பாகிஸ்தான் நாட்டில் புல்புல் என அழைக்கப்பட்ட இந்திய வம்சாவளியான பிரபல பாடகி நய்யரா நூர் காலமானார். பாகிஸ்தான் நாட்டின் புல்புல் என அழைக்கப்பட்ட பழம்பெரும் பாடகி நய்யரா நூர் என்பவர் உடல்நல குறைவால் காலமானார். இவருடைய வயது 71 ஆகும். இது குறித்து அவரது மருமகன் ராணா ஜைடி டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “நய்யரா நூர் மறைவு செய்தியை கனத்த மனதுடன் அறிவிக்கின்றேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவரது […]
Tag: பிரபல பாடகி
பாகிஸ்தான் நாட்டின் புல்புல் என அழைக்கப்பட்ட பழம்பெரும் பாடகி நய்யரா நூர் (71). உடல்நல குறைவால் அவர் காலமானார். இதனை அவரது மருமகன் ராணா ஜைடி டுவிட்டரில் உறுதிப்படுத்தி உள்ளார். இந்தியாவின் அசாமில் கடந்த 1950-ம் ஆண்டு பிறந்தவர் நூர். இதன்பின்னர், 1950-ம் ஆண்டின் பிற்பகுதியில் தனது குடும்பத்துடன் பாகிஸ்தானுக்கு புலம் பெயர்ந்து சென்றார். மெல்லிசையில் தீவிர ஆர்வம் கொண்ட நூர் மிக இளம் வயதில் இசையை கற்க தொடங்கினார். அவர், 1968-ம் ஆண்டு ரேடியோ பாகிஸ்தானில் […]
பிரபல பாப் பாடகி ஜெனிஃபர் லோபஸை கரம்பிடித்தார் பிரபல ஹாலிவுட் நடிகர் பென் அஃப்லெக். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் மிகவும் எளிமையான முறையில் இவர்களின் திருமணம் நடந்தது. கடந்த ஏப்ரல் மாதம் இவர்கள் இருவரும் தங்கள் காதலை உறுதி செய்திருந்தனர். ஜெனிஃபர் லோபஸுக்கு இது நான்காவது திருமணமாகும். அதேவேளை, பென் அஃப்லெக்-க்கு இது இரண்டாவது திருமணம். தன் முதல் மனைவி நடிகை ஜெனிஃபர் கார்னரை கடந்த 2018ல் பென் விவாகரத்து செய்திருந்தார்.
பிரபல பாடகி மஞ்சரி இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். மலையாள சினிமா உலகில் பல பாடல்களை பாடியுள்ளார் பாடகி மஞ்சரி. இவர் தமிழில் கஸ்தூரிமான் திரைப்படத்தில் போர்க்களம் என்ற பாடல், தலைநகரம் திரைப்படத்தில் ஏதோ நினைக்கிறேன் உள்ளிட்ட பல பாடல்களை பாடி இருக்கின்றார். இவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் சென்ற 2009ஆம் வருடம் விவேக் என்பவரை திருமணம் செய்தார். பின் கருத்து […]
நடிகர் தனுஷ் மீது பின்னணி பாடகி சுசித்ரா போலீசில் புகார் அளித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பாடகி சுசித்ரா மற்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசிக்கொள்ளும் ஆடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது.அந்த ஆடியோவில் பாடகி சுசித்ரா தன்னைப் பற்றி ஏன் தவறாக கூறினீர்கள் என்று பயில்வான் ரங்கநாதன் இடம் சண்டையிட்டு இருந்தார். இந்நிலையில் தற்போது நடிகர் தனுஷ் மீது நடிகை சுசித்ரா போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் என்னைப்பற்றி பயில்வான் ரங்கநாதன் ஒரு […]
இந்தியாவின் நைட்டிங்கேல் என புகழ்ப்பெற்ற பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் ( வயது 92 ) காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சற்றுமுன் பரிதாபமாக உயிரிழந்தார். இவர் இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். 2001-ல் பாரத ரத்னா, திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
64 முறை இசை தொடர்பான விருதுகளை வென்ற அமெரிக்க நாட்டின் பிரபல பாடகியான பில் எய்லீஸ் தன்னுடைய 11 ஆவது வயதிலிருந்து ஆபாச படங்களை பார்க்க ஆரம்பித்ததாக ரேடியோ ஒன்றிற்கு பேட்டி அளிக்கும் போது தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பில் எய்லீஸ் என்பவர் மிகவும் பிரபலமான பாடகியாக திகழ்கிறார். இவர் 64 முறை இசை தொடர்பான விருதுகளை வென்றுள்ளார். இந்நிலையில் இவர் ரேடியோ ஒன்றிற்கு பேட்டி அளிக்கும் போது தான் 11 ஆவது வயதிலிருந்து ஆபாச படங்களை பார்க்க […]
அமெரிக்க பாடகி லேடி காகா வளர்க்கும் இரண்டு நாய்களை கண்டுபிடித்து தந்தால் 3.6 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகை மற்றும் பாடகியுமான லேடி காகா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வருகின்றார். அவர் பிரெஞ்ச் புல்டாக் இனத்தை சார்ந்த கோஜி மற்றும் குஸ்டவ் ஆகிய இரண்டு நாய்களை வளர்த்து வருகின்றார். அவரின் வீட்டு வேலைக்காரர் கடந்த புதன்கிழமை இரவு, நாய்களை நடை பயணத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக […]
பிரபல பாடகியான கனிகாகபூர் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளார். கடந்த மாதம் 9ஆம் தேதி லண்டனில் இருந்து திரும்பிய கனிகாகபூர் கொரோனா அறிகுறிகளுடன் இருந்துள்ளார். ஆனால் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் லக்னோவில் விருந்து ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அந்த விருந்தில் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து உள்ளனர். கனிகாகபூருக்கு அறிகுறி இருப்பதாக தெரிய வந்த நிலையில் பெரும் சர்ச்சை எழுந்தது இதனால் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாத கனிகாகபூர் மீது லக்னோவின் தலைமை […]