சென்னையில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் கிரீன் லைன், ப்ளூ லைன் என்ற 2 வழித்தடங்கள் இருக்கிறது. இந்த வழித்தடங்களை அதிகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது புதிய வழித்தடங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இதற்காக ரெட் லைன், ஆரஞ்சு லைன் மற்றும் பர்பிள் லைன் போன்ற வழித் தடங்களை அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் நிறைவடைந்தால் சென்னையில் உள்ள அனைத்து […]
Tag: புதிய திட்டங்கள்
கோவை மாநகராட்சியின் மேயராக கல்பனா ஆனந்தகுமார் இருக்கிறார். இவர் தன்னுடைய நடவடிக்கைகளால் பொதுமக்களின் மத்தியில் கவனம் பெற்றுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலினின் கவனத்தில் என்றும் மேயர் கல்பனா ஆனந்தகுமார் இருப்பதாக திமுக தொண்டர்கள் கூறி வருகின்றனர். கோவை மேயர் உட்க்கட்சி பிரச்சனைகளை பற்றி கவலைப்படாமல் தன்னுடைய கடமைகளை செய்வதில் மட்டுமே குறிக்கோளாக இருக்கிறார். அந்த வகையில் காந்தி மா நகரில் 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பொதுக் கழிப்பிடம், அம்பாள் நகரில் நகர்நல மைய கட்டுமானம், எம்ஜிஆர் […]
சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் வருவாய் ஈட்டும் வகையில் புதிய திட்டங்களை கொண்டு வர மேயர் பிரியா ராஜன் தலைமையில் முடிவு எடுக்கப்பட்டது. அதாவது மாநகராட்சிக்கு உள்ளிட்ட இடங்களில் காலியாக இருக்கும் கடைகள் ஒருமுறை மெகா ஏலத்திற்கு விடப்படும். இதில் பதிவு செய்யாத வர்த்தகர்களும் கலந்து கொண்டு ஏலம் எடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓராண்டிற்கான ஒப்பந்தம் தொகையை செலுத்தி கடைகளை வாடகைக்கு எடுத்துக்கொள்ள இந்த வாய்ப்பு வர்த்தகர்களுக்கும் வர பிரசாதமாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் […]
சென்னையில் உள்ள வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணிகள் கடந்த அ.தி.முக. ஆட்சியில் தொடங்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தை கடந்த 2021-ம் ஆண்டு திறக்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த பேருந்து நிலையமானது தற்போது முழுமையாக கட்டப்பட்டு வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி தினத்தை முன்னிட்டு திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த புதிய பேருந்து நிலையத்தினால் கோயம்பேடு பேருந்து நிலையத்தின் போக்குவரத்து நெரிசல் […]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் தொடங்கியுள்ளது. தொழில் முதலீட்டார்ளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில் 60 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது . 60 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.1.25 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகள் கிடைக்கும் என்று எதிர்பாக்கப்பட்டது. இந்நிலையில் இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.22,252 கோடி மதிப்பில் 21 புதிய தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின். இதன்மூலம் 74,898 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
2021-2022 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கலான பின்னர் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் இரண்டாம் கட்டமாக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் இன்றைய கூட்டத்தொடரின் போது முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் விளையாட்டு துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவை, ”விளையாட்டுத் துறையை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஊக்கத்தொகையை தொடர்ந்து வழங்கி வீரர்களை அரசு ஊக்குவித்து வருகிறது. சென்னைக்கு அருகில் […]
தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்ததையடுத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறார். இந்த நிலையில் சேலம் சீலநாயக்கன்பட்டி யில் மறைந்த வீரபாண்டி ராஜா அவர்களின் உருவப்படத்தினை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சியில்தான் சேலம் மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தோம். சேலம் இரும்பாலை,பெரியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. மேலும் சேலத்திற்கு இன்னும் ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளது என பட்டியலிட்டு […]
தமிழக அரசின் புதிய திட்டங்களை எப்பொழுதுமே திமுக கட்சி வரவேற்கும் என மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக சார்பில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை குறித்து கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையில் தமிழக அரசு மக்களுக்காக கொண்டுவரும்,புதிய திட்டங்கள், மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு திமுக எப்பொழுதும் எதிராக செயல்படாது. அதேபோல் புதிய தொழிற்சாலைகள், திட்டங்களை திமுக எப்போதுமே வரவேற்கும். ஆனால் புதிதாக தொடங்கப்படும் தொழிற்சாலைகள் […]