வேலை செய்யும் இடத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டால் புகார் பெட்டியில் மனு அளிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கான பாதுகாப்பு பெட்டியை அறிமுகப்படுத்தப்படும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி பாதுகாப்பு பெட்டியை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் ஆண்களால் பாலியல் தொல்லை ஏற்பட்டால் அது தொடர்பான […]
Tag: புகார் பெட்டி
அரசு பள்ளியில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நடந்த விழாவின் போது நீதித்துறை சார்பில் புகார் பெட்டி வைக்கப்பட்டது. இந்த பெட்டியை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோபிநாதன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், துணை போலீஸ் சூப்பிரண்டு பால் சுதிர் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த […]
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் “மாணவர் மனசு” என்ற பெயரில் புகார் பெட்டி வைக்குமாறு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவிகளிடம் ஆசிரியர்கள் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவது தற்போது அதிகரித்து உள்ளது. இதனையடுத்து கடந்த மாதம் கோவை பள்ளியில் பாலியல் தொல்லை காரணமாக மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அதுமட்டுமின்றி சில பள்ளிகளில் புகார்கள் வரத் தொடங்கியது. இதன் காரணமாக பள்ளி மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான வன்முறைகளை தடுப்பதற்கு அரசுக்கு கோரிக்கை […]
தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் மனசு என்று எழுதப்பட்ட பாலியல் புகார் பெட்டி அமைக்க வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவிகள் அதிக அளவில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது போன்றவற்றைத் தடுப்பதற்கு தமிழக அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு போக்சோ சட்டம் குறித்து அறிவுறுத்த வேண்டும் என்றும், பாலியல் தொடர்பாக புகார் அளிக்க இலவச எண்கள் போன்ற பல்வேறு […]
மாணவ-மாணவியர்களின் பிரச்சினைகளைத் தெரிவிக்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் புகார் பெட்டிகள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகூடங்களின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்லூரிகளின் முதல்வர்கள் என அனைவரும் மாவட்ட காவல்துறையுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்தக் கூட்டமானது ஊட்டியில் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. இதற்கு காவல்துறை கண்காணிப்பாளரான ஆஷிஷ் ராவத் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இக்கூட்டத்தில் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளரான மோகன் நவாஸ், அரசு தேர்வுகள் உதவி இயக்குனரான ஆஷா மனோகரி போன்றோர் […]
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவ மாணவிகள் பாலியல் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்காக புகார் பெட்டி வைக்க வேண்டும் என்று சமீபத்தில் உத்தரவிடப்பட்டிருந்தது. அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தற்போது பள்ளிகளில் புகார் பெட்டி வைக்கப்பட்டு உள்ளதை உறுதி செய்யும் வகையில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் இயக்குனர் கருப்பசாமி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு குழுக்கள் உருவாக்குவதை […]
12 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தேவாலய போதகரின் வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றத்துக்கும், தமிழக அரசுக்கும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. குறிப்பாக இந்த வழக்கில், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவிகள் எளிதில் புகார் அளிக்கும் படியாக, புகார் பெட்டி ஒன்றை அமைக்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஏற்படும் பட்சத்தில், மாணவிகள் எளிதில் புகார் அளிக்கும் படி, […]
பாலியல் தொல்லை குறித்து மாணவர்கள் அச்சமின்றி தெரிவிக்க வேண்டும் என்பதற்காக பள்ளிகளில் புகார் பெட்டி வைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு, ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்த புகார்கள் அனைத்தும் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளன. பெற்றோர்கள் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், பாலியல் தொல்லை குறித்து மாணவர்கள் அச்சமின்றி […]