கொரோனா நோயளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் தற்பொழுது ஒமைக்ரான் தொற்றானது வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுவந்த நோயாளிகளின் ரத்தத்தில் இருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்மாவை தற்போது பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு செலுத்தக் கூடாது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை அளித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை முறை […]
Tag: பிளாஸ்மா சிகிச்சை
கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் பிளாஸ்மா சிகிச்சை அதிகாரப்பூர்வமாக கைவிடப்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு முதலே கொரோனா தொற்று பரவிவருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் உடலில் உள்ள இரத்த அணுக்களின் எதிரணுக்களை பிரித்து பாதிக்கப்பட்ட மற்ற நோயாளிகளுக்கு செலுத்தி கொரோனா வைரஸ்க்கு எதிராக போராடும் சிகிச்சைக்கு பெயரே பிளாஸ்மா சிகிச்சை. இந்த சிகிச்சை கடந்த […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகின்றது. இதனால் நாளுக்கு நாள், இறப்பு விகிதங்களும், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இதற்கு மத்தியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலையால் நாடே பெரும் துயரத்திற்குள்ளாகியுள்ளது. இதனால் தங்களுடைய உறவுகளையும், அன்பானவர்களையும் இழக்கும் சூழ்நிலை […]
கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் பிளாஸ்மா சிகிச்சையை கைவிட உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு முதலே கொரோனா தொற்று பரவிவருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் உடலில் உள்ள இரத்த அணுக்களின் எதிரணுக்களை பிரித்து பாதிக்கப்பட்ட மற்ற நோயாளிகளுக்கு செலுத்தி கொரோனா வைரஸ்க்கு எதிராக போராடும் சிகிச்சைக்கு பெயரே பிளாஸ்மா சிகிச்சை. இந்த சிகிச்சை கடந்த […]
கொரோனா நோயாளிகளுக்கு கண்மூடித்தனமாக பிளாஸ்மா சிகிச்சையை பயன்படுத்துவது சரியல்ல என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது. இந்தியாவில் 39 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மிதமான கொரோனா பாதிப்பு கொண்ட நோயாளிகளை வைத்து பிளாஸ்மா சிகிச்சை பயன்பாடு குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு நடத்தியது. அதில் பிளாஸ்மா சிகிச்சை பெறாதவர்களுடன் ஒப்பிடுகையில் பிளாஸ்மா சிகிச்சை பெற்றவர்களுக்கு நோயின் தீவிரத்தை குறைப்பதிலோ மரணத்தை தவிர்ப்பதிலோ அந்த சிகிச்சையை எந்த வகையிலும் உதவவில்லை என்று தெரியவந்தது. […]
பிளாஸ்மா சிகிச்சை ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தீவிரமாக பரவி பெரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்காத நிலையில் பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் இந்த சிகிச்சையை நடைமுறைப்படுத்த நேற்று முன்தினம் தான் அதிபர் டிரம்ப் ஒப்புதல் கொடுத்துள்ளார். ஆனால் உலக சுகாதார அமைப்பு இந்த சிகிச்சை முறையை அங்கீகரிக்கவில்லை. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவும்யா […]
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையளிக்க அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து கொண்டிருக்கிறது. அந்நாட்டில் தற்போது வரை 1,76,000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதற்கு எதிரான சிகிச்சையாக, கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த நோயாளிகளிடமிருந்து பெறப்பட்ட ரத்த பிளாஸ்மா சிகிச்சைக்கு அவசர ஒப்புதல் அளிப்பதாக அமெரிக்காவின் அதிகாரிகள் நேற்று கூறியிருந்தனர். இந்த பிளாஸ்மாவில் அதிக சக்தி வாய்ந்த ஆன்டிபாடிகள் இருப்பதால், அவை நோயை எதிர்த்து […]
தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சகைக்கான முதற்கட்ட ஆராய்ச்சி பணிகள் தொடங்கியிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சிகிச்சை முழு பயன்பாட்டிற்கு வர குறைந்தது 6 மாதங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பிளாஸ்மா பரிசோதனை சிகிச்சை செய்ய 21 மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில், மகாராஷ்டிராவில் உள்ள 5 மருத்துவமனைகள், குஜராத்தில் 4, தமிழகம், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 2 மருத்துவமனைகள், பஞ்சாப், தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் […]
பிளாஸ்மா பரிசோதனை சிகிச்சை 21 மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள 5 மருத்துவமனைகள், குஜராத்தில் 4, தமிழகம், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 2 மருத்துவமனைகள், பஞ்சாப், தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு மருத்துவனைக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் லாவ் அகர்வால் கூறியதாவது, ” தகவல்களை ஆராய்ந்த பின்னர், சிவப்பு, ஆரஞ்சு […]
டெல்லியில் கொரோனா பாதிப்புக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சைகள் மூலம் நன்றாக பலன் கிடைத்துள்ளன என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஐசியூ-வில் இருந்த நபர் பிளாஸ்மா தெரபி சிகிச்சை மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அவர் கூறியுள்ளார். முன்னதாக, கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 76 பேருக்கு […]
மகாராஷ்டிராவில் முதல் முறை பிளாஸ்மா சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார். பிளாஸ்மா சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 53 வயதான நபர் உயிரிழந்துள்ளதாக மும்பை லீலாவதி மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. மகாராஷ்டிராவில் நேற்று புதிதாக 583 கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநிலத்தில் மொத்தமாக பாதித்தோர் எண்ணிக்கை 10,490 ஆக உயர்ந்துள்ளது. அதில் 7,061 பேர் மும்பையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மும்பை தாராவியில் மட்டும் 396 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் கொரோனா […]
பிளாஸ்மா சிகிச்சை என்பது நிரூபிக்கப்பட்ட சிகிச்சை அல்ல. அது இன்னும் சோதனை நிலையில் தான் உள்ளது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர், பிளாஸ்மா சிகிச்சை பரிசோதனை பல இடங்களில் செய்யப்படுகிறது. இருப்பினும் இது ஒரு சிகிச்சையாக பயன்படுத்தப்படலாம் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இதன் செயல்திறனைப் படிப்பதற்காக ஐ.சி.எம்.ஆர் தேசிய அளவிலான ஆய்வு ஒன்றை மேற்கொண்டு வருகிறது. எனவே, இந்திய மருத்துவ கவுன்சில் மூலமாக […]
தமிழகத்தில் ஐசிஎம்ஆர் அனுமதி கிடைத்தவுடன் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ள அனுமதி கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் அனுமதி பெற்று பிளாஸ்மா தெரபி மூலம் தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முதல்வர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார் என்றும் கொரோனா பரவாமல் தடுக்கவே மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் விளக்கம் […]
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 128 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,376 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 49 வயது நபர் கடந்த 4ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில […]