பிளாஸ்டிக் இன்று நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாக திகழ்கின்றது. பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் சுற்றுப்புற சூழல் மாசடைகின்றது. அதனால் கடைகளில் பிளாஸ்டிக் பைகள், டம்ளர் போன்ற பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என அதிகாரிகள் தடை செய்திருக்கின்றனர். மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதனால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி பல்வேறு விதமான விழிப்புணர்வு பேரணிகளையும் நடத்தி வருகின்றார்கள். திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் அரசு தடை செய்த பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை தடுப்பதற்கு அவ்வபோது சோதனை மேற்கொள்ளப்பட்டு […]
Tag: பிளாஸ்டிக் பொருட்கள்
சென்னையில் மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரை பகுதிகளை பிளாஸ்டிக் இல்லா கடற்கரை பகுதிகளாக மாற்ற கடந்த 5- ஆம் தேதி முதல் தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் என்று மாநகராட்சி சார்பாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இருப்பதாவது, இங்கு உள்ள கடற்கரை பகுதிகளை பிளாஸ்டிக் இல்லாதவாறு பராமரிக்கும் விதமாக சுகாதார அலுவலர்களின் தலைமையில் காலை மற்றும் மாலை ஆய்வு மேற்கொள்ளப்படும். அந்த ஆய்வின்போது பிளாஸ்டிக் பொருட்களானது பறிமுதல்செய்யப்பட்டு […]
நாட்டில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களை தடைசெய்யும் பிரதமரின் அழைப்பை ஏற்று வருகின்ற ஜூன் 30 ஆம் தேதிக்குள் கண்டறியப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யும் இந்தியாவின் உறுதிப்பாட்டை நிறைவேற்றும் நோக்கத்தில் விரிவான நடவடிக்கைகளை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் இன்று (ஜூலை 1ம் தேதி) முதல் கண்டறியப்பட்டுள்ள ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் தயாரிப்பு, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி […]
நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது வரும் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வதற்கான நடைமுறையை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த விரிவான செயல் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி ஜூலை 1ம்தேதி முதல் இந்தியா முழுவதும் தடை செய்யப்படுவதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி மத்திய […]
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைக்கு சீல் வைக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். எனவே மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக நாகர்கோவில் பகுதியில் நெகிழி பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் மகேஷ் எச்சரித்திருந்தார். இந்நிலையில் கோட்டார் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த […]
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் தயாரிப்பு, பயன்பாடு ஆகியவற்றுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. பிளாஸ்டிக் பயன்பாடு காரணமாக சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் இறுதியாக கடலை அடைந்து நீர்வாழ் உயிரினங்களின் வாழ்வுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், இந்தியாவில் 2022ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தத்தக்க பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, விநியோகம், தேக்கிவைத்தல், விநியோகம் […]
பிளாஸ்டிக் பாக்ஸில் சாப்பிடுபவர்களுக்கு ஆண்மை குறைபாடு வரும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் நம் உடலுக்கு செல்வதால் நம் உடலில் பாதிப்பு ஏற்படுகின்றது. இதனால் நமது உடலுக்கு என்னென்ன கேடுகள் உண்டாகிறது என்பதை குறித்து இதில் பார்ப்போம். எளிதில் மக்கும் தன்மை அற்ற பொருளில் முதன்மை இடத்தில் உள்ளது பிளாஸ்டிக். நவநாகரீக உலகில் பிளாஸ்டிக் எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளது பிளாஸ்டிக் டப்பாக்கள் மூலம் சமீபகாலமாக, பிளாஸ்டிக் மாசு இந்த உலகில் பெருமளவில் அதிகரித்து வருவதால் உடலுக்கு […]
கொடைக்கானலில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. கொடைக்கானலில் சமீபகாலமாக”பிளாஸ்டிக் பயன்பாடுகள்”அதிகரித்து” வருவதால் நீரோடைகள், புல்வெளிகள், வனப்பகுதிகள், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுச் சூழல் மாசுபடுகிறது. இதைத் தவிர்த்து கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் பிளாஸ்டிக் பயன்படுத்திவிட்டு அவற்றை கொடைக்கானல் பகுதிகளில் விட்டுச் செல்கின்றனர். இதனால் சுற்றுலா இடங்களில் அதிகளவில் பிளாஸ்டிக் பொருட்கள், பைகள் கிடக்கிறது. இவற்றை வன விலங்குகள் உண்பதாலும், நகர்ப் பகுதிகளிலுள்ள கால்நடைகள் உண்பதாலும் […]