பிரபல ரவுடி ராக்கெட் ராஜா நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜரானார்.. பனங்காட்டு படை கட்சி தலைவராக இருக்க கூடிய ராக்கெட் ராஜா நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்த சாமிதுரை என்பவரை கடந்த ஜூலை மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மேலும் அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. இந்த நிலையில் நாங்குநேரி நீதிமன்றத்தில் அந்த வழக்கு சம்பந்தமாக போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். ஏற்கனவே […]
Tag: பிரபல ரவுடி
சென்னையை அடுத்த ராஜகோபால் கண்டிகை எருமையூரை சேர்ந்த ரவுடி சச்சின் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் வழக்கு தொடர்பாக போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இதரிடையே ஒரு கல்லூரியின் பின்புறம் காட்டு பகுதியில் ரவுடி பதிவு இருப்பதாக தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் போலீஸ் குழுவினர் ரவுடியை பிடிக்க சென்றனர். அப்போது ரவுடி சச்சின் காவலர் பாஸ்கரை இடது தோள்பட்டையில் கத்தியை கொண்டு பலமாக வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி செய்தார்.அப்போது உடனடியாக […]
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்திலுள்ள இரும்புலியூரில் வசித்து வருபவர் சரித்திரப் பதிவேடு குற்றவாளி விவேக்ராஜ்(28). இவர் மீது கொலைமுயற்சி, திருட்டு, ஆள்கடத்தல், கஞ்சா உட்பட 12க்கும் அதிகமான வழக்குகள் தாம்பரம், சிட்லபாக்கம், சேலையூர் மற்றும் ஓட்டேரி ஆகிய பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருக்கிறது. வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்து தங்கி கல்லூரி படிக்கும் மாணவ, மாணவிகள்தான் விவேக்ராஜின் டார்கெட். அதன்படி தன்னிடம் சிக்கும் மாணவர்களிடம் விவேக்ராஜ் கஞ்சா,போதை ஊசி ஆகியவற்றை கொடுத்து கல்லூரி வளாகத்தில் விற்கச் […]
சென்னை சைதாப்பேட்டையில் நீதிமன்ற வளாகத்தில் வைத்து பிரபல ரவுடியை கொலை செய்ய திட்டம் தீட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்தவர் பாலா. இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குள் உள்ளன. இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இவர் மதுரையைச் சேர்ந்த மற்றொரு ரவுடியான சிவக்குமார் என்பவரை கொலை செய்தார். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான பாலாவை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், விசாரணக்காக நேற்று (செப்.5) சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்திற்கு […]
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்ஸ்தீப் சிங் ஒரு ரவுடியாக இருந்து பின்னர் பயங்கரவாதியாக மாறியவன். இந்த பயங்கரவாதி பஞ்சாபில் நடைபெற்ற சில பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஹர்தீப் சிங் இந்தியாவில் இருந்து தப்பி கனடாவில் தலைமறைவாக வாழ்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் கனடாவில் ஹர்ஷ்தீப் சிங்கை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். இந்த தேடுதல் வேட்டையில் ஹர்தீப் சிங்கின் உதவியாளர்களான ஹர்ஷ் குமார் மற்றும் ராகவ்வை […]
விழுப்புரம் அருகில் பிரபல ரவுடியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம், கீழ்பெரும்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் கந்தன் என்பவருடைய மகன் அறிவு என்ற அறிவழகன் (36). இவர் பிரபல ரவுடி ஆவார். இவர் மீது கடந்த 2006ம் வருடம் முதல் 2017ஆம் வருடம் வரை மொத்தம் 21 வழக்குகள் பதிவாகியுள்ளது. அதாவது 4 கொலை முயற்சி வழக்குகள், 3 கொலை வழக்குகள், 9 வழிப்பறி […]
நெல்லை களக்காடு அருகே நீராவி முருகன் என்ற ரவுடி ஒருவர் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய முருகனை தனிப்படை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் மீது ஆள்கடத்தல் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தன. தூத்துக்குடி புதியம்புத்தூரில் உள்ள நீராவி தெருவில் வசித்து வந்ததால் அவருக்கு இந்த பெயர் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்விரோதம் காரணமாக போலீஸ்காரரை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கலை நகர் பகுதியில் ஸ்ரீ சரவணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் மணிமுத்தாறில் உள்ள போலீஸ் சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சுஜி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ஸ்ரீ சரவணனும் அவரது நண்பரான விக்ரமனும் இணைந்து வீட்டிற்குச் சென்ற கொண்டிருந்தனர். […]
காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடியின் மீது பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பூங்கோதை என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு படப்பை அருகே 30,00,000 ரூபாய் மதிப்பிலான நிலம் சொந்தமாக உள்ளது. இந்த நிலத்தினை மதுரை மங்கலத்திலிருக்கும் பெரிய ரவுடியான குணா என்பவர் தனது நண்பரின் பெயருக்கு எழுதி வைக்கும் படி மிரட்டியுள்ளார். இதனையடுத்து அவர் அவ்வாறு செய்யாவிடில் கணவரை கொலை செய்து விடுவதாகவும் கூறினார். இதனால் அச்சமடைந்த அவர் காஞ்சிபுரம் மாவட்ட […]
கடலூர் அருகே போலீசாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்ற முக்கிய குற்றவாளி என்கவுண்டரில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திருப்பதிரிபுலியூர் சுப்பராயலு பகுதியில் வீரா என்கிற வீரங்கையன் 30 வசித்து வருகிறார். இவர் ஒரு பிரபல ரவுடி. வீரா மீது போலீஸ் நிலையத்தில் பல கொலை- கொள்ளை சம்பவம் குறித்த வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் கடலூர் உழவர்சந்தை பக்கத்தில் வீராவுக்கு சொந்தமான பழக்கடை ஒன்று இருந்தது வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு […]
விழுப்புரம் அருகே கோபால்தாஸ் என்ற ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபால்தாஸ் என்பவர் புதுவை தர்மாபுரியை சேர்ந்த பிரபல ரவுடி. இவர் திருந்தி தனியார் கம்பெனியில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஜெயந்தி, மாலதி என இரண்டு மனைவிகள் உள்ளனர். மாலதி புதுவையை சேர்ந்தவர். ஜெயந்தி விழுப்புரம் அருகே பூந்துறை எனும் கிராமத்தை சேர்ந்தவர். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஜெயந்தி வெளிநாட்டில் தற்போது வேலை பார்த்து வருவதால் […]
மதுரையில் பிரபல ரவுடி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஆனந்தன் என்பவர் மீது கொலை, அடிதடி போன்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்நிலையில், நேற்று மாலை வண்டியூர் பகுதியில் உள்ள பிரபல திரையரங்கின் பின் பகுதியில் உள்ள முள்புதரில் ஒருவர் கொடூரமாக வெட்டப்பட்டுக் கிடப்பதாக அண்ணாநகர் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற காவல் துறையினர் ரத்த […]