பஞ்சாப் மாநில முதலமைச்சராக பதவி வகித்து வந்த அம்ரீதர் சிங்குக்கும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துக்கும் ஆரம்பத்திலிருந்தே மோதல் போக்கு நீடித்து வந்தது. இதனையடுத்து இருவரையும் அழைத்து பேசி சமாதானம் செய்தும் இருவருக்கும் இடையே பிரச்சினை ஓய்ந்தபாடில்லை. இந்த நிலையில் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் பன்வாரிலால் புரோகித்தை ஆளுநர் மாளிகையில் சந்தித்து தன்னுடைய ராஜினாமா கடிதத்தை வழங்கினார். மேலும் தன்னுடைய அமைச்சரவை ராஜினாமா கடிதத்தையும் வழங்கினார். இது குறித்து விளக்கம் அளித்த அவர், […]
Tag: புதிய முதல்வர்
குஜராத் மாநில முதல்-மந்திரியாக இருந்த விஜய் ரூபானி நேற்று முன்தினம் தன்னுடைய பதவியை திடீரென ராஜினாமா செய்தார். குஜராத் மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விஜய் ரூபானி ராஜினாமா செய்தது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பது குறித்து குஜராத் மாநில தலைநகர் காந்திநகரில் நேற்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவராக எம்எல்ஏ பூபேந்திர படேல் ஒருமனதாக தேர்வு […]
குஜராத் மாநிலத்தின் புதிய தலைவராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து குஜராத் மாநிலத்திற்கு யார் புதிய முதலமைச்சராக வர உள்ளார் என்று பல விவாதங்கள் நடைபெற்ற நிலையில், புதிய முதல்வராக பூபேந்திர பட்டேலை பாஜக தலைமை நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. பூபேந்திர படேல் தலைமையிலான அரசு நாளை பதவி ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குஜராத்தின் 17வது முதலமைச்சராக பூபேந்திர […]
உத்தரகாண்ட் மாநிலம் முதலமைச்சர் தீரத் சிங் ராவத் ஆளுநரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். அவர் நேற்று ராஜ்பவனில் ஆளுநர் பேபி ராணி மௌரியாவை நேற்றிரவு நேரில் சந்தித்து பேசினார். முதலமைச்சரின் திடீர் ராஜினாமா கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2021 ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி மாநிலத்தின் ஒன்பதாவது முதல்வராக பதவியேற்றார். ஆனால் மூன்று மாதங்களுக்கு பிறகு அரசியல் நெருக்கடி காரணமாக பதவியை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. உத்திரகாண்ட் […]