சட்டவிரோதமாக குளிர்சாதன பெட்டியில் பதுக்கி வைத்திருந்த 20 கிலோ புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நவாமரத்துப்பட்டியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரெட்டியார்சத்திரம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நவாமரத்துப்பட்டியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு மளிகை கடையில் சோதனை செய்தபோது அங்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது […]
Tag: புகையிலை பொருட்கள் பறிமுதல்
புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை பகுதியில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான ஒரு குழு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை மறித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் ரிஷிவந்தியம் பகுதியை சேர்ந்த கண்ணதாசன் என்பது தெரியவந்தது. அவர் மளிகை கடைக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்வதாக கூறியுள்ளனர். இருப்பினும் அவருடைய நடவடிக்கையில் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர் […]
புகையிலை விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே பவுஞ்சிபட்டு பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர் சௌகத் அலி தலைமையில் ஒரு குழு அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது அந்த பகுதியில் இருக்கும் ஒரு கடையில் காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அதை […]
சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை குடோனில் பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் ஹசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிரமாக சோதனை செய்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் ரகசியமாக செயல்பட்ட குடோனில் ஹசன் 75 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. […]
நாமக்கல் மாவட்டத்தில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 29 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல். நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளது. அதன் அடிப்படையில் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.தாமரை கண்ணன் மாவட்டம் முழுவதிலும் சோதனை செய்ய நாமக்கல் சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கூடுதல் சூப்பிரண்டு அதிகாரிகளான சுஜாதா, செல்லப்பாண்டியன், ரவிக்குமார், மணிமாறன் ஆகியோரின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்ததால் வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சாலையோர கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த ரகசிய தகவலின் படி சாலையோர கடைகளில் சென்று காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையின் போது அந்த பகுதியில் ஒருவரின் வீட்டிலிருந்தே கடைகளுக்கு புகையிலை பொருட்கள் வருவதாக கடை ஊழியர் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து […]