Categories
உலக செய்திகள்

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா… பிரபல நாட்டில் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்…!!!!!

கடந்த 2019 -ஆம் வருடம் இறுதியில் சீனாவின் உகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகளை எல்லாம் தவிக்க வைத்தது. தற்போது அமெரிக்கா, இந்தியா என பெரும் பாதிப்புக்கு ஆளான நாடுகள் எல்லாம் பெருமளவில் கொரோனா தொற்றுகளை கட்டுப்படுத்தி உள்ளது. இந்நிலையில் சீனாவில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலையை கொண்டு வருவதற்காக ஊரடங்கு பொது முடக்கங்கள் மற்றும்  கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது. இது ஒரு காலகட்டத்தில் மக்களுக்கு பெரும் விரக்தியை ஏற்படுத்தியது. […]

Categories
உலக செய்திகள்

பீஜிங்கில் தீவிரமடையும் கொரோனா…. மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் அமல்…!!!

சீன நாட்டின் தலைநகரான பீஜிங்கில் கொரோனா அலை ஏற்படக்கூடிய ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் பீஜிங் மாகானத்தில் ஏப்ரல் மாதத்தில் அதிக கொரோனா பரவல் இருந்தது. ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை தீவிரமடைந்தது. எனவே அந்நகரில் கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்பிறகு அங்கு கொரோனா குறைந்தது. எனவே, கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அந்நகரில் கொரோனா அலை ஏற்படும் ஆபத்து உள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். அதிகமான மக்கள் தொகை காரணமாக, […]

Categories
உலக செய்திகள்

“போச்சா! வீரர்கள் உட்பட 119 பேருக்கு கொரோனா”…. ஒலிம்பிக் போட்டி என்ன ஆகும்….? வருத்தத்தில் வீரர்கள்….!!!

சீன தலைநகரான பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கவுள்ள நிலையில் வீரர்கள், பணியாளர்கள் உட்பட 119 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் பணியாளர்கள் என்று மொத்தமாக 119 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். எனவே, வீரர்களும், வீராங்கனைகளும் தங்களின் ஒலிம்பிக் கனவு பாழாகி விடும் என்று […]

Categories
உலக செய்திகள்

ஒலிம்பிக் போட்டி ஏற்பாடுகள் தீவிரம்…. வீரர்கள் உட்பட 37 பேருக்கு கொரோனா பாதிப்பு…!!!

சீனத் தலைநகரான பீஜிங்கில் நடக்கவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள வந்த வீரர்களுக்கும் போட்டி ஏற்பாட்டாளர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. சீனாவின் தலைநகரான பீஜிங்கில் அடுத்த மாதம் 4ஆம் தேதியிலிருந்து 20-ஆம் தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கவிருக்கிறது. கொரோனா பரவலுக்கு இடையில் பீஜிங் மாகாணத்தில் அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே அங்கு குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வந்தவர்கள் மற்றும் போட்டி  ஏற்பாட்டாளர்களுக்கு சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு […]

Categories
உலக செய்திகள்

ரகசிய ஊரடங்கு…. கடும் கட்டுப்பாடுகள்…. சீனாவில் நடக்கும் மர்மம்…!!!

சீனாவின் தலைநகரான பீஜிங்கில் இருபத்தி மூன்று நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இரண்டு மாவட்டங்களில் கடும் ஊரடங்கு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடப்பதற்கு இன்னும் நான்கு நாட்கள் தான் இருக்கிறது. இந்நிலையில் பீஜிங் நகரத்தின் பகுதிகளில் அதிகாரிகள் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறார்கள். அங்குள்ள Fengtai என்ற மாவட்டத்தில் சுமார் 2.26 மில்லியன் மக்கள் வசிக்கிறார்கள். இதனுடன் சேர்த்து 68 ஆயிரம் மக்கள் வசிக்கும் Anzhenli என்ற பகுதி போன்றவற்றில் கடும் […]

Categories
உலக செய்திகள்

எங்கள் ஒலிம்பிக் போட்டியை கெடுக்கிறார்கள்…. அமெரிக்கா மீது சீனா பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

சீன அரசு, தங்களின் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை கெடுக்க அமெரிக்கா பல வீரர்களுக்கு பணம் கொடுத்து போட்டிக்கு எதிரான செயல்களை செய்ய உத்தரவிட்டிருப்பதாக குற்றம்சாட்டியிருக்கிறது. பீஜிங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் தொடர் அடுத்த மாதம் 4-ஆம் தேதி அன்று ஆரம்பிக்க இருக்கிறது. இதற்காக, சீனா கொரோனாவிற்கு எதிரான பல்வேறு கட்டுப்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், அமெரிக்கா தங்களின் போட்டியை கெடுக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வருவதாக சீனா குற்றம் சாட்டியிருக்கிறது. இதற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்திருக்கிறது. அதாவது, […]

Categories
உலக செய்திகள்

“சீனாவில் அதிகரித்த கொரோனா!”… தீவிர பரிசோதனையில் இறங்கிய மருத்துவர்கள்…!!!

சீனாவின் தலைநகரான பீஜிங்கில் கொரோனா தீவிரமடைந்து வருவதால் கடும் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. சீனாவின் தலைநகரான பீஜிங்கில் உள்ள பல பகுதிகளில் பொது போக்குவரத்து முடக்கப்பட்டிருகிறது. அங்கு, சுமார் 43 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை கூறியிருக்கிறது. எனவே, இருமல் சளி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுக்கு மருந்து வாங்குபவர்களின் தகவல்கள் சேகரிக்கப்படுகிறது. அவர்களுக்கு 72 மணி நேரங்களுக்குள் கொரோனா பரிசோதனை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்.

Categories
உலக செய்திகள்

சீனாவில் தலைதூக்கும் கொரோனா…. கடும் கட்டுப்பாடுகளை மீறி… 127 பேருக்கு தொற்று உறுதி…!!!

சீனாவில் கடும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 127 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த 2019-ஆம் வருடத்தில் தோன்றிய கொரோனா, படிப்படியாக உலக நாடுகளில் பரவ தொடங்கியது. அதன்பிறகு, சீனா சில மாதங்களில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்தது. ஆனால், உலக நாடுகள் கொரோனாவோடு போராடி கொண்டிருந்தது. இந்நிலையில், சீனாவில் மீண்டும் கொரோனா தலைகாட்டத் தொடங்கியிருக்கிறது. குறைவான தொற்றுகள் பதிவான நிலையில், அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. எனினும், சுமார் 127 […]

Categories
உலக செய்திகள்

முதல் தடவையாக…. குளிர்கால ஒலிம்பிக்கிற்கு தபால் தலை…. ஐ.நா அறிவிப்பு….!!!

ஐ.நா, பீஜிங் மாகாணத்தில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்காக முதல் தடவையாக தபால் தலை வெளியிட்டிருக்கிறது. சீனாவின் பீஜிங் மாகாணத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இதற்காக ஐ.நாவின் தபால் நிர்வாக பிரிவானது, முதல் தடவையாக தபால் தலை வெளியிடுவதாக அறிவித்திருக்கிறது. வரும் பிப்ரவரி மாதம் 4ஆம் தேதியில் இருந்து 20ம் தேதி வரை பீஜிங் மாகாணத்தில் குளிர்கால ஒலிம்பிக் தொடர் நடக்கிறது. இந்நிலையில், ஹாக்கி, பனிச்சறுக்கு போன்ற விளையாட்டுகள் பொறிக்கப்பட்ட தபால் தலைகள் வெளியிடப்பட்டிருக்கிறது.

Categories
உலக செய்திகள்

“பசுமையாக ஆரம்பித்த திட்டம்!”….. புகைமூட்டத்துடன் போராடும் சீனா…. என்ன காரணம்….?

சீனாவில் ஒலிம்பிக் பனிச்சறுக்கு போட்டிக்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில்,  தொழிற்சாலைகளிலிருந்து வரும் புகைமூட்டத்தை குறைக்க  அரசாங்கம் போராடிக் கொண்டிருக்கிறது. பீஜிங் நகரில் பனிச்சறுக்கு போட்டிக்காக செயற்கை முறையில் பனிப்பொழிவை உருவாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு தண்ணீருக்கு தட்டுப்பாடு உண்டாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சீன அரசு, பசுமை ஒலிம்பிக் என்ற நோக்கத்திற்காகத் தான் இதில் களமிறங்கியது. அதற்காக, குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடத்தும் ஏற்பாடுகளை கடந்த 2015 ஆம் வருடத்தில் ஆரம்பித்தது. அப்போது, அந்நகருக்கு அருகில் […]

Categories
உலக செய்திகள்

“எங்கள் நாட்டிலிருந்து அதிகாரிகள் வர மாட்டார்கள்!”….. ஜப்பான் அரசு வெளியிட்ட தகவல்….!!

சீனாவில், வரும் பிப்ரவரி மாதம் நடக்க இருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை பார்க்க, எங்கள் நாட்டின் அரசு அதிகாரிகள் வரமாட்டார்கள் என்று ஜப்பான் அறிவித்திருக்கிறது. சீனாவின் தலைநகரான பீஜிங்கில் நடக்க இருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், ஜப்பான் நாட்டின் சார்பில், டோக்கியோ ஒலிம்பிக் 2020 ஆம் வருடத்திற்கான தலைவர் மற்றும் தங்கள் நாட்டின் ஒலிம்பிக் கமிட்டி தலைவர் இருவரும் தான் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது சீன நாட்டில் உய்குர் முஸ்லிம்களை எதிர்த்து மனித உரிமை மீறல் […]

Categories

Tech |