பிளஸ் டூ பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் திருவள்ளூர் மணவாள நகர் பகுதியை சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி தமிழில் 100 / 100 மதிப்பெண் எடுத்து சாதித்துள்ளார். இதற்கு முன்பு நாமக்கல்லை சேர்ந்த ஸ்ரீராம் என்ற மாணவன் தமிழில் 100 மதிப்பெண் எடுத்திருந்தார். இதன்மூலம் பிளஸ் 2வில் தமிழில் சதமடித்த மாணவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் துர்கா என்ற ஒரே ஒரு மாணவி மட்டும் தமிழில் 100 […]
Tag: பிளஸ் 2
தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு என்பது மாணவர்கள் உயர்கல்வியை தேர்ந்தெடுக்கும் ஒரு முக்கியமான தேர்வாகும். எனவே அதை எழுத வேண்டிய கட்டாயம். இந்நிலையில் பிளஸ் டூ மாணவி ஒருவர் தன்னுடைய தந்தை உயிர் இழந்த சோகத்தோடு மனவலிமை தேர்வு எழுதிய சம்பவம் பரமக்குடியில் நிகழ்ந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய ஒரே மகள் சுரேகா பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ரவிச்சந்திரன் உடல் நலக்குறைவால் […]
கடந்த 5-ம் தேதி முதல் பிளஸ் டூ பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் தமிழ் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு மிகவும் எளிமையாக இருந்ததாக மாணவ மாணவிகள் தெரிவித்திருந்தனர். அதைத் தொடர்ந்து இன்று ஆங்கில தேர்வு நடைபெற்றது. இது சற்று எளிமையாக இருந்ததாகவும், குறைக்கப்பட பாடத்திட்டத்தின் அடிப்படையிலே கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததாகவும் மாணவ-மாணவிகள் தெரிவித்தனர். காப்பி அடித்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்களை கண்காணிப்பதற்காக அரசு தேர்வுத்துறை சார்பில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் […]
+2 துணைத்தேர்வு முடிவுகளை மதிப்பெண் பட்டியலாக செப்டம்பர் 13ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: +2 துணைத்தேர்வு எழுதிய தேர்வர்கள், தேர்வு முடிவுகளை செப்டம்பர் 13 ஆம் தேதி காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களின் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேல்நிலை இரண்டாம் […]
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீடு கணக்கிடப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இமாச்சல […]
பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் இடம் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை சமர்பித்தார். இந்தியாவில் அதிகரித்து வந்த தொற்று காரணமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இதையடுத்து பல மாநிலங்களும் பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்வதாக அறிவித்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் பிளஸ் டூ பொதுத் தேர்வு நடத்துவதா? வேண்டாமா? என்பது குறித்து தொடர் […]
பிளஸ் 2 பொது தேர்வு நடத்துவது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தியாவில் அதிகரித்து வந்த தொற்று காரணமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இதையடுத்து பல மாநிலங்களும் பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்வதாக அறிவித்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் பிளஸ் டூ பொதுத் தேர்வு நடத்துவதா […]
குஜராத்தில் கொரோனா தொற்று காரணமாக பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலும் பிளஸ்டூ பொதுத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் குஜராத் மாநிலத்திலும் பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி ஜூலை 1 முதல் 16ஆம் தேதி வரை இரண்டு பகுதிகளாக பொது தேர்வை நடத்த அரசு திட்டமிட்டிருந்தது. அதில் ஒரு பகுதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 வரையும், மற்றொரு […]
நாடு முழுவதும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் குறித்த முடிவுகள் இன்று எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பிரதமர் மோடி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக தெரிவித்தார். மாணவர்கள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக […]
பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான செய்முறைத்தேர்வு பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று தொடங்கியது. பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு தமிழகத்தில் அடுத்த மாதம் பொது தேர்வு நடைபெற உள்ளது. அதன்படி அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் பெரம்பலூர் மாவட்டத்தில் செய்முறைத்தேர்வு தொடங்கியது. பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பூர், பெரம்பலூர் ஆகிய இரண்டு கல்வி மாவட்டங்கள் உள்ளன. சுழற்சி முறையில் இந்தக் கல்வி மாவட்டங்களில் மாணவ-மாணவிகளுக்கு செய்முறை தேர்வு நடைபெற்று வருகிறது. மாணவ-மாணவிகள் முககவசம் அணிந்து வந்திருந்தனர். அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. அதன் பின் கைகளை கிருமிநாசினி […]
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான செய்முறை தேர்வு 150 மையங்களில் நடைபெற்றது. தமிழகத்தில் அடுத்த மே மாதம் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. அதே சமயம் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருவதால், பொதுத்தேர்வை தள்ளி வைப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முன்தினம் செய்முறை தேர்வுகள் தொடங்கின. திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை 252 பள்ளிகளில் பயிலும் 21 ஆயிரத்து 200 மாணவ-மாணவிகள் எழுத […]
பிளஸ் டூ பொதுத் தேர்வில் மே 3ஆம் தேதி நான்காம் தேதி நடைபெறும் தேர்வுகளை மாற்ற வேண்டும் என்று தமிழக தலைமை ஆசிரியர் கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு தலைமை ஆசிரியர் கழகத்தின் மாவட்ட அவசர குழு நேற்று மதுரையில் நடைபெற்றது. மாநில செயலாளர் அனந்தராமன் இதற்கு தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு பிளஸ் டூ மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மே 3ஆம் தேதி நடத்துவதாக தெரிவித்துள்ளது .சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே இரண்டாம் […]
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பள்ளி திறந்த முதல் நாளில் புறப்பட்ட பிளஸ்டூ மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பண்ருட்டி, வி.ஆண்டிக்குப்பம் அழகப்பர் தெருவை சேர்ந்த சிவக்குமார் சென்ட்ரிங் பணியை செய்து வருகிறார். இவரது மகள்கள் கீர்த்தனா மற்றும் சீதா. இவர்கள் தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படிக்கின்றனர். நேற்று ஒன்றாக சைக்கிளில் கிளம்பியுள்ளனர். ஆனால் கீர்த்தனா பள்ளிக்கு வந்து சேரவில்லை. இதுபற்றி அவரது […]
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமாகும் நிலையில், முதற்கட்டமாக ப்ளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, ஜூலை 31 ஆம் தேதியன்று மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்நிலையில் […]
மாணவர்கள் பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என வேலூர் விஐடி பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் பள்ளி கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதால், கடந்த வருடம் நுழைவுத் தேர்வு வைத்து மாணவர்களை தேர்வு செய்த பல்கலைக் கழகங்களால் இந்த வருடம் அப்படி செய்ய முடியவில்லை. அந்த […]
பிளஸ் 2 வேதியியல் தமிழ் வழி தேர்வெழுதிய மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் போனஸ் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. வினாத்தாளில் கேள்வி ஒன்றில் மொழிபெயர்ப்பில் தவறு இருந்ததால் 3 மதிப்பெண்கள் போனஸ் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல்களுக்கு இடையே தமிழகத்தல் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து முடிந்து விட்டது. இதனை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணியானது நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று சென்னையில் அதிகம் உள்ளதால் சென்னை தவிர […]
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று சென்னையில் அதிகம் உள்ளதால் சென்னை தவிர பிற மாவட்டங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடக்கும் என்று அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. அதன்படி 202 விடைத்தாள் திருத்தும் மையங்களில் பணிகள் தொடங்கியுள்ளது. 48 லட்சம் விடைத்தாள்களை திருத்தும் பணியில் 42,981 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு வரும் ஆசிரியர்களுக்கு வசதியாக போக்குவரத்து ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி […]