தமிழகத்தில் புதிதாக பத்து கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் பேசும்போது, தமிழகத்தில் 166.5 கோடி மதிப்பீட்டில் 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, திருச்சி மாவட்டம் மணப்பாறை, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, கிருஷ்னகிரி மாவட்டம் தளி, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், ஈரோடு மாவட்டம் அந்தியூர், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம், கடலூர் மாவட்டம் வடலூர், […]
Tag: புதிய கல்லூரிகள்
நடப்பு கல்வி ஆண்டிலேயே மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், முதல்வர் முக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கல்லூரிக்கு அருள்மிகு கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5 கல்லூரிகள் இந்து சமய அறநிலையத் துறை சார்பாக இயக்கப்பட்டு வருகிறது. மேலும் சட்டப்பேரவையில் இப்போது 10 புதிய கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 4 கல்லூரிக்கு உயர் கல்வித் துறையிடம் […]
தமிழகத்தில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க இருப்பதாக கல்வி இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் 7 மாவட்டங்களில் புதிதாக 7 அரசு கலை அறிவியல் கல்லூரிகளை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்லூரி கல்வி இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த சுற்றறிக்கையின் படி, ஏழு புதிய கல்லூரிகளானது, கோவை, கரூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், விருதுநகர், நாகப்பட்டினம், அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் தொடங்கப்பட இருக்கின்றன. இத்தகைய புதிய கல்லூரிகளுக்கு தேவையான அரசு […]