பொதுவாக வீட்டில் இட பற்றாக்குறை உள்ள சமயத்தில் மாடிப்படி அமைப்பது பெரும் சிரமமாக இருக்கும். இருந்தாலும் இதற்காக ஒவ்வொரு முறையும் ஏன் வைத்து ஏற முடியாது.அதற்கு எளிதில் தீர்வு காணும் வகையில் இப்போது போல்டிங் என்று சொல்லக்கூடிய மடக்கி வைத்துக் கொள்ளும் வகையில் மாடிப்படி அறிமுகம் ஆகியுள்ளது. அதாவது இரும்பு கம்பி அல்லது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மெட்டீரியலில் படிகளை செய்து அதனை சுவரோடு மடக்கி வைத்துக் கொள்ள முடியும்.அதனை தேவைப்படும் சமயத்தில் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.இது போன்ற […]
Tag: புதிய தொழில்நுட்பம்
ஒரு நாணயத்தை தண்ணீரில் போட்டால் மூழ்கிவிடுகிறது. ஆனால் ஒரு பிரம்மாண்டமான கப்பல் எப்படி தண்ணீரில் மிதக்கிறது என்று உங்கள் அனைவருக்கும் கேள்வி எழலாம். மீனவர்கள் பயன்படுத்தக்கூடிய படகு மரம் போன்ற மிதக்கும் பொருள்களால் செய்யப்பட்டாலும் மிகப் பெரிய கப்பல் இரும்பு போன்ற உலோகத்தால் செய்யப்படுகின்றன. கப்பல் தண்ணீரில் இருக்கும்போது அதன் உடற்பகுதி ஓரளவு தண்ணீரில் அமிழ்ந்து இருப்பதை பார்க்க முடியும். கப்பலின் எடைக்குச் சமமான தண்ணீர் இடம்பெயரும். அதனால் கப்பலின் குறிப்பிட்ட அளவு அடிப்பகுதி கடலில் இருக்கும். […]
உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக மின்சார வாகனங்களுக்கு அதிக அளவு வரவேற்பு கிடைத்துள்ளது. பெரும் நிறுவனங்கள் மின்சார வாகன தயாரிப்பில் தீவிரமாக இறங்கியுள்ளன. தினமும் புதுப்புது தொழில்நுட்பங்களுடன், அம்சங்களுடன் மின்சார வாகனங்கள் வெளியாகி வருகின்றது. இந்த நிலையில் நிசான் நிறுவனம் புதிய பேட்டரி தொழில்நுட்பத்தை மின்சார வாகனங்களுக்கு அறிமுகம் செய்ய உள்ளது. சாலிட் ஸ்டேட் பேட்டரி செல்கள் மூலமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த பேட்டரிகள் வழக்கமான லித்தியம் அயன் பேட்டரிகளை விட இரண்டு […]
கொரோனா தொற்று பரவல் உலகம் முழுவதிலும் அதிவேகமாக பரவி வருகிறது. இதற்காக தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு செலுத்தப்பட்டாலும், மீண்டும் தொற்று பாதிப்புக்கு பொதுமக்கள் ஆளாகி வருகின்றனர். தற்போது கொரோனா உருமாற்றம் குறித்த ஆராய்ச்சிகளும், அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் உலக நாடுகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. அந்த அடிப்படையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த யுவி-சி என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் மத்திய அறிவியல் கருவிகள் அமைப்பு (சிஎஸ்ஐஆர்-சிஎஸ்ஐஓ) மூலம் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப […]
நாட்டின் மது அருந்திய வாகனத்தை ஓட்டுவதன் விளைவாக ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான உயிரிழக்கின்றனர். அரசு அதற்கு பல சட்டங்களை கொண்டு வந்தாலும், சிலர் இன்னும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்க மது அருந்தி இருந்தால் வாகனம் ஸ்டார்ட் ஆகாதவாறு புதிய தொழில்நுட்பம் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இதற்கு அனுமதி பெறப்பட்டு இனி வரும் வாகனங்களில் பொருத்தப்படும் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது. இதன் மூலமாக சாலை விபத்துகள் பெருமளவில் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர் நடித்த “உலகம் சுற்றும் வாலிபன்” திரைப்படம் தற்போது புதிய தொழில்நுட்பத்துடன் மீண்டும் வெளியிடப்படுகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படம் “உலகம் சுற்றும் வாலிபன்”. இப்படத்தில் எம்ஜிஆர் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். மேலும் லதா, மஞ்சுளா, சந்திரகலா என மூன்று கதாநாயகிகள் இப்படத்தில் இடம் பெற்றிருந்தனர். கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன் ஆகியோர் எழுதிய இப்படத்தின் பாடலுக்கு விஷ்வநாத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் வரும் பச்சைக்கிளி முத்துச்சரம், சிரித்து வாழ வேண்டும் உட்பட அனைத்து பாடல்களும் மாபெரும் […]
இனி உங்களது கை நரம்புகளை வைத்தே உங்களை அடையாளம் காண முடியும். எப்படி தெரியுமா? இதற்கான தொழில்நுட்பத்தையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பயோமெட்ரிக் மூலம் அடையாளம் காணும் முறை சமீபத்திய ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. விமான நிலையங்களில் இருந்து போலீஸ் நிலையங்கள், அலுவலகங்கள், வங்கிகள், பெரிய தொழில் நிறுவனங்கள் என்று எல்லா இடங்களிலும் பயோமெட்ரிக் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. என்னதான் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பயோமெட்ரிக் முறை கொண்டுவரப்பட்டாலும் அதிலும் மோசடிகள் நடப்பது உண்டு. அந்த வகையில் […]
கண்பார்வை இல்லாதவர்களுக்கு உதவும் வகையில் கூகுள் நிறுவனம் புதிய தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை புதிதாக அறிமுகம் செய்வதில் கூகுள் நிறுவனம் முன்னிலையில் இருக்கின்றது. இந்த வரிசையில் தற்போது கண்பார்வை இல்லாதவர்களுக்காக புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஒன்றினை அறிமுகம் செய்ய இருக்கின்றது. பொதுவாக கண்பார்வை இல்லாதவர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு நடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் அவர்கள் சுயமாகவே ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஓடி […]