடு அட்டை 100 பேருக்கு வழங்கப்பட்டது. தமிழகத்தில் பல மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் செயல் முறையில் இருந்து வரும் நிலையில் புதியதாக இந்தியாவின் பிரதமர் மோடி தனது நாட்டு மக்களுக்காக ஒரு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை ஆரம்பித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலமாக 50 கோடி மக்களுக்கும் பயன்பெற உள்ளனர். இந்த திட்டம் இந்தியாவில் உள்ள 50 […]
உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]
விவசாயிகள் நிதியுதவி பெறும் திட்டத்தில் முறைகேடுகளை தவிர்க்க மத்திய அரசு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு 2019 ஆம் ஆண்டில் பிரதம மந்திரி கிசான் என்ற பெயரில் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தை அமல்படுத்தியது. 2000 ரூபாய் இந்தத் திட்டத்தின் கீழ் ஏழை விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000 வீதம் மூன்று தவணைகளாக நிதி வழங்கப்படுகிறது. இதுவரை 10 தவணைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் […]
உக்ரைனுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவிப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே பெலாரசில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் ரஷ்யா, உக்ரேன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. ரஷ்யா தாக்குதலை ஏற்படுவதன் காரணமாக பல்வேறு நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் பறக்க கூடாது எனவும் தடை விதித்துள்ளது. இந்நிலையில் […]
இம்ரான் கான் மனைவியின் மகன் காரில் மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தற்போது பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருகிறார். மேலும் பாகிஸ்தான் நாட்டின் முதல் பெண்மணியாக பிரதமர் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீவி உள்ளார். தற்போது இம்ரான்கான் ரஷ்ய அதிபரை சந்திக்க ரஷ்யா சென்றுள்ளார். இந்நிலையில் இம்ரான் கானின் மகன் மூஸா மேனகா தனது காரில் மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டு […]
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ரஷ்யா மீது பொருளாதார தடை விதிப்பதாக அறிவித்துள்ளார். உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் கிளர்ச்சியாளர்கள் ஆக்கிரமித்துள்ள லுகன்ஸ்க் மற்றும் டுனெட்ஸ்க் இரண்டு மாகாணங்கள் தனி நகர்களாக அறிவிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியிருக்கிறார். இதனால், உக்ரைன் பிரச்சனை மேலும் அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் இதனை கடுமையாக எதிர்த்துள்ளன. உக்ரைன் நாட்டில் இருக்கும் ரஷ்யா சார்ந்த பிராந்தியங்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் […]
பிரிட்டன் நாட்டில் கொரோனாவிற்கு எதிராக கடந்த 2020-ஆம் வருடம் மார்ச் மாதம் நடைமுறைப்படுத்தப்பட்ட தற்காலிகமான சட்டங்கள், அடுத்த மாதம் விலக்கி கொள்ளப்படுகிறது என்று பிரதமர் அறிவித்திருக்கிறார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், நாடாளுமன்ற அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது, கொரோனாவை தடுப்பது என்பது அரசாங்கத்தின் வற்புறுத்தலின் பேரில் இருக்கும் நடவடிக்கைகள் என்பதை தனி நபரின் பொறுப்பு என்று மாற்றக்கூடிய என் திட்டத்தின் ஒரு பகுதியாக தற்காலிகமான சட்டங்கள் விலக்கப்படுகிறது. இதனால், நம் சுதந்திரம் பறிபோகாமல் நம்மால் பாதுகாக்க முடியும். இந்த […]
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த திருமண விழாவில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன், “முதல்வராக சிறப்பாக செயல்படும் மு.க.ஸ்டாலின் பிரதமராக வந்தால் நாடே செழிக்கும். ஸ்டாலினை போன்று பிரதமர் வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்” என்று தெரிவித்துள்ளார். மேலும் மு.க.ஸ்டாலினை போன்ற முதல்வரை நாங்கள் பார்த்ததில்லை என டெல்லியில் பேசுகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.