இலங்கையில் ஆட்சி மாற்றம் அமைதியான வழியில் நடக்க வேண்டும் என்று அந்நாட்டிற்கான அமெரிக்க தூதர் கூறியிருக்கிறார். இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி பல மாதங்களாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் போராட்டம் தீவிரமடைந்து, போராட்டக்காரர்கள் அதிபரின் மாளிகைக்குள் புகுந்தனர். போராட்டம் உச்சகட்டத்தை அடைந்ததால் பிரதமர் மற்றும் அதிபர் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள். இந்நிலையில் இலங்கைக்கான அமெரிக்க தூதராக இருக்கும் ஜூலி சுங், இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, […]
Tag: புதிய ஆட்சி
இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சே இந்த வாரத்தில் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறியிருக்கிறார். இலங்கையில் நிதி நெருக்கடி அதிகரித்ததால், மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து தீவிரமாக போராட்டம் நடத்தத் தொடங்கினர். எனவே, அதிபர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவசரநிலை அறிவித்தார். எனினும், மக்கள் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே, பதவி விலக மாட்டேன் என்று கூறிக் கொண்டிருந்த பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துவிட்டார். அதனைத்தொடர்ந்து இலங்கையில் பல்வேறு இடங்களில் கலவரம் வெடித்தது. எனவே […]
ஜெர்மனியில் மூன்று கட்சிகள் இணைந்து புதிய ஆட்சியை ஏற்படுத்துவதற்காக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஜெர்மனியின் அடுத்த அதிபராக மத்திய-இடது சமூக ஜனநாயகவாதிகள் (SPD) கட்சியின் தலைவர் ஓலாஃப் ஷோல்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரண்டு சிறிய கட்சிகளின் தலைவர்களுடன் இணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். மேலும் SPD, Greens மற்றும் வணிக சார்பற்ற சுதந்திர ஜனநாயகக் கட்சி ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து தான் புதிய ஆட்சியை ஏற்படுத்தப் போகின்றனர். இது குறித்து அந்த தலைவர்கள் வெள்ளிக்கிழமை […]
ஆப்கானிஸ்தானில் ஷரியத் சட்டம் அமலுக்கு வரும் என்று தலீபான்களின் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாடு முழுவதும் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் தலீபான்களுக்கு அஞ்சி நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஜலாலாபாத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பர்தா அணியாத 3 பெண்களை தலீபான்கள் சுட்டுக் கொன்றனர். இது குறித்து தலீபான்களின் மூத்த தலைவர் வாஹித்துல்லா ஷாஷ்மி செய்தியாளர்களிடம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் […]