தமிழக மக்களிடையே நெகிழி பயன்பாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க தமிழக அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதம் கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதாவது பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் அதற்கு மாற்றாக துணி, காகித பைகள் ஆகியவற்றை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட […]
Tag: பிளாஸ்டிக்
டாஸ்மாக் கடைகளில் மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கண்ணாடிக்கு பதில் பிளாஸ்டிக் பாட்டில்களில் மது விற்பனை செய்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும் என்றும், மது பாட்டில்களை சுத்தம் செய்யும் 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் எனவும் டாஸ்மாக் […]
ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தியை ஏன் தடுத்து நிறுத்தக்கூடாது..? என்று தமிழ்நாடு அரசை சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது. பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த கோரிய வழக்கில் இந்த கேள்வியை நீதிபதிகள் எழுப்பினர். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்கள் தொடர்பாக இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. தடையை நடைமுறைபடுத்த தீவிரம்காட்டி வருகிறோம் என தமிழக அரசு சார்பாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று எச்சரிக்கை வெளியிட சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த உலகிலேயே மிக மிக தூய்மையானது எது என்றால் அது தாய்ப்பால் மட்டும் தான் . ஆனால் இப்போது அப்படி கூறுவதை மறந்துவிட வேண்டியது என்பது போன்ற ஆராய்ச்சி முடிவு வெளியாகி உள்ளது. இத்தாலியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தாய்ப்பாலில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் காணப்பட்டது ஆராய்ச்சியாளர்களை மட்டுமின்றி இந்த செய்தியை கேட்பவர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. ரோமில் குழந்தை பெற்றெடுத்து ஒரு வாரம் ஆன 34 தாய்மார்களிடம் இருந்து தாய்ப்பால் பெற்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதில் 75% […]
பர்கரை வாங்கிய நபருக்கு அதில் நீலநிற கையுறை இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலுள்ள திண்டிவனத்தை சேர்ந்த டேவிட்(29) தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரும், இவருடைய நண்பரும் புதுவை கோரிமேடு அருகில் தமிழக பகுதியான பட்டானூர் சர்வீஸ் சாலையில் கே.எப்.சி. ஓட்டலில் பர்கர் வாங்கி சாப்பிட்டுள்ளனர். அப்போது அவர் சாப்பிடுகையில் அதில் பிளாஸ்டிக் பொருள் தென்பட்டது. உடனடியாக அந்த பர்கர் முழுவதையும் பிரித்து பார்த்தபோது அதில் நீலநிற கையுறை […]
சென்னையில் மெரினா, பேசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகள் பிளாஸ்டிக் இல்லாத கடற்கரை பகுதிகளாக பராமரிக்கப்படுகிறது. இதற்காக மாநகராட்சி சார்பில் கடற்கரை பகுதிகள் சுகாதார அலுவலகர் தலைமையில் தினசரி 2 வேளைகளில் ஆய்வு செய்யப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதிலும் மெரினா கடற்கரை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தும் கடைகள் மற்றும் குப்பைகளை கொட்டும் நபர்களை கண்காணிக்க மண்டல அலுவலக தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் தேசிய நகர்புற […]
தமிழகத்தில் நெகிழிப்பொருள்கள் தடை உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தீா்ப்பை மறு ஆய்வு மேற்கொள்ள கோரிய வழக்குகள், நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா போன்றோர் அடங்கிய அமா்வில் விசாரணையில் இருக்கிறது. இவ்வழக்கில் உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையா் தரப்பில் கடந்த செவ்வாய்க்கிழமை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அவற்றில் “உணவுப் பாதுகாப்பு விதிகளில் ஆவின்பால் மற்றும் அதுசார்ந்த பொருள்களை கண்ணாடி பாட்டில்கள், நெகிழிப் பைகள், அலுமினியம் பாயில்களில் அடைத்து விற்க அனுமதிக்கிறது. ஆகவே ஆவின் நிறுவனம் நெகிழிப்பைகளை பயன்படுத்துகிறது. குடிநீா் […]
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் பிளாஸ்டிக் தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் சீராய்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை பிளாஸ்டிக்கில் அடைத்து விற்பனை செய்ய உணவு பாதுகாப்பு விதி அனுமதிப்பதாக உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்தது. மேலும், பாட்டில் பயன்பாட்டை தவிர்க்க ரயில், […]
ஆந்திரமாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையிலுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற மெகா பீச் கிளீனிங் திட்டத்தின் வாயிலாக அம்மாநில அரசு முடிவு செய்தது. அந்த வகையில் விசாகப்பட்டினம் கோகுல் பார்க் முதல் பீமலி கடற்கரை வரையிலும் சுமார் 40 இடங்களில் காலை 6- 8 மணிவரை பிளாஸ்டிக்சேகரிக்கும் பணியானது துவங்கியது. இப்பணியில் தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பெண்கள் அமைப்பினர் அப்பார்ட்மெண்ட் அசோசியன் அசோசியேஷன், காலனி அசோசியேசன், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என மொத்தம் 22,517 […]
சென்னை பெருநகர மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை கடற்கரை பகுதிகளை பிளாஸ்டிக் இல்லா கடற்கரை பகுதிகளாக பராமரிக்கும் வகையில் நேற்று முதல் சென்னை மாநகராட்சியின் சார்பில் மெரினா பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகள் சம்பந்தப்பட்ட சுகாதார அலுவலர்கள் தலைமையில் காலை, மாலை இரு வேலைகளும் ஆய்வு செய்யப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் கடை உரிமையாளர்களுக்கு அதிகபட்ச அபாரதமும் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மெரினா கடற்கரையில் நேற்று காலை மேற்கொள்ளப்பட்ட கள […]
நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி ஜூலை 1-ம் தேதி முதல் தடை செய்யப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.ரு முறை பயன்படுத்தக்கூடிய குறைவான பயன்பாடு கொண்ட அதிக குப்பையை ஏற்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருளின் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை, பயன்பாடு ஆகிய அனைத்திற்கும் நாடு முழுவதும் ஜூலை 1ம் தேதி முதல் தடை செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி […]
வால்பாறையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக நகராட்சி நிர்வாகம், இந்தியன் வங்கி சார்பில் சிறுகுன்றா எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவ – மாணவிகளுக்கு பிளாஸ்டிக்கை ஒழிப்போம் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு நகராட்சி ஆணையர் பாலு தலைமை தாங்கியுள்ளார். மேலும் நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் சீனிவாசன் முதன்மை […]
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஒரு முறை மட்டும் உபயோகப்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத நாட்டை உருவாக்குவதே சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கு பங்களிப்பு வழங்குவதையும் ஒரு இயக்கமாக மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடவும், தூய்மை பராமரிக்கவும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் மனதின் குரல் நிகழ்ச்சி […]
தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கும் நோக்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் மஞ்சப்பை என்ற இயக்கத்தை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து இந்த இயக்கத்தை பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிளாஸ்டிக்கை பார்த்தாலே மக்களுக்கு கோபம் வரவேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் […]
திருப்பதியில் தினமும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனாவிற்கு பிறகு அதிகளவில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகளும் தேவஸ்தானம் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்திருப்பதியில் இன்று முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஷாம்பு, குடிநீர் பாட்டில்கள் போன்ற அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்துச் செல்ல பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் தடைவிதித்துள்ளது. மேலும் அடிவாரத்திலுள்ள அலிபிரி சோதனைச்சாவடியில் பக்தர்கள் கொண்டுவரும் பொருட்கள் சோதனை செய்த பின்னரே […]
காலநிலை மாற்றம் புவி வெப்பமயமாதல் போன்ற ஆபத்துகளை உலகம் எதிர்கொண்டு வருகின்றது. மேலும் பாலிதீன் பைகளால் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய சூழல் சீர்கேடு நடைபெறுகிறது. இது பற்றி பேசிய முதல்வர் ஸ்டாலின் பிளாஸ்டிக் உலகம் முழுவதும் அழிக்க முடியாத குப்பைகளாக குவித்து இருக்கின்றது. இதனால் மண், நீர், காற்று என அனைத்து சுற்றுச்சூழலும் மாசுபட்டு உயிரினங்கள், கடல்வாழ் உயிர்கள் அனைத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தி மனிதர்களுக்கும் ஆபத்தை விளைவித்து இருக்கின்றது. இதனை தடுக்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை இயக்கம் மூலமாக […]
இன்றைய காலகட்டத்தில் பிளாஸ்டிக் என்பது மக்களுடைய வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு பொருளாக மாறிவிட்டது. இந்நிலையில் பிளாஸ்டிக் நாம் பயன்படுத்தும் பொருள்களில் மட்டும் இல்லாமல் நம்முடைய உடம்பிலும் இருப்பதாக அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது நாம் சாப்பிடும் பொருட்கள் மூலமாக நம்முடைய உடம்பில் 0.07mm அளவிற்கு பிளாஸ்டிக் இருப்பதாக அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இது மனிதர்களின் உடம்பில் இருந்து எடுக்கப்பட்ட ரத்தத்தை சோதித்து பார்த்தபோது தெரியவந்துள்ளது. இந்த பிளாஸ்டிக் நாம் சாப்பிடும் உணவு பொருட்களில் சேர்க்கக்கூடிய உப்பின் மூலமாக கூட […]
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தேசிய அளவிலான சுத்தமான காற்று மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த தென் மாநிலங்களுக்கான ஆய்வுடன் கூடிய கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் முக்கிய அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசி அமைச்சர் சிவி மெய்யநாதன், தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் தற்போது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆட்சியில் 174 பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. எங்கேயாவது பிளாஸ்டிக் பார்த்தவுடனே நமக்கு கோபம் வர வேண்டும். தமிழகத்தில் […]
திருப்பூர் மாநகரில் கடைகள், பின்னலாடை நிறுவனங்கள் என எங்கும் நெகிழிப் பைகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதில் கழிவாக மாறும் நெகிழிப் பொருட்களை ஆங்காங்கே வீசி செல்வதால் நகரமே நெகிழியால் சூழப்பட்டது போல் காட்சி அளித்து வருகிறது. மேலும் சில பின்னலாடை நிறுவனங்களிலிருந்து நெகிழிக் குப்பைகள் மற்றும் இதர கழிவுகளை நொய்யல் ஆற்று கரையோரம் மக்கள் நடமாட்டம் இல்லாத சாலை ஓரங்களிலும் கொட்டி செல்கிறார்கள். அதே நேரத்தில் பொது மக்கள் அதிகம் புழங்கும் மளிகை, காய்கறி உணவகங்களில் […]
ஊட்டி, கொடைக்கானலில் பிளாஸ்டிக் தடையை கண்டிப்புடன் அமல்படுத்துவது ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கோவை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வன பாதுகாப்பு தொடர்பாக வழக்குகள் நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது உதகமண்டலம் கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட போதிலும் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒருமுறை பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்களை கொண்டு […]
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தும் கடைகளுக்கு சீல் வைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதாவது பிளாஸ்டிக் தடையை எதிர்த்த மறு ஆய்வு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் அளித்துள்ளது. இதற்கிடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதாக ரூபாய் 36 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்தது. இதையடுத்து பிளாஸ்டிக் உற்பத்தி செய்ததாக 167 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அண்டை மாநிலங்களில் […]
தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து புதுச்சேரி பிளாஸ்டிக் தயாரிப்போர் சங்கம் சார்பில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி பிளாஸ்டிக் மீதான தடை தொடரும் என தீர்ப்பளித்தார். பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை நீக்க கோரி புதுச்சேரி பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள் சங்கம் மேல் முறையீடு செய்திருந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் போது அதை […]
மத்திய அரசு ஜூலை 1-ம் தேதி முதல் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் எந்தெந்த பொருளுக்கு தடை என்ற பட்டியலை மத்திய அரசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. மேலும் ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட காது குடையும் குச்சி, பிளாஸ்டிக் குச்சி பொருத்தப்பட்ட பலூன்களுக்கு தடை என்றும் பிளாஸ்டிக் கூடை ஐஸ்க்ரீம் குச்சிகள், தெர்மாகோல் ஆகியவற்றிற்கு தடை விதித்துள்ளது. இதனைத்தொடர்ந்து பிளாஸ்டிக் தட்டு மற்றும் கப், பத்திரிகைகள், சிகரெட் […]
ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.. பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட இயர் பட்ஸ், பிளாஸ்டிக் குச்சி பொருத்தப்பட்ட பலூன்கள், பிளாஸ்டிக் கொடி, ஐஸ்க்ரீம் குச்சிகள், அலங்காரத்திற்கு பயன்படுத்தப்படும் தெர்மாகோல், பிளாஸ்டிக் தட்டு மற்றும் கப், கத்தி, ஸ்ட்ரா, சிகரெட் அட்டைகள் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே வரும் ஜூன் 30ம் தேதிக்குள் மேற்குறிய பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பு, பூஜ்ஜியமாகி இருப்பதை சம்பந்தப்பட்ட […]
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை 2018 ஜூன் 25இல் அரசு விதித்தது. அதன்படி பிளாஸ்டிக் கைப்பை, பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டு, டம்ளர், தர்மாகோள் கப்பு, பிளாஸ்டிக் தாளுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் உணவு பொருட்கள் கட்ட பயன்படுத்தும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பைகள், பாக்கெட்டுகள், உறி ஞ்சு குழல்களுக்கும் அரசு தடை விதித்திருந்தது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம், தேசிய பசுமை தீர்ப்பாயம் விதிக்கும் உத்தரவை அமல்படுத்த பிளாஸ்டிக் உற்பத்தி […]
தமிழகத்தில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் விதிமீறல்களை மிறி செயல்பட்டது. இதனால் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் 3000 பிளாஸ்டிக் தொழிற்சாலைகளை மூடப்பட்டுள்ளது என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் கூடியது, பிளாஸ்டிக் முழுமையாக அடுத்த ஆண்டு இறுதிக்குள் தடை செய்யப்படும். அதுமட்டுமில்லாமல் சட்டத்துக்கு விரோதமான சாயப்பட்டறைகள் கழிவுகளை கண்காணிப்பதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு ஈரோடு மாவட்டத்தில் பொது சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட வேண்டும். மேலும் […]
சென்னை தலைமை செயலகத்தில் சுற்றுச் சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.. அப்போது அவர், தமிழகத்தில் அடுத்த ஆண்டிற்குள் பிளாஸ்டிக் முழுமையாக தடை செய்யப்படும். தமிழகத்தில் அரசின் விதிமுறைகளை மீறி பிளாஸ்டிக் தயாரித்த 3,000 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன என்று கூறினார்.
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு தொழில் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் ஒரு முறைப்படுத்தப்பட்ட தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களைபயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பொருட்களான உணவுப் பொருட்களை கட்ட பயன்படுத்துதல் பிளாஸ்டிக் உறை, உணவு அருந்து மேஜைமீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் […]
நடிகை டாப்ஸி பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருப்பவர் நடிகை டாப்ஸி. இவர் சமூகப் பிரச்சினைகள் குறித்த கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் பற்றிய தகவல் குறித்த ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் செல்லப்பட்டு தான் வருகிறது.மறைந்திருக்கும் பிளாஸ்டிக்கை […]
இங்கிலாந்தில் நேற்று முதல் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களுக்கு தடை விதிக்கப்பட்டது உலக நாடுகள் பலவற்றில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் பிளாஸ்டிக் கவர் போன்றவைகளுக்கு தடை நீடித்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தின் பானங்களை கலக்கும் பிளாஸ்டிக் குச்சிகள் பிளாஸ்டிக் ஸ்டராக்கள் போன்றவை நேற்று முதல் தடை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் அந்நாட்டில் 4.7 பில்லியன் ஸ்டராக்கள் 316 பானம் கலக்கும் பிளாஸ்டிக் குச்சிகள் 1.8 பில்லியன் பிளாஸ்டிக் பட்கள் உபயோகப்படுத்தப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் […]