பார்வைத் திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் வெளிநாடுகளில் பல விதமான நவீனக்கருவிகள் தொடர்ந்து அறிமுகமாகி வருகிறது. ஆனால் அதிகளவு விலை கொண்ட இந்த கருவிகளை நடுத்தர மக்கள் பயன்படுத்த முடிவதில்லை. இந்த நிலையில் பார்வைத்திறன் இழந்தவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் அடிப்படையில் பார்வை குறைபாடு கொண்ட அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையிலான புது ஹியர் சைட் HEAR SIGHT எனும் கருவி அறிமுகவிழா கோவை துடியலூர் பகுதியிலுள்ள லலிதா மகால் அரங்கில் நடந்தது. அப்போது கருவியை […]
Tag: புதிய கருவி
உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு வாய்க்கு பூட்டு போடும் புதிய கருவியை நியூஸிலாந்து ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வாயை கட்டினாலே உடல் எடையை ஈஸியாக குறைத்து விடலாம் என்று பலரும் கூறுவர். இந்த சொல்லை நிஜமாக்கும் வகையில் நியூசிலாந்தை சேர்ந்த நிறுவனமொன்று வாய்க்கு பூட்டு போடும் ஒரு புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர். உடல் பருமன் என்பது தற்போது உள்ள இளைய தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. முதலில் அனைவரும் இஷ்டத்திற்கு உணவகங்களில் கிடைக்கும் பாஸ்ட்புட் ஐட்டங்களை அதிகளவில் வாங்கி […]
உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் பரவ தொடங்கியுள்ளது. இந்தநிலையில், 2 மணிநேரத்தில் ஒமைக்ரானை கண்டறியும் பரிசோதனை கருவியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். தென்னாபிரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் கால்பதித்த உடனே அசாம் மாநிலம் டிப்ருகருல் உள்ள ஐசிஎம்ஆர் ஆய்வகத்தில் கொரோனா அதிவிரைவாக கண்டறியும் கருவியை வடிவமைக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அதன்மூலம் 1000-கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளின் சாம்பிள்களை பரிசோதித்ததில் 2 மணிநேரத்தில் கண்டுபிடித்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தற்போது கொல்கத்தாவில் அதிக அளவில் உற்பத்தி […]
மக்கள் அனைவரும் வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும் வகையில் எளிய கருவி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று தற்போது உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை எடுத்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதனால் பரிசோதனைக் கூடங்களில் மக்களின் கூட்டம் அதிக அளவில் உள்ளது. அதற்கு தீர்வு காணும் வகையில் மக்கள் வீட்டிலேயே தனக்குத்தானே கொரோனா பரிசோதனையை செய்து கொள்ளும் வகையில் […]
கொரோனா நோயாளிகளை எளிதில் கண்டறியும் வகையில் கருவி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்படைந்தவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு நோய்த்தொற்று மிகவும் எளிதாக பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் கொரோனா வாழும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவரும் முழு உடல் கவச உடை அணிந்து சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.இவ்வாறு முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு வந்தாலும் கொரோனா வார்டுகளில் பணியாற்றிய பல்வேறு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொரோனாவிற்கு ஆளாகியிருக்கின்றனர். இதனை கருதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் […]
கொரோனா பரிசோதனை முடிவுகளைக் கண்டறிய புதிய தொழில்நுட்பக் கருவி ஒன்றை கராக்பூர் ஐஐடி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 1, 84,494 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்க்கு ஒரே வழி பரிசோதனையை அதிகப்படுத்துவது மட்டுமே. இதனால் நேற்று மட்டும் இந்தியாவில் 4.2 லட்சம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், கொரோனா பரிசோதனை முடிவுகளை இன்னும் விரைவாகத் தெரிந்து கொள்ள கராக்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் மூலம் புதிய தொழில்நுட்பக் கருவி ஒன்று […]
புனேவை சேர்ந்த தனியார் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனாவை கண்டறியும் புதிய உபகரணத்தை பயன்படுத்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த உபகரணத்தின் மூலம் ஒரு வாரத்திற்குள் 1.5 லட்சம் சோதனைகள் வரை மேற்கொள்ள முடியும் என அந்த தனியார் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த புதிய கருவியின் விலை ரூ.80 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா கண்டுப்பிடித்த இந்த புதிய கருவி இன்று முதல் பயன்பாட்டுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.