Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்க மாநிலத்தில் புதிய ஆளுநராக டாக்டர் சி.வி ஆனந்த் போஸ் நியமனம்…. இன்று பதவியேற்பு….!!!!!

மணிப்பூர் ஆளுநர் இல. கணேசன் கூடுதல் பொறுப்பாக மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநராகவும் இருந்தார். இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்திற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை கடந்த 17-ம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்மு அறிவித்தார். அதன்படி டாக்டர் சிவி ஆனந்த் போஸ் என்பவர் மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப் பட்டுள்ளார். இவருடைய பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்ற நிலையில், கொல்கத்தா ஹைகோர்ட் தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் புதிய ஆளுநராக….. ஆர்.என்.ரவி இன்று பதவியேற்பு….!!!

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று காலை பதவியேற்கிறார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.தமிழகத்தின் 14வது ஆளுநராக மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பன்வாரிலால் புரோகித் கடந்த 2017 அக்டோபர் மாதம் பொறுப்பேற்றார். கடந்த 4 ஆண்டுகளாக பதவி வகித்து வந்த அவர், பஞ்சாப் மாநில கவர்னராக நியமிக்கப்படுவதாக கடந்த வாரம் ஒன்றிய அரசு அறிவித்தது. தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நாகாலாந்து மாநில கவர்னர் ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் புதிய ஆளுநர் நியமனம்… குடியரசுத் தலைவர் அறிவிப்பு….!!!

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர். என்.ரவியை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். ஆர் என் ரவி நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்து வந்தார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான இவர், மத்திய உளவுத் துறையின் சிறப்பு இயக்குனராகவும் பணியாற்றினார். மேலும், தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக இருப்பார் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |