நாடு முழுவதும் வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி முதல் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த நடவடிக்கையை டெல்லி அரசு தீவிரமாக தற்போது செயல்படுத்தி வருகின்றது. அது தொடர்பாக பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள்,விற்பனையாளர்கள் மற்றும் கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வகையில் பிளாஸ்டிக் கழிவுகளின் உற்பத்தியை கண்காணிக்கவும்,ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை சட்டவிரோதமாக தயாரிக்கும் தொழிற்சாலைகளை கண்டறிந்து அவற்றிற்கு சீல் வைக்கும் நடவடிக்கையையும் […]
Tag: பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
பிரசித்தி பெற்ற கோவிலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் வனப் பகுதியில் அமைந்துள்ளதால் காட்டு யானைகள், காட்டுப்பன்றி, மான், சிறுத்தை போன்ற வனவிலங்குகள் வசித்து வருகிறது. இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வனப் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை வீசுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இதன் காரணமாக வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாட்டர் பாட்டில், பிளாஸ்டிக் பை போன்ற […]
சுற்றுச்சூழல் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் பிளாஸ்டிக் தடையை தமிழக அரசு விரிவுபடுத்தியது. டிசம்பர் 31 முதல் 120 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை .செப்டம்பர் 9 முதல் 100 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல 60 கிராம் அளவிற்கு கீழே நெய்யப்படாத பிளாஸ்டிக் பைகளுக்கு செப்டம்பர் 30 முதல் தடை விதிக்கப்படுவதாக கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.