200 கோடிக்கு மேல் மோசடி செய்த தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் மனு அளித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தீபாவளி, பொங்கல் சீட்டு நடத்தி தனியார் நிறுவனம் 200 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக 200-க்கும் மேற்பட்டோர் ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, வந்தவாசி, சேத்துப்பட்டு, செய்யாறு, ஆரணி, கொடுங்கலூர் உள்ளிட்ட ஊர்களில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது இதில் ஏஜெண்டுகள் மூலமாக தீபாவளி மற்றும் பொங்கல் […]
Tag: புகார் மனு
நடிகர் பிரசாந்த் மீது இலங்கை பெண் மோசடி புகார் கொடுத்திருக்கின்ற நிலையில் பிரசாந்த் தரப்பிலிருந்து இது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது. இலங்கையைச் சேர்ந்த குமுதிணி என்ற பெண் சுவிட்சர்லாந்து விமான நிலைய ஊழியராக பணியாற்றி வருகின்றார். இவர் நடிகர் பிரசாந்த் தன்னிடம் 10 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக சென்னையில் உள்ள காவல்துறையில் வாய்மொழி புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். இந்த நிலையில் பிரசாந்த் தரப்பும் அந்த பெண் மீது புகார் அளித்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகின்றது. […]
ஆளுநர் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், திமுக அரசு மீது நடவடிக்கை எடுக்க கோரியும் ஜனாதிபதிக்கு அதிமுக புகார் மனு ஒன்றை அளித்துள்ளது. இந்த புகார் மனு தமிழக கவர்னர் ஆர் என் ரவி சமீபத்தில் மயிலாடுதுறைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அவருக்கு பாதுகாப்பு குறைவாக இருந்ததாகவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம், பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் ஆகியவற்றால் திமுக அரசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சட்ட ஆலோசனை குழு […]
லட்சுமணபுரம் கிறிஸ்தவ ஆலயத்தில் பொருட்களை சேதப்படுத்தியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திட்டக்குடி அருகில் உள்ள லட்சுமணபுரத்தை சேர்ந்த வில்லியம்ஸ் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்கள். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, லட்சுமணபுரத்தில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயத்தின் அருகே வசித்து வரும் ஒரு நபர் தனது இடம் ஆலயத்தின் இடத்துடன் […]
சசிகலா தன்னை அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று தொடர்ந்து கூறி வருவதாக அதிமுக தரப்பில் மாம்பலம் காவல் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார் ஒன்று அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும் சைதாப்பேட்டை கோர்ட்டில் சசிகலா மீது புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அந்த மனுவில் இந்திய தண்டனைச் சட்டம் 34, 420 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சசிகலா […]
பெண் ஊராட்சி தலைவர் பணிகளை செய்ய விடாமல் தன்னை அவதூறாக பேசுவதாக சிலர் மீது ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெறும். ஊரடங்கு காலத்தில் இந்தக் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. மனு கொடுக்க வருபவர்களுக்காக புகார் பெட்டி ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் அதில் தங்கள் மனுக்களை செலுத்தினார். இந்நிலையில் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ஜம்புதுரைக்கோட்டையின் பெண் ஊராட்சி தலைவர் பவுன் தாய் […]
மதுரை மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலைபார்த்த சோலை நாதன் என்பவர் விஷவாயு தாக்கி உயிரிழந்த நிலையில் நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு சார்பில் எந்தவித உதவியும் வழங்கப்படவில்லை என கூறி மாவட்ட ஆட்சியரிடம் சோலை நாதனின் மனைவி முத்துலட்சுமி புகார் மனு அளித்துள்ளார்.
யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குறவன் குறத்தி நடனம் ஆபாச நடனங்களாக சித்தரிக்கப்படுவதை தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. சமூக வலைத்தளங்களில் ஆபாசம் நடனத்திற்கு குறவன் குறத்தி ஆட்டம் என்று குறிப்பிட்டு அதை பதிவேற்றம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தடுக்க வலியுறுத்தி குறமகள் வள்ளி பெருந்தகை பாசறை மற்றும் வனவேங்கைகள் கட்சி சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து புகார் அளித்தவர்கள் கூறுகையில் “கிராமிய […]