தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 4 தேதி கொண்டாடப்பட உள்ளது. அதற்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் குறித்து புகார் செய்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் ஆம்னி பேருந்துகளுக்கான புகார் தெரிவிக்க 18004256151 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் சென்னை மாநகரப் பேருந்துகளில் 2,900 கண்காணிப்பு […]
Tag: புகார்
பிரான்ஸ் ஜனாதிபதியின் தனிப்பட்ட புகைப்படம் கண்காட்சியில் வைக்கப்பட்டு உள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோன் மற்றும் அவருடைய மனைவி இருவரும் சட்டப்படியான புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில் அவர்கள் கூறிரயதவது, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோக பூர்வமான இல்லமான எலிசா அரண்மனைக்கு அருகில் உள்ள கண் காட்சியகத்தில் “பிரான்சு அதிபர்களும் அவர்களது விடுமுறை இடங்களும்” என்ற தலைப்பில் ஒரு புகைப்பட தொகுப்பு கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கண்காட்சியில் ஜனாதிபதி மேக்ரோன் […]
தமிழகத்தில் பொதுமக்கள் ‘என் தொடர்பான புகார்களை என்னிடமே கேளுங்கள்’ என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சேகர் ரெட்டியின் டைரி விவகாரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி என 14 பேருக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதன்படி மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து பேசிய அவர், சேகர் ரெட்டியின் […]
பாகிஸ்தானுடனான தொடரை ரத்து செய்த நியூசிலாந்து அணி மீது ஐசிசி -யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்துள்ளது . கடந்த 18 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் சென்ற நியூசிலாந்து அணி மூன்று ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட இருந்தது. இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று தொடங்க இருந்தது.ஆனால் போட்டி தொடங்க சில மணி நேரங்களுக்கு முன்பாக பாதுகாப்பு காரணங்களுக்காக தொடரை ரத்து செய்வதாக நியூசிலாந்து அணி அறிவித்தது. […]
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளனர். திருப்பூர் மாநகராட்சி 25-வது வார்டு ராமையா காலனி பகுதியில் பெரும்பாலானவர்கள் குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகின்றனர். இந்தபகுதி பொதுமக்களின் தேவைக்காக 5 குடிநீர் குழாய்கள் மூலம் உப்புத் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த தனி நபர் ஒருவருக்கு தனியாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைக்காமல்அவதிப்பட்டு வந்தனர். இதனையடுத்து ஆத்திரமடைந்த ராமையா காலனி […]
தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி ரூ.1.20 கோடி மோசடி செய்ததாக திருவேங்கடம் என்பவர் சென்னை காவல் ஆணைய அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். அமைச்சராக இருந்தபோது அரசு ஒப்பந்தம் தருவதாக கூறி ரூ.1.20 கோடி பெற்று மோசடி செய்ததாகவும், பணத்தைத் திரும்பக் கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகார் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவில் புகாரளிக்க நீதிபதிகளுக்கு சுதந்திரமில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா வேதனை தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில், மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் கொலை தொடர்பான வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, இந்தியாவில் புகாரளிக்க நீதிபதிகளுக்கு சுதந்திரம் இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இது துரதிர்ஷடவசமானது என்று அவர் கூறினார். போலீஸ் அல்லது சிபிஐயிடம் நீதிபதிகள் புகார் அளித்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்று அவர் தெரிவித்திருந்தார். இந்தியாவில் புலனாய்வு அமைப்புகள் நீதித்துறைக்கு உறுதுணையாக இல்லை என்று அவர் […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் கடைகள் மற்றும் ரேஷன் கார்டுகளில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து புகார் அளிக்க […]
ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலிகளுக்கு விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபுதேவா நடித்த மிஸ்டர் ரோமியோ, விஜய் நடித்த குஷி உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவருடைய கணவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா மீது ஆபாச படங்கள் தயாரித்த குற்றச்சாட்டு இருந்தது. இதனை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். ராஜ்குந்த்ரா […]
பிரபல நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு, சமூக வலைதளமான ட்விட்டரில் ஆக்டிவாக இயங்கி வருபவர். ட்விட்டரில் குஷ்புவுக்கு சுமார் 1.3 மில்லியன் ஃபாலோயர்ஸ் உள்ளனர். இதற்கிடையே, தமிழகத்தில் 5 லட்சம் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்றில் குஷ்பு பேட்டி அளித்தார். மேலும், தான் சொன்னது உண்மை என்று காட்டும் வகையில், பத்திரிகை இணைப்பு ஒன்றையும் அவர் ட்வீட் செய்திருந்தார். ஆனால், அது அதிமுக ஆட்சியில் வீணடிக்கப்பட்டது என்றும் தற்போது 100 சதவீதத்திற்கும் அதிகமாக தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது […]
அரசியல் தலைவர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரின் அலைபேசிகள் ‘பெகாசஸ்’ உளவு மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக ஊடகங்களில் சர்ச்சை வெடித்துள்ளது. இஸ்ரேல் நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் உருவாகியுள்ள உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் உள்ள பலரது அலைபேசிகள் மத்திய அரசால் உளவுபார்க்கப்பட்டன என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் 5 முறை தனது செல்போனை மாற்றியும் ஹேக்கிங் தொடர்வதாக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் புகார் அளித்துள்ளார். 5 முறை செல்போனை மாற்றியும் ஹேக் செய்து கொண்டுதான் […]
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கானின் ஆளும்கட்சி 4 வருடங்களில் 220 கோடி நிதியை சட்டவிரோதமாக வைத்திருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் ஆளுங்கட்சியான தெஹ்ரீக்-இ-இன்சாஃப் என்ற கட்சி 2009 ஆம் வருடத்திலிருந்து 2013ஆம் வருடம் வரை சுமார் 220 கோடி நிதியை பிற நாட்டிலிருந்து சட்டவிரோதமாக பெற்றிருக்கிறது. அக்பர் எஸ் பாபர் இது குறித்த ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, இந்த கட்சிக்கான வங்கி கணக்குகளின் முழு தகவல்கள், நாட்டில் மற்றும் வெளியே கட்சியின் கணக்குகள் தொடர்பில் […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் கடைகள் மற்றும் ரேஷன் கார்டுகளில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து புகார் அளிக்க […]
ஆபாச குறுஞ்செய்திகள் வருவதாக பிக்பாஸ் புகழ் நடிகை சனம் ஷெட்டி சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்த நிலையில் குறுஞ்செய்தி அனுப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை சனம் ஷெட்டிக்கு வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பிய திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவன் ராய் என்பவரை அடையாறு சைபர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இதுபோல நடிகைகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்புவதை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மாணவிக்கு நடைபெற இருந்த கட்டாய திருமணத்தை காவல்துறையினர் நிறுத்தி வாலிபரை சட்டத்தின்கீழ் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மட்றம்பள்ளி கிராமத்தில் 17 வயது மாணவி ஒருவர் வசித்து வருகின்றார். இவர் பிளஸ்-2 படித்துள்ளார். அதே ஊரில் வசித்து வரும் செல்வன் மகன் ராஜேஷ் பெங்களூரில் செருப்புக்கடை ஷோரூமில் பணிபுரிந்து வருகின்றார். இவர்கள் இருவருக்கும் திருமணம் நடத்துவதற்கு குடும்பத்தினர் பேசி வைத்து இருந்தனர். ஆனால் 17 வயது மாணவி தனக்கு திருமணம் வேண்டாம் தான் படிக்க வேண்டும் […]
கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் செல்போன் உபயோகப்படுத்துகின்றனர். இந்த சூழலைப் பயன்படுத்தி பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் அப்பாவி மாணவர்களின் மனதை மாற்றி, அவர்களை ஆபாச இணையதளங்களுக்கு அடிமையாக்கி பணம் சம்பாதிக்கும் குழுக்கள் இயங்கி வருவதாக மனுதாரர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதில் முக்கிய நபர்களான ஜி.பி.முத்து, பேபி சூர்யா, திருச்சி சாதனா போன்றோர் ஆபாசமாக பேசி வீடியோக்களை பதிவேற்றம் செய்கின்றனர். இவர்களின் உடல் பாவனைகளும், […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி ஜூன் 28ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில், மேலும் ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், ஊரடங்கு தளர்வுகள்வழங்கப்படுவதில் கோயில்கள் […]
ஸ்விக்கி மூலம் பிரபல உணவகம் ஒன்றில் சாப்பாடு ஆர்டர் செய்ததாகவும், அந்த சாப்பாட்டை சாப்பிட முயன்ற போது அதில் கரப்பான் பூச்சி இருந்ததாகவும் நடிகை நிவேதா பெத்துராஜ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். மேலும் கரப்பான் பூச்சி உடன் உணவு டெலிவரி செய்யப்படுவது இது முதல் முறையல்ல என குறிப்பிட்டு, உணவகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் விளையாட்டின் போது பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் யூடியூப் மதன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று மதனின் மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்ட நிலையில் தர்மபுரியில் பதுங்கியிருந்த மதனை நேற்று காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவரின் இரண்டு சொகுசு கார்கள், டேப் மற்றும் ட்ரான் கேமராக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மதன் […]
பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் குறைகள் மற்றும் புகார்களை வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தியாக தெரிவிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் புகார்கள் குறித்து கலெக்டரின் குறைதீர்வு செல்போன் எண் (9498035000) என்ற வாட்ஸ் அப் எண்ணில் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார். எனவே செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசுவதை தவிர்த்து பொதுமக்கள் தங்களின் குறைகள், புகார்களை குறுஞ்செய்தியாக தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அறிவித்துள்ளார். […]
கிஷோர் கே ஸ்வாமி மீது நடிகை ரோகிணி ஆன்லைன் மூலம் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தன்னைப்பற்றியும், மறைந்து கணவர் ரகுவரனையும் பற்றி வலைத்தளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டதாக புகார் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர்கள் பெயரிலும், பெண் நிருபர்களை அவதூறாக பேசிய விவகாரத்தில் ஏற்கனவே கிஷோர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலத்தில், ராணுவ வீரர் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக கூறிய இளம் பெண்ணை ஏமாற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் ஜெகன்நாத் மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். மேலும் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்துள்ளார். அதை தொடர்ந்து இருவரும் அடிக்கடி வெளியில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். பின்னர் ராணுவ வீரர் பிரகாஷ் வீட்டில் அவரது பெற்றோர்கள் வேறு […]
நாளுக்கு நாள் ஆன்லைன் மூலம் வங்கிக் கணக்கில் பணம் திருடப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதில் ஒருசிலர் மொபைலில் உங்களைத் தொடர்புக் கொண்டு உங்களது வங்கி கணக்கு குறித்த விவரங்களை லாவகமாகப் பேசி உங்களிடம் இருந்தே வாங்கி திருடுபவர்கள். மற்றொரு விதம் ஆன்லைன் ஹேக்கிங். இப்படி ஆன்லைன் ஹேக்கிங் மூலம் பணம் திருடப்பட்டால் அதன் முழு பொறுப்பையும் வங்கி நிர்வாகமே ஏற்கும். உங்களது கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டால் உடனே நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதைப் பார்ப்போம். […]
அயோத்தி ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியதில் மிகப்பெரும் ஊழல் நடந்திருப்பதாக அறக்கட்டளை மீது எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து உள்ளன. ராமர் கோவிலுக்காக பேக் பைசி கிராமத்தில் 1.208 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு உள்ளது. ரூ.2 கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை ரூ.18.5 கோடிக்கு அறக்கட்டளை வாங்கியிருப்பதாகவும், இதில் மிகப்பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் மற்றும் சமாஜ்வாடியை சேர்ந்த மாநில முன்னாள் மந்திரி பவன்சிங் ஆகியோர் நேற்று முன்தினம் புகார் தெரிவித்தனர். இது […]
ட்விட்டர் பக்கத்தில் தனது பெயரில் போலி கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாக நடிகர் செந்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள காரணத்தினால் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் அதிக நேரம் சமூக வலைதளங்களில் தங்களது நேரங்களை செலவிட்டு வருகின்றனர். அப்படி இருக்கும் பொழுது சிலர் நடிகர்கள் நடிகைகளின் பெயர்கள் பயன்படுத்தி ட்விட்டரில் போலி கணக்குகளை உருவாக்கி அவதூராக செய்திகளை பரப்பி வருகின்றன. இதுபோன்ற சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தற்போது பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் […]
பிரபல தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி மீது நடிகர் விஷால் புகார் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், வினியோகஸ்தருமாக வலம் வரும் ஆர்.பி.சவுத்ரி பல படங்களுக்கு பைனான்ஸும் செய்து வருகிறார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷாலும் இவரிடம் கடன் பெற்று அதன் பிறகு அக்கடனை கடந்த பிப்ரவரி மாதம் முறையாக செலுத்தியுள்ளார். ஆனால் அவர் கடன் பெற்ற போது விஷால் தரப்பில் கையொப்பமிட்டு அளிக்கப்பட்ட பத்திரங்களை இதுவரை ஆர்.பி.சவுத்ரி தரப்பு திருப்பி […]
சென்னையில் பத்மா சேஷாத்திரி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் மீதான நடவடிக்கையையும் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தையும் சுட்டிக் காட்டினால் அதை பிராமண சமுதாயத்திற்கு எதிரான விவகாரமாக திசை திருப்புகிறது ஒரு கூட்டம். மறுபக்கம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராஜகோபால் மீது தொடர்ச்சியான புகார்கள் மற்றும் வாட்ஸ்அப் சட்டிங், ஸ்க்ரீன் ஷாட் ஆகியவை வந்த வண்ணம் உள்ளன. இதில் சில ஆசிரியர்களின் வேதனையும் உள்ளடங்கியுள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை […]
காஷ்மீரில் ஆன்லைன் வகுப்புகள் நீண்ட நேரம் எடுப்பதாக 6 வயது சிறுமி புகார் அளித்ததை தொடர்ந்து அம்மாநில கவர்னர் நடவடிக்கை எடுத்துள்ளார். காஷ்மீரை சேர்ந்த ஆறு வயது சிறுமி ஆன்லைனில் நீண்ட நேரம் வகுப்புகள் எடுப்பதாக வீடியோ மூலம் பிரதமர் மோடியிடம் புகார் அளித்தார். இதையடுத்து பள்ளி குழந்தைகளுக்கான சுமையைக் குறைப்பதற்கு 48 மணி நேரத்தில் கொள்கை வகுக்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்கா உறுதியளித்தார். இதையடுத்து ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய கட்டுப்பாடுகளை […]
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி, 5 ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், கொண்டதாக இருக்கும் போது எடுக்கப்பட்ட படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் கூறி நடிகை சாந்தினி போலீசில் புகார் அளித்தார். அதுமட்டுமல்லாமல் மூன்று முறை தன்னை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்யச் சொன்னார். அதனால் முன்னாள் அமைச்சர் மணிகண்டனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று அவர் […]
நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தையைக் கொன்றது இன்றைய பாபநாசம் எம்எல்ஏ ஜவஹருல்லா தான் என ஹெச் ராஜா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் மூத்த தலைவரான ஹெச் ராஜா சமீபத்தில் சிவகார்த்திகேயன் தந்தையைக் கொன்றது இன்றைய பாபநாசம் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய ஜவஹிருல்லா தான் என்று கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து பொய்யான கருத்துக்களை பரப்பி வருவதாக மனிதநேய மக்கள் கட்சி வழக்கறிஞர் டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். மேலும் இது குறித்து அவர் […]
கொரோனா பரிசோதனை செய்து ஒரு வார காலம் ஆகியும் இன்னும் பரிசோதனை முடிவுகள் வரவில்லை என பிரபல நடிகை புகார் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின்பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதில் திரை பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகை பியாவின் சகோதரர் கடந்த சில தினங்களுக்கு […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் மின்வெட்டு அடிக்கடி ஏற்படுவதாக கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதன் காரணமாக கிரைண்டர் , மிக்ஸி, இன்வெர்டர் ஆகியவை பழுதாகின்றன. இதுகுறித்து தகவல் தெரிவித்தும் மின்வாரியத்தில் இருந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர். மேலும் மின்வெட்டு பிரச்சனை காரணமாக அப்பகுதியில் உள்ள மக்கள் சிரமத்தில் உள்ளனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]
அப்துல்கலாமின் கனவுக்கு உருவம் கொடுத்து வந்தவர் நடிகர் விவேக்(59). சமூக ஆர்வலராகவும் விளங்கினார். நகைச்சுவையுடன் சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை எடுத்துரைத்தவர். நடிகர் விவேக்கை இயக்குனர் பாலச்சந்தர் திரைப்படத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். விவேகம் மிக்க கருத்துக்களை மக்கள் மனதில் விதைத்தவர். இந்நிலையில் இவருக்கு நேற்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தது. இதையடுத்து நேற்று காலை 4.35 மணியளவில் காலமானார். […]
நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நேற்று முன்தினம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். திரைப்பட படப்பிடிப்புகளில் பங்கேற்று வந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவர் மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதனையடுத்து மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனில்லாமல் நேற்று அதிகாலை அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் மற்றும் அனைத்து […]
முன்னணி நடிகை நிக்கி கல்ராணி காவல் நிலையத்தில் மோசடி புகார் ஒன்றை அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நிக்கி கல்ராணி. இவர் தன் குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் நடிகை நிக்கி கல்ராணி அம்ருதஹள்ளி காவல் நிலையத்தில் மோசடிப் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், “கோரமங்களா பகுதியில் உள்ள ஹோட்டல் உரிமையாளர் நிகில். இவரது ஹோட்டலில் கடந்த 2016 ஆம் ஆண்டு நான் 50 லட்சம் முதலீடு செய்து இருந்தேன். […]
கூகுளில் பணிபுரியும் சுந்தர் பிச்சைக்கு 500க்கும் மேற்பட்ட பெண்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயலகம் இருக்கிறது. இங்கு பணிபுரியுந்த எமி நெய்ட்பீல்டு என்ற நபர் தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூகுள் அலுவலகத்தில் தனக்கு தொல்லை கொடுத்தவர் குறித்து பலமுறை புகார் அளிக்கப்படும் அதை நிறுவனம் அலட்சியப் படுத்தி விட்டது. அவருடன் இணைந்து பணியாற்ற சொன்னதோடு, விரும்பினால் வீட்டில் இருந்து வேலை பணிபுரியவும் சொன்னதாக […]
முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு மீது முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் நடிப்பில் உருவான மண்டேலா திரைப்படம் கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இந்நிலையில் இப்படம் குறித்து, முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கத்தினர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகார் மனுவில், நடிகர் யோகி பாபுவின் மண்டேலா திரைப்படம் சில நாட்களுக்கு […]
திருமங்கலம் தொகுதி வாக்குச் சாவடியில் உள்ள அலுவலர் மீது புகார் எழுந்ததையடுத்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் […]
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவது குறித்து தேர்தல் ஆணையத்தில் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி கார்த்திக் சிதம்பரம் எம்.பி. கூறினார். சிவகங்கையில் நிருபர்களுக்கு, சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி கார்த்திக் சிதம்பரம் எம்.பி. பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலை போன்று திமுக தலைமையிலான எங்களது கூட்டணி அமோக வெற்றி பெறும். சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தலைவர்களில் ஒருவரான தேஜஸ்வி […]
நாளை நடைபெற உள்ள நிலையில் பூத் சிலிப்புகளை வாக்காளர்களுக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பல கட்சிகள் போட்டியிடுகின்றன. இன்று மாலைக்குள் அனைத்து பகுதிகளிலும் பூத் சிலிப்பு வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குச்சாவடி விவரங்கள் அடங்கிய பூத் சிலிப்புகளை வாக்காளர்கள் விநியோகிப்பதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது என பரபரப்பு புகார் எழுந்துள்ளது. தேர்தல் ஆணைய உத்தரவுப்படி அரசு ஊழியர்களே பூத் சிலிப் வழங்கும் பணியை தற்போது மேற்கொண்டு […]
செல்போன் எண்கள் மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக திமுக புகார் அளித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக அனைத்து கட்சிகளும் போட்டி […]
மேற்கு வங்கத்தில் வெளிமாநிலத்தில் இருந்து வந்த ரவுடிகள் வாக்குப்பதிவுக்கு இடையூறாக இருப்பதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கான தேதி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் […]
400க்கும் மேற்பட்ட நடுவர்கள், போட்டி அதிகாரிகளுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஊதியம் வழங்காமல் இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தொற்று காரணமாக ரஞ்சி உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடப்பாண்டு நடைபெறவில்லை. ஆனால் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ரஞ்சி டிராஃபியை தவிர விஜய் ஹாசரே, சையஸ் முஸ்டாக் அலி டிராஃபி மற்றும் பெண்கள் ஒரு நாள் போட்டிகள் நடைபெற்றது. இதனிடையே சையது முஸ்டாக் அலி டிராஃபி முடிந்து இரண்டு மாதங்கள் முடிந்தபிறகும் கூட இன்னும் தொடரில் […]
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் செங்கல் திருடியதாக உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் […]
அமைச்சர் தங்கமணி ஆதரவாளர்களால் உயிருக்கு ஆபத்து என அதிமுக எம்எல்ஏ பரபரப்பு புகார் அளித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]
நடிகர் ஆர்யா தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றியதாக புகார் அளித்த இலங்கை பெண் அவர் அனுப்பிய குறுஞ்செய்தியை ஆதாரமாக வெளியிட்டுள்ளார். நடிகர் ஆர்யா அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து உள்ளம் கேட்குமே, ஒரு கல்லூரியின் கதை, கலாபக் காதலன், பட்டியல், அவன் இவன், நான் கடவுள் உட்பட பல படங்களில் நடித்துள்ள இவருக்கு கடந்த வருடத்தில் நடிகை சாயிஷா உடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் இலங்கையை சேர்ந்த விட்ஜா என்ற […]
தன் பெயரில் போலி கணக்குகளை வைத்திருப்பவர்கள் மீது புகார் அளிக்கப்போவதாக பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகர் தெரிவித்துள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் நாடகம் முன்னணி தொடர்கள் ஒன்றாக இருக்கிறது. குடும்ப பாசம், அண்ணன் தம்பி பாசம் உள்ளிட்டவை அடங்கிய இத்தொடரில் வரும் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் குமரன் தங்கராஜன். இந்நிலையில் முகநூல் பக்கத்தில் இவரது பெயரில் அதிகமான போலி கணக்குகள் இருக்கிறது. அதிலிருந்து சில குறுஞ்செய்திகள் பதிவாகி […]
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ஆர்யா மீது இளம்பெண் ஒருவர் மோசடி புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஆர்யா. அவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் படத்தில் நடித்த போது அதில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை சாய்ஷாவை காதலித்து திருமணம் செய்தார். இந்நிலையில் நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னிடம் 70 லட்சம் ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு […]
நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று 70,40,000 ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக ஈழத்தமிழ் பெண் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். ஈழத்தமிழ் பெண்ணான விட்ஜா என்பவர் ஜெர்மனியில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறார். அவர் அங்குள்ள சுகாதாரத்துறையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் நடிகர் ஆர்யா தன்னிடம் ஆன்லைன் மூலம் காதலை தெரிவித்ததாகவும் , பின்னர் திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி 70,40,000 ரூபாய் பெற்றுக் கொண்டு […]