Categories
தேசிய செய்திகள்

“NO BAG DAY” மாணவர்களுக்கு இனி ஜாலிதான்….. பள்ளிகளில் விரைவில் தொடங்கும் சூப்பர் திட்டம்…..!!!!

பீகார் மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நோ பேக் டே என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மாணவர்களின் சுமையை குறைப்பதற்காக வாரத்தில் ஒரு நாள் கட்டாய விளையாட்டு தினமாக அனுசரிக்கப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்துகதற்கான முயற்சியை அரசு எடுத்து வருகிறது. இது குறித்து கல்வித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீபக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பள்ளி மாணவர்கள் வாரத்திற்கு ஒருமுறை மதிய உணவு மட்டுமே கொண்டு வந்தால் போதும். அன்றைக்கு புத்தகங்களை […]

Categories
தேசிய செய்திகள்

மகாவீர் அகாரா பேரணி…..! 8 வயது சிறுவன் என்றும் பாராமல்…… ஓ மைலார்ட்…..!!!!

8 வயது சிறுவனையும், அவரது 70 வயதான தாத்தாவையும் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீஹார் மாநிலத்தில் கடந்த செப்டம்பர் எட்டாம் தேதி மகாவீரர் அகாரா பேரணி நடத்தப்பட்டது. இந்த ஊர்வலம் இஸ்லாமிய தெருவுக்குள் சென்றபோது கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தை தடுப்பதற்கு போலீசார் முயற்சி செய்தனர். இதனால் 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கலவரத்தில் ஈடுபட்டதாக 8 வயது சிறுவனையும் அவரது தாத்தாவையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: கள்ளச்சாராயம் குடித்த 8 பேர் பலி….. பலர் கவலைக்கிடம்…. அதிர்ச்சி….!!!!

பீகார் மாநிலம் சாப்ரா, சரண் என்ற இடத்தில் கள்ள சாராயம் குடித்த 8 பேர் இறந்த நிலையில், மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளனர். பீகார் மாநிலத்தில் நாளுக்கு நாள் கள்ளச்சாரயம் குடித்து உயரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனிடையே தற்போது, சாப்ரா, சரண் என்ற இடத்தில் கள்ள சாராயம் குடித்த 8 பேர் இறந்த நிலையில், மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளனர். கிராமத்தில் உள்ள பகுதிக்கு மருத்துவக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு, ஒவ்வொரு வீட்டிலும் பரிசோதனை செய்யப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“இவருல்லாய்யா மனுஷன்” சம்பளம் வேண்டாம்…. ரூ.24 லட்சத்தை திருப்பி கொடுத்த பேராசிரியர்….!!!

பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள நிதிஷேஸ்வர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்தி உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் லாலன் குமார்(33). இவர் 2019 ஆம் வருடம் செப்டம்பரில் பணியில் சேர்ந்ததிலிருந்து அவர் பெற்ற மொத்த சம்பளமான ரூபாய் 24 லட்சத்தை பல்கலைக்கழகத்திடம் திருப்பி அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தான் பாடம் எதுவும் எடுக்காமல் சம்பளம் வாங்குவதற்கு என்னுடைய மனசாட்சி அனுமதிக்கவில்லை. ஆன்லைன் வகுப்புகளின் போது கூட இந்தி வகுப்பிற்கு ஒரு சில மாணவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

சிறையில் படித்து ஐஐடி ரேங்க்…. சாதனை படைத்த இளைஞர்….!!!

முயற்சி செய்தால் முடியாதது என்றும் ஒன்றுமில்லை; உழைப்பு என்றும் கைவிடுவது இல்லை என்ற பழமொழிக்கு ஏற்ப, பீகார் மாநிலத்தில் உள்ள நவாடா சிறையில் இருக்கும் சூரஜ் என்ற இளைஞன் IIT-JAM தேர்வில், தேசிய அளவில் 54 வது இடத்தை  பிடித்துள்ளார். மேலும் இந்த இளைஞர் கொலை குற்றம் சாட்டப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். இதையடுத்து எதிர்காலம் குறித்த நம்பிக்கை இழக்காமல் சிறை அதிகாரிகள் மற்றும் படித்த கைதிகளின் உதவியுடன் IIT நடத்திய கூட்டு நுழைவுத் தேர்வில் […]

Categories
தேசிய செய்திகள்

பிச்சையில் ஓர் புரட்சி…! “நாட்டின் முதல் டிஜிட்டல் பிச்சைக்காரர்”…. போன் பே மூலம் பிச்சை…!!!!

பிச்சை எடுக்கும் நபர் ஒருவர் கூகுள் பே மற்றும் போன் பே மூலம் பிச்சை கேட்கும் சம்பவம் நெட்டிசன்கள் இடையே விவாதத்தை கிளப்பியுள்ளது. பீகார் மாநிலம் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள பெட்டியா நகரில் ராஜூ என்ற நபர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள பெட்டையா ரயில்நிலையத்தில் கூகுள் பே மற்றும் போன் பே மூலம் பிச்சை எடுத்து வந்துள்ளார். தற்போதைய காலத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில்,அவர் தான் பிச்சை கேட்கும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிலே முதல்முறை….! ஒரே நாளில் தீர்ப்பு…. கற்பழிப்பு வழக்கில் செம அதிரடி…!!

இந்தியாவில் முதல் முறையாக கற்பழிப்பு வழக்கில் குற்றவாளிக்கு ஒரே நாளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பீகாரின் அராரியா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமியை கடந்த ஜூலை 22 ஆம் தேதி ஒரு நபர் கற்பழித்துள்ளார். இது தொடர்பான வழக்கு மறுநாளே பதிவு செய்யப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு அராரியா  போக்ஸோ கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த மாதம் 4-ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பான சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு இருதரப்பிலும் வாதம் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.960,00,00,000.. அடேங்கப்பா இவ்வளவு பணத்தை யாரு எங்களுக்கு போட்டாங்க…? திக்குமுக்காடிப் போன பெற்றோர்கள்….!!!

இரண்டு பள்ளி மாணவர்களின் வங்கி கணக்கில் ரூ. 960 கோடி பணம் டெபாசிட் செய்து இருப்பதை பார்த்த வங்கி ஊழியர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். பீகார் மாநிலத்தில் மாணவர்களுக்கு சீருடை வாங்குவதற்கு அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இதற்காக பள்ளி மாணவர் பெயரில் வங்கிகள் தொடங்கப்பட்டு அதில் தொகைகள் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கதிகார் மாவட்டம் பகுரா பஞ்சாயத்தில் உள்ள பஸ்தியா கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களான குருச்சந்திர விஷ்வா, ஆசிஷ் குமார் […]

Categories
தேசிய செய்திகள்

ரயிலில் உள்ளாடையுடன் வாக்கிங் சென்ற எம்எல்ஏ…. வைரலாகும் புகைப்படம்…!!!

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதள கட்சி எம்எல்ஏ கோபால் மண்டல் என்பவர் ரயிலில் உள்ளாடையுடன் நடந்து சென்ற சம்பவம் அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. பீகார் மாநிலம் ஐக்கிய ஜனதா தள கட்சி எம்எல்ஏ கோபால் மண்டல். இவர் நேற்று முன்தினம் இரவு பாட்னா-டெல்லி தேஜஸ் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்தார். அப்போது தனது மேலாடையை கழற்றி விட்டு பனியன் மற்றும் உள்ளாடையுடன் அங்குமிங்கும் நடந்துள்ளார். மேலாடைகளை கழட்டிவிட்டு வெறும் பனியன் […]

Categories
தேசிய செய்திகள்

சுய தொழில் தொடங்க ஆசையா…? படுக்கையறையில் காளாண் வளர்ப்பு… மஷ்ரூம் லேடியின் வெற்றிக்கதை…!!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் படுக்கையறையில் காளான் வளர்த்து வரும் மஷ்ரூம் லேடியாக மாறியுள்ளார் பிகார் மாநிலத்தை சேர்ந்தவீணா தேவி என்ற நபர் காளான்களை பயிரிடுவதில் புகழ் பெற்றவர். இவர் படுக்கை அறையிலேயே காளான்களை பயிரிட்டு வருகிறார் .குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் உள்ளிட்டோரும் இதற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். உலகில் பல்வேறு துறைகளில் பெண்கள் அசாத்திய திறமைகளை வெளிக் காட்டி வருகின்றனர் காட்சிப் பொருளாக ஆண்கள் அருகில் […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி ஆகும்னு நினைச்சு கூட பாக்கல…. பிரசாதம் சாப்பிட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு… உடல்நலம் பாதிப்பு…!!!

பிகார் மாநிலத்தில் பிரசாதம் சாப்பிட்ட 100 பேருக்கு உடல் நிலை சரியில்லாமல் போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம், முங்கர் மாவட்டத்தை சேர்ந்த குத்துவான் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதை சாப்பிட்ட நூறுக்கும் மேற்பட்டோருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து கிராம மக்கள் கூறும் பொழுது தங்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதை நாங்கள் சாப்பிட்டோம். முதலில் எங்களது குழந்தைகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. பிரசாதம் சாப்பிட்ட சிறிது நேரத்தில் குழந்தைகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள்… திடீரென பாய்ந்த மின்னல்… குழந்தைகள் உள்பட 5 பேர் பலி…!!

பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 4 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம், சாஹர்சா மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் கடுமையான காற்று மற்றும் மின்னலும் தொடர்ச்சியாக இருந்தது. வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் மீது மின்னல் தாக்கியதில் 4 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். அவருடன் இருந்த மற்றொரு நபரும் உடல் கருகி உயிரிழந்தார். மேலும் ஒரு நபர் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு டம்ளர் தண்ணீரை குடித்ததற்காக…. இப்படியா பண்றது… மாற்றுத்திறனாளிக்கு நடந்த கொடூர சம்பவம்…!!!

ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்து குடித்த மாற்றுத்திறனாளியை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம்,  பெகுசராய் என்ற மாவட்டத்தில்,பேதுபுரா என்ற கிராமத்தை சேர்ந்த சோட் லால் சஹானி. இவர் ஒரு மாற்றுத் திறனாளி. சம்பவர் தினத்தன்று சோட் லால் தனது கிராமத்திற்கு அருகில் இருந்த குளத்திற்கு மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். இதையடுத்து மீன்பிடித்து விட்டு வீடு திரும்பும் போது தாகம் ஏற்பட்டதால் தினேஷ் சஹானி என்பவரின் வீட்டிற்கு முன்னால் தண்ணீர் பானையில் […]

Categories
தேசிய செய்திகள்

பீகார் மாநிலத்தில் ஜூன் 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு… முதல்வர் நிதிஷ்குமார் அதிரடி…!!

பீகார் மாநிலத்தில் ஜூன் 1ஆம் தேதி வரை முழு ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து பீகார் மாநிலத்தில் 25ஆம் தேதி வரை முழு ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூன் 1-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

திருமணமான 6 மணி நேரத்தில்… இப்படி ஆகுமென்று நினைச்சு கூட பாக்கல… கதறி அழுத கணவன்…!!

பீகார் மாநிலத்தில் திருமணமான 6 மணி நேரத்தில் மணமகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. திருமணம் மற்றும் இறப்பு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. திருமணத்திற்கு 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல் பீகார் மாநிலத்தில் கடந்த 8ஆம் தேதி கொரோனா வழிகாட்டுதலுடன் ரமேஷ் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த கூத்தெல்லாம்….. ”பீகார்ல மட்டுமே நடக்கும்”…. வெளியான அதிர்ச்சி செய்தி …!!

உயிருடன் இருப்பவர் இறந்துவிட்டார் எனக் கூறி இறப்பு சான்றிதழ் வழங்கி உடலையும் வீட்டுக்கு அடைத்து வைத்த கொடூரம்  பீகாரில் நடைபெற்றது. பீகாரின் பாட்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 3ஆம் தேதி 40 வயதுடைய கண்ணுகுமார் என்பவர் பெருந்தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டார். திடீரென அவர் இறந்து விட்டார் என உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது. பெருந்தொற்றால் இறந்தால் அவரது உடல் நேரடியாக தகன மேடைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கடைசியாக அவரின் முகத்தை பார்க்க அவரது கவச உடையை அகற்றிய போது அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

மனைவி மற்றும் 2 குழந்தைகளை… உயிருடன் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய கணவன்… அதிர்ச்சி..!!

மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை உயிருடன் எரித்துக் கொன்ற இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பீகார் மாநிலத்தை சேர்ந்த முகமது தாஹிர் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் உயிருடன் எரித்துக் கொண்டு உள்ளார். இது குறித்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் அவர்கள் தீயில் எரிந்து கருகினர். முதற்கட்ட விசாரணையில் தாஹிர்க்கும், அவரது மனைவிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தனது […]

Categories
தேசிய செய்திகள்

இடதுசாரிகள் போராட்டம் -தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த போலீசார் ..!!!

பீகார் மாநிலம் பாட்னாவில் கல்வி, சுகாதாரம் மற்றும் வேலை வாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி கட்சி உறுப்பினர்களை தண்ணீர் பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் போலீசார் கூட்டத்தை கழித்தனர் . பிறகு அவர்களை வழு கட்டாயமாக கைது செய்தனர் .

Categories
தேசிய செய்திகள்

ஹோட்டலில் பெண்களுடன்…. உல்லாசமாக 3 நீதிபதிகள்… அதிரடி பணி நீக்கம்..!!

நேபாளத்தில் ஹோட்டலில் பெண்களுடன் தங்கியிருந்த மூன்று நீதிபதிகளை மாநில பொது நிர்வாகத்துறை பணியிடம் நீக்கம் செய்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நேபாளத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் பெண்களுடன் தங்கியிருந்தபோது போலீஸ் சோதனையில் சிக்கிய பிகாரைச் சேர்ந்த 3 நீதிபதிகள் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாநில பொது நிர்வாகத் துறை திங்கள்கிழமை அறிவித்துள்ளது. நேபாள நாட்டில் விராட் நகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவமனையில் முக்கிய பிரபலம்… மிகவும் கவலைக்கிடம்..!!!

பீகார் மாநில முதல்வர் லாலு பிரசாத் மருத்துவமனையில் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு கிட்னி செயலிழந்து விட்டதாகவும் ரத்த அழுத்தம் அதிகரித்து விட்டதாகவும், அவரது உடல் நிலை மோசமடைந்து உள்ளதாகவும், சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பீகார் மாநில முதல்வர் லாலு பிரசாத்தின் சிறுநீரகம் 75% செயலிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2017-ல் மாட்டுத் தீவன வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறை தண்டனையிலிருந்த லாலுபிரசாத் […]

Categories
தேசிய செய்திகள்

பீகார் கல்வி அமைச்சர் மேவலால் சவுத்ரி ராஜினாமா …!!

பீகார் மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சர் திரு. மேவலால் சவுத்ரி பதவியேற்று 3 நாட்களில் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். அண்மையில் நடைபெற்று முடிந்த பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து ஐக்கிய ஜனதாதளம் தலைவர் நிதீஷ் குமார் பீகார் முதல்வராக தொடர்ந்து நான்காம் முறையாக பதவியேற்றார். மேலும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 12 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அந்த கட்சியை சேர்ந்த மேவலால் […]

Categories
தேசிய செய்திகள்

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளியேற வேண்டும் …!!

பீகாரில் பாஜக கூட்டணியில் இருந்த நிதிஷ்குமார் வெளியேற வேண்டுமென்றும் திரு. தேஜாஸ்ரீ யாதவ் முதலமைச்சராக ஆதரவு தர வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் பாஜக கூட்டணி 125 இடங்களில் வெற்றி கண்டுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் காங்கிரஸ் கூட்டணி 110 இடங்களை கைப்பற்றியது. அதேநேரம் தனிப்பெரும் கட்சியாக லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் 75 இடங்களில் வெற்றி பெற்றது. […]

Categories
தேசிய செய்திகள்

நிதிஷ்குமாரை முதல்வராக பா.ஜ.க சம்மதிக்‍குமா …!!

குறைந்த இடங்களில் வெற்றி பெற்ற போதிலும் நிதிஷ்குமார் மீண்டும் பீகாரின் முதலமைச்சர் ஆவதற்கு சிவசேனா கட்சியே காரணம் என மகாராஷ்டிரா அரசியலை சுட்டிக்காட்டி அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவட் தெரிவித்துள்ளார். பீகாரின் கூட்டணி கட்சியான திரு. நிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பாரதிய ஜனதாவை விட குறைவான இடங்களையே பெற்றுள்ளது. இதனால் முதல்வர் பதவியை பாஜக விட்டு தருமா என்ற கேள்வி எழுந்தது. மேலும் மகாராஷ்டிரா சம்பவம் போல் பீகாரிலும் ஏற்பட்டுவிடுமோ என்ற எண்ணமும் அக்காட்சிக்கு ஏற்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

தீண்டத்தகாதவர்கள் போல் நடத்திய பெரிய கட்சிகள் – ஓவைசி விமர்சனம்

பீகார் தேர்தலின்போது பெரிய கட்சிகள் எல்லாம் தங்களை தீண்டத்தகாதவர்கள் போல் நடத்தியதாக AIMIM கட்சியின் தலைவர் திரு. அசாதுதீன் ஓவைசி வேதனை தெரிவித்துள்ளார். பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட திரு. அசாதுதீன் ஓவைசியின் AIMIM கட்சி தனித்துப் போட்டியிட்ட 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனினும் தேர்தலில் வாக்குகளை ஓவைசியின் கட்சி பிரித்து பாஜாகாவுக்கு மறைமுகமாக உதவியதாகவும் பாஜக-வின் BT கட்சி எனவும் எதிர்க்கட்சிகளால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த […]

Categories
தேசிய செய்திகள்

இன்று ”பீகார் சட்டசபை” தேர்தல் ரிசல்ட்… நாடு முழுவதும் எகிறியுள்ள எதிர்பார்ப்பு …!!

பீகார் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டுமுடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 234 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அக்டோபர் 28 நவம்பர் 3,7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. பீகாரில் மொத்தம் 56 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்க இருக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 55 வாக்குகள் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மையங்கள் அனைத்திலும் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு …!!

பீகார் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டுமுடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 234 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அக்டோபர் 28 நவம்பர் 3,7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. பீகாரில் மொத்தம் 56 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை நாளை காலை தொடங்க இருக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 55 வாக்குகள் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மையங்கள் அனைத்திலும் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

பீகார் சட்டப்பேரவைக்கு 2-ம் கட்ட தேர்தல் – 94 தொகுதிகளில் வாக்குப்பதிவு

பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு சற்று நேரத்திற்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. 243 சட்டபேரவை தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்தலில் முதலமைச்சர் திரு. நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி பாஜக-யுடன் கூட்டணி வைத்துள்ளது. முக்கிய எதிர் கட்சியான திரு. தேஜாஸ்ரீ யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது. 71 […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு தொடக்கம் …!!

பீகாரில் முதற்கட்டமாக தேர்தல் நடைபெறும்  71 சட்டமன்ற தொகுதிகளுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. 243 இடங்களைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக நாளை மறுநாள் 71 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் 3-ம் தேதி 94 தொகுதிகளுக்கும். நவம்பர் 7-ஆம் தேதி 78 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம் பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி பிராந்திய ஜனதா தளம் காங்கிரஸ் இடது […]

Categories
தேசிய செய்திகள்

பா.ஜ.க. அறிவித்த தேர்தல் வாக்‍குறுதி தவறில்லை என தேர்தல் ஆணையம் விளக்கம் …!!

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்றால் மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்ற பாஜகவின் தேர்தல் வாக்குறுதியில் தவறில்லை என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. 243  உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபைக்கு வரும் 28 அடுத்த மாதம் 3, 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதலமைச்சர் திரு. நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துடன் பாஜகவும் திரு  லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் காங்கிரசும்  கூட்டணி […]

Categories
தேசிய செய்திகள்

சட்டசபை தேர்தல்- டி.வி வானொலி பிரசாரம் செய்யும் நேரம் இருமடங்காக அதிகரிப்பு

பீகார் சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களை நேரடியாக சந்தித்து பிரச்சாரம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதால் தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலம் பிரசாரம் செய்யும் நேரம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா நெருக்கடிக்கு இடையே பீகார் சட்டசபை தேர்தல் வரும் 28-ஆம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காரணமாக தேர்தலில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களை நேரடியாக சந்தித்து பிரச்சாரம் செய்வதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அதன்படி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் […]

Categories
தேசிய செய்திகள்

கால்நடை தீவன ஊழல் வழக்கு – லாலுவுக்கு ஜாமீன்

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தொடர்புடைய சாய்பாஷா கருவூல நிதிமோசடி வழக்கில் பீகார் மாநில முன்னாள் முதல்வர் திரு. லாலு பிரசாத்யாதவ் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கால்நடைத் தீவன ஊழல் தொடர்பாக பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இதில் சில வழக்குகளில் தண்டனை பெற்றுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சிறைவாசம் அனுபவித்து வரும் திரு. லாலு பல்வேறு உடல்நலக் கோளாறுகள் […]

Categories

Tech |