பிரிட்டன் இளவரசர் ஹாரி, தன் அண்ணியான கேட் மிடில்டன் குறித்து கூறியதை கேட்டு இளவரசர் வில்லியம் வருத்தமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹாரி, அவரின் மனைவி மேகன் இருவருடைய நெட்பிலிக்ஸ், தொடரின் முதல் பாகம் வெளியானது. அதில் கேட் மிடில்டனை இளவரசர் வில்லியம், காதலிக்கவில்லை. ராஜ குடும்பத்தின் உறுப்பினராக இருப்பதற்கு அச்சுக்கு ஏற்பது போன்று இருப்பதற்காகவே திருமணம் செய்தார் என்று ஹாரி தெரிவித்ததாக கூறப்பட்டிருக்கிறது. இந்த கருத்தால் இளவரசர் வில்லியம் வருத்தமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹாரி தெரிவித்ததாவது, […]
Tag: பிரிட்டன்
பிரிட்டன் நாட்டின் குடியிருப்பு கட்டிடத்தில் குண்டு வெடிப்பு நடந்ததில் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் நாட்டின் ஜெர்சி தீவில் இருக்கும் செயின்ட் ஹீலியர் என்னும் நகரில் மூன்று தளங்கள் உடைய கட்டிட பகுதியில் திடீரென்று வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. குண்டு வெடிப்பு சத்தம் கேட்ட சில நொடிகளில் கட்டிடம் விழுந்து தரைமட்டமானது. அதில் வசித்த மக்கள் இடுப்பாடுகளில் மாட்டிக் கொண்டனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து காவல்துறையினரும், மீட்பு குழுவினரும் சம்பவ […]
பிரிட்டன் மன்னர் சார்லஸின் முழு பெயர் பட்டங்களுடன் வெளியாகியுள்ளது. பிரிட்டன் அரச குடும்பத்தினரின் பட்டங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் சில பேருக்கு அதிகபட்டங்கள் இருக்கும். அந்த வகையில் மன்னர் சார்லஸின் பட்டங்களுடன் சேர்த்து அவரின் முழு பெயர் மிகவும் நீளமானது. அதாவது, அவரின் பெயர் Charles III, by the Grace of God, of the United Kingdom of Great Britain and Northern Ireland and of his other realms […]
பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தை நினைவு கூறும் விதமாக யோர்க் நகரில் அவரின் சிலையை மன்னர் சார்லஸ் திறந்து வைத்திருக்கிறார். பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத் கடந்த செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி அன்று மரணமடைந்தார். அதற்கு பின் முதல் தடவையாக அவரின் சிலை திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. மகாராணியார் மரணமடைவதற்கு முன் ஆறு அடி ஏழு அங்குலம் உடைய அவரின் சிலை, 70 வருட கால முடியாட்சியை சிறப்பிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டது. இந்த சிலையை மகாராணியாரே தேர்வு […]
பிரிட்டன் அரசு தங்கள் நாட்டு மக்களை நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து மீட்க 32,000 ரூபாய் உதவித்தொகையை அளிப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. பிரிட்டன் நாட்டில் வசிக்கும் மக்கள் லட்சக்கணக்கானோர் குறைவான வருவாய் பெற்று, தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கே சிரமப்படுகிறார்கள். எனவே, அவர்களின் நெருக்கடியை தீர்க்கும் வகையில் அரசாங்கம் 32,000 ரூபாயை வங்கிக் கணக்கில் செலுத்த உள்ளது. மொத்த உதவித்தொகை 65,000. இதில் முதல் தவணையானது, முன்பே மக்களுக்கு செலுத்தப்பட்டுவிட்டது. இந்த உதவி தொகையானது, வேலைகள் மற்றும் ஓய்வூதியத்துறை மூலம் வழங்கப்படுகிறது. […]
பிரிட்டன் நாட்டில் வசிக்கும் பிற நாட்டை சேர்ந்தவர்களில் இந்திய மக்கள் தான் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்று அந்நாட்டின் தேசியப் புள்ளியல் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. பிரிட்டன் மற்றும் வேல்ஸில் வாழும் பிற நாட்டை சேர்ந்த மக்களின் எண்ணிக்கை பற்றி தேசியப் புள்ளியில் அலுவலகம் தகவல்கள் வெளியிட்டு இருக்கிறது. அந்த பட்டியலில், இந்திய மக்கள் முதலிடத்தில் உள்ளதாகவும், அதற்கு அடுத்த இடங்களில் போலந்து மற்றும் பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த மக்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் எடுத்த […]
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மீது முட்டை வீச்சு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மீது முட்டைகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வடக்கு இங்கிலாந்தில் யார்க் நகரில் நடந்த நிகழ்ச்சியில் மன்னர் சார்லஸ், அவரது மனைவி கமீலா மீது நாலு முட்டைகள் வீச்சு. முட்டை வீச்சை தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் மன்னரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
பிரிட்டன் நாட்டில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த அருவருக்கத்தக்க பொருளால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். பிரிட்டனில் உள்ள Gloucestershire என்ற நகரத்தில் இருக்கும் Stroud என்னும் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் Siobhan Baillie, அரசியல்வாதிகளுக்கு ஏற்படும் அருவருக்கத்தக்க பிரச்சனைகள், அரசியலில் இருப்பதற்கு பல முறை யோசிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தி இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். அதாவது கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த அவரின் வீட்டின் வாசலில் பெட்டி ஒன்று இருந்திருக்கிறது. அதனை திறந்து பார்த்து அவர் […]
பிரிட்டன் நாட்டில் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தனது நான்காம் குழந்தையுடன் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் நாட்டில் கேட் மிடில்டன் தனது நான்காவது குழந்தையை எதிர்பார்க்கின்றார். அவரும் இளவரசர் வில்லியமும் செப்டம்பர் 8-ஆம் தேதி இறப்பதற்கு முன்பு எலிசபெத் மகாராணியிடம் கர்ப்பம் பற்றிய செய்தியை கூறியதாக அரச குடும்பத்திற்கு நெருக்கமான நபர் தெரிவித்துள்ளார். இந்த செய்தி இன்டர்நேஷனல் பிசினஸ் டைம்ஸ்-ல் வெளியானது. இந்த தகவல்களின்படி, ராணி இறப்பதற்கு சற்று முன்பு வில்லியம் அவரிடம் கூறியதாக […]
பிரிட்டன் மன்னர் சார்லஸ் மறைந்த இளவரசி டயானாவை காதலித்து திருமணம் செய்வதற்கு முன்பாகவே அவரின் மூத்த சகோதரியோடு டேட்டிங் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த பிரிட்டன் இளவரசி டயானாவின் மூத்த சகோதரியான சாரா, 1970-ஆம் வருட காலகட்டத்தில் மன்னர் சார்லஸுடன் டேட்டிங் சென்றுள்ளார். அந்த சமயத்தில் அவர் நேர்காணல் ஒன்றில் தெரிவித்ததாவது, சார்லஸை மணந்து கொள்ள வாய்ப்பே கிடையாது. நாங்கள் காதலிக்கவில்லை. ஒருவர் நாட்டின் அரசராக இருந்தாலும் எனக்கு விருப்பம் இல்லாத எவரையும் மணந்து கொள்ள மாட்டேன் என்று […]
உணவுப் பொருட்களின் விலை உச்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் அவதியில் உள்ளனர். பிரிட்டன் நாட்டில் உணவுப் பொருட்களின் விலை உச்சத்தை எட்டி உள்ளது. இது கடந்த 42 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக பால், வாழைப்பழம், பிரட் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்து வருகின்றது. அன்றாட செலவுகளை சந்திக்கவே தள்ளாடும் மக்களுக்கு இது பெரிய அழுத்தத்தை கொடுத்துள்ளது. இது குறித்து பிரிட்டனின் நிதி மந்திரியிடம் கேட்டபோது “விலைவாசி உயர்வால் அவதிப்படும் […]
அமெரிக்க நாட்டின் ஒரு ஆய்வகத்தில் ஹைபிரிட் சூப்பர் கொரோனா என்ற கிருமியை உருவாக்கி விஞ்ஞானிகள் ஆபத்துடன் விளையாடியதாக கடுமையான சர்ச்சை எழுந்திருக்கிறது. பிரிட்டன் நாட்டின் ஒரு ஆய்வகமானது, ஒமிக்ரான், வூஹான் ஆகிய இரண்டு கொரோனா மாதிரிகளையும் ஒன்றாக சேர்த்து புதிதாக ஹைப்ரிட் சூப்பர் கொரோனா என்ற கிருமியை தயாரிக்கும் சோதனையை செய்தது. இதில் 80% எலிகள் இறந்ததாக அதிர வைக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ஆய்வை பாஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் குழு மேற்கொண்டிருக்கிறது. இவ்வாறான […]
பிரிட்டனில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக விரைவில் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று எரிசக்தி தலைவர் எச்சரித்திருக்கிறார். பிரிட்டனில் எரிவாயு இறக்குமதி செய்யப்படுவது சரிவடைய தொடங்கியிருக்கிறது. எனவே, வரும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மாலை நேரங்களில் 4 மணி முதல் 7 மணி வரை வீடுகளில் மின் தடை ஏற்படும். எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மின்சாரத்தை துண்டிப்பதை தவிர வேறு வழி கிடையாது என்று எரிசக்தி தலைவராக இருக்கும் ஜான் பெட்டிகிரேவ் கூறியிருக்கிறார். இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே மக்களுக்கு இவ்வாறான […]
பிரிட்டன் மன்னர் சார்லஸ் பயன்படுத்தும் வாகனத்திற்கு வித்தியாசமான பொருளை எரிபொருளாக பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் மன்னர் சார்லஸ் பயன்படுத்தும் வாகனத்தில் ஒயின், சீஸ் இரண்டும் கலந்த கலவை தான் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. மன்னர் சார்லஸிற்கு மிகவும் விருப்பமான இரண்டு விஷயங்கள், இயற்கையும் வாகனங்களும் தான். எனினும் இரண்டும் ஒன்றுக்கொன்று எதிர். வாகனத்திலிருந்து வெளியேறும் நச்சு புகையால் இயற்கை மாசடையும். எனவே, ஒயின் மற்றும் சீஸை கலந்து பயன்படுத்தும் விதத்தில் வாகனத்தின் எஞ்சினை மாற்ற நினைத்திருக்கிறார். அதன்படி, […]
பிரிட்டனில் தற்போது பிரதமர் தேர்தல் நடத்தினால், ரிஷி சுனக் வெற்றியடைந்திருப்பார் என கட்சி வாக்காளர்களிடம் மீண்டும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்திருக்கிறது. பிரிட்டன் பிரதமர் பதவிக்காக இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகிய இருவரும் போட்டியிட்ட நிலையில் லிஸ் ட்ரஸ் வெற்றிபெற்றார். இந்நிலையில் மீண்டும் கட்சி வாக்காளர்களிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 55% ரிஷி சுனக்கிற்கு ஆதரவு கிடைத்திருக்கிறது. தேர்தலில் லிஸ் டிரஸிற்கு வாக்களித்தவர்கள் பலரும் வருத்தம் தெரிவித்ததாக கூறப்பட்டிருக்கிறது. நாட்டின் புதிய பிரதமரை நியமிக்க […]
பிரிட்டன் பிரதமராக மீண்டும் போரிஸ் ஜான்சனை நியமிக்க வேண்டும் என்று இணையதளத்தில் ஒரு கோரிக்கை மனு உருவாக்கப்பட்டு 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அதில் கையெழுத்திட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பிரிட்டன் நாட்டின் அரசாங்கத்தில் தொடர்ந்து பல சிக்கல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியினுடைய இணையதள பக்கத்தில் வரப்போகும் அடுத்த தேர்தலில் நடைபெற உள்ள மிகப்பெரிய குழப்பத்தை தீர்ப்பதற்கு போரிஸ் ஜான்சன் தான் சரியானவர் என்று தாங்கள் நம்புவதாக குறிப்பிட்டு ஒரு மனு உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த இணையதளத்தில் கன்சர்வேட்டிவ் கட்சியை […]
பிரிட்டன் நாட்டின் ராணியாக போகும் கமீலா அணியவுள்ள கிரீடம் குறித்து விவாதம் எழுந்துள்ளது. பிரிட்டன் மன்னரான சார்லஸிற்கு இன்னும் ஆறு மாதங்களில் முடி சூட்டு விழா நடக்கவிருக்கிறது. அந்த விழாவில் அதிக ஆடம்பரம் இருக்காது எனவும் மிக எளிய முறையில் நடத்த வேண்டும் என்றும் அரண்மனை வட்டாரம் விவாதித்துக் கொண்டிருக்கிறது. இதில், தற்போது கமீலா அணியவுள்ள கிரீடம் குறித்தும் விவாதம் எழுந்திருக்கிறது. இந்நிலையில், அதற்கு இந்திய அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அந்த விழாவில் பாரம்பரியமாக நடத்தப்படும் […]
பிரிட்டன் நாட்டில் வரலாறு காணாத வகையில் 1.2 மில்லியன் வேலை இடங்கள் காலியாக இருப்பதால் அந்த பணிகளை புலம்பெயர்ந்த மக்களுக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் நாட்டில் 1.2 மில்லியன் வேலை இடங்கள் காலியாக இருக்கிறது. எனவே, வேலை மற்றும் ஓய்வூதியங்களுக்குரிய செயலராக இருக்கும் Chloe Smith, திறமை மிகுந்த பிற நாட்டைச் சேர்ந்த ஊழியர்களை அந்த பணியில் அமர்த்தலாம் என்று பரிந்துரைத்திருக்கிறார். எனினும் முதலில் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு தான் முன்னுரிமை என்று தெரிவித்திருக்கிறார். அந்நாட்டில் சமீபத்தில் […]
பிரிட்டன் மன்னருடன் அடுத்த வருடம் மே மாதத்தில் அவரின் மனைவி கமீலாவும் ராணியாக பதவியேற்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த பிரிட்டன் இளவரசி டயானாவை அதிகம் நேசித்த நாட்டு மக்களால் கமிலாவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மேலும், சார்லஸ்-டயானாவின் பிள்ளைகளான இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரியும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனை நன்கு உணர்ந்திருந்த கமிலா டயானாவிற்கு வழங்கப்பட்டிருந்த வேல்ஸ் இளவரசி பட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதாவது மக்கள் மிகவும் நேசிக்கும் டயானாவின் பட்டத்தை தான் பறித்து விட்டால் […]
ரஷ்யப் போரால், உக்ரைனிலிருந்து லண்டன் வந்த பெண் மீண்டும் தன் நாட்டிற்கு சென்று காதலரின் உயிரை காப்பாற்றியுள்ளார். உக்ரைன் நாட்டை சேர்ந்த ஜூலியா என்ற பெண் வழக்கறிஞர் மற்றும் நடிகையாக இருக்கிறார். இவர், அங்கு போர் தொடங்கியதால் கடந்த ஜூன் மாதம் ஆறாம் தேதி அன்று தன் தாயுடன் ஜெர்மன் நாட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு தன் தாயை குடியமர்த்திவிட்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி என்று லண்டனில் இருக்கும் என்ற Lewisham பகுதிக்கு சென்றுவிட்டார். ஜூலியா தன் காதலரை […]
பிரிட்டனில் லிபர்டி பரோஸ்(14) என்ற சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி ஜிம்னாஸ்டிக் கலைஞர். இவர் தனது உடலை பின்பக்கமாக வளைத்து காலுக்குள் தலையை நுழைத்து நெஞ்சு பகுதி தரையில் படுமாறு செய்து அசைத்துவிட்டார். அதாவது ஒட்டுமொத்த உடலையும் பின்பக்கமாக வளைத்து உருண்டை ஆகிவிடுகிறார். அதுமட்டுமில்லாமல் வெறும் 30 நொடிகளில் இதனைபோல அவர் மீண்டும் மீண்டும் 11.5 முறை செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இது குறித்து லிபர்டி பரோஸ் கூறியது, கின்னஸ் உலக […]
பிரிட்டன் நாட்டில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவின் இந்த வருடத்திற்கான பொதுக்கூட்டத்தில் ஒழுங்கற்ற முறையில் செயல்பட்ட காரணத்தால் வர்த்தக அமைச்சரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் நாட்டில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியினுடைய பொதுக்கூட்டம் நடைபெற்று இருக்கிறது. இதில் பிரதமர் லிஸ் ட்ரஸின் தலைமையில் இயங்கும் நிர்வாகத்தின் வர்த்தக அமைச்சராக இருந்த கானா் பா்னஸ் ஒழுங்கற்ற முறையில் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. எனவே கன்சர்வேட்டிவ் கட்சியிலிருந்து தற்காலிகமாக அவரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டாலும், சுயேச்சை எம்.பியாக […]
பிரிட்டன் மன்னர் சார்லஸ் மற்றும் இளவரசர் ஆண்ட்ரூஸ் இருவரால் அரண்மனையை விட்டு, ஒரு அதிகாரி வெளியேறியதற்கு இளவரசர் வில்லியம் கடும் கோபத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரண்மனையிலிருந்து வெளியேறிய Sir Christopher Geidt என்ற அதிகாரி, பொறுப்பில் இருந்திருந்தால் ஹாரி மற்றும் மேகன் நிச்சயம் வெளியேறி இருக்க மாட்டார்கள் என்று இளவரசர் வில்லியம் கருதுவதாக கூறப்பட்டிருக்கிறது. பிரிட்டனின் முன்னாள் ராணுவ அதிகாரியாக இருந்த Sir Christopher Geidt, இளவரசர் வில்லியம் மற்றும் மகாராணியார் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். சுமார், […]
பிரிட்டன் நாட்டின் மன்னராக இருக்கும் சார்லஸின் முதல் காதல் குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது. பிரிட்டன் நாட்டின் மன்னரான சார்லஸை கமீலாவிற்கு அறிமுகப்படுத்தி வைத்தது அவரின் முன்னாள் காதலி என்று தெரியவந்துள்ளது. சிலி நாட்டை சேர்ந்த, Lucia Santa Cruz என்பவரை தான் சார்லஸ் முதலில் காதலித்திருக்கிறார். இருவருக்கும் காதல் மலர வரலாற்றின் மீது அவர்களுக்கு இருந்த ஆர்வம் தான் காரணமாம். சார்லஸ் தன் தாயாரிடமும், Lucia Santa Cruz-ஐ அறிமுகப்படுத்தியிருக்கிறார். எனினும் இரண்டு பேரும் […]
இளவரசி கேட்டிடம், ஒரு பெண் நீங்கள் நிச்சயம் ஒரு நாள் வேல்ஸினுடைய சிறந்த இளவரசியாக வெற்றியடைவீர்கள் என்று கூறியதற்கு அவர் அழகான பதிலை கூறியிருக்கிறார். பிரிட்டன் மகாராணியான இரண்டாம் எலிசபெத் மரணமடைந்ததை தொடர்ந்து, அவரின் மகன் சார்லஸ் மன்னராகவும், இளவரசர் வில்லியம் மற்றும் அவரின் மனைவியான இளவரசி கேட் மிடில்டன் இருவரும் வேல்ஸின் இளவரச தம்பதிகளாகவும் புதிய பட்டங்களை பெற்றிருக்கிறார்கள். எனினும் இந்த பட்டங்கள் அவர்களுக்கு வழங்கப்படுவதற்கு முன்பாக, நடந்த குயின்ஸ் பிளாட்டினம் ஜூபிலி விழாவில் இளவரசர் […]
பிரிட்டன் மன்னர் சார்லஸ், எகிப்தில் நடக்க இருக்கும் இந்த வருடத்திற்கான COP27 என்ற மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரிட்டன் நாட்டிற்கு மன்னரான பிறகு, சார்லஸ் முதலில் மேற்கொள்ளப்போகும் வெளிநாட்டு பயணம் தொடர்பில் எதிர்பார்ப்புகள் கிளம்பியது. அதனைத்தொடர்ந்து எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் என்ற நகரத்தில் நடக்கவுள்ள COP27 என்ற ஐ.நா காலநிலை மாநாட்டில் மன்னர் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டது. இது தான் அவர் மன்னரான பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் என்றும் […]
பிரிட்டனில் புதிய மன்னராக பொறுப்பேற்ற சார்லஸ், குயின் கான்ஸார்ட் கமீலா, வேல்ஸின் இளவரசரான வில்லியம், இளவரசி கேட் போன்றோரின் புகைப்படமானது முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக வெளியாகியிருக்கிறது. பிரிட்டன் நாட்டை 70 வருடங்கள் ஆட்சி புரிந்த மகாராணியார் இரண்டாம் எலிசபெத், உடல்நல குறைவு காரணமாக சமீபத்தில் மரணமடைந்தார். அதனைத்தொடர்ந்து அவரின் மூத்த மகனான இளவரசர் சார்லஸ் நாட்டின் மன்னராக பொறுப்பேற்றார். அவரின் மனைவியான கமீலா குயின் கான்ஸார்ட்டாகவும், வேல்ஸின் இளவரசராக சார்லஸின் மூத்த மகன் வில்லியமும், இளவரசியாக அவரின் […]
பிரிட்டன் ராஜ குடும்பத்திற்குள் வரும் முன்பே மன்னர் சார்லஸின் மனைவியான கமீலா செல்வந்தராக இருந்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் நாட்டில் தற்போது அரசராக பொறுப்பேற்று இருக்கும் சார்லஸின் மனைவியான கமீலா பற்றிய பல தகவல்கள் வெளிவந்திருக்கிறது. ராஜகுடும்பத்திற்கு வருவதற்கு முன்பே கமீலா மிகப் பெரிய செல்வந்தர் குடும்பத்தை சேர்ந்தவர். இது மட்டுமல்லாமல் அப்போது அவருக்கு ராஜ குடும்பத்தினருடன் தொடர்பும் இருந்திருக்கிறது. கமீலாவின் சகோதரரான மார்க் ஷாண்ட் பயணங்கள் குறித்து எழுதக்கூடிய எழுத்தாளராக இருந்திருக்கிறார். கடந்த 2017 […]
பிரிட்டன் நாட்டின் இளவரச தம்பதியான வில்லியம் மற்றும் கேட், வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசியாக முடிசூட்டும் விழா, தற்போது நடத்தும் திட்டம் இல்லை என்று அறிவித்திருக்கிறார்கள். பிரிட்டன் நாட்டின் மகாராணியார் மரணமடைந்ததை தொடர்ந்து இளவரசர் சார்லஸ் நாட்டின் மன்னரானார். அதனை தொடர்ந்து அவரின் மூத்த மகன் இளவரசர் வில்லியம் மற்றும் அவரின் மனைவி இளவரசி கேட் இருவரும் வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசியாக முடிசூட்டும் விழா நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் தற்போது அதற்கான திட்டம் […]
பிரிட்டன் நாட்டில் தற்போது மன்னராக சார்லஸ் பொறுப்பேற்று இருப்பதால், பணத்தாள்களில் இருக்கும் மகாராணியின் உருவம் நீக்கப்படுமா? என்பது குறித்து பல சந்தேகங்களுக்கு விடை கிடைத்திருக்கிறது. பிரிட்டன் நாட்டின் மகாராணியாரின் மறைவை அடுத்து நாட்டில் தேசிய கீதம் போன்ற பல விஷயங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. நாட்டின் பணத்தாளில் மகாராணியாரின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. தற்போது, அதில் மாற்றம் செய்யப்படுமா? அப்படி மாற்றம் செய்யப்பட்டால், இதற்கு முன்பு நம்மிடம் இருக்கும் மகாராணியின் உருவம் கொண்ட பணத்தை என்ன செய்வது? என்று மக்களுக்கு […]
பிரிட்டன் மன்னர் சார்லஸ் தன் மகன் ஹாரி உடன் இருக்கும் பிரச்சனையை தீர்த்து விட முடியும் என்று உறுதியாக நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளவரசன் சார்லஸ், மகாராணியாரின் மரணத்தை தொடர்ந்து நாட்டின் மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத்தொடர்ந்து முதல் தடவையாக நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார். அதில் அவர் தன் மகன் இளவரசர் ஹாரி குடும்பத்தின் மீது வைத்திருக்கும் அன்பை காட்டும் விதமாக பேசியிருக்கிறார். மேலும் மகாராணியாரின் மரணத்திற்கு பிறகு மகன் ஹாரி மற்றும் மேகனுடன் அவர் இருந்த […]
பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் தொடக்கத்திலிருந்தே அரண்மனையிலிருந்து வெளியேற வேண்டும் என்ற முடிவில் பிடிவாதமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹாரி அரச குடும்பத்திலிருந்து வெளியேறி தன் மனைவி மற்றும் குழந்தைகளோடு அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். இதற்கு முக்கிய காரணம் மேகனின் பிடிவாத குணம் தான் என்று கூறப்பட்டிருக்கிறது. அரண்மனை, மேகனுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்தாலும் அதனை அவர் நினைவில் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தான் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கை மூலம், அரண்மனை […]
மகாராணியார் இறந்த நாளன்று இளவரசர் ஹாரி, தாமதமாக வந்ததற்கான காரணம் வெளியாகியுள்ளது. பிரிட்டன் மகாராணியாரை ஸ்காட்லாந்தில் இருக்கும் பால்மோரலில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள் என்ற தகவல் அறிந்தவுடன் மன்னர் சார்லஸ், இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி போன்ற ராஜ குடும்பத்தினர் அவருடன் இருப்பதற்காக விரைந்தார்கள். அதன்படி இளவரசர் ஹாரி மற்ற அரச குடும்பத்தினரோடு சேர்ந்து லண்டனிலிருந்து RAF என்னும் விமானத்தில் அபெர்டீனுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். எனினும் தன் மனைவி மேகனுடன் அரச குடும்பத்தினருக்கு இருக்கும் பிரச்சனையால் […]
பிரிட்டன் நாட்டில் 15 வயதுடைய சிறுவன் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒரு மாணவனை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். பிரிட்டன் நாட்டின் ஹடர்ஸ்பீல்டில் நார்த் ஹடர்ஸ்ஃபீஸ்ட் டிரஸ்ட் என்ற பள்ளிக்கூடத்தின் நுழைவு வாயிலில் வைத்து 15 வயதுடைய கைரி மெக்லீன் என்ற மாணவனை நேற்று முன்தினம் மதியம் சிலர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இதனையடுத்து, காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று 16 வயதுடைய ஒரு சிறுவன் கைதானார். இந்நிலையில் இன்று காவல்துறையினர் […]
பிரிட்டன் நாட்டின் மன்னராக பொறுப்பேற்றிருக்கும் சார்லஸின் மனைவி கமீலா, பின்பற்றும் எளிய செயல்முறை ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வழக்கமாக, பிரபலமானவர்களும் பணக்காரர்களும் உண்ணும் உணவுகளின் விலை எப்போதும் அதிகமானதாகவே இருக்கும். ஆனால் பிரிட்டன் மன்னராக பொறுப்பேற்றுக் கொண்ட சார்லஸின் மனைவி கமீலாவிற்கு Queen Consort என்ற பதவி கிடைத்திருக்கிறது. அவ்வளவு பெரிய இடத்தில் இருக்கும் அவர் விரும்பி உண்ணும் உணவு டோஸ்ட்டில் வேக வைக்கப்பட்ட பீன்ஸ் தான். இந்த உணவு, அந்நாட்டில் புகழ்பெற்ற பல்பொருள் அங்காடி நிறுவனத்தில் கிடைக்கும். […]
டென்மார்க் நாட்டின் ராணி இரண்டாம் மார்கரெத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டென்மார்க்கின் அரண்மனை வெளியிட்ட தகவலின் படி, ராணிக்கு கொரோனா ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தற்போது, ராணி ஃப்ரெடென்ஷ்பார்க் அரண்மனையில் இருக்கிறார். ராணி, இந்த வாரத்தில் கலந்துகொள்ளவுள்ள அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்தாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டென்மார்க்கின் ராணி மார்கரெத்திற்கு, 82 வயதாகிறது. பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற பின் அவருக்கு கொரோனா ஏற்பட்டிருக்கிறது. இந்த வருடத்தில் ராணி மார்கரெத்திற்கு இரண்டாம் தடவையாக […]
அமெரிக்காவிலிருந்து தன் செல்லப் பேரன் ஹாரியின் அழைப்பு வந்த உடனே உற்சாகமாகும் மகாராணியார், சில காலங்களில் மாறிவிட்டதாக அரண்மனை பணியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். பிரிட்டன் நாட்டின் இளவரசரான ஹாரி, அரச குடும்பத்தை விட்டு பிரிந்து அமெரிக்க நாட்டிற்கு சென்று வாழ தொடங்கிய போதும், தன் பாட்டி மகாராணியாருடன் தொலைபேசியில் பேசுவாராம். தன் செல்லப் பேரன் ஹாரி அழைத்தவுடன் மகாராணியார் உற்சாகமடைவார் என்று அரண்மனை பணியாளர்கள் கூறியிருக்கிறார்கள். எனினும், சில காலங்கள் அவரின் உணர்வில் மாற்றம் ஏற்பட்டு விட்டது என்றும் […]
பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, மேலும் ஒரு வாரத்திற்கு அரச குடும்பத்தினர் துக்கமனுசரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராணியார் மறைவை தொடர்ந்து, நாடு முழுக்க துக்கமனுசரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவரின் இறுதிச்சடங்குகள் நேற்று நடந்தது. தேசிய துக்கமனுசரிப்பும் முடிவடைந்துள்ளது. எனினும், அரசக்குடும்பத்தினர், தனிப்பட்ட வகையில் துக்கமனுசரிக்க இருப்பதாக மன்னர் அறிவித்திருக்கிறார். எனவே, மகாராணியாரின் துக்கமனுசரிப்பு தினங்கள் 17-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராணியாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பின், நாடு படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. […]
பிரிட்டன் மகாராணியாரின் இறுதி சடங்கில் இளவரசர் ஜார்ஜ் மற்றும் இளவரசி சார்லட் கலந்து கொண்ட நிலையில், இளவரசர் லூயிஸ் மட்டும் ஏன் கலந்து கொள்ளவில்லை? என்பதற்கான காரணம் தெரிய வந்திருக்கிறது. பிரிட்டன் நாட்டை 70 வருட காலங்களாக ஆட்சி செய்து வந்த மகாராணியார் கடந்த ஒன்பதாம் தேதி என்று உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்தார். அவரின் இறுதிச் சடங்கு வெஸ்ட் மின்ஸ்டர் அவையில் நேற்று நடந்தது. இதில் ராஜ குடும்பத்தை சேர்ந்த நபர்களும், உலக தலைவர்களும் பங்கேற்றனர் […]
பிரிட்டன் நாட்டின் அரசராக முடிசூட உள்ள சார்லஸிடம் தனியாக பேசுவதற்கு மேகன் மெர்க்கல் அனுமதி கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் மகாராணியாரின் இறுதி சடங்குகள் முடிந்த பிறகு, ஹாரி மற்றும் மேகன் தம்பதி மீண்டும் கலிபோர்னியா திரும்ப இருக்கிறார்கள். இந்நிலையில், அதற்கு முன்பாக தங்களுக்கு ஏற்பட்ட பிரிவு குறித்து பேசுவதற்கு மேகன் தீர்மானித்திருக்கிறார். அரசரிடம் தகுந்த அனுமதி கேட்டு அவருக்கு கடிதம் அனுப்பியிருப்பதாக அரண்மனை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஹாரி மற்றும் மேகன் தம்பதி, தங்கள் இரு குழந்தைகளையும் […]
பிரிட்டன் மகாராணியாரின் இறுதி சடங்கிற்கு இளவரசர் வில்லியமின் மகன் கட்டாயமாக வரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அரச குடும்பத்தில் எந்த குழந்தை பிறந்தாலும் மற்றும் எவர் உயிரிழந்தாலும் முக்கியமாக சில மாற்றங்கள் செய்யப்படும். அதன்படி, மகாராணி மரணமடைந்த பிறகு இளவரசர் சார்லஸ், அரசர் ஆகிவிட்டார். மேலும், இளவரசர் வில்லியமின் மகனான இளவரசர் ஜார்ஜ் தன் தந்தைக்கு அடுத்து நாட்டின் மன்னராகவும் நிலையில் உள்ளார். இதனை மக்களுக்கு உறுதிப்படுத்தும் வகையில், அவர் சிறு குழந்தையாக இருந்தாலும் மகாராணியாரின் […]
பிரிட்டன் மகாராணியார், இம்மாதம் 8-ஆம் தேதி மரணமடைந்ததை தொடர்ந்து கடந்த வருடம் மரணமடைந்த தன் கணவர் இளவரசர் பிலிப்புடன் இணைந்திருக்கிறார். பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்கு இன்று நடக்கிறது. மகாராணியாரின் காதல் கணவரான இளவரசர் பிலிப் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி அன்று மரணமடைந்தார். அன்று தனக்கு ஆறுதல் கூற எவரும் இன்றி தேவாலயத்தில் தனியாக அமர்ந்திருந்த மகாராணியாரின் புகைப்படம் வெளியாகி மக்களை கலங்க செய்தது. மகாராணியார் தன் கணவர் மீது […]
பிரிட்டன் மகாராணியரின் இறுதிச்சடங்கில், இரைச்சல் தொந்தரவுகளை தவிர்ப்பதற்காக, பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. பிரிட்டன் மகாராணியார், இரண்டாம் எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து, அவரின் உடல் லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் அரச மரியாததை மற்றும் கிரீடத்துடன் வைக்கப்பட்டிருக்கிறது. நாளை அதிகாலை வரை, அங்கு வைக்கப்பட்டிருக்கும். மகாராணியின் இறுதிச் சடங்கு நடக்கும் போது, லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திற்குச் செல்லக்கூடிய மற்றும் அங்கிருந்து புறப்படக்கூடிய மொத்த விமானங்களும் ரத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராணிக்கு மரியாதை செலுத்த விமானங்கள் ரத்தாகியிருக்கின்றன. […]
பிரிட்டன் மகாராணியாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த டேவிட் பெக்கம் வந்த நிலையில், அவருடன் மக்கள் புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். பிரிட்டன் நாட்டின் மகாராணியார் மறைவை தொடர்ந்து அவரின் உடலுக்கு மக்கள் நீளமான வரிசையில் நின்று அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், இங்கிலாந்து நாட்டின் முன்னாள் கால்பந்து வீரரான டேவிட் பெக்காம், மக்களுடன் அமைதியாக பங்கேற்றார். அவரை மக்கள் அடையாளம் கண்டுவிட்டனர். மேலும், சுமார் 12 மணிநேரங்களாக நின்ற மக்கள், டேவிட் பெக்காம் கூட்டத்திற்குள் எப்படி வந்தார்? என்று ஆச்சரியமடைந்தனர். அதன்பிறகு, […]
பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மனைவியான மேகன், மீண்டும் நாடு திரும்ப தயாராகலாம் என்று அரச குடும்பத்தின் ஒரு நிபுணர் கூறியிருக்கிறார். அரச குடும்பத்தின் நிபுணரான நீல் சீன், மக்களின் அதிக அன்பால் மேகன் மீண்டும் பிரிட்டன் நாட்டிற்கு வரலாம் என்று கூறியிருக்கிறார். நாட்டின் இளவரசரான ஹாரி அமெரிக்க நாட்டை சேர்ந்த மேகன் மெர்க்கலை திருமணம் செய்து கொண்டு சில நாட்களில் அரச குடும்பத்திலிருந்து பிரிந்து அமெரிக்காவில் குடி பெயர்ந்து விட்டார். இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி இருவரும் […]
பிரிட்டனில் அரசர் சார்லஸ் எப்போதும் தன் கையில் வைத்திருக்கும் ஒரு பெட்டிக்கான ரகசியத்தை அரச குடும்பத்தின் ஒரு ஊழியர் வெளிப்படுத்தியிருக்கிறார். பிரிட்டன் நாட்டின் மன்னராக பதவியேற்றிருக்கும் சார்லஸ் தன் வாழ்க்கை முறையை சரியாக கடைபிடித்து வாழ்கிறார். எனவே, தான் செய்யும் சில விஷயங்களை அவர் மாற்றாமல் இருக்கிறார். நாட்டில் மகாராணியார் மரணமடைந்ததை தொடர்ந்து, மன்னராக பதவியேற்ற சார்லஸ், தான் செல்லும் இடங்களில் எல்லாம் ஒரு பெட்டியை வைத்திருக்கிறார். அது அனைவரிடமும் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் அரண்மனையினுடைய முன்னாள் […]
பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் உடலை 24 மணி நேரங்களும் மெய்காப்பாளர்கள் பாதுகாத்து வரும் நிலையில், ஒரு காவலர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் மகாராணியார், கடந்த 8-ஆம் எட்டாம் தேதி அன்று உடல் நலம் பாதிக்கப்பட்டு பால்மோரல் கோட்டையில் மரணமடைந்தார். அவரின் உடலை அரண்மனையிலிருந்து நேற்று லண்டனில் இருக்கும் வெஸ்ட்மின்ஸ்டர் என்ற அரண்மனைக்கு கொண்டு சென்றனர். வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இறுதிச்சடங்கு நடக்கவிருக்கிறது. அதுவரை, அந்த அரண்மனையில் வைக்கப்பட்டிருக்கிறது. 24 மணி நேரங்களும் […]
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக சில தினங்களுக்கு முன்பு காலமானார். பிரிட்டன் வரலாற்றிலேயே அதிக காலம் ராணியாக வாழ்ந்து மறைந்தவர் இரண்டாம் எலிசபெத். இவரது மறைவு பிரிட்டன் முழுவதும் சோக கடலை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து பிரிட்டன் புதிய அரசராக அவரது மூத்த மகன் சார்லஸ் பொறுப்பேற்றார். இவர் மூன்றாம் சார்லஸ் […]
பிரிட்டன் நாட்டின் மன்னராக அறிவிக்கப்படும் அதிகாரபூர்வமான நிகழ்வில் மேசையை சுத்தப்படுத்தும் ஊழியர்களிடம் அரசர் சார்லஸ் சமிக்ஞை காட்டி பேசியதை, கோபமாக பேசியதாக சிலர் விமர்சித்து வருகிறார்கள். பிரிட்டன் நாட்டை 70 வருடங்களுக்கும் மேலாக ஆட்சி செய்து வந்த மகாராணியார் இரண்டாம் எலிசபெத், கடந்த எட்டாம் தேதி அன்று உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து, அவரின் மூத்த மகனான சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றார். இந்நிலையில், சமீபத்தில் ட்விட்டரில் வெளியான ஒரு வீடியோவில் சார்லஸ், மன்னராக பொறுப்பேற்ற […]
பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மறைவை கொண்டாடிய பெண் மீது கற்கள் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத் தன் 96 வயதில் கடந்த 8-ஆம் தேதி அன்று மரணமடைந்தார். நாட்டு மக்களும், உலக தலைவர்களும் இரங்கல் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். நாட்டில் சுமார் 10 தினங்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில், ஸ்காட்லாந்து நாட்டில், ஈஸ்டர் ரோஸ் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஓட்டலின் உரிமையாளரான ஜகி பிக்கெட் என்ற பெண், மகாராணியாரின் மறைவை மதுபாட்டிலுடன் […]