பிரபலமான கூகுள் pixel 6A ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் டிஸ்ப்ளே நல்ல முறையில் இருப்பதால் பல வாடிக்கையாளர்கள் போனை வாங்க வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால் போனில் விலை 40 ஆயிரம் ரூபாய் இருந்தால் விரும்பிய வாடிக்கையாளர்களால் வாங்க முடியாத சூழல் இருந்தது. ஆனால் தற்போது பிளிப்கார்ட்டில் சூப்பர் ஆஃபர் போடப்பட்டுள்ளது. இந்த ஆஃபரில் நீங்கள் google ஸ்மார்ட்போனை வெறும் 13 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம். ஆஃபரில் 40,000 மதிப்புள்ள ஸ்மார்ட் போனின் விலை […]
Tag: பிளிப்கார்ட்
தீபாவளி நெருங்குவதை முன்னிட்டு பிளிப்கார்ட், அமேசான், நைகா, மிந்த்ரா மற்றும் அஜியோ போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் ஆஃபர்களை அள்ளிவீசி வருகின்றன. இதில் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்தாலும் மேக்-அப் பொருட்கள் வாங்க நைகாவையே பலரும் நாடுகிறார்கள். அதுபோல துணிமணிகள் வாங்க மிந்த்ரா சிறந்த தளமாக இருக்கிறது. எலக்ட்ரானிக் பொருட்கள் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசானில் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.
இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளமான ப்ளிப்கார்ட்டில் தற்போது பண்டிகையை முன்னிட்டு பிக் பில்லியன் டேஸ் விற்பனை தொடங்கியுள்ளது. இந்த பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் பல்வேறு விதமான பொருள்களுக்கு கவர்ச்சிகரமான ஆஃபர்கள் போடப்பட்டுள்ளது. இதனால் ஆன்லைனில் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஃப்ளிப்கார்ட்டில் 1500 ரூபாய்க்கு வாட்ச் ஒன்றினை ஆர்டர் செய்துள்ளார். இந்த பார்சல் கடந்த 7-ம் தேதி இளம் […]
இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங்கில் முக்கியமாக 2 தளங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதாவது அமேசான், பிளிப்கார்ட் ஆகிய இரண்டுமே இந்திய இ-காமர்ஸ் துறையின் ஜாம்பவான்களாக கருதப்படுகிறது. இவை 2ம் இப்போது பெரும் தள்ளுபடி சலுகை விற்பனைகளை வழங்குகிறது. அதன்படி அமேசானில் இந்த விற்பனை கிரேட் இந்தியன் பெஸ்டிவல் எனும் பெயரில் தரப்படுகிறது. அதே சமயத்தில் பிளிப் கார்ட்டில் பிக் பில்லியன் டேஸ் விற்பனை எனும் சலுகை விற்பனையானது நடந்துவருகிறது. இவற்றில் பெரும்பாலன பொருட்களுக்கு தள்ளுபடிகள் அள்ளி வழங்கப்படுகிறது. பிளிப்கார்ட், […]
இந்தியாவில் இ-காமர்ஸ் துறையில் அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. தள்ளுபடி விலையில் பொருட்களை வழங்குவது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு கேஷ் பேக் சலுகைகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இத்தளங்கள் மூலம் விற்பனையாளர்கள் பல நெருக்கடிக்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் இ-காமர்ஸ் துறையை ஜனநாயகப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு புதிதாக ஓஎன்டிசி என்ற கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இதன் வழியே யார் வேண்டுமானாலும் தங்கள் […]
ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில் விவோ கார்னிவல் தின விற்பனை நடைபெற்று வருகின்றது. இந்த விற்பனை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரை நடைபெறும் என்று சிப்காட் நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த விற்பனையில் விவோ சாதனங்களுக்கு பல சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விற்பனையானது அனைத்து இடைநிலை மற்றும் உயர்நிலைப் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்கி வருகின்றது. ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்களுக்கு இந்த தள்ளுபடி ஒரு சிறந்த வாய்ப்பாகும். […]
பிளிப்கார்ட் இன்று (பிப்ரவரி 15) முதல் “Sell Back Program” எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பழைய ஸ்மார்ட் போன்களை நல்ல விலையில் பிளிப்கார்ட்டில் விற்கலாம். பிளிப்கார்ட் செயலியில் Sell Back என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதையடுத்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதன் மூலமாக பழைய மொபைலின் விலையை அறிய முடியும். விலையை உறுதிப்படுத்திய 48 மணி நேரத்தில் உங்கள் முகவரிக்கு பிளிப்கார்ட் நிர்வாகி வந்து போனை சேகரித்து கொள்வார்.
Nothing Ear-1 ஆர்டர் செய்தவருக்கு காலி டப்பாவை அனுப்பி வைத்துள்ளது பிளிப்கார்ட் நிறுவனம். நாக்பூரைச் சேர்ந்த டிவி நடிகர் பாராஸ் கல்னாவாத் சமீபத்தில் ஃபிளிப்கார்ட் ஆப்பில் Nothing Ear-1 என்ற ஹெட்போனை ஆர்டர் செய்திருந்தார். பின்னர் சில நாட்கள் கழித்து அவருக்கு பார்சல் வந்தது. அந்த பார்சலை பிரித்து பார்த்த பாராஸ் கல்னாவாத் மிகுந்த அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில் அந்த பார்சலில் ஒன்னும் இல்லாமல் காலி டப்பாவாக இருந்தது. https://twitter.com/paras_kalnawat/status/1448163886398590977 இதையடுத்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் […]
ஆகஸ்ட் 19 2021 முதல் இ-காமர்ஸ் போர்டல் ஆன பிளிப்கார்ட் தனது மொபைல் பொனான்சா விற்பனையை அறிவித்துள்ளது. இதில் பலவகை ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இதில் கிடைக்கும் மோட்டோ ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாசமான ஒப்பந்தங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக மோட்டோரோலா வகை செல்போனுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது. இந்த தள்ளுபடி விற்பனை ஆகஸ்ட் 23 வரை நடைபெறுகிறது. மேலும் கட்டணமில்லா இஎம்ஐ வசதியும் வழங்குகிறது. அதனால் வாடிக்கையாளர்கள் இந்த அறிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் […]
ஆகஸ்ட் 19 2021 முதல் இ-காமர்ஸ் போர்டல் ஆன பிளிப்கார்ட் தனது மொபைல் பொனான்சா விற்பனையை அறிவித்துள்ளது. இதில் பலவகை ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இதில் கிடைக்கும் மோட்டோ ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாசமான ஒப்பந்தங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக மோட்டோரோலா வகை செல்போனுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது. இந்த தள்ளுபடி விற்பனை ஆகஸ்ட் 23 வரை நடைபெறுகிறது. மேலும் கட்டணமில்லா இஎம்ஐ வசதியும் வழங்குகிறது. அதனால் வாடிக்கையாளர்கள் இந்த அறிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் […]
சுதந்திர தினத்தை முன்னிட்டு பிளிப்கார்ட்டில் சிறப்பு தள்ளுபடி விற்பனை கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு விற்பனை இன்றுடன் முடிவடைகிறது. ப்ளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களுக்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதி இந்த தள்ளுபடி தொடங்கியது. இதில் ரூ.14,999 மதிப்புள்ள ரெட்மி நோட் 9 போனுக்கு ரூ.3000 தள்ளுபடியும், ரூ.13,999 மதிப்புள்ள ரெட்மி 9 பவர் போனுக்கு ரூ.3000 தள்ளுபடியும், ரூ.8,499 மதிப்புள்ள ரெட்மி 9 i போனுக்கு ரூ.1,500 தள்ளுபடியும் […]
அந்நிய முதலீட்டு விதிமுறைகளை மீறியதன் காரணமாக ப்ளிப்கார்ட் நிறுவனத்திற்கு 1.35 பில்லியன் டாலர் அபராதம் செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வசதிகளுக்கு ஏற்றவாறு இந்தியர்களும் ஸ்மார்ட்போன் ஆன்லைன் ஷாப்பிங் போன்றவற்றில் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர். இதனால் ஆன்லைன் மின்னணு வர்த்தக நிறுவனங்களும் இந்தியாவில் தங்களது தொழிலை விரிவுபடுத்தி வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றன. அமேசான், ஃப்ளிப்கார்ட் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இந்த சந்தையில் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றன. பிளிப்கார்ட் நிறுவனத்தின் பங்குகளை வால்மார்ட் வாங்கிய […]
கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் மிக அதிக அளவு நடந்தது. அதில் பிளிப்கார்டு போன்ற மளிகை ஈகாமர்ஸ் வலைத்தளத்தின் பொருட்களை மிக எளிதாக வாங்க முடிந்தது. அதனால நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகை களை அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது ஒரு ரூபாய்க்கு ஷாப்பிங் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் பிளிப்கார்ட்டில் ‘Flipkart big saving days sale’ சிறப்பு விற்பனை ஜூன் 13ஆம் தேதி தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் […]
அதானி நிறுவனத்துடன் ப்ளிப்கார்ட் நிறுவனம் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனம் அதானி நிறுவனத்துடன் ஒரு பெரிய ஒப்பந்தத்தை போட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகத்தை வலுப்படுத்தும் விதமாக மும்பையின் 5.34 ஒரு தரவு மையமும், சென்னையில் அதானி கன்ஸ்ட்ரக்ஷன் பிரிவில் ஒரு தரவு மையம் அமைக்க உள்ளது. இதன் மூலம் நேரடியாக 2500 பேருக்கும் மறைமுகமாக ஆயிரம் பேருக்கும் வேலை கிடைக்கும் என்று அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது.