தமிழகத்தில் கடந்த வருடம் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு வாரம் தோறும் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கு கொண்டனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொள்வதற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது. அதன்படி வெற்றி பெற்ற மாணவர்களை கடந்த வருடம் டிசம்பர் மாதம் துபாய் அழைத்த செல்வதற்கு பள்ளி கல்வித்துறை திட்டமிட்டது. ஆனால் ஒமிக்ரான் வைரஸ் தொற்றின் பாதிப்பு […]
Tag: புதிய கல்வி கொள்கை
செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் ஸ்ரீ கோகுலம் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ்நாடு வித்யா பாரதி அமைப்பு சார்பில் தேசிய கல்விக் கொள்கை 2020 செயல்படுத்துதல் என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த கருத்தரங்கத்திற்கு வித்யா பாரதி அமைப்பின் தலைவர் கிருஷ்ணசெட்டி தலைமை தாங்க, 48 தனியார் பள்ளிகளை சேர்ந்த முதல்வர்கள், தாளாளர்கள், ஆசிரியர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கருத்தரகத்தின் போது […]
75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தேசிய கொடி ஏற்றப்படுகின்றது. இந்த சூழலில் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ரவி தேசிய கொடியை ஏற்றி உரையாற்றியுள்ளார். அப்போது நாட்டை பாதுகாக்கும் முப்படைகள், துணை ராணுவ படைகள், காவல்துறை, நுண்ணறிவு அமைப்புகள் போன்றவற்றின் பணிகளை பாராட்டியுள்ளார். மேலும் கொரானா பெருந்தொற்று காலத்தில் மருத்துவர்களின் பணியில் பாராட்டி பேசினார். ஒலிம்பிக் போட்டிகள் பாரா ஒலிம்பிக் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுகள் போட்டிகளில் கலந்துகொண்டு […]
தமிழக திறந்த நிலை பல்கலைகழகத்தின் 13 வது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். அதன் பிறகு பேசிய அவர், சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்தினேன். அதில் பலவிதமான யோசனைகளை மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தது மகிழ்ச்சியாக இருந்தது. அதனை தொடர்ந்து நம்மிடம் தற்போது உள்ள கல்வி முறையை பற்றி நாம் ஒரு மீள்பார்வை செய்ய வேண்டும். […]
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த பயிற்சி வகுப்புகளை நடத்துமாறு தமிழகத்தில் உள்ள நான்கு பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக் கழகங்களுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் இந்த புதிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள நான்கு பல்கலைக்கழகங்களுக்கு புதிய கல்விக் கொள்கை அமல்படுத்த யுஜிசி உத்தரவிட்டுள்ளது. கடும் எதிர்ப்பு உள்ள நிலையில் […]
1986 ம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையானது திருத்தப்பட்டு வெளியிடப்பட்டது. அதன் பின்பு இந்திய மத்திய அமைச்சரவையால் கடந்த 2020 ஆம் ஆண்டு திருத்தி அமைக்கப்பட்டது. இந்த கல்விக் கொள்கை கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியாவில் கல்வியோடு இணைந்து தொழிற்பயிற்சியும் முன்வைக்கிறது. மேலும் இக்கல்விக் கொள்கை வருகிற 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் கல்வி முறையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நிலையில் புதிய கல்வி கொள்கை படி நடத்தப்படும் தேர்வுகளுக்கு தனியாக மதிப்பெண் சான்றிதழ் வழங்க பள்ளிக் […]
நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தும் நடைமுறை தொடங்கியது. இந்த புதிய கல்விக் கொள்கையை பல தரப்பினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் ஏழை மக்களின் கல்வி பாதிக்கப்படும் என்றும் ஹிந்தி மொழி திணிக்கப்படுகிறது என்றும் பல விமர்சனங்களை கூறி வருகின்றனர். ஆனால் பிரதமர் மோடி குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்காக தான் இந்த புதிய கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் மாணவர்களுக்கு 5,8 10 மற்றும் 12 ஆகிய நான்கு வகுப்புகளுக்கும் […]
நாட்டில் புதிய கல்விக் கொள்கைக்குஒப்புதல் அளிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைவதை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 29 ஆம் தேதி பொதுமக்களிடம் உரையாற்றுகிறார்.புதிய கல்விக் கொள்கைக்கு பல்வேறு ஆதரவுகளும் எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து புதிய கல்விக் கொள்கை நடைமுறைபடுத்துவது குறித்தும், புதிய திட்டங்கள், அதை எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்தும் வீடியோ கான்பரன்சிங் முறையில் அவர் உரையாற்றுகிறார். புதிய கல்விக் கொள்கைக்கு ஜூன் 29 2020 அன்று அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. புதிய கல்விக் கொள்கையின் […]
நாடு முழுவதிலும் புதிய கல்வி கொள்கை அமல்படுத்துவது குறித்து மே 17ஆம் தேதி மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரிவால் ஆலோசனை நடத்தவுள்ளார். நாடு முழுவதிலும் கொரோனா தொற்று பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மாணவ மாணவிகள் அனைவருக்கும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து புதிய கல்வி கொள்கை அமல்படுத்துவது தொடர்பாக வரும் 17ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த ஆலோசனை கூட்டத்தில் […]
புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்துகணிப்பு ஆன்லைன் மூலமாக இன்று நடைபெற உள்ளது. புதிய கல்விக் கொள்கை குறித்து பல்வேறு எதிர்ப்புகள் எழுந்து வந்த நிலையில் தற்போது இது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழக உயர்கல்வித்துறை இன்று ஆன்லைன் மூலமாக கருத்துக்களை கேட்க இருக்கிறது. புதிய தேசிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை மூலம் சமீபத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சிகள் இந்த புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு […]
கொரோனா காலகட்டத்திலும் இந்திய ஆசிரியர்கள் சவாலான பணிகளை மேற்கொள்கின்றனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் நிறுவப்பட்ட புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து பல தரப்பினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தாலும் புதிய கல்விக் கொள்கை என்பது சிறப்பான ஒன்று என பிரதமர் மோடி சுட்டிக்காட்டி ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.அதாவது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டு பேசும் பொழுது, “புதிய கல்விக்கொள்கை இந்தியாவில் பெரும் மாற்றதை தரப்போகிறது. இந்தக் […]
புதிய கல்விக் கொள்கையில் பயிற்றுமொழியை அந்தந்த மாநிலங்கள் முடிவு செய்துகொள்ளலாம் என்பதை மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் வழங்கியுள்ள புதிய கல்விக் கொள்கைக்கு, நாடு முழுவதும் பரவலாக ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. கல்வியில் மும்மொழி கொள்கையை திணிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய கல்விக் கொள்கை செயல்படுவதாக அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் புதிய கல்வி கொள்கை பற்றி ஆராயவும், தேசிய கல்விக் கொள்கையில் […]
எதிர்காலத்தை மனதில் கொண்டு புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புதிய தேசிய கல்விக் கொள்கையின் கீழ் உயர்கல்வியில் மாற்றங்களுக்கான சீர்திருத்தங்கள் பற்றிய மாநாட்டில் காணொளி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டப்படிப்பு கல்லூரிகள், IIT, IIM, NIT மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றனர். இதில் பேசிய பிரதமர் மோடி நமது பழைய கல்வி திட்டம், எதிர்பார்த்த பலனை தரவில்லை […]
மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் புதிய கல்விக் கொள்கை என்ற வரைவை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளன. கல்வியாளர்கள் இதிலுள்ள பாதக அம்சங்களை குறிப்பிட்டு வரும் நிலையில், சாதகமான அம்சங்களை குறிப்பிடுகின்றன. இது தேசிய பெரிய விவாதமாக மாறியுள்ளது. அண்மையில் இது குறித்து மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். இந்நிலையில் புதிய கல்வி கொள்கை தொடர்பாக நாளை மாநாட்டில் காணொளியில் உரையாற்றுகிறார். பிரதமர் நரேந்திர மோடி கல்விக் கொள்கை மூலம் உயர் […]
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கை இந்தியாவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதில் பல்வேறு பாதகமான அம்சங்கள் இருக்கின்றது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் மத்திய அரசோ மாணவர்கள் நலன் கருதி, கல்வி தரத்தை உயர்த்துவதற்காக இந்த கல்விக் கொள்கை அமல் படுத்தப்பட்டுள்ளது என்று விளக்கமளித்துள்ளது. புதிய கல்வி கொள்கை மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்கு என்றும், இதில் மாணவர்கள் நலன், உடல் ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக பள்ளிகளில் […]
மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ளது. நாடு முழுவதும் இது குறித்தான விவாதங்கள் எழுந்துள்ளன. ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதே நேரத்தில் பிரதமர் மோடி புதிய கல்வி கொள்கை உள்ள சிறப்பம்சங்கள் குறித்து நேற்று மக்களிடம் உரையாற்றினார். இந்த நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து தெரிவித்துள்ளார். அதில்.. மத்திய அரசின் புதிய கொள்கையானது மக்களுக்கு பயன்படாத கல்விக் கொள்கை என […]
பிரதமர் மோடி புதிய கல்விக் கொள்கை திட்டத்தைப் பற்றி காணொளியில் பேசும்பொழுது வேலை தேடுபவர்களை விட வேலை கொடுப்பவர்கள் உருவாக்க வேண்டும் என திட்டவட்டமாக கூறியுள்ளார். வேலை தேடுபவர்களுக்கு பதிலாக வேலை கொடுப்பவர்களை உருவாக்க வேண்டும் என்பதை புதிய கல்விக் கொள்கை வலியுறுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலகில் இதுவரை நடந்திராத ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் இறுதிப் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஹேக்கத்தான் போட்டி, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை, அகில இந்திய தொழில்நுட்பக் […]