தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு போக்குவரத்து துறை சார்பாக பேருந்துகள் இயக்கப்பட்ட வருகின்றன. அதிலும் குறிப்பாக பண்டிகை நாட்கள் மற்றும் விசேஷங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் பயணிகளின் குறைகளையும் அரசு நிவர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் சேலம் கோட்டை அரசு பேருந்துகளில் சேவை குறைபாடுகளை 9489203900 என்ற whatsapp எண்ணில் பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படிக்கட்டில் பயணம், பயணிகளிடம் டிக்கெட் கட்டணத்திற்கு மீதி சில்லரை வழங்காமல் இழுத்தடிக்கும் […]
Tag: புகார் எண்
உணவகங்கள் சேவை வரியை விதிப்பது தொடர்பாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி உணவு சாப்பிட்ட பிறகு அதற்கான பில்லில் உணவகங்கள் சேவை வரியை தாமாக சேர்க்கக்கூடாது. வேறு எந்த ஒரு பெயரிலும் சேவை வரியை வசூல் செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளது. சேவை வரி செலுத்துமாறு நுகர்வோரை உணவகங்கள் கட்டாயப்படுத்தக்கூடாது. உணவு சாப்பிடுவதற்கான விலை ரசீதில் சேவை கட்டினத்தை சேர்க்க கூடாது என்று தெரிவித்துள்ளது. அவ்வாறு விதிகளை மீறி சேவை வரி விதித்தால் […]
நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக நலிவடைந்த மக்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் அட்டை மூலம் அரசு பல்வேறு நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறது. அதனால் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் ஒரு சில ரேஷன் கடைகளில் விற்கப்படும் பொருட்கள் எடை குறைவாகவும்,கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ரேஷன் கடைகளில் விற்கப்படும் பொருட்கள் எடை குறைவாக இருந்தால் […]
தார் ரோட்டில் குழிகளை செப்பனிட ஒரு வாட்ஸ்அப் எண்ணை கோவை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் ஏரியாவிலுள்ள குழிகளை புகைப்படம் எடுத்து விவரங்களுடன் இந்த எண்ணுக்கு அனுப்பலாம். அதாவது கோவைமாநகராட்சியின் பல பகுதிகளில் பயணிக்கவே முடியாத அளவுக்கு உள்ள ரோடுகள், இப்போது தமிழக நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சாலையின் அகலம் உள்ளிட்ட அளவீடுகள் சரியாக இருப்பதுடன் தரமான ரோடுகளை அமைக்கவும் மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையில் […]
மத்திய அரசுக்கு எதிராக 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாள் வேலை நிறுத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தது. அந்த வகையில் முதல் நாள் போராட்டம் நேற்று தொடங்கியது. தமிழ்நாட்டில் ஐஎன்டியுசி, சிஐடியு, ஏஐடியுசி, தொமுச, எச்எம்எஸ் உட்பட 10 தொழிற்சங்கங்கள் இந்த பொது வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. காப்பீடு, எண்ணெய் நிறுவனங்கள், வங்கி ஊழியர்கள் ஆகிய பொதுத்துறை ஊழியர்கள் சம்மேளனங்களும் கலந்துகொண்டுள்ளனர். இதனால் நேற்று பொதுப்போக்குவரத்து அதிகமாக பாதிக்கப்பட்டது. அதாவது நேற்று அரசு பேருந்துகள் ஓடாததால் […]
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இத்தேர்தலுக்காக அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும், வார்டுகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். தற்போது வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. மேலும் தேர்தல் பணிகளுக்காக அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனிடையில் தேர்தல் பயிற்சி வகுப்புகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் […]
உணவகங்களில் புகார் எங்களை வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. உணவகங்கள், மளிகை கடைகளில் மக்கள் புகார் அளிக்க ஏதுவாக அதிகாரிகள் செல்போன் எண்களை ஒட்டவேண்டும். புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உணவு கலப்படம் பற்றி ஆய்வு மற்றும் நடத்தினால் போதாது, கடைக்காரர்கள் மீது உரிய நடவடிக்கை தேவை என்று உணவு பாதுகாப்பு ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் எம் […]
பாலியல் ரீதியில் உங்களை யாராவது துன்புறுத்தினால் மாவட்ட நிர்வாகத்திற்கு வாட்ஸ்அப் எண்ணில் தெரியப்படுத்துங்கள் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பிளஸ் 2 படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலால் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் கரூரில் கல்லூரி மாணவி ஒருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் எதற்காக தூக்கிட்டு […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று முதல் கன மழை விடாமல் பெய்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து நேற்று நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்,மூன்று நாட்களுக்கு சென்னைக்கு யாரும் வரவேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்தார்.அதுமட்டுமல்லாமல் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்திட உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சென்னையில் […]
தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்பாக மக்கள் புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் சேவை செயல்பாட்டிற்கு வந்துள்ளது. விவசாயிகள் நெல் விற்பனை குறித்து நேரடி கொள்முதல் நிலையம் மூலம் ஆலோசனை பெறவும், அங்கு நடக்கும் முறைகேடுகள் குறித்து புகார் தெரிவிக்கவும் மூலவர் உதவி மையத்தை தொடர்பு கொள்ளவும் கட்டணமில்லா தொலைபேசி எண் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி விவசாயிகள் 1800 599 3540 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இந்த வசதியை தமிழக உணவுத்துறை அமைச்சர் […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. தொடஇதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து புகார் தெரிவிப்பதற்காக தொலைபேசி எண்களை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை 1800 425 7072, 1800 425 7073, 1800 425 7074 […]
தமிழகத்தில் ஜூலை மாதத்திற்கான மின் கட்டணம் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு வந்துள்ளதாக பொதுமக்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நான்கு மாதங்களுக்கு சேர்த்து கணக்கீடு செய்துள்ளதால் இவ்வாறு அதிக கட்டணம் வந்துள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். அதனால் பொதுமக்களிடம் மிகப்பெரிய குழப்பம் நிலவுகிறது. இதுகுறித்து மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, மின்சார கட்டணம் அதிகமாக இருப்பதாக வந்த 14 லட்சம் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, மின்சார கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. […]
வணிக வரித் துறையை சார்ந்த அலுவலர்களின் சேவை குறைபாடு தொடர்பாக பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் பெறப்படும் புகார்களை பரிசீலனை செய்ய புகார் பிரிவு செயல்படுகிறது. இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் 044-28514250 என்ற தொலைபேசி எண் மற்றும் [email protected] என்ற முகவரியில் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க ஏதுவாக இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் அளித்த பாலியல் தொந்தரவு வழக்குகளில் ஆன்மிகவாதி என தன்னை அழைத்துக் கொள்ளும் சிவசங்கர் என்கிற சிவசங்கர் பாபாவை தமிழக சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.இந்நிலையில் சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிபிசிஐடி அதிகாரி குணவர்மனுக்கு 9840558992, 9840669982 என்ற எண்ணிற்கும் [email protected] என்ற மின்னஞ்சலிலும் புகார் அளிக்கலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் 24 மணி நேரமும் செயல்படும் 044-2851, 2500/2851 2510 என்ற தொலைபேசி எண்ணிலும் புகார் […]
சென்னை அண்ணா நகரில் கராத்தே பயிற்சி பள்ளி நடத்தி வருபவர் கெபிராஜ். இவர் போரூரை அடுத்த கெடிலப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கராத்தே பயிற்சியாளராக பணிபுரிந்த போது, அங்கு படித்த ஒரு மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த 31 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு […]
குழந்தை தொழிலாளர்கள் முறையை ஒழிப்பதற்கு 2002ஆம் ஆண்டில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிமுகப்படுத்தியது. இதையடுத்து ஒவ்வொரு வருடமும் ஜூன் 12ஆம் தேதி குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், குழந்தை தொழிலாளர் முறை தொடர்பான சம்பவங்களை பொதுமக்கள் பென்சில் தளம் அல்லது 1098 என்ற குழந்தை உதவி எண்ணில் புகார் அளிக்கலாம். […]