கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை வனப்பகுதியில் ஏராளமான மன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதனால் நகராட்சி நிர்வாகத்தினர் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்து சுற்றுலா பயணிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி ஆணையாளர் பாலுவின் உத்தரவின் படி துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் துப்புரவு பணியாளர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை நடத்தியுள்ளனர். அப்போது ஒரு குடோனில் அதிரடியாக சோதனை நடத்தி தின்பண்டங்களை பேக்கிங் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். […]
Tag: பிளாஸ்டிக் பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட புலியூர்குறிச்சி, மேட்டுக்கடை பகுதியில் இருக்கும் கடைகளில் புகையிலை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என நகராட்சி அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பள்ளிக்கூடத்தின் அருகில் உள்ள ஒரு கடையில் புகையிலை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து உரிமையாளருக்கு அதிகாரிகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதேபோல் கடைக்காரர்களிடமிருந்து பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.6,000 அபராதம் வசூலிக்கப்பட்டது.
பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருந்த குடோன்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் இருக்கும் குடோன்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக மாநகர நகர் நல அலுவலர் பிரேமாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி நகர் நல அலுவலர் பிரேமா தலைமையில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குடோன்களுக்கு சென்று அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது அரசினர் பெண்கள் கல்லூரி பின்புறம் இருக்கும் 2 குடோன்களில் பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை […]