பிரான்சில் ஈ.கோலை என்னும் கிருமிகள் நெஸ்ட்லே நிறுவன தயாரிப்பான உறையவைக்கப்பட்ட பீட்ஸாக்களில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈ.கோலை கிருமி தொற்றால் கிட்டத்தட்ட 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்த வகை கிருமிகள் ஆயுள் முழுமைக்கும் பிரச்சனையை உருவாக்கக்கூடியதாகவும், மரணத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் உள்ளது. இதுவரை இரண்டு இளைஞர்கள் ஈ.கோலை கிருமி தொற்றிய பீட்ஸாக்களை சாப்பிட்டதால் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பில் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் Fraîch’Up frozen pizzas […]
Tag: பீட்ஸா
தாய்லாந்து நாட்டில் கஞ்சா பீட்சா விரைவில் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டில் முக்கியமான துரித உணவுகளில் ஒன்றாக இருக்கும் “கிரேசி ஹேப்பி பீட்சாவில்” தற்போது அதிகாரப்பூர்வமாக கஞ்சாவை சேர்த்து தயாரிக்கின்றனர். இது தொடர்பில் பீட்சா நிறுவன பொது மேலாளர் பானுசக் சூன்சாட்பூன் கூறியிருப்பதாவது, நாட்டிலிருக்கும் அனைத்து பீட்சா நிறுவன கிளைகளிலும் இந்த கிரேசி ஹாப்பி பீட்சா விற்பனை செய்யப்படுகிறது. எனினும், அதிக அளவில் விற்பனை ஆகவில்லை. எனவே இந்த பீட்சாவுடன் கஞ்சா சேர்க்கப்படுகிறது. அதனை சாப்பிடும் […]
பிரேசில் அதிபர் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாததால், நியூயார்க் மாகாணத்தில் நடைபாதையில் நின்று பீட்சா சாப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில், இன்று ஐ.நா சபை கூட்டம் தொடங்கியிருக்கிறது. இக்கூட்டத்தில் 193 நாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். மேலும், கொரோனா பரவலால், தலைவர்கள் சிலர் காணொலிக்காட்சி வாயிலாக பங்கேற்க இருக்கிறார்கள். மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 23ஆம் தேதி அன்று அமெரிக்கா செல்கிறார். இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்க சென்ற, பிரேசில் நாட்டின் அதிபரான ஜயர் […]
சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வு மேற்கொண்டுவரும் விஞ்ஞானிகள் உண்பதற்காக பீட்சா அனுப்பி வைக்கப்பட்டது. அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து சிக்னஸ் சென்ற சரக்கு ராக்கெட் மூலம் பீட்சா கடந்த இரு தினங்களுக்கு முன்பு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ராக்கெட் நேற்று காலை சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது. அதில் ஆப்பிள், தக்காளி மற்றும் கிரிபடம் போன்றவைகளுடன் மூன்றே முக்கால் கிலோ எடை கொண்ட பீட்சாவை விண்வெளி மையத்தில் உள்ள ஏழு வீரர்களும் பகிர்ந்து கொண்டனர்.
சுவீடனில் ஒரு சிறைச்சாலையில் கைதிகள் இருவர் சேர்ந்து பாதுகாப்பு அதிகாரிகளை சிறைபிடித்த நிலையில் பீட்சா தந்தால் விடுவிப்பதாக கூறிய சம்பவம் நடந்துள்ளது. சுவீடன் சிறைச்சாலையில் இருக்கும் கொலைக் குற்றவாளிகளான ஹானெட் மஹமத் அப்துல்லாஹி மற்றும் ஐசக் டியுவிட் என்ற இளைஞர்கள் எஸ்கில்ஸ்டூனா நகரத்தில் இருக்கும் சிறைச்சாலையில் ஆயுள் கைதிகளாக இருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று இருவரும் பாதுகாப்பு அதிகாரிகளுக்குரிய இடத்தில் எப்படியோ நுழைந்துவிட்டனர். அதன்பின்பு அதிகாரிகள் இருவரை ஒரு அறைக்குள் அடைத்தனர். மேலும் அவர்கள் ரேசர் பிளேடுகள் வைத்திருந்துள்ளனர். […]
பிரபல ஹீரோயினான கீர்த்தி சுரேஷிற்கு நடிகர் ஒருவர் பீட்சா ஊட்டி விடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது “ராங்குதே” என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகர் நிதின் நடித்துள்ளார். மேலும் வெங்கி இயக்கியுள்ள இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் மார்ச் 26ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஹீரோவான நிதின் கீர்த்தி சுரேஷிற்கு பீட்சா ஊட்டி […]